LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

காணமால் போன மலேசிய விமானம் கடலில் விழுந்ததை உறுதி செய்தது மலேசிய அரசு !!

கடந்த 8-ந் தேதி நடு வானில் காணாமல் போன மலேசிய விமானம் இந்தியப் பெருங்கடல் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என மலேசிய பிரதமர் தெரிவித்துள்ளார்.


கடந்த 8-ந் தேதி மலேசிய தலைநகர் கோலாம்பூரில் இருந்து சீனாவின் பீஜிங்குக்கு 239 பேருடன் புறப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் கடந்த 8ம் தேதி நடுவானில் மாயமானது. இதனையடுத்து விமானத்தையும், அதில் பயணம் செய்தவர்களையும் தேடும் பணிகள் போர்கால அடிப்படையில் தொடர்ந்து நடைபெற்று வந்தன. இதில் 25-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த விமானங்கள் மற்றும் கப்பல்கள் ஈடுபட்டு வந்தன.


இந்நிலையில், தெற்கு இந்திய பெருங்கடலில் 2 மர்மபொருள் கிடப்பதை பார்த்ததாக ஆஸ்திரேலியாவும், மற்றொரு பொருளை பார்த்ததாக சீனாவும் நேற்று உறுதி செய்துள்ளது. 


இது குறித்து ஆஸ்திரேலிய அரசு கூறுகையில், ‘பழுப்பு அல்லது பச்சை நிறத்தில் வட்டவடிவிலான ஒரு பொருளும், ஆரஞ்ச் நிறத்தில்  செவ்வக வடிவிலான ஒரு பொருளும் கிடப்பதை ஆஸ்திரேலியா உறுதி செய்துள்ளது. இதே போல, மற்றொரு இடத்தில் வெள்ளை நிறத்தில் சதுர வடிவிலான ஒரு பொருளை பார்த்ததாக சீனா உறுதி செய்துள்ளது. இவை மாயமான மலேசிய விமானத்தில் உடைந்த பாகங்கள்தானா என உறுதியாகவில்லை. இப்பொருட்களை கைப்பற்ற ஆஸ்திரேலிய கப்பல்கள் சம்பவ இடத்தை நெருங்கியுள்ளதாக ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது. இந்த தகவலை மலேசிய அரசும் உறுதி செய்துள்ளது. 


இது குறித்து மலேசிய பிரதமர் நஜிப் ரஜாக் கூறியதாவது, 239 பயணிகளுடன் கடந்த 8 ஆம் தேதி காணாமல் போன மலேசியா விமானம் இந்தியப் பெருங்கடலில் விழுந்தது உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், அதில் பயணம் செய்தவர்கள் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்றும் தெரிவித்தார். மேலும் இது தொடர்பாக விமானத்தில் பயணம் செய்தவர்களின் உறவினர்களுக்கு செய்தி அனுப்பப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துள்ளார்.


மாயமான மலேசிய விமானத்தின் கறுப்பு பெட்டியை தேட, அமெரிக்க கடற்படையின் நவீன தொழில்நுட்ப கருவி பயன்படுத்தப்பட உள்ளது. அமெரிக்க கடற்படை நேற்று விடுத்த அறிக்கையில், ‘கடலில் மூழ்கிய விமானத்தின் கறுப்பு பெட்டியை கண்டுபிடிப்பதற்காகவே டிபிஎல்-25 சிஸ்டம் என்ற பிரத்யேகமாக கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது. கடலில் 20 ஆயிரம் அடி ஆழத்தில் கறுப்பு பெட்டி விழுந்திருந்தாலும் கூட இக்கருவி மூலம் கண்டுபிடித்து விடலாம். இதனை மலேசிய விமானம் தேடும் பணியில் ஈடுபடுத்த உத்தரவிடப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.

by Swathi   on 24 Mar 2014  0 Comments
Tags: Malaysian PM   Malaysian Flight 370   Flight 370   மலேசிய விமானம்   மலேசிய பிரதமர்        
 தொடர்புடையவை-Related Articles
குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -  குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர்  திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர் 
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர்  முனைவர்.ஜாகிர் உசேன் திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர் முனைவர்.ஜாகிர் உசேன்
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது.. திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது..
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்... திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்...
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.