LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

மாந்திரீகம், பில்லி, சூனியம் செய்தால் மகாராஷ்டிராவில் ஏழு ஆண்டு சிறைதண்டனை !

புனேயை சேர்ந்த சமூக ஆர்வலர் நரேந்திர தபோல்கர், மக்களிடம் நிலவும் மூட நம்பிக்கைகளை போக்குவதற்காக, "மகாராஷ்டிரா அந்தஷ்ரத்தா நிர்மூலன் சமிதி' என்ற அமைப்பை தோற்றுவித்து,  மாந்திரீகம், பில்லி, சூனியம் மற்றும் மாயாஜால வித்தைகள் போன்ற மூட நம்பிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுத்து வந்தார். இந்நிலையில்,  20ம் தேதி, தபோல்கர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதற்கு காரணமானவர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை, இதற்கிடையே, தபோல்கர் படுகொலைக்கு எதிராக மாநிலம் முழுவதும் பல்வேறு அம்மைப்பினர், போராட்டம் நடத்தினர். அவர்கள், மாந்திரீகம் மற்றும் பில்லி, சூனியத்திற்கு எதிராக சட்டம் இயற்ற வேண்டும் என்றும், கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பான அவசர சட்டம் தயாரிக்கப்பட்டு, கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கவர்னர் சங்கர நாராயணனும் ஒப்புதல் அளித்தார். மாந்திரீகம், பில்லி, சூனியம் மற்றும் மூடப் பழக்க வழக்கங்களுக்கு எதிராக, நாட்டிலேயே முதல் முறையாக மகாராஷ்டிரா வில்தான், அவசர சட்டம் இயற்றப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இச்சட்டத்தின்படி, நரபலி, பில்லி, சூனியம் மற்றும் மந்திர, தந்திர வேலைகளில் ஈடுபடுவோருக்கு, ஏழு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும். 

by Swathi   on 25 Aug 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஆறாவது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு சென்னையில் டிசம்பர் 28 தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறுகிறது. ஆறாவது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு சென்னையில் டிசம்பர் 28 தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறுகிறது.
இந்தியாவின் முன்னாள் தேர்தல் அதிகாரி திரு. டி.என்.சேஷன் மறைவு இந்தியாவின் முன்னாள் தேர்தல் அதிகாரி திரு. டி.என்.சேஷன் மறைவு
இந்தியாவில் முதலீடு செய்ய வாருங்கள் - பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவில் முதலீடு செய்ய வாருங்கள் - பிரதமர் நரேந்திர மோடி
உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. பாப்டே நியமனம் உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. பாப்டே நியமனம்
இந்திய-சீன  தலைவர்கள் தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான மகாபலிபுரத்தில் சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து உரையாடிவருகிறார்கள் இந்திய-சீன தலைவர்கள் தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான மகாபலிபுரத்தில் சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து உரையாடிவருகிறார்கள்
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் 36 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு சாதனை! நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் 36 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு சாதனை!
‘நாடு முழுவதும் ஒரே குடும்ப அட்டை திட்டம் செயல்படுத்தப்படும்’ - மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தகவல்! ‘நாடு முழுவதும் ஒரே குடும்ப அட்டை திட்டம் செயல்படுத்தப்படும்’ - மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தகவல்!
முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது- ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார்! முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது- ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார்!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.