உலகில் முன்னணி மொபைல் போன் தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றான, நோக்கியா நிறுவனத்தின் தயாரிப்பு மற்றும் சேவை நடவடிக்கைகளை வாங்க மைக்ரோ சாப்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மென் பொருள் துறையில் கொடிகட்டி பறந்து வரும் அமெரிக்காவின் மைக்ரோ சாப்ட் நிறுவனம், பல முன்னணி நிறுவனங்களை வாங்குவதில், அதிக ஆர்வம் காட்டி வருகிறது. இந்நிலையில், நோக்கியா நிறுவனத்தின் தயாரிப்பு மற்றும் சேவை நடவடிக்கைகளை, மைக்ரோ சாப்ட் நிறுவனம் 7.17 மில்லியன் டாலர் முதலீட்டில் 10 ஆண்டுகளுக்கு அனைத்து உரிமங்களையும் பெற்றுள்ளது.
|