LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

பயனாளர்களை ஏமாற்றிய மைக்ரோசாப்ட்க்கு 2,800 கோடி அபராதம் !

இண்டர்நெட் பிரவுசர் தொடர்பாக வாடிக்கையாளர்களுக்கு அளித்த உறுதிமொழியை மீறியதற்காக பிரபல கம்ப்யூட்டர் நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு 4020 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஒப்பந்தத்தின்படி, இன்டர்நெட்டை பயன்படுத்தும்  வாடிக்கையாளர்களுக்காக, விண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் பல்வேறு பிரவுசர்களை பயன்படுத்தும் வாய்ப்புகளை தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு தர வேண்டும் என்பது விதிகளில் ஒன்று. ஆனால், கடந்த 2011 மே முதல் ஜூலை 2012ம் ஆண்டு இடைப்பட்ட காலத்தில் விற்கப்பட்ட விண்டோஸ் 7ல், மைக்ரோசாப்ட் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர் மட்டுமே பயன்படுத்தும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது.அதாவது, அந்த குறிப்பிட காலத்தில் விண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தை வாங்கிய ஒன்றரை கோடி பேரை மைக்ரோசாப்ட் நிறுவனம் ஏமாற்றியுள்ளதாக தெரிகிறது. இதன் மூலம் பல கோடிகளை அந்நிறுவனம் ஏமாற்றியுள்ளது. இதுதொடர்பான புகாரை ஐரோப்பிய யூனியன் கமிஷன் விசாரணை செய்தது. ஒப்பந்தத்தை மீறி நம்பிக்கை மோசடியில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு ரூ.2,800 கோடி ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் மட்டும் கடந்த பத்து ஆண்டுகளில் மைக்ரோசாப்ட் நிறுவனம் பத்தாயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக அபராதம் செலுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Microsoft fined 4,020 crores for removing Windows 7 browser choice screen

The European Commission on Wednesday fined Microsoft 4,020 Crores for failing to properly inform users of alternative Web browser options. The company was required to offer users a browser choice screen in Windows 7 that would allow them to easily choose their preferred Web browser, however it failed to do so from May 2011 through July 2012. The Commission found that more than 15 million Windows users in Europe did not see this screen over the course of a year. Microsoft acknowledged its mistake, noting that it takes “full responsibility for the technical error that caused this problem and have apologized for it.” The company does not plan to appeal the fine. The European Commission’s press release follows below.

by Swathi   on 07 Mar 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு. 5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு.
உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள். உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள்.
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள். சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள்.
சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்? சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்?
சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா. சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா.
நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்! நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்!
செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை. செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை.
70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம். 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.