LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    கட்டுரை Print Friendly and PDF
- நலம் காக்கும் சித்தமருத்துவம்

மக்களைக் காக்கும் சித்த மருத்துவம் - மரு.ஜெயப்பிரகாஷ் நாராயணன்

மக்களைக் காக்கும் சித்த மருத்துவம் - மரு.ஜெயப்பிரகாஷ் நாராயணன்

அறிமுகம்:

    ஒரு உயிருக்கு ஏற்படுகின்ற வேதனையை தன் நோய் போல எண்ணி நோய் நீக்குபவனே உண்மையான மருத்துவன் ஆவான். அந்த வகையில் சித்த மருத்துவத்திற்கே தன்னை அர்ப்பணித்தவர் டாக்டர். ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஆவார். பாரம்பரிய மற்றும் பட்டதாரி சித்த மருத்துவர்களுக்குப் பாலமாக விளங்கக் கூடியவர். இன்று சித்த மருத்துவம் மக்கள் இயக்கமாக மாற இவரும் ஒரு காரணமாவார்.

உலக மருத்துவமாகும் சித்த மருத்துவம்:

    நவீன மருத்துவத்தின் அடிப்படைக் கோட்பாடுகளையும் தெரிந்து கொண்டால் தான் சித்த மருத்துவத்தின் பெருமையை உலகறியச் செய்ய முடியும் என்று கூறுகிறார். பி.எஸ்.எம்.எஸ். உலோக மருத்துவம் உலக மருத்துவமாக விரிவடையும். உலக சுகாதார அமைப்பு நவீன மருத்துவத்திற்காக மட்டுமே அமைக்கப்பட்டது கிடையாது. எல்லா மருத்துவத்தையும் அணைக்கக் கூடிய அமைப்பாக அது செயல்பட வேண்டும்.

பாராட்டும் உள்ளம்:

    சித்த மருத்துவம் வளர பலர் பாடுபட்டுள்ளனர். ஆனால் அவர்கள் யாரும் வெளியில் அதிகமாகத் தெரியவில்லை. இது சித்த மருத்துவ வளர்ச்சிக்கு ஒரு தடையாகும். சித்த மருத்துவத்தில் ஒருவருக்கொருவர் பாராட்டும் உள்ளம் பெற வேண்டும். ‘இதை இவர்தான் அறிமுகப்படுத்தினார்’ என்று தயங்காமல் கூற வேண்டும். பாராட்டத்தக்கவர்களைப் பாராட்டும் உள்ளம் வேண்டும். தான் மட்டும் வளர வேண்டும் என்று நினைக்கக் கூடாது.

மனித சமுதாயத்தின் மிகப்பெரிய இடர்:

    உணவு முறை கட்டுப்பாடு என்பது மட்டும் ‘பத்தியம்’ அல்ல. வாழ்க்கை முறையை மாற்றி அமைப்பதும் பத்தியம் தான். சித்த மருத்துவர்களுக்கு ஜோதிட அடிப்படை நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும் எனத் திரு. ஜெயப்பிரகாஷ் நாராயணன் அவர்கள் கூறுகிறார். இன்று மனித சமுதாயத்திற்கு ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய இடர் ‘கொரோனா’ ஆகும். இதை நீக்கச் சித்த மருத்துவர்கள் பங்களிக்க வேண்டும். கைவிடப்பட்ட நிலையிலும் சித்த மருத்துவம் காப்பாற்றும் என்ற நம்பிக்கை மக்களிடையே வர வேண்டும். மக்களின் அச்சத்தை போக்குவது தான் மருத்துவர்களின் தலையாய கடமை ஆகும்.

    நோய் கட்டுப்பாட்டுக் குழுவில் சித்த மருத்துவர்கள் இடம்பெற வேண்டும். இன்னும் சித்த மருத்துவம் குறித்த விரிவான ஆராய்ச்சி தேவை. நவீன மருத்துவத்தால் கொரோனா நோயானது குணப்படுத்தப்பட்டாலும் பல பக்கவிளைவுகள் நவீன மருத்துவத்தால் ஏற்படுகின்றன. ஆனால் சித்த மருத்துவத்தால் பக்க விளைவுகள் இல்லாமலே நோயானது குணப்படுத்தப்படுகின்றது. மக்கள் சிறிது சிறிதாகச் சித்த மருத்துவத்தை நம்பத் தொடங்கியுள்ளனர். எனவே இனிவரும் காலமானது சித்த மருத்துவ காலமாக மாறும் என்றும் திரு. ஜெயப்பிரகாஷ் நாராயணன் தெரிவித்துள்ளார்.

by Lakshmi G   on 30 Oct 2020  0 Comments

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
பாம்பு கடித்தாலும் நீங்கள் உயிருடன் இருக்க வேண்டும் என்றால் இந்த செடியை பயன்படுத்துங்கள் பாம்பு கடித்தாலும் நீங்கள் உயிருடன் இருக்க வேண்டும் என்றால் இந்த செடியை பயன்படுத்துங்கள்
மனித உடல் என்கிற அதிசயம்... மனித உடல் என்கிற அதிசயம்...
ஒவ்வொரு கெட்ட குணங்களும் ஒவ்வொரு நோயை உருவாக்கும் ஒவ்வொரு கெட்ட குணங்களும் ஒவ்வொரு நோயை உருவாக்கும்
சங்கடங்களை போக்க சம்மணமிடுங்கள்... சங்கடங்களை போக்க சம்மணமிடுங்கள்...
வருமானம் குறைவாக இருந்தாலும், நமது உடல் ஆரோக்கியத்திற்கு மிக சிறந்த உணவை நம்மால் உண்ணமுடியும். வருமானம் குறைவாக இருந்தாலும், நமது உடல் ஆரோக்கியத்திற்கு மிக சிறந்த உணவை நம்மால் உண்ணமுடியும்.
சித்தர் இலக்கிய இரகசியங்கள் - மருத்துவர். அன்பு கணபதி சித்தர் இலக்கிய இரகசியங்கள் - மருத்துவர். அன்பு கணபதி
ஒருங்கிணைந்த நலவாழ்விற்கு தமிழ் மரபு வாழ்வியலின் முக்கிய 7 கூறுகள் ஒருங்கிணைந்த நலவாழ்விற்கு தமிழ் மரபு வாழ்வியலின் முக்கிய 7 கூறுகள்
சித்தர் இலக்கிய ரகசியங்கள் - டாக்டர். அன்பு கணபதி – நிகழ்வு – 4 சித்தர் இலக்கிய ரகசியங்கள் - டாக்டர். அன்பு கணபதி – நிகழ்வு – 4
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.