|
||||||||
மின்னெலை ரசம் (Minnelai Soup) |
||||||||
தேவையானவை : மின்னெலை -20 இலைகள் புளிக்கரைசல் - ஒரு கப் உப்பு -தேவையான அளவு கடுகு -1/2 டீஸ்பூன் துவரம்பருப்பு -ஒரு டேபிள் ஸ்பூன் தக்காளி -ஒன்று (நறுக்கியது) ஜீரகப்பொடி -1/2 டீஸ்பூன் மிளகுப்பொடி- 1/2 டீஸ்பூன் வெந்தயம் -1/ 2 டீஸ்பூன் கருவேப்பிலை -1 கொத்து பச்சை மிளகாய் -1 (நறுக்கியது) வெங்காயம் -பாதி பூண்டு பல் -4 மஞ்சள் பொடி- 1/2 டீஸ்பூன் சோம்புப்பொடி- 1/2 டீஸ்பூன் மிளகாய்ப்பொடி- 1/2 டீஸ்பூன் எண்ணை -ஒரு டேபிள் ஸ்பூன் செய்முறை : 1.முதலில் வெங்காயம், பூண்டை தோல் உறித்து ஒன்றாய் சேர்த்து நசுக்கி கொள்ளவும். துவரம் பருப்பை நன்கு கழுவி குக்கரில் வேக வைத்து எடுத்துக்கொள்ளவும்பிறகு கரைத்துவைத்துள்ள புளிகரைசலில் பருப்பு நீரை சேர்க்கவும்.அதனுடன் மிளகாய்ப்பொடி தவிர்த்து அனைத்து மசாலா பொருட்களையும் சேர்க்கவும். அத்துடன் நறுக்கின தக்காளி, பச்சை மிளகாய், நசுக்கிய வெங்காயம் பூண்டில் பாதி சேர்க்கவும். 2.நன்கு கழுவிய மின்னெலையை புளித்தண்ணீரில் சேர்த்து, கைகளால் நன்கு நொறுங்க பிசையவும். அத்துடன் உப்பு சேர்க்கவும். புளிக்கரைசல், பருப்பு நீர் அனைத்தும் சேர்ந்து முக்கால் லிட்டர் அளவிற்கு இருக்குமாறு எடுத்துக்கொள்ளவும்.அடுப்பில் வாணலியை வைத்து சூடானதும் எண்ணெய் விடவும். அதில் கடுகு, வெந்தயம், போட்டு தாளித்து, ஒரு காய்ந்த மிளகாயை கிள்ளி போடவும் 3.மேலும் அதனுடன் மீதம் வைத்துள்ள வெங்காயம் பூண்டைப் போடவும். அத்துடன் கறிவேப்பிலையையும் சேர்க்கவும்.கறிவேப்பிலை போட்டு வதக்கிய பின்பு, மிளகாய்ப்பொடியை சேர்க்கவும்.மிளகாய் போடி சேர்த்து அதை சிறிது நேரம் கிளறிவிடவும்.கிளறிய பின்பு அதில் தயார் செய்து வைத்துள்ள புளிக்கலவையை ஊற்றவும். கலவையை மிதமான தீயில் வைக்கவும்.ரசம் நன்கு நுரைத்து கொதி வரும்போது கிளறிவிட்டு இறக்கவும். |
||||||||
Minnelai Soup | ||||||||
Ingredients for Minnelai Soup:
Minnelai -20 Leaves Tamarind Juice-1 Cup Salt-as Needed Mustard-1/2 tsp Split Gram-1 tbsp Tomato-1 (Chopped) Cumin Powder-1/2 tsp Pepper Powder-r1/2 tsp Fenugreek-1/2 tsp Curry Leaves-1 Bunch Green Chilly-1 (Chopped) Onion-Half Garlic-4 Flakes Turmeric Powder-1/2 tsp Fennel Powder-1/2 tsp Chilly powder-1/2 tsp Oil-1 tbsp
Procedure to make Minnelai Soup:
1.Peel the onion,garlic and grind them. Wash the split gram and boil in a cooker and keep aside. Mix the tamarind juice along with dal water. Then add the given masala except chilly powder. Then add chopped tomato, green chilly, half quantity of grinded onion and garlic. 2. Wash the minnelai, mix with tamarind juice and mash well by using hands. Then add salt together with that juice. Mix tamarind juice and dal water , take 3/4th quantity of this mixure and set aside. Heat oil in a pan, add mustard, fenugreek, dry chilly and let them splutter. 3. Then add the remaining onion, garlic paste. After that add curry leaves and chilly powder and stir well. Then add the prepared tamarind mixure and allow medium flame. when foam comes, stir well.
|
||||||||
by valarmathi on 28 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|