LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

தென்னாப்பிரிக்க கறுப்பினத் தலைவர் மண்டேலா மருத்துவமனையில் அனுமதி !

தென்னாப்பிரிக்காவின் கறுப்பினத் தலைவரும், முன்னாள் அதிபருமான நெல்சன் மண்டேலா  உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இவருக்கு  வயது 94.தென்னாப்ரிக்காவில் இனவெறியை எதிர்த்து போராடியதால் 27 ஆண்டுகளாக  சிறையில் இருந்தவர் மண்டேலா. பின்னர் முதல் கருப்பர் இன அதிபராக 5 ஆண்டுகள் அவர்  பதவி வகித்தார். இதன்பின், அவர் பொது வாழ்க்கையிலிருந்து விலகி தனது சொந்த ஊருக்கு  
சென்றுவிட்டார். பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதையும் அவர் தவிர்த்து வந்தார். 2010ம்  ஆண்டு உலகக் கோப்பை கால்பந்துப் போட்டி தென்னாப்ரிக்காவில் நடைபெற்றபோது  தொடக்க விழாவில் அவர் கலந்து கொண்டார். இதுவே அவர் பங்கேற்ற கடைசி பொது  நிகழ்ச்சியாகும்.இந்நிலையில் மண்டேலாவுக்கு நேற்றுமுன்தினம் உடல்நலக் குறைவு  
ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை  அளிக்கப்பட்டு வருகிறது. தென்னாப்பிரிக்கா தற்போதைய அதிபர் ஜேக்கப் ஜுமா நேற்று  மண்டேலாவை மருத்துவமனைக்கு சென்று பார்த்தார். மண்டேலாவின்  உடல்நிலை  பற்றி  அவர் கூறுகையில் மண்டேலாவின் உடல்நிலை சீராக உள்ளது. அவரை மருத்துவர்கள்  சிறப்பாக கவனித்து வருகின்றனர் என்றார். மண்டேலாவுக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டுள்ளது,  
என்ன பரிசோதனைகள் செய்யப்பட்டன என்பதை அவர் தெரிவிக்க மறுத்து  விட்டார்.தென்னாப்பிரிக்க பொது மக்கள் மண்டேலா விரைவில் குணமடைய  பிராத்தனை  செய்து வருகின்றனர்.

Mandela Admitted in hospital

Nelson Mandela, in hospital in Pretoria for “medical attention”, was on Sunday visited by President Jacob Zuma who said that South Africa’s anti-apartheid icon “looks well after a restful night”.The 94-year-old Mr. Mandela, who was South Africa’s first black President, was hospitalised on Saturday to undergo tests, President Jacob Zuma’s office had said in a statement.In January 2011, Mr. Mandela was treated for a serious chest infection. A year later, he underwent a diagnostic procedure for an abdominal problem.Mr. Mandela spent over two decades in prison under the white minority apartheid regime. Mr. Mandela retired from public life in 2004 and has been rarely seen in public since.He served as South Africa’s first black president between 1994 and 1999 South Africans had been waiting for word on Mr. Mandela’s condition amid messages of hope for a speedy recovery.

by Swathi   on 09 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ரஷியாவும், சீனாவும் இணைந்து 2035-க்குள் நிலவில் அணு உலை ஒன்றை அமைக்க திட்டம் ரஷியாவும், சீனாவும் இணைந்து 2035-க்குள் நிலவில் அணு உலை ஒன்றை அமைக்க திட்டம்
உலகின் அதிகம் படித்தவர்களை கொண்ட நாடு எது தெரியுமா! வெளியானது பட்டியல். உலகின் அதிகம் படித்தவர்களை கொண்ட நாடு எது தெரியுமா! வெளியானது பட்டியல்.
அருணாச்சலில் 13,000 அடி உயரத்தில் கட்டப்பட்ட உலகின் மிக நீளமான இரு வழி சுரங்கப்பாதை. அருணாச்சலில் 13,000 அடி உயரத்தில் கட்டப்பட்ட உலகின் மிக நீளமான இரு வழி சுரங்கப்பாதை.
முதல் பொது விடுமுறை நாளில் அபுதாபி இந்து கோயிலுக்கு 65,000 பேர் வருகை. முதல் பொது விடுமுறை நாளில் அபுதாபி இந்து கோயிலுக்கு 65,000 பேர் வருகை.
வாழ்க்கையில் சின்ன விஷயங்களையும் அனுபவியுங்கள் என புற்றுநோயால் மரணித்த இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இளம் பெண் உருக்கமான கடிதம். வாழ்க்கையில் சின்ன விஷயங்களையும் அனுபவியுங்கள் என புற்றுநோயால் மரணித்த இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இளம் பெண் உருக்கமான கடிதம்.
இந்தியாவைத் தொடர்ந்து நிலவின் தென் துருவத்தில் தடம் பதித்த அமெரிக்கா - எதற்காகத் தெரியுமா? இந்தியாவைத் தொடர்ந்து நிலவின் தென் துருவத்தில் தடம் பதித்த அமெரிக்கா - எதற்காகத் தெரியுமா?
இந்தியர்கள் இப்போது இலங்கை உட்பட மொத்தம் 7 வெளிநாடுகளில் UPI மூலம் பணம் செலுத்தலாம். இந்தியர்கள் இப்போது இலங்கை உட்பட மொத்தம் 7 வெளிநாடுகளில் UPI மூலம் பணம் செலுத்தலாம்.
மூளையில் சிப் பொருத்தப்பட்ட நபர் எண்ணங்களால் கம்ப்யூட்டர் மவுஸ்-ஐ இயக்குவதாக எலான் மஸ்க் தகவல். மூளையில் சிப் பொருத்தப்பட்ட நபர் எண்ணங்களால் கம்ப்யூட்டர் மவுஸ்-ஐ இயக்குவதாக எலான் மஸ்க் தகவல்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.