LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    சிந்தனைகள் Print Friendly and PDF
- காந்தியடிகள்

காந்தியடிகளின் சீரிய சிந்தனைகள்!

-> உண்ண வாழாமல், வாழ உண்பதே சிறந்தது.

-> காலையிலும், இரவில் படு க்கைக்குச் செல்லும் முன்பும் பற்களை பிரஷ் கொண்டு துலக்குவதுடன், நாக்கை  வழிப்பது நல்லது. நாக்கில் வெள்ளை படிவதை இது தடுக்கும்.

->  காலை எழுந்ததும் ஒரு கோப்பை தண்ணீர் அருந்துங்கள். தினசரி 10-12 கோப்பை அருந்துவது உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது.

-> தினசரி நடைப்பயிற்சி, யோகா, உடற்பயிற்சி அவசியம்.

-> ஜலநேத்தி,  சூத்ரநேர்த்தி போன்ற கழிவுகளை சுத்தம் செய்யும் பயிற்சி அவசியம்.

-> நெல்லிக்காய் ஜூஸ், திரிபலா சாப்பிடவும்.

-> காலையில் பூண்டு ரசம் அருந்துங்கள்.

-> நார்ச்சத்துள்ள உணவை உட் கொள்ளவும். கோதுமை, அரிசி த விடு நீங்காதது நல்லது. சீசனில் கிடைக்கும்  பழங்கள் மற்றும் பச் சைக் காய்கறிகளை தினசரி உங்கள் உணவில் சேர்த்துக் கொள் ளவும்.

-> பசித்தபின் புசிப்பதே நல்லது. மிதமான உணவே சிறந்தது. சாப் பிடும் உணவை நன்கு சுவைத்து, சவைத்து  சாப்பிடவும்.

-> சாப்பாட்டிற்கு இடை இடையே தண்ணீர் அருந்தாதீர்கள். சாப்பிடு வதற்கு அரைமணி நேரம் முன்போ,  சாப்பிட்ட ஒரு மணி நேரம் கழித்தோ தண்ணீர் அருந்தவும். இதனால் ஜீரண சக்தி பாதிக்கப் படாது.

-> துவர்ப்பு, மசால் உணவுகள், இனிப்பு, எண்ணெயில் பொரித்த உணவைத் தவிர்க்கவும்.

-> சோம்பலின்றி எப்போதும் சுறுசுறுப்புடன் செயல்படவும்.

-> வாரம் ஒருமுறை வெறும் தண்ணீர் மட்டுமே, முடியாதவர்கள் கஞ்சி போன்ற திரவ உணவையோ,  பழச்சாறோ அருந்தவும்.

-> உங்கள் உடல் நிலையை கண் காணித்து வரவும்.

-> சோர்வு ஏற்படும் போது போதுமான அளவு ஓய்வு எடுத்துக் கொள்ளவும்.

-> டீ, காபி, பான், புகையிலை போன்ற உணர்ச்சிகளைத் தூண்டும் பொருள்களைத் தவிர்க்கவும்.

-> புகை பிடிப்பதையும், மது அருந்து வதையும் தவிர்க்கவும். இதனால் மனம் பேதலிப்பதுடன், பல தீராத  நோய்களும் ஏற்பட்டு அவ தியுற நேரிடும். பலனை எதிர்பாராமல் கடமையை ஒழுங்காக,
சரியாகச் செய்யுங்கள். பலன் தருவது  இறைவன்.

-> பாதி வயிறு உணவு, பாதி அளவு தண்ணீர், மும்மடங்கு உட ற்பயிற்சி, வாய்விட்டுச் சிரிப்பது, அதிக நேரம்  தியானப் பயிற்சி உங்களை முழு ஆரோக்கியத்தில் வைத்திருக்கும்.

-> மற்றவர்கள் உங்களிடம் எப் படி நடந்து கொள்ள வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களோ அதேபோல  மற்றவர்களிடம் நீங்கள் நடந்து கொள்ளுங்கள்.

->  அதிகாலையில் எழுந்திருக்கும் பழக்கத்தைக் கைக்கொள்ளாதவர்கள் உடல் நலமுடன் இருக்க முடியாது.

-> நீங்கள் உண்ணும் உணவே அருமருந்தாகும்.

-> சாப்பிட வேண்டுமா, வேண்டாமா என்று தீர்மானிக்க முடியாமல் குழப்பம் ஏற்பட்டால் உண்ணாமல் இருப்பதே சிறப்பு.

-> சிறுநீரைக் கழிக்க வேண்டாமா, அடக்கி வைக்கலாமா என்ற தயக்கம் ஏற்படும்போது, சிறுநீரை வெளியேற்றுவதே உடல் நலனுக்கு உகந்தது.

-> சாப்பிடும் போது மௌனத்தை அனுஷ்டியுங்கள்.

-> எதிர்மறையான எண்ணங்கள் வேண்டாமே, ஆக்கபூர்வமான எண் ணங்களையே உரமிட்டு வளர்த்துக்  கொள்ளுங்கள்.

-> எதைச் செய்தாலும்,அதை இறைவனுக்கு அர்ப்பணமாகச் செய்வீர்களானால், உங்கள் வாழ்வில்  நிறைவு ஏற்படும்.

-> எந்தச் சூழ்நிலையிலும் ஏமாற்றத்திற்கு இடம் தராதீர்கள்.

-> அன்றாடம் காலையிலும், மாலையிலும் இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள்.

-> பசும்பால்  அருந்தவும். அதனால் உடலும், மனமும் ஆரோக்கியமாக இருக்கும்.

-> தினசரி உங்கள் கண்களை 2-3 தடவை குளிர் நீரால் கழுவவும். கண் எரிச்சல் போன்றவற்றை இது தடுக்கும்.

-> பருவகாலத்திற்கு ஏற்றவாறு பழங்கள், சாலட்டுகளை எடுத்துக் கொள்ளவும்.

-> பழங்கள், காய்கறிகளை அதன் தோல் நீக்காமல் உட்கொள்ளவும். அதுபோல பருப்பு வகைகளையும் தோல்  நீக்காமல் பயன்படுத்தவும்.

-> 40 வயதைக் கடந்தவர்கள் அதிகளவில் பருப்பு வகைகளைச் சேர்த்துக் கொள்ளக் கூடாது. குறைத்துக்  கொள்வது நலம். 50 வயதுக்கு மேல் அடியோடு பருப்பு வகைக ளைத் தவிர்க்கவும்.

-> முளைகட்டிய தானியங்கள் உங்கள் உணவில் ஒரு முக்கிய ஐட்டமாக சேர்த்துக் கொள்ளவும்.

-> தினசரி  சுத்தமான தண்ணீரில் குளிக்கவும். வியர்வை நாற்றம், சரும நோய் வராமல் தடுக்கும்.

-> கோரைப்பாயின் மீது பெட்ஷீட் ஜமுக்காளம் விரித்து, மிருதுவான தலையணை வைத்து படுத்து உறங்கவும். ரப்பர், ஃபோம் மெத்தைகள், தலையணைகள் வேண்டாம்.

-> பருவத்தில் கிடைக்கும் பழங்கள், முளைகட்டிய தானியங்களை கா லை உணவாகக் கொள்ளவும்.

-> அவ்வப்போது உடல் மசாஜ் செய்து கொள்ளலாம். காலை சூரிய ஒளியில் சூரியக் குளியல் உடல் நலனுக்கு  மிகவும் உகந்தது.

by Swathi   on 02 Mar 2013  2 Comments
Tags: மகாத்மா காந்தி   காந்தி   சிந்தனைகள்   Mahatma Gandhi   Gandhi   Gandhi Quotes     
 தொடர்புடையவை-Related Articles
காந்தித்தாத்தாவும், பொன்னுசாமி கங்காணியும் - நிர்மலா ராகவன் காந்தித்தாத்தாவும், பொன்னுசாமி கங்காணியும் - நிர்மலா ராகவன்
இயல்பாக இரு இயல்பாக இரு
எச்சரிக்கையாய்யிரு எச்சரிக்கையாய்யிரு
வாழ்க்கை ஒரு புதிர் வாழ்க்கை ஒரு புதிர்
உணர்வோடு சுவையறிதல் உணர்வோடு சுவையறிதல்
சாக்ரடீஸ் சிந்தனைகள் சாக்ரடீஸ் சிந்தனைகள்
சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி உள்பட ஏழு பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு உத்தரவு !! சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி உள்பட ஏழு பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு உத்தரவு !!
ஆபிரகாம் லிங்கன் - அடிமைத்தனத்தை ஒழிக்க வந்த அமெரிக்க ஜனாதிபதி !! ஆபிரகாம் லிங்கன் - அடிமைத்தனத்தை ஒழிக்க வந்த அமெரிக்க ஜனாதிபதி !!
கருத்துகள்
25-Feb-2018 05:33:19 பாலாஜி said : Report Abuse
காந்தி பிலால் ஹிஸ்ட்ரோய் நோட் இந்த தி வெப் சைட் ப்ளீஸ் கிவ் மீ தி பிலால் ஸ்டரொய் ஒப்பி காந்தி
 
25-Feb-2018 05:33:04 பாலாஜி said : Report Abuse
காந்தி பிலால் ஹிஸ்ட்ரோய் நோட் இந்த தி வெப் சைட் ப்ளீஸ் கிவ் மீ தி பிலால் ஸ்டரொய் ஒப்பி காந்தி
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.