LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- தமிழச்சியின் கத்தி

மகிழ்ந்திரு

தென்பாங்கு -- கண்ணிகள்

நீரடை பாசியில்
தாமரை பூத்தது     போலே - நல்ல
நீலத் திரைகடல்     மேலே - பெருங்
காரிருள் நீக்கக்
கதிர்வந்து பூத்ததி     னாலே

வாரிச் சுருட்டி
எழுந்தனன் சிங்கனப்     போது - உடை
மாற்றினன் தன்னுடல்     மீது - அவன்
நேரில் அழைத்தனன்
வந்துநின் றாளந்த     மாது.

'ஆயிரம் பேரொடு
திம்மனும் அங்கிருக்     கின்றான் - கவாத்
தாரம்பம் செய்திருக்     கின்றான் - அவன்
ஞாயிறு செல்லத்திங்
கட்கிழ மைவரு     கின்றான்.

போயிருந் தாலென்ன
அச்சம் உனக்கென்ன     இங்கு? - ந
பொன்போலப் பாயில்உ    றங்கு - இரு
தாய்மாரும் உண்டு
துயர்செய்வ தெந்தக்கு    ரங்கு?

ஆவிஉன் மேல்வைத்த
திம்ம னிடத்திலும்     சென்று - நான்
ஆறுதல் கூறுவேன்     இன்று - நீ
தேவை இருப்பதைக்
கேள்இங்குத் தங்குதல்    நன்று.

கோவை படர்ந்திட்ட
கொய்யாப் பழந்தரும்     தோட்டம் - இங்குக்
கூவும் பறவையின்     கூட்டம் - மிக
நாவிற்றுப் போகும்
இனிக்கும் பழச்சுளை     ஊட்டம்.

தெற்குப் புறத்தினில்
ஓடி உலாவிடும்     மானும் - அங்குச்
செந்தினை மாவோடு     தேனும் - உண்டு
சற்றே ஒழிந்திடில்
செல்லுவ துண்டங்கு     நானும்!

சிற்றோடை நீரைச்
சிறுத்தையின் குட்டி     குடிக்கும் - அதைச்
செந்நாய் தொடர்ந்து     கடிக்கும் - அங்கே
உற்ற வரிப்புலி<
நாயின் கழுத்தை     ஒடிக்கும்.

மாங்குயில் கூவிஇவ்
வண்ணத் தமிழ்மொழி     விற்கும் - இந்த
வையமெலாம் அதைக்     கற்கும் - களி
தாங்காது தோகை
விரித்தாடி மாமயில்     நிற்கும்.

பாங்கிலோர் காட்டில்
படர்கொடி ஊஞ்சலில்     மந்தி - ஒரு
பாறையின் உச்சியை     உந்தி - உயர்
மூங்கில் கடுவனை
முத்தமிடும் அன்பு     சிந்தி

கைவைத்த தாவில்
பறித்திட லாகும்ப     லாக்காய் - நீ
கால்வைத்த தாவில்க     ளாக்காய் - வெறும்
பொய்யல்ல நீஇதைப்
போயறி வாய்காலப்     போக்காய்.

ஐவிரல் கூட்டி
இசைத்திடும் யாழ்கண்ட     துண்டு - யாழின்
அப்பனன் றோவரி     வண்டு? - மக்கள்
உய்யும் படிக்கல்ல
வோஇவை செய்தன     தொண்டு?

'போய்வரு வேன்'என்று
சொல்லிச் சுதரிசன்     போனான் - அந்தப்
பூவையின் மேல்மைய     லானான் - அவன்
வாய்மட்டும் நல்லது;
உள்ளம் நினைத்திடில்    ஈனன்.

தூய்மொழி யாளும்
சுதரிச னைநம்ப     வில்லை - என்று
தொலையுமோ இப்பெருந்    தொல்லை - என்று
வாய்மொழி இன்றி
இருந்தனள் அக்கொடி     முல்லை.

by Swathi   on 21 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.