LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

மக்களிசைக்கு கிடைத்த மாபெரும் வெற்றி!!

விஜய் தொலைக்காட்சி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி சீனியர், ஜூனியர் என்று இரு பிரிவுகளாக நடந்து வருகிறது. இதில், தற்போது சூப்பர் சிங்கர் சீனியர் 6 சீசனுக்கான இறுதிப் போட்டி சென்னை நேரு உள்விளையாடு அரங்கத்தில் கடந்த ஞாயிறு மாலை நடந்து முடிந்தது.

இறுதிப் போட்டியில் அனிருத், மாளவிகா, ரக்‌ஷிதா, ஷக்தி, ஸ்ரீகாந்த் மற்றும் செந்தில் கணேஷ் ஆகியோர் பங்கேற்றனர். இதில், புதுக்கோட்டையைச் சேர்ந்த மக்கள் இசைக்கலைஞர் செந்தில் கணேஷ் மாபெரும் வெற்றி பெற்றுள்ளார்!

இந்த வெற்றி மக்களிசைக்கு கிடைத்த மாபெரும் வெற்றியிது! அதுவும் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில்…!

இறுதிப் போட்டியில், ஒவ்வொரு போட்டியாளரும் இரண்டு பாடல்கள் பாடினர். இறுதியில், சூப்பர் சிங்கர் 6க்கான வெற்றியை, புதுக்கோட்டை மக்கள் இசைக் கலைஞர் செந்தில் கணேஷ் தட்டிச் சென்றுள்ளார்.

இதில், 50 லட்சத்துக்கான சொகுசு பங்களா பரிசாக அளிக்கப்பட்டது. 2ஆவது இடத்தைப் பிடித்த ரக்‌ஷிதாவுக்குரூ.25 லட்சமும் 3ஆம் இடத்தைப் பிடித்த மாளவிகாவுக்கு ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்பட்டது.  

செந்தில் கணேஷின் காதல்மனைவி ராஜலட்சுமி, பாடிய –-- நைந்துகிடக்கும் கைத்தறி நெசவாளரின் வாழ்க்கையைப் பற்றித் தானே எழுதி, இசையமைத்துப் போட்டியின்போது பாடிய –-- பாடலுக்காக, ராம்ராஜ் காட்டன் குழுமம் ரூ.ஐந்துலட்சம் வழங்கியது!

அந்தத் தொகையை, தான் சார்ந்திருக்கும் நெசவாளர் குடும்பக் குழந்தைகளின் கல்விச் செலவுக்காக வழங்குவதாக அறிவித்து, திண்டுக்கல், தேனி, மதுரை, சேலத்தைச் சேர்ந்த கைத்தறி நெசாவளர் குடும்பத்தினரை மேடையேற்றியது நெஞ்சை நெகழ வைத்தது.

திண்டுக்கல்லில் பிறந்த ராஜலட்சுமி கிராமிய இசைக்கலை ஆய்வில், எம்.ஏ., எம்.ஃபில். பட்டம் பெற்றவர் என்பதும், மேடையில் சந்தித்த செந்தில்கணேஷைக் காதலித்துக் கைப்பிடித்தவர் என்பது, இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதும் குறிப்பிடத் தக்கது!

கிராமத்துக் குயில்கள் இரண்டும், தமிழ்ப்பண்பாடு மாறாத வேட்டி-சட்டை, கண்டாங்கிச் சேலை- என, உடையில் கடைசிவரை மாறாமல் வந்தது இது மக்களிசையின்  வெற்றி என்பதைக் காட்டியது!

செந்தில் கணேஷ்-ராஜலட்சுமி இணையர், இனி உலகெங்கும் பறந்து சென்று தமிழின் மக்களிசையைப் பாடிப் பறக்க வாழ்த்துவோம்!

விஜயலட்சுமி - நவநீத கிருஷ்ணன் இணையர் தம் இசைவாரிசாக ஏற்கெனவே சொன்னது இப்போது உண்மையாகிறது!

தமிழின் மக்களிசை வெற்றி பெற்றது!
தமிழரின் உடைப்பண்பாடு வெற்றிபெற்றது!
தமிழ்க்காதல் வெற்றிபெற்றது! மக்கள் வெற்றியித!
மக்களிசையின் மகத்தான வெற்றி!

சென்றிடுவீர் எட்டுத் திக்கும்!
மக்கள் இசைகேட்டுப் புவி அசைந்தாட
வென்றிடுவீர் உலகெங்கும்!
வாழ்த்துகிறேன்! வாழ்த்துவோம்!

- நா.முத்துநிலவன்

by Swathi   on 18 Jul 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
"பிறந்த நாளில் கட்சியின் அறிவிப்பு இல்லை" நடிகர் ரஜினிகாந்த் பேட்டி!
எழுமின் படம் பார்க்க  மாணவர்களுக்கு சலுகை! எழுமின் படம் பார்க்க மாணவர்களுக்கு சலுகை!
வண்டலூர் பூங்காவில் உள்ள வெள்ளைப்புலியை நடிகர் சிவகார்த்திகேயன் தத்தெடுத்தார்! வண்டலூர் பூங்காவில் உள்ள வெள்ளைப்புலியை நடிகர் சிவகார்த்திகேயன் தத்தெடுத்தார்!
இளையராஜாவின் பாடல்களை இனி மேடையில் பாடுவேன்:  எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அதிரடி இளையராஜாவின் பாடல்களை இனி மேடையில் பாடுவேன்: எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அதிரடி
மேற்குத் தொடர்ச்சி மலை – திரைப்படம் மேற்குத் தொடர்ச்சி மலை – திரைப்படம்
உன்னை காணாத... பாடல் புகழ் கேரளா தோட்ட தொழிலாளிக்கு கிடைத்தது பாடகர் வாய்ப்பு... உன்னை காணாத... பாடல் புகழ் கேரளா தோட்ட தொழிலாளிக்கு கிடைத்தது பாடகர் வாய்ப்பு...
பொங்கலுக்கு வருகிறது விசுவாசம்... பொங்கலுக்கு வருகிறது விசுவாசம்...
வசூலில் பாகுபலி 2வை முந்திய சஞ்சு... வசூலில் பாகுபலி 2வை முந்திய சஞ்சு...
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.