LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- குழம்பு (Curry)

மிளகு - பூண்டுக் குழம்பு

தேவையானவை :

1. பூண்டு(உரித்தது) - ஒரு கப்

2. தனியா - 3 டேபிள் ஸ்பூன்,

3. மிளகு - 2 டேபிள்ஸ்பூன்,

4. காய்ந்த மிளகாய் - 4,

5. உளுத்தம் பருப்பு, சீரகம் - தலா 2 டீஸ்பூன்,

6. கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்,

7. கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி,

8. புளி - சிறிய உருண்டை,

9. நல்லெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,

10. கடுகு - அரை டீஸ்பூன்.

11. உப்பு - தேவையான அளவு

செய்முறை :  

1. முதலில் ஒரு பாத்திரத்தில் புளியை கரைத்து கொள்ளவும். கடாயில் தனியா, மிளகு, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு ஆகியவற்றை சிவக்க வறுத்து ஆறிய பின்னர் மிக்ஸியில் போட்டு பொடிக்கவும்.

2. சீரகம், கறிவேப்பிலையைப் பச்சையாக அரைத்துக்கொள்ளவும். கரைத்த புளித்தண்ணீரில் கறிவேப்பிலை விழுது, வறுத்து அரைத்த பொடி, உப்பையும் போட்டுக் கட்டி இல்லாமல் கரைத்து வைத்துக்கொள்ளவும். கடாயில் அரை ஸ்பூன் எண்ணெய் விட்டு உரித்த பூண்டு சேர்த்து, லேசாகச் சிவக்கும் வரை வதக்கவும்.

3. அடுத்து அதில் புளிக்கரைசலைச் சேர்த்து, நன்றாகக் கொதிக்கவிடவும். கெட்டியானதும் இறக்கவும். மீதம் உள்ள எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்துச் சேர்க்கவும். சுவையான சத்தான பூண்டு - மிளகுக்குழம்பு ரெடி.

Pepper- Garlic Gravy

Ingridients:

1. Garlic(Peeled) - 1 Cup

2. Coriander Seeds - 3 Tbsp

3. Pepper - 2 Tbsp

4. Dried Red Chillies - 4

5. Blackgram, Cumin - 2 Tsp

6. Bengal Gram - 1 Tsp

7. Curry Leaves - Little

8. Tamarind - a small sized

9. Gingly oil - 1 Tbsp

10. Mustard - 1/2 Tsp

11. Salt - as needed

Method :

1. Soak tamarind for few minutes then filter the tamarind solution keep a side. In a pan add coriander seeds, pepper, dried red chillies, blackgram, bengalgram. Roast well and grind it fine powder.

2. Grind the fresh curry leaves and cumin. Add roasted powder, curry leaves paste , salt all together in tamarind solution. Mix  well without lumps.

3. Add oil in a pan then add garlic pods fry it until it turns golden then add tamrind solution, boil it well until oil seperates. Add oil in a pan , add mustard, curry leaves allow it to splutter. Sprinkle it on tamarind solution.

by Swathi   on 13 Apr 2016  0 Comments
Tags: Garlic   Poondu   Poondu Kulambu   Milaku Poondu Kulambu   பூண்டு குழம்பு   மிளகு பூண்டு குழம்பு     
 தொடர்புடையவை-Related Articles
பூண்டை பாலுடன் சேர்த்துக் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா? பூண்டை பாலுடன் சேர்த்துக் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
மிளகு - பூண்டுக் குழம்பு மிளகு - பூண்டுக் குழம்பு
பூண்டுக் குழம்பு பூண்டுக் குழம்பு
ஆழ்ந்த உறக்கத்திற்கு உதவும் பூண்டு !! ஆழ்ந்த உறக்கத்திற்கு உதவும் பூண்டு !!
பூண்டின் 40 வகையான மருத்துவ பயன்கள் !! பூண்டின் 40 வகையான மருத்துவ பயன்கள் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.