LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- தமிழச்சியின் கத்தி

மேற்பார்வையாளன்

தென்பாங்கு -- கண்ணிகள்

ஏறித் - தலைக்
கட்டோடு வந்தனன்     சீறி!

எட்டுத்திக் குட்பட்ட மக்கட்கூட் டந்தன்னை
ஏங்கிட வைப்பவன்     போலே - இமை
கொட்டாமல் பார்த்தனன்     மேலே!

சொட்டச்சொட் டவேர்வை உகார்ந்தி ருந்தவர்
துள்ளிஎ ழுந்தங்குத்     தாவிச் - சிரித்
திட்டனர் அன்னோனை     மேவி!

திட்டுத்திட் டென்றடி வைக்கும் பரிமீது
தேசிங்கு வந்தனன்     என்றே - திம்மன்
பட்டாவை ஏந்தினன்     நன்றே!

சுற்றிஇ ரையினைக் கொத்தும் பருந்தென
உற்றுவி ழித்தசுப்     பம்மா - அங்குச்
சற்றும்இ ருப்பாளோ     சும்மா?

வெற்பும் அதிர்ந்திட வேற்றுவர் அஞ்சிட
மேற்கிளை விட்டுக்     குதித்தாள் - பகை
அற்றிட நெஞ்சம்     கொதித்தாள்.

சுற்றின கத்திகள் தூறிற்றுச் செம்மழை
துள்ளி யெழுந்தன     மெய்கள் - அங்கே
அற்று விழுந்தன     கைகள்

முற்றும் முன்னேறி நெருங்கினன் திம்மனும்
கண்டனன் அவ்வதி     காரி - கண்டு
தெற்றென வீழ்ந்தனன்     பாரில்

உற்றது திம்மனின் வாள்அவன் மார்பில்
ஒழிந்தது வேஅவன்     ஆவி - கண்ட
ரற்றினர் சிப்பாய்கள்     மேவி.

மற்றவர் திம்மனைக் குத்தினர் திம்மனும்
மாய்ந்தனன் மண்ணில்     விழுந்து - கண்
ணுற்றனள் இன்பக்     கொழுந்து.

சுற்றிய வாள்விசை சற்றுக் குறைந்ததும்
தோகை பதைத்ததும்     கண்டார் - கைப்
பற்றிட எண்ணமே     கொண்டார்.

பற்பலர் வந்தனர் பாவையைச் சூழ்ந்தனர்
பாய்ந்தனர் அன்னவள்     மேலே - மிகச்
சிற்றின நாய்களைப்     போலே!

by Swathi   on 21 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.