LOGO
  முதல் பக்கம்    சிறுவர்    விளையாட்டு - Tamil Games Print Friendly and PDF

மீன்சட்டி

இவ்விளையாட்டு சிறுவர் சிறுமியர் இணைந்து விளையாடும் விளையாட்டு

இது ஒரு உரையாடல் விளையாட்டும் போலவும் கேலி செய்து விளையாடும் விளையாட்டு போலவும் உள்ளது.முதலில் தலைமையான நபர் கேள்விகளை கேட்பார் மற்றவர்கள் வரிசையாக பதில் அளிக்க வேண்டும்.

உதரணமாக,

"உங்க வீட்டுலே என்ன கஞ்சி?
அரிசி கஞ்சி
என்ன அரிசி?
அரக்கரிசி
என்ன குழம்பு?
மீன் குழம்பு
என்ன மீன்?
சாளை மீன்
என்ன சாளை?
நெய்ச்சாளை
சாளை எங்க?
சாப்புட்டாச்சி
சாப்புட்ட சட்டி எங்க?
உடைச்சாச்சு

'சாப்புட்ட சட்டி எங்க? ' என்பது ஒருவேலை கடைசி கேள்வியாக இருந்தால் உடைச்சாச்சு என்று பதில் சொன்னவர் தோற்றவராகிறார். இப்போது மற்றவர்கள் உடைச்சாச்சு என்று கத்திக் கொண்டே ஓட வேண்டும் தோற்றவர் துரத்தி பிடிக்கவேண்டும்.முதலில் தொடப்படுபவர்் மீண்டும் தலைமை பொறுப்பை ஏற்க வேண்டும். விளையாட்டு மறுபடியும் ஆரம்பிக்கும்

இப்போது கேள்விகளை புதிதாக கேட்க வேண்டும்

" எங்க போன?
மரம் வெட்ட
என்ன மரம்?
பலாமாம்
என்னப்பலா?
வேர்ப்பலா
என்ன வேர்?
வெட்டி வேர்
என்ன வெட்டி?
மரம் வெட்டி
என்ன மரம்?
பனை மரம்
என்ன பனை?
தாளிப்பனை
என்ன தாளி?
விருந்தாளி
என்ன விருந்து?
மணவிருந்து
என்ன மணம்?
பூ மணம்
என்ன பூ?
மாப்பூ
என்ன மா?
அம்மா

இம்முறை என்ன மா? என்பதோடு கேள்வி முடிகிறது அம்மா சொன்னவர் தொடுபவராகிறார். மற்றவர்கள் கத்திக் கொண்டே ஓட அவர் தூரத்தி ஒருவரஒ தொடுகிறார்.மீண்டும் விளையாட்டு ஆரம்பிக்கிறது.

இவ்விளையாட்டில் குழந்தைகளின் கேள்வி கேட்கும் ஆற்றலையும் பதில் சொல்லும் ஆர்வத்தையும் வளர்கிறது. புதிது புதிதாக கேள்விகளையும் அதற்க்கு பொருத்தமான பதில்களையும் உருவாக்கும் திறன் பிறக்கிறது.
இது தான் சார்ந்த சமூகத்தின் பயன்படு பொருட்களை அறியும் வாய்ப்பை ஏற்படுத்துகிறது.இவ்விளையாட்டின் மூலம் உடற்பயிற்சி,அறிவு செம்மைப்படுதல்,பொழுது பொக்கு மற்றும் வாழ்வியல் கருத்துகளும் கிடைக்கின்றன

by Swathi   on 28 Jan 2016  0 Comments
Tags: மீன்சட்டி   Meensatti                 
 தொடர்புடையவை-Related Articles
கால்நடை வைத்து இருப்போரின் கனிவான கவனத்திற்கு... கால்நடை வைத்து இருப்போரின் கனிவான கவனத்திற்கு...
விவசாயத்திற்காகவும், வீட்டு பயன்பாட்டிற்காகவும் ஏரி, குளங்களில் வண்டல் மண் எடுப்பதற்காக அரசு வகுத்துள்ள நடைமுறைகள் என்னென்ன? விவசாயத்திற்காகவும், வீட்டு பயன்பாட்டிற்காகவும் ஏரி, குளங்களில் வண்டல் மண் எடுப்பதற்காக அரசு வகுத்துள்ள நடைமுறைகள் என்னென்ன?
தினமணி - நெய்வேலி புத்தகக் கண்காட்சி : கட்டுரை, குறும்படம், சிறுகதைப் போட்டிகள் தினமணி - நெய்வேலி புத்தகக் கண்காட்சி : கட்டுரை, குறும்படம், சிறுகதைப் போட்டிகள்
வழக்கொழிந்து வரும் பாரம்பரிய வாழைப்பழங்கள்  - சாவித்திரிகண்ணன் வழக்கொழிந்து வரும் பாரம்பரிய வாழைப்பழங்கள் - சாவித்திரிகண்ணன்
நட்சத்திர வார பலன்கள் (03 - 06 - 2018 முதல் 09 - 06 - 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (03 - 06 - 2018 முதல் 09 - 06 - 2018 வரை)
கலைமாமணி. இலந்தை இராமசாமி கலைமாமணி. இலந்தை இராமசாமி
உலகத்தமிழர் மாநாடு - சரவண பவனில் சிக்கன் பிரியாணி. உலகத்தமிழர் மாநாடு - சரவண பவனில் சிக்கன் பிரியாணி.
தற்சாற்புப் பொருளாதாரம்.. தற்சாற்புப் பொருளாதாரம்..
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.