LOGO
  முதல் பக்கம்    சிறுவர்    சுட்டிக்கதைகள் - Kids Stories Print Friendly and PDF
- ஜி.ராஜேந்திரன்

மதுரைக்காரக் குதிரைக்காரன்

மதுரைக்காரன் பெரியதுரை சென்னைக்கு வரக்காரணமே அவனுடைய குதிரைப் பைத்தியம்தான். குதிரைண்ணு சொன்னா அவனுக்கு அவ்வளவு ஆசை. சினிமாவிலெ கதாநாயகன் குதிரையில் ஏறிச் சவாரி செய்யும்போது பெரியதுரை வாய் பிளந்தபடி, தன்னை மறந்தபடி பாத்து ரசிப்பான்.

சில நேரம் தானே அந்தக் குதிரையில் சவாரி செய்வது போல நெனச்சுக்குவான் குதிரை சவாரி செய்ரவரோட ஊடல் எப்படி அசையுமோ அதுபோல தன்னுடலை அசைக்குவான். வாயால "டக் டக்' ண்ணு ஓசை எழுப்புவான்.

அவன் சின்னப்பையனா இருந்தப்போ ரோட்லெ நடக்கும் போதும் ஓடும் போதும் குதிரை ஓடுறதமாதிரியே குதிச்சுக் குதிச்சு ஓடுவான்.

பெரியவனானதும் குதிரை ஒண்ணு வாங்கி அதில சவாரி செஞ்சபடி எல்லா ஊர்களுக்கும் போகணும் ஆளுக எல்லாம் ஆச்சரியமாகப் பார்க்கணும்ணு நெனைப்பான்.

பஸ்,கார்களுக்கிடையே, ஆட்டோ ரிக்ஷாக்களுக்கிடையே குதிர மேல கம்பீரமாக உக்காந்திட்டு சவாரி செய்யறதா அடிக்கடி நெனச்சுக்குவான். அப்படி கனவு ஒலகத்திலெ மெதப்பான்.

கொஞ்சம் வருஷம் ஆச்சு. மதுரைக்காரன் பெரிய துரை குதிரைக்காரன் ஆனான். ஆமாம் ! வேலை செஞ்சு பணம் சேத்து எப்படியோ ஒரு அரேபியக் குதிரையை வாங்கிட்டான்.

குதிரமேல சவாரி செஞ்சுகிட்டு வீட்டுக்கு வந்தவனைக் காண அக்கம் பக்கத்திலுள்ள எல்லாரும் வந்திருந்தாங்க. தன்னோட குதிரையைப் பார்க்க வந்த மக்கள் கூட்டத்தைப் பார்த்து பெரியதுரை பரவசப்பட்டான். ஏதோ இமயமலை ஏறி வெற்றிக்கொடி பறக்கவிட்ட சந்தோஷம் அவன் முகத்தில் தெரிஞ்சுது. நளும் குதிரை மேலே ஏறி ஊர்ச்சுற்றத் தொடங்கினான்.

கொஞ்ச நாளாச்சு. இப்ப யாரும் அவனைத் திரும்பியே பாக்க்றதில்லே. அவனுக்கும் குதிரமேருந்த ஆசயெல்லாம் போச்சு. குதிரைக்குத் தீனி கொடுக்கணும். அத குளிப்பாட்டணும். நோய்நொடி வராமா பாத்துக்கணும். அப்படீங்றதாலெ வேலைக்கும் போகமுடியாமப் போச்சு. இருக்கிற கொஞ்ச நஞ்ச பணமும் கரைஞ்சது.

யோசிச்சான் பெரிய துரை. குதிரையிலேயே சென்னைக்குப் போலாம். அங்க போய் குதிரைப் பந்தயத்தில் கலந்துக்கலாம்ணு முடிவு செய்தான். நெனச்சமாதிரியே செஞ்சான்.

பந்தயத்தில் கலந்துக்கறது எப்படிண்ணு குதிரைக்குச் சொல்லிக்கொடுக்கிறதுக்குண்ணே தனிப் பயிற்சியாளரை வச்சான் குதிரையும் பல பந்தயங்களில்லெ ஜெயிச்சு வந்துச்சு. பேப்பரிலெ எல்லாம் துரையோட படமும் அவனோட குதிரையோட படமும் வந்தது. நெறயப் பணமும்கெடச்சு.

ஒரு நாள் அந்தப் பயிற்சியாளர். உங்கக் குதிரை நெறயப் பந்தயத்திலெ ஜெயிக்குதே. எனக்குச் சம்பளம் கொஞ்சம் கூட்டிக் கொடுங்க அப்படீண்ணு கேட்டாரு.

அதற்கு மதுரைக்கார அதெல்லாம் முடியாது. ஊனக்குச் சம்பளம் கொறவா இருக்குண்ணு தோணிச்சுண்ணா நீ நாளேருந்து வரவேண்டாம். நான் புதிசு ஓராள வச்சுக்கிறேன் அப்படீண்ணான்.

அந்தப் பயிற்சியாளரும் நீயாச்சு உன் குதிரையாச்சு. இந்த நக்காப் பிச்சக் காசுக்கு நான் வேலை செய்யமாட்டேன்ணுட்டுப் போய்ட்டாரு.

துரை வேறொரு பயிற்சியாளருக்கு ஏற்பாடு செஞ்சான். அவரும் வந்தாரு. இங்க பாருங்க. அடுத்த மாசம் முக்கியமான போட்டி வரப்போகுது. அதுக்கு இப்பயிருந்து குதிரை சரி பண்ணணும் என்ன புரிஞ்சுதா? அப்படீண்ணு உத்தரவு போட்டான்.

பயப்படாதீங்க எல்லாம் நான் பாத்துக்றேன். அப்படீண்ணு தைரியாமாச் சென்னான் அந்தப், புதிய பயற்சியாளரு.

பத்துப் பதினைந்து நாளாச்சு. ஒரு நாள் காலையிலெ குதிரை லாயத்திற்குப் போனான் பெரியதுரை. வழக்கம்போலக் குதிரையை அவிழ்த்து விட்டான். குதிரை நடக்கத் தொடங்கிச்சு. அவ்வளவுதான் " ஐயோ, கடவுளே ... ' என தொண்ட கிழிய கத்திட்டான். ஏன்ன குதிரை நொண்டி நொண்டி நடக்குது. துக்கம் தொண்டையை அடைச்சுது பெரியதுரையோட கண்களில் கண்ணீர் ஆறா ஓடிச்சு. கொஞ்ச
நேரமானதும் கண்ணெ தொடச்சுக்கிட்டு என்ன செய்யலாம்ணு யோசித்தான்.

பக்கத்திலுள்ள கால்நடை மருத்துவமனைக்குப்போனான்.. மருத்துவரை அழைச்சிட்டு வந்தான்.. அவரும் குதிரையை நல்லாப் பரிசோதிச்சுப் பாத்தாரு.

" என்னால் முடிந்த அளவு பரிசோதிச்சிட்டேன்.. குதிரையோட ஒடம்பிலெ எந்தக் குறையும் இல்லை.'' என்று கூறி விட்டுக் கட்டணமும் வாங்கிவிட்டு அவர் போய்ட்டார்.

பெரியதுரை இரு கைகளுக்குள்ளும் முகத்தைப் புதைத்தபடி வாசற்படியில் உட்கார்ந்துட்டான். பயிற்சியாளர் வருவாரு. கொஞ்ச நேரம் குதிரையோட இருப்பாரு. பெறகு போய்விடுவாரு.

பெரியதுரைக்கு ஓரே கவலையாகப் போச்சு. வெளியே எங்கும் போகாகமல் வீட்டிற்குள்ளேயே இருந்தான்.

அவனைக் காணாமல் அவனோட நண்பர்களும் அவனைத்தேடி வீட்டுக்கே வந்தார்கள்.

" எங்கே, இத்தனை நாட்களாக ஆளையே காணோம்ணு அன்பா விசாரிச்சாங்க பெரியதுரை நடந்ததைத் சொன்னான்.

அந்த நண்பர்கள்லெ ஒருத்தன் "குதிரை ஒடம்பிலே ஒரு கொறயும் இல்லேண்ணா பின்னே ஏன் குதிர நொண்டுது அப்படீண்ணு யோசிச்சான்.

காரணத்தையும் கண்டுபிடிச்சிட்டான்.

ஏன் குதிர நொண்டிச்சு தெரியுமா? பெரியதுரை புதுசா ஒரு பயிற்சியாற வேலைக்கு வச்சான் இல்லையா அவனப் பாத்துத்தான் குதிரயும் நொண்டி நொண்டி நடக்குது

பெரிய துரை நல்ல சம்பளம் கொடுத்து அந்த பழைய பயிற்சியாளரையே மறுபடியும் வேலைக்கு வச்சான். குதிரயும் பழையபடி பந்தயத்திலெ ஜெயிக்கத்தொடங்கிச்சு.

by Swathi   on 30 Mar 2015  0 Comments
Tags: குதிரைக்காரன்   குதிரை   Kuthirai              
 தொடர்புடையவை-Related Articles
மதுரைக்காரக் குதிரைக்காரன் மதுரைக்காரக் குதிரைக்காரன்
அழகான மண்குதிரை - நிர்மலா ராகவன் அழகான மண்குதிரை - நிர்மலா ராகவன்
இரும்பு குதிரை படத்தின் சுவாரஸ்ய தகவல்கள் !! இரும்பு குதிரை படத்தின் சுவாரஸ்ய தகவல்கள் !!
ஆகஸ்டில் வெளியாகும் இரும்பு குதிரை !! ஆகஸ்டில் வெளியாகும் இரும்பு குதிரை !!
எட்டி உதைத்த குதிரை...... பயந்த ஹன்சிகா....... சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த கலாட்டா !! எட்டி உதைத்த குதிரை...... பயந்த ஹன்சிகா....... சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த கலாட்டா !!
பொய்க்கால்குதிரை ஆட்டம் பொய்க்கால்குதிரை ஆட்டம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.