LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- ஸ்ரீதேசிகப் பிரபந்தம்

மெய்விரதமான்மியம்

6.1:
வாழியருளாளர் வாழியணியத்திகிரி
வாழியெதிராசன் வாசகத்தோர் வாழி
சரணாகதியெனுஞ்சார்வுடன் மற்றொன்றை
அரணாகக் கொள்ளாதாரன்பு.

6.2:
எண்டிசையுங்கடலேழு மலைகளேழும்
ஈரேழு வையகமும் படைத்திலங்கும்
புண்டரிகத்தயன் புணர்த்த பெரிய வேள்விப்
புனித நறும் போக்கியத்தையுவந்து வந்துதொண்டையெனுமண்டலத்தினடுவிற்பாரிற்
றூநிலமெய்விரதத்துத் தோன்றிநின்ற
கொண்டலருட்குணமேநாங்கூறுகின்றோங்
கூர்மதியீர் குறியாகக் கொண்மீனீரே.

6.3:
வம்மின்புலவீர் அருளாளப் பெருமாளென்று மருளாழி
யம்மானென்றும் திருமகளைப் பெற்றுமெனெஞ்சங்கோயில் கொண்ட
பேரருளாளரென்றும் வியப்ப விருதூதும் படிகரை புரண்ட
கருணைக்கடலை இவ்வண்ணம் பேசுவீர் ஈதென்னபாங்கே.

6.4:
ஒன்றே புகலென்று உணர்ந்தவர் காட்டத் திருவருளால்
அன்றே அடைக்கலங்கொண்ட நம்மத்திகிரித் திருமால்
இன்றேயிசையினிணையடி சேர்ப்பர் இனிப்பிறவோ
நன்றே வருவதெலாம் நமக்கு பரமொன்றிலதே.

6.5:
வம்பவிழ் போதமர் மாதருகந்த அம்மானிதியைத்
தன்பலமே கொண்டு காணக்கருதிய தாமரையோன்
முன்பல குற்றத்து வல்வினைமொய்க்க முகழ் மதியாய்
அம்புலி வேண்டிய பாலனைப் போல வழுதனனே.

6.6:
அடங்காக் கரணங்கள் ஐந்துடனாறு மடக்கி முன
நெடுங்காலமின்னிலமே நிலையாப் பூண்டு நீடுறைவான்
சடங்காற்பெரிய தவங்கள் செய்தேன் என்னதன்மையிதென்று
இடங்காத்திருந்த திசைமுகன் தன்னையிகழ்ந்தனனே.

6.7:
விண்ணூலகில் வீற்றிருந்த மேன்மையாலும்
வேதங்களீரிரண்டும் விரித்தலாலுங்
கண்ணனை நான் கருத்துறவே காண்பனென்னக்
காணாமல் விலக்கியதன் வினையைக்காணா
எண்ணியனற்புவனங்களேழுமாறும்
இருமூன்று தீவமுமெட்டிடமும்விட்டுப்
பண்ணிய நல்விரதமெலாம் பலிக்குமென்று
பாரதத்திற் பங்கயத் தோன்படிந்திட்டானே.

6.8:
எத்திசைநிலனுமெய்தி அருந்தவஞ்செய்தவந்நாள்
சத்தியவிரதஞ்செல் வாயென்ற ஓருரையின் சார்வால்
அத்திசை சென்றழைத்து அங்கமரரில்லெடுப்பான்றன்னை
உத்திரவேதிசெய்யென்று உரையணங்கிறையுரைத்தான்.

6.9:
உத்தமவமர்த் தலமமைத்த தோரெழிற்றனுவினுய்த் தகணையால்
அத்திவரக்கன் முடிபத்துமொருகொத்தென வுதிர்த்த திறலோன்
மத்துறு மிகுத்த தயிர்மொய்த்த வெண்ணெய் வைத்ததுணு மத்தனிடமாம்
அத்திகிரி பத்தர்வினை தொத்தறவறுக்கு மணியத்திகிரியே.

6.10:
திண்மணிகள் பொன்னுடனே சேர்தலாலுஞ்
சிதையாத நூல் வழியிற் சேர்த்தியாலும்
வண்மையெழு மீரிரண்டு வருணத்தாலும்
வானவர்க்கும் வியப்பான வகுப்பினாலும்
ஒண்மையுடை வாசிவிளி யோசையாலும்
ஒருகாலு மழியாத வழகினாலு
மண்மகளார்க் கலங்காரமென்ன மன்னு
மதிட் கச்சி நகர் கண்டு மகிழ்ந்திட்டானே.

6.11:
காமங்கள் பல கொண்டவேதங்கொண்டு
கைதவமே செய்வார்க்குக் காணகில்லாப்
பூமங்கை கேள்வனை நான் கண்டு போற்றப்
புண்ணியத்தில் நிகரில்லா விரதம் பூண்டேன்
சாமங்கள் கழிவதன் முன் சடக்கெனப்போய்த்
தன்னாற்றில் தனியிருந்து தவஞ்செய்கின்ற
நாமங்கை வந்திட நீயழைப் பாயென்று
நன்மகனை நான்முகன்றான் நவின்றிட்டானே.

6.12:
அன்னவடி வாளசையு மன்ன நடையாளுயரு மன்னவரசேறி வருவாள்
அத்தனயனத் தனயனுத்தி தனையத்தி தெனவுத்தி புரியா
ணன்னடைவிடா நடமிதென்ன நடவா நடுவு நண்ணுகுவடேறியிழிவா
ணற்பதிகளற்பதிகள் கற்புரளவற்புமதருற்கதியினாற்
கன்னடை விடா விடமிலுன்னதிசிறா விகட மன்னுகிரி கூடமிடியக்
கட்டவிடையிற்று விழ முற்றும் விழியுற்றடைய விட்டருகுற
வன்னனய சீரயனிதென்னென விழாவமரர் மன்னுபதியேறி மகிழ
வச்சுதனணைத் தனுவிலத்திசை வரத்தகைய வற்றணுகினாள்.

6.13:
அன்றுநயந்த அயமேதமாவேள்வி
பொன்ற உரையணங்கு பூம்புனலாய்க் கன்றிவர
ஆதியயனுக்கு அருள்செய்தணை யானான்
தாதை யரவணையான் தான்.

6.14:
தரணியில் மன்னி அயனார்தனித்த வங்காத்தபிரான்
கருணையெனுங்கடலாடித் திருவணை கண்டதற்பின்
றிரணரகெண்ணிய சித்திரகுத்தன் றெரித்து வைத்த
சுருணையிலேறிய சூழ்வினை முற்றுந்துறந்தனமே.

6.15:
சுகலேசமெண்ணிய சூழ்வினை தீர்க்கத்துணிந்து அயனார்
அகலாதவன்புடங்கொண்ட அயமேதவேதியின்மேற்
புகலோங்கு பொன்மலையன்ன ஓர் புண்ணியகோடியுடன்
பகலோன் பகல் விளக்காகப் பரஞ்சுடர்தோன்றியதே.

6.16:
பெருமையுடையத்திகிரிப் பெருமாள்வந்தார்
பேராத அருள் பொழியும் பெருமாள் வந்தார்
அருமறையினுச்சி தனில் நின்றார் வந்தார்
அங்கமுடன வையாகுமரியோர் வந்தார்
திருவுரையாய்த் தாம் பொருளாய் நிற்பார் வந்தார்
திருவருளாற் செழுங்கலைகள் தந்தார் வந்தார்
மருவலர்க்குமயக்குரைக்கு மாயோர் வந்தார்
வானேற வழிதந்தார் வந்தார் தாமே.

6.17:
அத்திகிரி அருளாளப் பெருமாள் வந்தார்
ஆனைபரி தேரின்மேலழகர் வந்தார்
கச்சிதனிற் கண்கொடுக்கும் பெருமாள் வந்தார்
கருதவரந்தரு தெய்வப்பெருமாள் வந்தார்
முத்திமழை பொழியு முகில் வண்ணர் வந்தார்
மூலமென வோலமிட வல்லார் வந்தார்
உத்திரவேதிக்குள்ளேயுதித்தார் வந்தார்
உம்பர்தொழுங்கழலுடையார் வந்தார்தாமே.

6.18:
இருபரிதியேய்ந்த மகுடமும்
எழின்மதி திகழ்ந்த வதனமும்
இருவகையிலங்கு குழிகளில்
எதிர் பொரவுகந்த மகரமும்
ஒருதக வுயர்ந்த திருமகள்
ஒளிமறுவி மன்னுமகலமும்
உருவருவு மிழ்ந்தவுதரமும்
உலகடைய நின்ற கழல்களு
மருவினிடை பொங்குபுனலென
மலைகுனியநின்றமலையென
மருளறவிளங்குமொளியென
மலரயனுகந்த பயனென
வருவிலுறைகின்றவுயிரென
வடியவருகந்தவமுதென
வருமறைகளொன்றியடிதொழ
வருள்வரதர் நின்ற பெருமையே.

6.19:
சித்தசித்தென விரித்துரைத்தன
அனைத்தமைத் துறையுமிறைவனார்
சிறிய பெரிய வுருவுடைய வுடலமென
நடலமிலதிலகுநிலையினார்
சித்திரத் தெழிலை யொத்த பத்தரொடு
முத்தர் பித்தியெனுமுணர்வினார்
சிதைவில் மறைநெறியிலெறியவுருமுறைகண்
முறியசிறையரிய நிறைவினார்
கத்துவிக்கவலகத்து வித்தைவழி
கற்றவர்க் காசைவில்மறையினார்
கபிலர்கணசரணர்சுகதர்சமணரர்
வழிகளழியமருள் மொழியினார்
கத்திலக்கிலு மருக்குலத்திலும்
சித்திலொக்குமொரு முதல்வனார்
கரணமிடுகடிய பதினோரிருடிகமும்
அடைய முடியுமடியிருடியார்
ஒத்தனைத் துலகுமொற்றி யொற்றிவரும்
இப்பவத்திசையினிசைவினார்
உருவமருவமெனு முலகின் மூடுகிலதில்
உவமை யிலதிலகு தலைவனார்
உத்தமப் படிவகுத்த வித்தைகளில்
உத்தரிக்கவுணர் குணவனார்
உரியகிரிசைகளி லரிய தொரு விரகு
தெரிய விரையுமவர் பரிவினார்
சத்தசத்தெனுமனைத் தணைத்தவினை
தொத்தறுக்க வலதுணிவினார்
சரியுமளவிலுரிய வரையறிவரிய
தமனி நெறி செருகுவிரகினார்
தத்துவத்திர ளுதத்துதைத் தடைவு
தத்துவுக்குமவர் தலைவனார்
தருகையுணருமவர் சரணமணுகவிட
லரியவருள் வரதரடியமே.

6.20:
திருமகள் மண்மகள் நீளை முதலாவெல்லாத்
தேவியரும் தன்னுடனே திகழ்ந்து நிற்கத்
தருமமிரு மூன்று முதலனைத்துன் தோன்றத்
தன்னனைய சூரியர் தன்னடிக்கீழ் வாழ
அருமறை சேரள வில்லாவ வனியின் கண்
அரவணை மேல் வீற்றிருப்பானைத் துங்காக்குங்
கருமணியைக் கரிகிரி மேற்கண்டேன் என்றன்
கடுவினைகளனைத்தும் நான் கண்டிலேனே.

6.21:
பெடையிரண்டையொரன மடைந்து
பிரிந்திடா வகை பேசலாம்
பெருகு மருவிகளரு குமருவிய
பெரிய மணிவரை பயிலலாம்
பிடியிரண்டொடுகளவ மொன்று
பிணைந்த பேரழகோதலாம்
பிரிவிலொளியொடு நிழலுமருகுறும்
இரவியிலகுதல் பரவலாங்
கொடியிரண்டொடுவிட வியொன்று
குலிர்ந்த வாறு குலாவலாங்
குறைவில் சுருதியு நினைவுமிலகிய
தருமவரு நிலையென்னலாம்
அடியிரண்டையு மடையுமன்பர்
அறிந்த பேரருளாளனார்
அணுகுமலர் மகளவனிமகளொடு
கரடிகிரியினிலவிர்தலே.

6.22:
வேரொப்பார் விண்முதலாங்காவுக் கெல்லாம்
விழியொப்பார் வேதமெனுங்கண்டனக்குக்
காரொப்பார் கருணைமழை பொழியு நீராற்
கடலொப்பார் கண்டிடினுங்காணாக் கூத்தா
னீரொப்பார் நிலமளிக்குந் தன்மைதன்னா
னிலமொப்பார் நெடும்பிழைகள் பொறுக்குநேரால்
ஆரொப்பாரிவர் குணங்களனைத் துங்கண்டால்
அருளாளர் தாமெனினுந்தமக்கொவ்வாரே.

6.23:
எந்நிலமுங்குரத்தால் குறிசெய்த எழிற் பரிகொண்டு
அன்னமுயர்த்த செய்யோன் அன்று வேள்விசெய்வேதியின்மேன்
முன்னிலையாகிய மூர்த்தியன் நான்முக மற்று முனக்கு
என்ன வரன் தருவோமென்று நாதனியம்பினனே.

6.24:
சென்று மலர்பறித்து எந்நாதன் சேவடிப் போதுகந்து
நன்றெனு நீர்சுடர் நன்முகவாசமிலை கொடுத்துக்
கன்னலிலட்டுவத்தோடு அன்னஞ்சீடைகறிபடைத்துப்
பின்னுஞ்செவித்து அவன்பாதம் பணிமின்களென்றனனே.

6.25:
ஆழிநிலை வினைகடிவான் அயமேதமுடித்த தற்பின்
வேழமலை நாயகனார் விடைகொடுக்க விண்ணேறி
நாழிகையில் வானவரை மாற்றியிடு நான்மகன்றான்
ஊழியொலாமழியாத வுயோகமடைந்திருந்தானே.

6.26:
ஆதியுகத்தயன் கண்டிட நின்ற அருள்வரதர்
காதலுயர்ந்தகளிற்றைத் திரேதையிற் காத்தளித்து
வாதுயர் தேவகுருவுக்கிரங்கித் துவாபரத்திற்
சோதியனந்தன் கலியிற்f றொழுதெழநின்றனரே.

6.27:
புண்டரீக முயிர்த்த புராணனார்
பொய்யில் மாமகவுத்தர வேதியிற்
கொண்டலாரருள் மாரி பொழிந்திடக்
கொண்ட தோருயர் கூர் மதியன்பினாற்
பண்டை நான் மறைமௌலி படிந்தயான்
பாரின் மெய்விர ரக்கவி பாடினேணன்
றொண்டை மண்டல வேதியர் வாழவே
தூய தென்மறை வல்லவர் வாழவே.

6.28
யய்விரத மொன்றின்றி யடைந்தா ருய்ய
வொருவிரதந் தான்கொண்ட வுயர்நத மாலைச்
செய்விரத மொன்றாலுந் தெளிய கில்லாச்
சிந்தையினாற் றிசைபடைத்த திசைமு கன்றான்
பெய்விரத நிலமெல்லாம் போயே மீண்டு
புகலிதுவே புண்ணியத்துக் கென்று சேர்ந்த
மெய்விரத நன்னிலத்து மேன்மை யேத்தி
வேதாந்த வாசிரியன் விளங்கி னானே.

6.29
சீராருந் தூப்புற் றிருவேங் கடமுடையான்
றாரா ரருளாளர் தாணயந்து-சீராக
மெய்விரத நன்னிலத்து மேன்மை யிதுமொழிந்தான்
கையிற் கனிபோலக் கண்டு.

by Swathi   on 21 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.