LOGO
  முதல் பக்கம்    சிறுவர்    சிறுவர் விளையாட்டு - kids Game Print Friendly and PDF
- மற்றவை

மாவளியோ மாவளி (கார்த்திகைச் சுளுந்து) ....

கார்த்திகை திருநாள் அன்று சொக்கப்பனை கொளுத்துவது போல் கிராமங்களில் எல்லா வீட்டிலும் செய்வார்கள். இது பெரிய கம்பி மத்தாப்பூவுக்கு சமம்.

பனை மரத்தின் பூக்களை இதற்க்கு பயன்படுத்துவர்.பொதுகவாக கார்த்திகை மாதம் மழை அதிகமா பெய்யும் ,அதனால ஒரு வாரத்துக்கு முன்னாடியே இத சேகரிச்சு வச்சிக்குவாங்க .

ஒரு ஒன்பது பத்து மணியளவில் அரையடி விட்டம் ,ஒன்னரையடி ஆழத்திற்கு ஒரு குழி தோண்டி அதில் இந்த பனம்பூக்களை செங்குத்தாக நிறுத்தி தீயை வைக்கணும் ...அதை எரியவிடாமல் ..பூபோல பொசுங்கனும் அந்த மாதிரி பதம் வேணும் ...கொஞ்ச நேரம் முறத்தால் வீசி அதை புகைய விட்டு ,பூசணி இலைகளை மேல போட்டு மண்ணை அள்ளி மூடிடனும் . மாலை நாலைந்து மணிக்கு மண்ணை தோண்டி குழியில் உள்ள கரியை பக்குவமா எடுத்து (இல்லனா அது அங்கேயே தூளாகிடும்) ,அம்மியில் வைத்து அரைச்சி மாவாக்கிக்கனும் (கொரகொரனு இல்லாம ,நல்லா தூளாகவும் இல்லாம பதமா அரைச்சதான் பூ நல்லா கொட்டும்) அரசே தூளை ஒரு நூல் துணியில் வச்சி உருளை வடிவுல உருட்டி கட்டி வச்சிடனும் .

பனை மரத்தோட மட்டையை வெட்டி (காம்பு நீளமா உள்ள விளைந்த ஓலை மட்டையை வெட்டணும் ) ஓலை மற்றும் காம்பின் மறுபகுதி இரண்டையும் வெட்டி எடுத்துவிட்டு நடுப்பகுதியை மட்டும் எடுத்து இருபுறமும் உள்ள முள்ளை சீவி ,மட்டையை மூன்றாக முக்கால் அளவு பிளந்து ,துணி உருளைய மட்டையின் பிளந்த பாகத்தில் வச்சி மட்டையை கட்டிடனும் , மறுமுனையில் கயிறு கட்ட ஏதுவாக மட்டையை சீவி ,தேவையான நீளமுள்ள கயிறை கட்டினால் மாவளி தயார் . மேல்புறம் நெருப்பு வைத்து உருளையை நெருப்பூட்டி கயிறை எடுத்து சுத்த வேண்டும் .பூ கொட்டும் போது நமது செய்திறன் அதில் வெளிப்படும்.

உருளையின் அளவை அரைக்கும் மாவு நிர்ணயிக்கும் ,மட்டையின் அளவை உருளையின் அளவு நிர்ணயிக்கும் , கயிறின் அளவு சுத்துகிற ஆளை பொறுத்து அமையும் . மாவட்டத்திற்கு மாவட்டம் செய்யும் முறையிலும் ,உபயோகிக்கும் பொருளிலும் சிறிய மாற்றம் உண்டு .

இந்த நிகழ்வின் போது மாவளியோ மாவளி என்று சத்தமிடுவர் சிறுவர்களும் சிறுமிகளும்!

வீடு, கோயில். வீதி என எல்லா இடங்களிலும் ஒளி வடிவில் நீக்கமற நிறைந்து, ஈசன் அருள்கிறான் என்பதாக ஐதீகம்!

- Er ஆறுமுகம் கணேசன்

சிறுவயதில் உங்களது  மாவளி சுற்றிய அனுபவத்தை அனைவருக்கும் பகிரலாமே..

by Swathi   on 01 Dec 2017  1 Comments
Tags: கார்த்திகை   மாவளி   மாவளி விளையாட்டு   Mawali   மாவளியோ மாவளி        
 தொடர்புடையவை-Related Articles
மாவளியோ மாவளி (கார்த்திகைச் சுளுந்து) .... மாவளியோ மாவளி (கார்த்திகைச் சுளுந்து) ....
கருத்துகள்
05-Jan-2018 20:09:46 குருபரன் said : Report Abuse
அருமையான கட்டுரை சிறு வயதில் மாவளி சுற்றியது நினைவுக்கு வந்தது
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.