அச்சுப்பிரதி தேவையானவர்கள் இங்கே உங்கள் விவரத்தை பதியவும்

ஆசிரியரிடமிருந்து..

அனைவருக்கும் வணக்கம்!

உங்களை இவ்வலைத்தமிழ் மின்னிதழ் வழியாகச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி!

தமிழ் பேசும் மக்கள் வசிக்காத நாடுகளே இல்லை என்னும் அளவிற்கு இன்று அனைத்து நாடுகளிலும் தமிழர்கள் வசிப்பது நம் அனைவருக்கும் பெருமை. அதைவிட புலம்பெயர்ந்த தமிழர்களின் மொழி ஆர்வம், தொழில் சாதனைகள், அங்குள்ள வாழ்வியல் சூழலில் அவர்கள் நம் மொழியை அடுத்த தலைமுறைக்குக் கடத்த எடுக்கும் முயற்சிகள் என்று பல்வேறு கொண்டாடப்பட வேண்டிய மற்றும் பகிரப்பட வேண்டிய நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

தமிழ்ச் சமூகத்தின் வளர்ச்சிக்கு எது உதவுமோ அவற்றைத் தொகுத்து வழங்கவும், உரிய அறிஞர்களை நேர்காணல் கண்டு அவர்களது அனுபவங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ளும் முயற்சியாகவும் புலம்பெயர்ந்து வாழும் சமூகங்கள் தங்கள் படைப்புகளைஇ சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்ளவும் இது ஒரு நல்ல ஊடகமாக அமையும் என்றும் நம்புகிறேன்.

இவ்விதழ் ஒரு பல்சுவை கொண்ட பன்னாட்டு இதழாய்த் தமிழ் மொழி வளர்ச்சி, தமிழ்க் கல்வி வளர்ச்சி, கலாச்சாரம் பண்பாடு போற்றுதல் கலைகளை மீட்டெடுத்து ஊக்குவித்தல், தமிழ்ச் சமூக மேம்பாடு, இலக்கிய ஆர்வத்தை அதிகரித்தல், தொழில் முனைவோருக்கு வழிகாட்டுதல், தலைமைப்பண்புகளை வளர்த்தெடுத்தல், தமிழ் மருத்துவம், தமிழ் ஆன்மிகம், தமிழர்களின் தொன்மையை ஒட்டிய அறம் சார்ந்த உயர் வாழ்வியலை உணர்ந்து வாழ்தல் போன்ற சீரிய சிந்தனையுடன் பயணிக்கவிருக்கிறது.

இந்த இதழில் கவிதை, மருத்துவம், உணவு, தமிழ் தொழில்நுட்ப வளர்ச்சி, சமூகம், வாழ்வியல் போன்ற தகவல்களுடன் சில உலக நிகழ்வுகளையும் தொகுத்து வழங்கி உள்ளோம். வாசகர்களாகிய நீங்கள் மாதந்தோறும் மலரவிருக்கும் இம்மின்னிதழைத் தவறாமல் வாசித்து உங்களது மேலான கருத்துகளையும் , நிறை குறைகளையும் ValaiTamil.monthly@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் எங்களுக்குத் தெரிவித்தால் இவ்விதழை மேலும் செம்மைப்படுத்தி மிளிரச் செய்வோம் என்று அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இம்மின்னிதழ் வெளிவர உறுதுணையாயிருந்த அனைத்து ஆசிரியர் குழு உறுப்பினர்களுக்கும், வலைத்தமிழ் நிர்வாகத்திற்கும், என்னுடைய சார்பாகவும், ஆசிரியர் குழுவின் சார்பாகவும் நன்றியினையும், இம்முயற்சி வெற்றியடைய வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். மீண்டும் அடுத்த இதழில் சந்திப்போம்.

வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!

முதன்மை ஆசிரியர்
ராஜா வேணுகோபால்
ஜார்ஜியா, அமெரிக்கா

ஆசிரியர் குழு

முதன்மை ஆசிரியர்

ராஜா வேணுகோபால்

ஜார்ஜியா, அமெரிக்கா

துணை ஆசிரியர்

சுபா காரைக்குடி

நியூ ஜெர்சி, அமெரிக்கா

நீச்சல்காரன்

மதுரை, இந்தியா

தேவி அண்ணாமலை

இலினாயிஸ்,அமெரிக்கா

ரமா ஆறுமுகம்

டெலவேர், அமெரிக்கா

ஆரூர் பாஸ்கர்

ப்ளோரிடா, அமெரிக்கா

முனைவர். சித்ரா மகேஷ்

டெலவேர், அமெரிக்கா

இளவழுதி வீரராசு

வெர்ஜீனியா, அமெரிக்கா

கீதா ரவிச்சந்திரன்

சிங்கப்பூர்

விஜயகுமார்

வெர்ஜீனியா, அமெரிக்கா

கலையரசி
சிவசுந்தரபாண்டியன்

மிச்சிகன், அமெரிக்கா

சமீபத்திய இதழ்கள்

வாசகர் கருத்துகள்

முதல் கருத்து உங்கள் கருத்தாக இருக்கட்டும்...

உங்கள் கருத்துகள் பதிவு செய்ய

வலைத்தமிழ் மாத இதழ் அச்சுப்பிரதி தேவையானவர்கள் இங்கே உங்கள் விவரத்தை பதியவும்.