LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    சிந்தனைகள் Print Friendly and PDF
- வடலூர் வள்ளலார்

வள்ளலார் அருளிய மனு முறை கண்ட வாசகம்

நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ!
நட்டாற்றிற் கையை நழுவவிட்டேனோ!
வலிய வழக்கிட்டு மானங் கெடுத்தேனோ!
வரவுபோக் கொழிய வழியடைத்தேனோ!
தானங் கொடுப்போரைத் தடுத்து நின்றேனோ!
தருமம் பாராது தண்டஞ் செய்தேனோ!
கலந்த சினேகரைக் கலகஞ் செய்தேனோ!
களவு செய்வோர்க்கு உளவு சொன்னேனோ!
மனமொத்த நட்புக்கு வஞ்சகஞ் செய்தேனோ!
மண்ணோரம் பேசி வாழ்வழித்தேனோ!
குடிவரி யுயர்த்திக் கொள்ளை கொண்டேனோ!
குடிக்கின்ற நீருள்ள குளந் தூர்த்தேனோ!
ஏழைகள் வயிறு எரியச் செய்தேனோ!
இரப்போர்க்குப் பிச்சை இல்லையென்றேனோ!
உயிர்க்கொலை செய்வோர்க்க உபகாரஞ் செய்தேனோ!
ஊன்சுவை யுண்டு உடல் வளர்த்தேனோ!
பொருளை இச்சித்துப் பொய் சொன்னேனோ!
பொதுமண்டபத்தைப் போயிடித்தேனோ!
ஆசைகாட்டி மோசஞ் செய்தேனோ!
அன்புடையவர்க்குத் துன்பஞ் செய்தேனோ!
வேலையிட்டுக் கூலி குறைத்தேனோ!
வெய்யிலுக் கொதுங்கும் விருக்ஷ மழித்தேனோ!
பசித்தோர் முகத்தைப் பாராதிருந்தேனோ!
பகைகொண்டு அயலோர் பயிரழித்தேனோ!
கோள் சொல்லிக் குடும்பங் குலைத்தேனோ!
கலங்கி யொளித்தோரைக் காட்டிக்கொடுத்தேனோ!
கற்பழிந்தவளைக் கலந்திருந்தேனோ!
கணவன்வழி நிற்போரைக் கற்பழித்தேனோ!
காவல் கொண்டிருந்த கன்னியை அழித்தேனோ!
கருப்பமழித்துக் களித்திருந்தேனோ!
கற்றவர் தம்மைக் கடுகடுத்தேனோ!
கன்றுக்குப் பாலூட்டாது கட்டிவைத்தேனோ!
குருவை வணங்கக் கூசிநின்றேனோ!
குருவின் காணிக்கை கொடுக்க மறந்தேனோ!
பக்ஷியைக் கூண்டில் பதைக்க அடைத்தேனோ!
பெரியோர் பாட்டிற் பிழைசொன்னேனோ!
கல்லும் நெல்லும் கலந்து விற்றேனோ!
தவஞ் செய்வோரைத் தாழ்வு சொன்னேனோ!
ஆலயக் கதவை அடைத்து வைத்தேனோ!
சிவனடியாரைச் சீறி வைதேனோ!
சுத்த ஞானிகளைத் தூஷணஞ் செய்தேனோ!
மாதா பிதாவை வைது நின்றேனோ!
தந்தைதாய் மொழியைத் தள்ளி நடந்தேனோ!
தெய்வதை இகழ்ந்து செருக்கடைந்தேனோ!
என்ன பாவம் செய்தேனோ! இன்னதென்றறியேனே!

-வள்ளலார்

by Swathi   on 03 Mar 2016  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
புத்த மதம் Vs சித்தர் வாழ்வியல்? -முனைவர் அழகர் இராமானுஜம் ( Buddhisam Vs Siddha way) புத்த மதம் Vs சித்தர் வாழ்வியல்? -முனைவர் அழகர் இராமானுஜம் ( Buddhisam Vs Siddha way)
சுவாமி விவேகானந்தரின் அற்புதமான 20 பொன்மொழிகள்! சுவாமி விவேகானந்தரின் அற்புதமான 20 பொன்மொழிகள்!
அன்னை தெரேசாவின் அற்புதமான வரிகள் அன்னை தெரேசாவின் அற்புதமான வரிகள்
இறையன்பும் சிந்தனை வளமும் இறையன்பும் சிந்தனை வளமும்
வாழ்வில் முன்னேற உதவும் சிந்தனைகள்!! வாழ்வில் முன்னேற உதவும் சிந்தனைகள்!!
இயல்பாக இரு இயல்பாக இரு
எச்சரிக்கையாய்யிரு எச்சரிக்கையாய்யிரு
ஒரு கவிதை எழுது ஒரு கவிதை எழுது
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.