LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சிறுகதை Print Friendly and PDF

மனித நேயம்

 வேதனையாக இருந்தது எனக்கு, சவாரியும் ஒன்றும் கிடைக்கவில்லை.கதை புத்தகங்கள் ஆட்டோவிலேயே வைத்திருப்பேன், அதை படிக்க கூட மனம் வரவில்லை.பயம்தான் அதிகமாக இருந்தது. இந்த பிரச்சினை எனக்கு தேவையில்லாதது. ஆனால் நியாயம் என்று ஒன்று இருக்கிறதே, இருந்தாலும் நான் அதிகமாக பேசிவிட்டேனோ என்று தோன்றுகிறது.அந்த இடத்தில் வேறு யாராக இருந்தாலும் அப்படித்தான் பேசியிருப்பார்கள், மேலும் என்னுடைய ஆட்டோவிற்குத்தான் சேதம் அதிகம்.எப்படியும் தொட்டால் செலவு 1000 ரூபாயுக்கு மேல் ஆகும்.மாத கடைசி வேறு, ஆட்டோ சவாரியும் குறைவாகத்தான் இருக்கும். பத்து நாள் தள்ளி ரிப்பேர் செய்து கொள்ளலாம். ஆனால் இந்த பிரச்சினையை எப்படி சமாளிப்பது என்றுதான் புரியவில்லை. அடிபட்டவன் நான், ஆனால் அடித்தவன் மிரட்டி விட்டு போகிறான்.” இன்னைக்கு சாயங்காலத்துக்குள்ள உன் கை,காலை எடுக்கலை என் பேர் மாரி இல்லை”  சட்டையை பிடித்து உலுக்கிவிட்டு எதுவும் பேசாமல் ஆட்டோவை எடுத்து சென்று விட்டான்,

 

                   காலையில் சவாரி ஒன்று ரயில்வே ஸ்டேசனில் நின்று கொண்டிருந்த பொழுது கிடைத்தது. கணவன், மனைவி கைக்குழந்தை என் குடும்பமாய் வந்து லட்சுமி மில் வரை சவாரி கேட்டார்கள். கேட்ட தொகைக்கு பேரம் பேசாமல் ஒத்துக் கொண்டதால் சந்தோசத்துடன் வண்டியை ஸ்டார்ட் செய்தேன். வண்டி அரை பர்லாங்கு தூரம் கடந்து இருக்கும்.திடீரென பக்கத்து சந்திலிருந்து வெளி வந்த ஆட்டோ ஒன்று என் ஆட்டோவின் வலது புறம் உரசி நின்றது. ஒரு நிமிடம் அதிர்ந்து நின்று விட்டேன். சுதாரித்துக்கொண்டு கீழிறங்கி பார்த்தேன். என் ஆட்டோவின் முன் பாகம் சேதமாகி இருந்தது. கோபம் தலைக்கு மேல் வந்தது. என் வண்டியின் மீது மோதி நின்ற ஆட்டோவில் இருந்து இறங்கி வந்தவனை பார்த்து கெட்ட வார்த்தைகளை வீசினேன். அங்கு கூட்டம் சேர ஆரம்பித்து விட்டது. அவன் திடீரென்று என் சட்டையை பிடித்து இன்னைக்கு சாயங்காலத்துக்குள்ள உன் கையை காலை எடுக்கலையின்னா என் பேர் மாரி இல்லை கூறி விட்டு வேகமாக ஆட்டோவை எடுத்து சென்று விட்டான். நான் அதிர்ந்து நின்று விட்டேன்.

 

 

 

                   என் வண்டியில் வந்த குடும்பம் “அப்பா வண்டி வருமா? இல்லை இறங்கிக்கவா.என்று கேட்டவுடன் சுதாரித்துக்கொண்டு வண்டியை எடுத்துக்கொண்டு லட்சுமி மில்லில் அவர்களை இறக்கி விட்டு விட்டு ஸ்டேண்ட் வந்து ஆட்டோவை நிறுத்தினேன். பக்கத்து ஆட்டோக்காரர் என் வண்டியின் சேதத்தை பார்த்து விட்டு என்ன ஆச்சு? என்று கேட்டார். நான் நடந்ததை சொன்னேன். சொல்லும்போதே துக்கம் தொண்டையை அடைத்தது. யார் மாரியா? அவன் பெரிய ரெளடி ஆச்சே, நம்மாளுங்க அவன் கிட்டே சகவாசமே வச்சுக்கறதில்லே, இவர் இதை சொல்லவும் இது வேறு என் பயத்தை அதிகப்படுத்தியது. வண்டி அடிபட்ட துயரத்தை விட மாரியை பற்றிய பயமே என்னை பிடித்துக்கொண்டது.ஆட்டோ நண்பர்கள் நீ பயப்படாதே நாங்கள் இருக்கிறோம் என்று சொன்னது என் பயத்தைத்தான் அதிகப்படுத்தியது..

 

 

 

          பொதுவாகவே சண்டை சச்சரவு எதிலும் ஈடுபடாமல் ஆட்டோ ஓட்டி வாழ்க்கையை ஓட்டி வருகிறேன். வீட்டுக்காரியும் ஏதோ கம்பெனிக்கு வேலைக்கு செல்வதால் எங்கள் இரண்டு குழந்தைகளை நல்ல பள்ளியில் படிக்க வைக்க முடிகிறது. இப்பொழுது மாரியின் பயத்தால் என் குடும்பம் என் கண் முன்னால் நின்றது.

 

          மதியம் மேல் சவாரி ஒன்று கிடைத்தது.கொண்டு போய் விட்டு வந்தேன்.அதன் பின் சவாரி ஒன்றும் கிடைக்கவில்லை. மனது சவாரியை விட மாரியை நினைத்து பயந்து கொண்டிருந்தது. இலேசாக இருட்ட ஆரம்பித்த உடன் பக்கத்து ஆட்டோகாரரிடம் சொல்லிவிட்டு வீட்டுக்கு கிளம்பிவிட்டேன். வீட்டுக்கு அருகில் வந்தபோது வீடு  வழக்கத்துக்கு மாறாக அமைதியாக இருந்தது. மனதுக்குள் கலவரம் பிடித்துக்கொண்டது. வீட்டுக்கு வந்து ஏதாவது ரகளை செய்து விட்டானா?

 

          வண்டியை வீட்டு சந்தில் கொண்டு போய் நிறுத்தினேன். பையனும், பெண்ணும் வண்டி சத்தம் கேட்டு மெதுவாக வெளியே வந்தார்கள். குழந்தைகள் பயந்தது போல் எனக்கு தென்பட்டது. எங்கடா உங்கம்மா? பயத்தில் என் குரல் எனக்கே கேடகவில்லை. அம்மாவை இன்னும் காணலே” என்றான் பையன். எனக்கு பகீரென்றது. எப்பொழுதும் ஆறு மணிக்குள் வீட்டுக்கு வந்து விடுபவள்,இன்று இது வரை வரவில்லை என்றால் மனது பயத்தின் எல்லைக்கே சென்று விட்டது. எதற்கும் மனைவியின் கம்பெனிக்கு போன் செய்யலாம் என்று நினைத்து கொண்டிருந்த பொழுது ஆட்டோ ஒன்று வந்து நின்றது.

 

      திரும்பி பார்த்த எனக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை.ஆட்டோவை நிறுத்தி மாரி இறங்கினான். வண்டிக்கு பின்னால் இறங்குவது யார்? என் மனைவியாயிற்றே? இவள் எப்படீ இவன் வண்டியில்? எனக்கு குழப்பமாக இருந்தது. இருவரும் வீட்டு வாசல் வரை வந்தனர். என் மனைவி மாரியை பார்த்து இதுதான் எங்க வீடு. இது எங்க வீட்டுக்காரர். நீங்க உள்ளே வாங்கண்ணே” என்றாள்.இல்லம்மா தங்கச்சி இன்னொரு நாள் வாரேன். உன் உதவியை மறக்க மாட்டேன் என்றவனை என் மனைவி பார்த்து அண்ணே இவர் கூட ஆட்டோதான் ஓட்டுறாரு என்று அறிமுகப்படுத்தினாள். அவன் உடனே என் கையை பிடித்துக்கொண்டு உன் சம்சாரம் மட்டும் இல்லேண்ணா என் சம்சாரத்தை உயிரோட பார்த்திருக்க முடியாது. ரோட்டுல அடிபட்டு பேச்சு மூச்சு இல்லாம கிடந்த என் சம்சாரத்தை உன் சம்சாரம் எடுத்துட்டு போயி ஆஸ்பிடல்ல சேர்த்து ட்ரீட்மெண்ட் கொடுத்திருக்குது. இப்ப என் சம்சாரம் நல்லா இருக்குது. ரொம்ப நன்றிப்பா.என்று நெகிழ்வுடன் கைகளை பிடித்துக்கொண்டான். எனக்கு என்ன பேசுவது என்றே புரியவில்லை, மெல்லிய குரலில் நீங்க என்னை மன்னிக்கனும், காலையில ஆத்திரத்துல அப்படி திட்டிட்டேன் என்றேன். அவன் ஒரு நிமிடம் யோசித்து எப்ப திட்டினீங்க? என்றவன் திடீரென்று ஞாபகம் வந்தவனாக “ஓ” காலையில உங்க வண்டியில தான் மோதினேனா? அடடா என்றவன் நேராக என் வண்டியை சென்று பார்த்தான்.”சே” அநியாயமா அடிபட்டுருச்சு, வருத்தத்துடன் நேராக என்னிடம் வந்து தன் கைப்பையில் கை விட்டு நிறைய பணம் எடுத்து என் கையில் திணித்து தம்பி இதுல 750 ரூபாய்க்கு மேல இருக்கும், முதல்ல வண்டிய ரிப்பேருக்கு விடு. ஆன செலவு பாக்கிய நான் அப்புறம் கொடுக்கிறேன் எனறவன், என்னை மன்னிச்சுரு தம்பி என் சம்சாரத்தை ஆஸ்பத்திரியில சேர்த்திருக்காங்க அப்படீன்னதும் எனக்கு என்ன பண்ணறதுண்ணே தெரியலை, அதனாலதான் வேகமா வந்து உன்னை இடிச்சுட்டேன்.நீ மனசுல அதையும் வச்சுக்காதே” என்று சொல்லி விட்டு, என் பதிலை எதிர்பார்க்காமல், அவன் வண்டியை நோக்கி நடந்தான்.

 

          நான் ஒரு நிமிடம் திகைத்து நின்றவன் பின் சுதாரித்துக்கொண்டு மாரி அண்ணே அவனருகில் ஓடி கையிலிருந்த பணத்தை அவன் சட்டை பையில் திணித்து அண்ணிய போயி முதல்ல பாருங்க, அவங்க தான் முக்கியம்,வண்டிய அப்புறம் பார்த்துக்களாம். நாளைக்கு நாங்க எல்லோரும் ஆஸ்பத்திரிக்கு வர்றோம். சொல்லிவிட்டு விரு விருவென வீட்டுக்கு வந்தேன். மனது சந்தோசம் கலந்த துக்கப்பட்டது. என் முகம் பார்த்து என் மனைவி குழந்தைகள் ஆச்சர்யப்பட்டனர்.

Human behave
by Dhamotharan.S   on 19 Jan 2019  5 Comments
 தொடர்புடையவை-Related Articles
மீண்டு வர முடியும் மீண்டு வர முடியும்
தர்ப்பணம் தர்ப்பணம்
நேர்மை என்பது இவ்வளவுதான்..! நேர்மை என்பது இவ்வளவுதான்..!
அவரவர்களின் யதார்த்தம் அவரவர்களின் யதார்த்தம்
வேணாம் புள்ளை வேணாம் புள்ளை
வந்த நோக்கம்…? வந்த நோக்கம்…?
நான் அவனில்லை நான் அவனில்லை
கரடியின் கர்வம் கரடியின் கர்வம்
கருத்துகள்
14-Aug-2020 15:55:54 Ranjitha.R said : Report Abuse
very nice story
 
22-Feb-2020 07:31:02 V வேலாயுதம் said : Report Abuse
நான் எப்படி எனது கதையை தங்களுக்கு அனுப்புவது ? நான் எனது கதையை தங்கள் வெப்சைட் இல் வெளியிட விரும்புகிறேன். எப்படி தங்களை தொடர்பு கொள்வது?
 
26-Sep-2019 12:32:06 SANJAY said : Report Abuse
திட்டம் போட்டு நடக்குரவர்களுக்கு அவங்கமட்டுமே துணை எந்த தேட்டம் எல்லாதவங்களுக்கு அணிதான் ஆண்டவனே துணை..........
 
10-Jul-2019 08:58:48 anish said : Report Abuse
good story
 
12-Jun-2019 10:58:17 kokila said : Report Abuse
நல்ல கருத்து
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.