LOGO
  முதல் பக்கம்    சமையல்    இனிப்பு Print Friendly and PDF

மாம்பழ ரப்ரி

தேவையானவை :

 
1. பால் - 2 1/2 கப்
2. தோல் நீக்கிய கனிந்த மாம்பழ துண்டுகள் - ஒரு கப்  
3. சர்க்கரை - 1/4 கப்  
4. பிஸ்தா - 5 
5. பாதாம் - 4
6. ஏலக்காய் பொடி - 1/4 டீஸ்பூன்
7. குங்குமப்பூ - சிறிது


செய்முறை:


1. முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி நன்கு கொதிக்க வைத்து விட்டு பிறகு இறக்கி அதில்  பாதாமை போட்டு  இருபது நிமிடம் ஊற வைத்து, பின் அதன் தோலை நீக்கிவிட்டு, துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். 


2. பின்னர் பிஸ்தாவையும் துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி அடுப்பில் வைத்து வெதுவெதுப்பாக சூடேற்றி இறக்கி, அதில் குங்குமப்பூவை சேர்த்து சிறிது நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.


3. பிறகு மாம்பழ துண்டுகளை மிக்ஸியில் போட்டு, அத்துடன் சிறிது பால் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.


4. பின் குங்குமப்பூ பாலை அடுப்பில் வைத்து பாலை நன்கு கொதிக்க விட வேண்டும். அடுத்து அதில் சர்க்கரை சேர்த்து கிளறி, சர்க்கரை கரைந்ததும், அதனை இறக்கி, குளிர வைக்க வேண்டும்.


5. பாலானது குளிர்ந்ததும், அதில் மாம்பழ கூழ் சேர்த்து, ஏலக்காய் பொடி, பாதாம், பிஸ்தா, சேர்த்து கிளறி பரிமாறினால், சுவையான மாம்பழ ரப்ரி ரெடி!!!

 

 

Mango Rabri

Ingredients :

1. Milk - 2 1/2 Cups

2. Peeled Mango Fruit pieces - 1 cup

3. Sugar - 1/4 cup

4. Pista - 5

5.  Almond - 4

6. Cardamom Powder - 1/4 tsp

7. Saffron - little

Method : 

1. Take a vessel and boil water well. Then turn off heat then drop almonds into water and soak it for 20 minutes. Then peel its skin and make almond into pieces. 

2. Then chop the pista into pieces. Heat milk in an another pan. Turn off the heat then add saffron along with milk. Soak it for few minutes. 

3. Grind mango fruit in a mixie add milk along with it. Grind it softly. 

4. Then boil the saffron milk deeply then add sugar and stir well until sugar dissolve. Then turn off the stove and let it cool. 

5. Add mango fruit mixture, cardamom powder, almond, pista into chilled saffron milk. Stir it well and serve. 

by Swathi   on 05 Mar 2016  0 Comments
Tags: Mango Rabri   Mango Recipes   மாம்பழ ரப்ரி   மாம்பழ சமையல்   மேங்கோ ரப்ரி        
 தொடர்புடையவை-Related Articles
மாம்பழ ரப்ரி மாம்பழ ரப்ரி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.