LOGO
  முதல் பக்கம்    சமையல்    காரம் Print Friendly and PDF

மீல் மேக்கர் கோலா(Meal Maker Cola)

தேவையானவை :


மீல் மேக்கர் - 100 கிராம்

சின்ன வெங்காயம் - 10

பொடியாக நறுக்கிய பச்சைக் கொத்துமல்லி - 2 டேபிள்ஸ்பூன்

உப்பு - தேவைகேற்ப

தேங்காய்த் துருவல் - அரை கப்

பட்டை, சோம்புத்தூள் - அரை டீஸ்பூன்

பொட்டுக்கடலை - ஒரு கப்

மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

ரிபைண்ட் எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு


செய்முறை :


1. இரண்டு கப் தண்ணீரை நன்றாகக் கொதிக்க வைத்து அதில் மீல் மேக்கரைப் போட்டு ஊற வைக்க வேண்டும். அரை மணி நேரம் கழித்து தண்ணீரைப் பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.


2. சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். பொட்டுக் கடலையை மிக்சியில் போட்டு அரைத்துப் பொடியாக்கி கொள்ளவும்.


3. வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் வெங்காயத்தை வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக வதக்கி இறக்கவும்.


4. வெங்காயம் - தேங்காய் வதக்கல் ஆறியதும் மிக்சியில் போட்டு அரைக்கவும். தண்ணீர் சேர்க்காமல் அரைக்க வேண்டும். அடுத்து தனியாக மீல் மேக்கரை நறுக்கி மிக்சியில் போட்டு அரைக்கவும்.


5. அரைத்த மீல் மேக்கர், அரைத்த தேங்காய் விழுது, சோம்புப்பொடி, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக பொட்டுக்கடலை மாவு சேர்த்து, கொத்தமல்லி சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும்.


6. பிசைந்த மாவை சிறு சிறு கோலா உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கோலா உருண்டைகளைப் போட்டு பொரித்து எடுக்கவும். இப்போது மீல் மேக்கர் கோலா தயார்.

Meal Maker Cola

Ingredients for Meal Maker Cola :


Meal Maker - 100 g,

Onion - 10 (small),

Fresh Coriander Leaves - 2 Tbsp(finely chopped),

Salt - as required,

Shreded Coconut - 1 /2 Cup,

Cloves, Cinnamon , Aniseeds - 1 /2 Tsp,

Chick Peas - 1 Cup,

Chilli Powder - 1 Tsp,

Refined Oil - for frying. 


Method to make Meal Maker Cola : 


1. Soak the Meal Maker in the 2 cups of boiled water. After half an hour filter the water from meal maker. Keep it aside.

2. Chop the onions finely. And grind the Chick Peas in a mixi and allow it make powder. 

3. Heat oil in a frying pan and add chopped onions and shreded coconuts. And allow it to fry deeply. 

4. Grind the fried onion and shreded coconut. Do not add water. Then grind the boiled and chopped meal maker.

5. Then mix up the meal maker paste, onion and coconut paste, aniseeds powder, chilli powder, salt and add chick peas flour bit by bit and fresh chopped coriander leaves all together. Knead all the ingredients well. It should be like Chappathi batter consistency.

6. Take this kneaded batter and make it into cola orb size. Make many small sizes. Heat oil in a frying pan drop these small pieces into oil and allow it fry well.

Meal Maker Cola is ready to serve. 

by   on 24 Aug 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
இனி வீட்டிலேயே செய்யலாம் பானி பூரி... இனி வீட்டிலேயே செய்யலாம் பானி பூரி...
அவல்  வடை அவல் வடை
காலிஃபிளவர் வடை காலிஃபிளவர் வடை
சோளா பூரி சோளா பூரி
கொடுபலே கொடுபலே
புதினா கேழ்வரகு பக்கோடா புதினா கேழ்வரகு பக்கோடா
காராமணி வடை காராமணி வடை
காரப் பொரி காரப் பொரி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.