LOGO
  முதல் பக்கம்    மற்றவை    கல்வி/வேலை Print Friendly and PDF
- வேலைவாய்ப்பு

மக்கள் சிந்தனைப் பேரவையின் சார்பில் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு எழுச்சிமிக்க பாரட்டு விழா

ஈரோடு மாவட்டத்தில் சென்ற கல்வியாண்டின் அரசுப் பொதுத் தேர்வில் 10 ஆம் வகுப்பிலும் 12 ஆம் வகுப்பிலும் தங்களது பாடங்களில் நூறுசதவிகித மாணவர்களைத் தேர்ச்சிபெற வைத்த அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு மக்கள் சிந்தனைப் பேரவையின் சார்பில் 21.06.2014 ஆம் தேதி சனிக்கிழமை ஈரோடு கொங்கு கலையரங்கில் பாராட்டு விழா நடைபெற்றது. காலை 10 மணிக்கு தொடங்கியவிழா 1.30 மணிக்கு நிறைவுபெற்றது.


இவ்விழாவிற்கு ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் வே.க. சண்முகம் தலைமையேற்றார். இவர், தனது உரையில் ஆசிரியப் பணியின் முக்கியத்துவத்தை பல்வேறு கோணங்களில் விளக்கியும் வலிறுத்தியும் பேசினார். மாவட்டக் கல்வி அலுவலர் குணசேகரன் மெட்ரிக்குலேசன் பள்ளி ஆய்வாளர் ராஜமாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக சொற்பொழிவாளர் பேராசிரியர் அப்துல்காதர் கலந்துகொண்டார்.


மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் விழாவை அறிமுகப்படுத்தித் தொடக்கவுரையாற்றினார். இவரது உரையில் கடந்த 12 ஆண்டுகளாக மக்கள் சிந்தனைப் பேரவை அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்குப் பாராட்டு விழா நடத்திவருவது குறித்தும் இவ்விழாவைத் தொடர்ந்து நடத்துகிற நோக்கத்தை விளக்கியும் பேசினார்.

பேராசிரியர் அப்துல்காதர் தனது ஒருமணி நேர உரையில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் பெற்றுத்தருவதோடு வாழ்வின் மதிப்புகளையும் பண்பாட்டையும் மனிதநேயத்தையும் கற்றுத்தரவேண்டும் என்ற கருத்தை வெவ்வேறு உதாரணங்களைச் சொல்லி விளக்கிப் பேசினார்.

இப்பாராட்டு விழா ஒரு ஆசிரியர் மாநாட்டைப் போல் எழுச்சிகரமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இவ்விழாவில் 2000 க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றனர். ஊர்பிரமுகர்கள், பெற்றோர்கழகப் பொறுப்பாளர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

ஈரோடு மாவட்டத்தில் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு ஆகிய இரண்டு தேர்வுகளிலும் நூறு சதவிகிதம் தேர்ச்சி கொடுத்த அரசு மேல் நிலைப்பள்ளிகளுக்கு சிறப்பு பாரட்டுமடலை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார். 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 74 அரசுப் பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன. 12 ஆம் வகுப்பில் 19 மேல்நிலைப்பள்ளிகளில் தேர்வுஎழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்தப் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களும் தலைமையாசிரியருடன் மேடைக்கு வரவழைத்து பாராட்டுமடல்கள் வழங்கப்பட்டன. அத்தோடு இம்மாவட்டத்தில் தன்னுடைய பாடத்தில் 100% மாணவர்களை தேர்ச்சி பெறவைத்த 1,800 அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கும் தனித்தனியாக மேடையில் பாராட்டுமடல்கள் வழங்கப்பட்டன.

 

செஞ்சிலுவைச் சங்கம், விளையாட்டு,சாரணர் இயக்கம் போன்ற அமைப்புகளில் அரசுப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் ஆர்வம் காட்டி மாணவர்களை ஊக்குவித்தமைக்காக சில ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கும் பாராட்டுமடல்கள் வழங்கப்பட்டன.

 

10 ஆம் வகுப்பிலும் 12 ஆம் வகுப்பிலும் அரசுப்பள்ளிகளுள் இம்மாவட்டத்தில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கும் பரிசளிக்கப்பட்டது.

 

தொர்டந்து 12 ஆவது ஆண்டாக மக்கள் சிந்தனைப் பேரவையால் நடத்தப்பட்ட அரசுப் பள்ளி ஆசிரியர்களைப் பாராட்டும் இவ்விழா ஆசிரியர்களுக்குப் புத்துணர்ச்சியையும் புதிய நம்பிக்கையையும் அளித்துள்ளது. இக்கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து ஆசிரியர்களுக்கும் கல்விகுறித்த பல துண்டறிக்கைகள் பேரவையால் வழங்கப்பட்டது.

by Swathi   on 22 Jun 2014  0 Comments
Tags: த.ஸ்டாலின் குணசேகரன்   மக்கள் சிந்தனைப் பேரவை   Makkal Sinthanai Peravai              
 தொடர்புடையவை-Related Articles
பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தி! பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தி!
சிகாகோ சர்வ சமயப் பேரவையில் உரையாற்றியதன் 125-ஆம் ஆண்டு நிறைவு நாள் சிகாகோ சர்வ சமயப் பேரவையில் உரையாற்றியதன் 125-ஆம் ஆண்டு நிறைவு நாள்
சித்த மருத்துவம் கூறும் இளம்பெண்களுக்கான ஊட்டச்சத்து மிக்க உணவுகள் !! சித்த மருத்துவம் கூறும் இளம்பெண்களுக்கான ஊட்டச்சத்து மிக்க உணவுகள் !!
கேரளாவில் மழை வெள்ளத்திற்கு பலியானோர் எண்ணிக்கை இன்றைய நிலவரப்படி  357 ஆக உயர்ந்துள்ளது... கேரளாவில் மழை வெள்ளத்திற்கு பலியானோர் எண்ணிக்கை இன்றைய நிலவரப்படி 357 ஆக உயர்ந்துள்ளது...
தூர் தூர்
தி.மு.க தலைவர் கலைஞர் மு.கருணாநிதி காலமானார் தி.மு.க தலைவர் கலைஞர் மு.கருணாநிதி காலமானார்
இறவாத இன்ப அன்பு - முனைவர். மு. வள்ளியம்மை இறவாத இன்ப அன்பு - முனைவர். மு. வள்ளியம்மை
பிரிக்ஸ் 2018 வாலிபால் : இந்திய அணியின் கேப்டனாக மன்னார்குடியைச் சேர்ந்த முத்துசாமி தேர்வு.. பிரிக்ஸ் 2018 வாலிபால் : இந்திய அணியின் கேப்டனாக மன்னார்குடியைச் சேர்ந்த முத்துசாமி தேர்வு..
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.