LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

மூன்றாம் திருமுறை-106

3.106.திருவலஞ்சுழி 
பண் - பழம்பஞ்சுரம் 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - காப்பகத்தீசுவரர். 
தேவியார் - மங்களநாயகியம்மை. 
3934 பள்ளம தாய படர்சடைமேற்
பயிலுந் திரைக்கங்கை
வெள்ளம தார விரும்பிநின்ற
விகிர்தன் விடையேறும்
வள்ளல் வலஞ்சுழி வாணனென்று
மருவி நினைந்தேத்தி
உள்ள முருக வுணருமின்க
ளுறுநோ யடையாவே
3.106.1
பள்ளம் போன்ற உட்குழிவுடைய படர்ந்த சடைமீது அலைகளையுடைய கங்கை நீர்ப் பெருக்கை விரும்பித் தாங்கி நின்ற வேறுபட்ட தன்மையுடையவர் சிவபெருமான்.அவர் இடபவாகனத்தில் ஏறும் வள்ளல். திருவலஞ்சுழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுபவர். அப்பெருமானை நினைந்து போற்றி உள்ளம் உருக உணருமின்கள். உறுநோய் உங்களை அணுகாது. 
3935 காரணி வெள்ளை மதியஞ்சூடிக்
கமழ்புன் சடைதன்மேல்
தாரணி கொன்றையுந் தண்ணெருக்குந்
தழைய நுழைவித்து
வாரணி கொங்கைநல் லாள்தனோடும்
வலஞ்சுழி மேவியவர்
ஊரணி பெய்பலி கொண்டுகந்த
வுவகை யறியோமே
3.106.2
சிவபெருமான், கருமேகத்திற்கு அழகு செய்கின்ற வெண்ணிறச் சந்திரனைச் சூடி, இயற்கை மணம் கமழும் சிவந்த சடைமேல் அழகிய கொன்றைமாலையையும், குளிர்ச்சி பொருந்திய எருக்கம் பூ மாலையையும் நிரம்ப அணிந்துள்ளவர். கச்சணிந்த அழகிய கொங்கைகளை உடைய உமாதேவியோடு திருவலஞ்சுழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுபவர். ஊர்கள்தோறும் சென்று அவர் பிச்சையேற்று மகிழ்ந்த பெருமையைச் சிற்றறிவுடைய யாம் எங்ஙனம் அறிவோம்? அறிய இயலவில்லை. 
3936 பொன்னிய லுந்திரு மேனிதன்மேற்
புரிநூல் பொலிவித்து
மின்னிய லுஞ்சடை தாழவேழ
வுரிபோர்த் தரவாட
மன்னிய மாமறை யோர்கள்போற்றும்
வலஞ்சுழி வாணர்தம்மேல்
உன்னிய சிந்தையி னீங்ககில்லார்க்
குயர்வாம் பிணிபோமே
3.106.3
சிவபெருமான் பொன்போன்ற அழகிய திருமேனி மீது முப்புரிநூல் அழகுற விளங்குமாறு அணிந்துள்ளவர். மின்னலைப் போல ஒளிவீசும் சடைதாழ, யானையின் தோலை உரித்துப் போர்த்தவர். ஆடும் பாம்பை அணிந்தவர். நிலைபெற்ற, பெருமையுடைய வேதங்களில் வல்ல அந்தணர்கள் போற்றும் திருவலஞ்சுழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற சிவபெருமானை இடையறாது சிந்தித்து வழிபடும் அடியவர்கட்கு எல்லா நலன்களும் உண்டாகும். நோய் நீங்கும். 
3937 விடையொரு பாலொரு பால்விரும்பு
மெல்லியல் புல்கியதோர்
சடையொரு பாலொடு பாலிடங்கொள்
தாழ்குழல் போற்றிசைப்ப
நடையொரு பாலொரு பால்சிலம்பு
நாளும் வலஞ்சுழிசேர்
அடையொரு பாலடை யாதசெய்யுஞ்
செய்கை யறியோமே
3.106.4
சிவபெருமானுக்கு இடபவாகனம் ஒரு பக்கம், விரும்பிச் சேர்ந்து மெல்லியல்புடைய கங்காதேவி ஒரு பக்கம். விரிந்து பரந்த சடை ஒரு பக்கம். தாழ்ந்த கூந்தலையுடைய உமாதேவி ஒரு பக்கம். ஏறுபோல் பீடுநடை பயிலும் திருவடி ஒருபக்கம். சிலம்பு அணிந்த திருவடி ஒருபக்கம். திருவலஞ்சுழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் சிவபெருமானை நாளும் வழிபடுக. முற்கூறியவை வேறெங்கும் சென்றடையாது சிவனையே அடையும் சிறப்பைச் சிற்றறிவுடைய நாம் அறியோம். 
3938 கையம ரும்மழு நாகம்வீணை
கலைமான் மறியேந்தி
மெய்யம ரும்பொடிப் பூசிவீசுங் 
குழையார் தருதோடும்
பையம ரும்மர வாடவாடும்
படர்சடை யார்க்கிடமாம்
மையம ரும்பொழில் சூழும்வேலி
வலஞ்சுழி மாநகரே
3.106.5
இறைவன் கையில் மழு, பாம்பு, வீணை, கலைமான்கன்று என்பனவற்றை ஏந்தியுள்ளவர். திருமேனியில் திருவெண்ணீற்றைப் பூசியுள்ளவர். ஒளியை வீசி அசைகின்ற குழையும் தோடும் காதில் அணிந்துள்ளவர். படமாடும் பாம்பை அணிந்து நடனமாடுபவர். படர்ந்த சடையையுடைய அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம், நாற்புறமும் வேலிபோன்று, இருளடர்ந்த சோலைகள் சூழ்ந்த திருவலஞ்சுழி என்னும் மாநகரமாகும். 
3939 தண்டொடு சூலந் தழையவேந்தித்
தையலொருபாகம்
கண்டிடு பெய்பலி பேணிநாணார்
கரியி னுரிதோலர்
வண்டிடு மொய்பொழில் சூழ்ந்தமாட
வலஞ்சுழி மன்னியவர்
தொண்டொடு கூடித் துதைந்துநின்ற
தொடர்பைத் தொடர்வோமே
3.106.6
சிவபெருமான் தண்டு, சூலம் இவற்றை ஒளிமிக ஏந்தியுள்ளவர். உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டுள்ளவர். இடப்படுகின்ற பிச்சையை விரும்பி ஏற்பதில் வெட்கப்படாதவர். யானையின் தோலை உரித்துப் போர்த்துக் கொண்டவர். வண்டுகள் மொய்க்கின்ற சோலைகள் சூழ்ந்த மாடங்களையுடைய திருவலஞ்சுழி என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருள்பவர். அப்பெருமான் திருத்தொண்டர்களோடு கூடி நெருங்கி நின்று அருள்வதை உணர்ந்து, நாமும் அவருடைய தொடர்பைத் தொடர்வோமாக! 
3940 கல்லிய லும்மலை யங்கைநீங்க
வளைத்து வளையாதார்
சொல்லிய லும்மதின் மூன்றுஞ்செற்ற
சுடரா னிடர்நீங்க
மல்லிய லுந்திர டோளெம்மாதி
வலஞ்சுழி மாநகரே
புல்கிய வேந்தனைப் புல்கியேத்தி
யிருப்பவர் புண்ணியரே
3.106.7
சிவபெருமான் கல்லின் தன்மை பொருந்திய மேருமலையை அதன் கடினத்தன்மை நீங்க வளைத்து, செருக்குற்ற திரிபுர அசுரர்களின், பழிச்சொல்லுக்கு இடமாகிய மும்மதில்களையும் அழித்தவர். ஒளிவடிவானவர். அடியவர்களின் இடர் நீங்க, மற்போர் பயின்ற திரண்ட தோளையுடைய எம் முதல்வராய்த் திருவலஞ்சுழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார். மன்னுயிர்களை ஆளும் அரசரான அச்சிவபெருமானைச் சார்ந்து போற்றி வழிபடுபவர்கள் புண்ணியர்கள் ஆவர். 
3941 வெஞ்சின வாளரக்கன் வரையை
விறலா லெடுத்தான்றோள்
அஞ்சுமொ ராறிரு நான்குமொன்று
மடர்த்தா ரழகாய 
நஞ்சிருள் கண்டத்து நாதரென்று
நணுகு மிடம்போலும்
மஞ்சுல வும்பொழில் வண்டுகெண்டும்
வலஞ்சுழி மாநகரே
3.106.8
கடுஞ்சினமுடைய கொடிய அசுரனான இராவணன் தன் வலிமையால் கயிலை மலையைப் பெயர்க்க, அவன் இருபது தோள்களையும் அடர்த்தவர் சிவபெருமான். அவர் நஞ்சுண்டு இருண்ட அழகிய கண்டத்தையுடைய தலைவர். அவர் விரும்பி வீற்றிருந்தருளும் இடம் மேகத்தைத் தொடும்படி உயர்ந்துள்ள சோலைகளிலுள்ள மலர்களை வண்டுகள் காலால் கிண்டும் திரு வலஞ்சுழி என்னும் திருத்தலமாகும். 
3942 ஏடிய னான்முகன் சீர்நெடுமா
லெனநின் றவர்காணார்
கூடிய கூரெரி யாய்நிமிர்ந்த
குழக ருலகேத்த
வாடிய வெண்டலை கையிலேந்தி
வலஞ்சுழி மேயவெம்மான்
பாடிய நான்மறை யாளர்செய்யுஞ்
சரிதை பலபலவே
3.106.9
இதழ்களையுடைய தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனும், திருமாலும் காணமுடியாத வண்ணம் நெருப்புப் பிழம்பாய் ஓங்கி நின்றவர் சிவபெருமான். அவர் உலகோர் போற்றி வணங்குமாறு, வற்றிய பிரமகபாலத்தைக் கையிலேந்தி திருவலஞ்சுழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார். எம் தலைவரான அவரை நான்கு வேதங்களையும் நன்கு கற்றுவல்லவர்கள் பாடிப் போற்றும் தன்மையில் அவர் புரியும் திருவிளையாடல்கள் பலபல வாகும். 
3943 குண்டரும் புத்தருங் கூறையின்றிக்
குழுவா ருரைநீத்துத்
தொண்டருந் தன்றொழில் பேணநின்ற
கழலா னழலாடி 
வண்டம ரும்பொழின் மல்குபொன்னி
வலஞ்சுழி வாணனெம்மான்
பண்டொரு வேள்வி முனிந்துசெற்ற
பரிசே பகர்வோமே
3.106.10
தீவினைக்கஞ்சாத சமணர்கள், ஆடையின்றிக் கூட்டமாயிருப்பவர்கள். அவர்களும் புத்தர்களும் இறைவனை உணராது கூறும் மொழிகளைத் தள்ளிவிடுங்கள். தொண்டர்கள் சரியைத் தொழிலில் விரும்பி வழிபட்டு நிற்க. கழலணிந்த திருவடிகளையுடைய சிவபெருமான் அழல் ஏந்தி ஆடுபவன். வண்டுகள் விரும்புகின்ற சோலைகளையுடையதும், காவிரியாறு வலஞ்சுழித்துப் பாய்கின்றதுமான திருவலஞ்சுழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற சிவபெருமான் முன்னொரு காலத்தில் அவனை நினையாது தக்கன் செய்த வேள்வியைக் கோபித்து அழித்த தன்மையைப் பகர்வோமாக. 
3944 வாழியெம் மானெனக் கெந்தைமேய
வலஞ்சுழி மாநகர்மேல்
காழியுண் ஞானசம் பந்தன்சொன்ன
கருத்தின் றமிழ்மாலை
ஆழியிவ் வையகத் தேத்தவல்லா
ரவர்க்குந் தமருக்கும்
ஊழி யொருபெரு மின்பமோக்கும்
உருவும் முயர்வாமே
3.106.11
எம் தலைவனும், தந்தையுமான, சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருவலஞ்சுழி என்னும் மாநகரை வாழ்த்தி, சீகாழியில் அவதரித்த ஞானசம்பந்தன் அருளிய சிறந்த பயனைத் தரும் கருத்துக்கள் அடங்கிய தமிழ்மாலையாகிய இத்திருப்பதிகத்தை ஏத்த வல்லவர்களும், அவர்களுடைய சுற்றத்தார்களும் கடல் சூழ்ந்த இவ்வையகத்திலேயே பேரின்பம் துய்ப்பர். ஊழிக்காலத்திலும் நனிவிளங்கும் உயர்ந்த புகழடைவர். 
திருச்சிற்றம்பலம்

3.106.திருவலஞ்சுழி 
பண் - பழம்பஞ்சுரம் 
திருச்சிற்றம்பலம் 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - காப்பகத்தீசுவரர். தேவியார் - மங்களநாயகியம்மை. 

3934 பள்ளம தாய படர்சடைமேற்பயிலுந் திரைக்கங்கைவெள்ளம தார விரும்பிநின்றவிகிர்தன் விடையேறும்வள்ளல் வலஞ்சுழி வாணனென்றுமருவி நினைந்தேத்திஉள்ள முருக வுணருமின்களுறுநோ யடையாவே3.106.1
பள்ளம் போன்ற உட்குழிவுடைய படர்ந்த சடைமீது அலைகளையுடைய கங்கை நீர்ப் பெருக்கை விரும்பித் தாங்கி நின்ற வேறுபட்ட தன்மையுடையவர் சிவபெருமான்.அவர் இடபவாகனத்தில் ஏறும் வள்ளல். திருவலஞ்சுழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுபவர். அப்பெருமானை நினைந்து போற்றி உள்ளம் உருக உணருமின்கள். உறுநோய் உங்களை அணுகாது. 

3935 காரணி வெள்ளை மதியஞ்சூடிக்கமழ்புன் சடைதன்மேல்தாரணி கொன்றையுந் தண்ணெருக்குந்தழைய நுழைவித்துவாரணி கொங்கைநல் லாள்தனோடும்வலஞ்சுழி மேவியவர்ஊரணி பெய்பலி கொண்டுகந்தவுவகை யறியோமே3.106.2
சிவபெருமான், கருமேகத்திற்கு அழகு செய்கின்ற வெண்ணிறச் சந்திரனைச் சூடி, இயற்கை மணம் கமழும் சிவந்த சடைமேல் அழகிய கொன்றைமாலையையும், குளிர்ச்சி பொருந்திய எருக்கம் பூ மாலையையும் நிரம்ப அணிந்துள்ளவர். கச்சணிந்த அழகிய கொங்கைகளை உடைய உமாதேவியோடு திருவலஞ்சுழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுபவர். ஊர்கள்தோறும் சென்று அவர் பிச்சையேற்று மகிழ்ந்த பெருமையைச் சிற்றறிவுடைய யாம் எங்ஙனம் அறிவோம்? அறிய இயலவில்லை. 

3936 பொன்னிய லுந்திரு மேனிதன்மேற்புரிநூல் பொலிவித்துமின்னிய லுஞ்சடை தாழவேழவுரிபோர்த் தரவாடமன்னிய மாமறை யோர்கள்போற்றும்வலஞ்சுழி வாணர்தம்மேல்உன்னிய சிந்தையி னீங்ககில்லார்க்குயர்வாம் பிணிபோமே3.106.3
சிவபெருமான் பொன்போன்ற அழகிய திருமேனி மீது முப்புரிநூல் அழகுற விளங்குமாறு அணிந்துள்ளவர். மின்னலைப் போல ஒளிவீசும் சடைதாழ, யானையின் தோலை உரித்துப் போர்த்தவர். ஆடும் பாம்பை அணிந்தவர். நிலைபெற்ற, பெருமையுடைய வேதங்களில் வல்ல அந்தணர்கள் போற்றும் திருவலஞ்சுழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற சிவபெருமானை இடையறாது சிந்தித்து வழிபடும் அடியவர்கட்கு எல்லா நலன்களும் உண்டாகும். நோய் நீங்கும். 

3937 விடையொரு பாலொரு பால்விரும்புமெல்லியல் புல்கியதோர்சடையொரு பாலொடு பாலிடங்கொள்தாழ்குழல் போற்றிசைப்பநடையொரு பாலொரு பால்சிலம்புநாளும் வலஞ்சுழிசேர்அடையொரு பாலடை யாதசெய்யுஞ்செய்கை யறியோமே3.106.4
சிவபெருமானுக்கு இடபவாகனம் ஒரு பக்கம், விரும்பிச் சேர்ந்து மெல்லியல்புடைய கங்காதேவி ஒரு பக்கம். விரிந்து பரந்த சடை ஒரு பக்கம். தாழ்ந்த கூந்தலையுடைய உமாதேவி ஒரு பக்கம். ஏறுபோல் பீடுநடை பயிலும் திருவடி ஒருபக்கம். சிலம்பு அணிந்த திருவடி ஒருபக்கம். திருவலஞ்சுழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் சிவபெருமானை நாளும் வழிபடுக. முற்கூறியவை வேறெங்கும் சென்றடையாது சிவனையே அடையும் சிறப்பைச் சிற்றறிவுடைய நாம் அறியோம். 

3938 கையம ரும்மழு நாகம்வீணைகலைமான் மறியேந்திமெய்யம ரும்பொடிப் பூசிவீசுங் குழையார் தருதோடும்பையம ரும்மர வாடவாடும்படர்சடை யார்க்கிடமாம்மையம ரும்பொழில் சூழும்வேலிவலஞ்சுழி மாநகரே3.106.5
இறைவன் கையில் மழு, பாம்பு, வீணை, கலைமான்கன்று என்பனவற்றை ஏந்தியுள்ளவர். திருமேனியில் திருவெண்ணீற்றைப் பூசியுள்ளவர். ஒளியை வீசி அசைகின்ற குழையும் தோடும் காதில் அணிந்துள்ளவர். படமாடும் பாம்பை அணிந்து நடனமாடுபவர். படர்ந்த சடையையுடைய அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம், நாற்புறமும் வேலிபோன்று, இருளடர்ந்த சோலைகள் சூழ்ந்த திருவலஞ்சுழி என்னும் மாநகரமாகும். 

3939 தண்டொடு சூலந் தழையவேந்தித்தையலொருபாகம்கண்டிடு பெய்பலி பேணிநாணார்கரியி னுரிதோலர்வண்டிடு மொய்பொழில் சூழ்ந்தமாடவலஞ்சுழி மன்னியவர்தொண்டொடு கூடித் துதைந்துநின்றதொடர்பைத் தொடர்வோமே3.106.6
சிவபெருமான் தண்டு, சூலம் இவற்றை ஒளிமிக ஏந்தியுள்ளவர். உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டுள்ளவர். இடப்படுகின்ற பிச்சையை விரும்பி ஏற்பதில் வெட்கப்படாதவர். யானையின் தோலை உரித்துப் போர்த்துக் கொண்டவர். வண்டுகள் மொய்க்கின்ற சோலைகள் சூழ்ந்த மாடங்களையுடைய திருவலஞ்சுழி என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருள்பவர். அப்பெருமான் திருத்தொண்டர்களோடு கூடி நெருங்கி நின்று அருள்வதை உணர்ந்து, நாமும் அவருடைய தொடர்பைத் தொடர்வோமாக! 

3940 கல்லிய லும்மலை யங்கைநீங்கவளைத்து வளையாதார்சொல்லிய லும்மதின் மூன்றுஞ்செற்றசுடரா னிடர்நீங்கமல்லிய லுந்திர டோளெம்மாதிவலஞ்சுழி மாநகரேபுல்கிய வேந்தனைப் புல்கியேத்தியிருப்பவர் புண்ணியரே3.106.7
சிவபெருமான் கல்லின் தன்மை பொருந்திய மேருமலையை அதன் கடினத்தன்மை நீங்க வளைத்து, செருக்குற்ற திரிபுர அசுரர்களின், பழிச்சொல்லுக்கு இடமாகிய மும்மதில்களையும் அழித்தவர். ஒளிவடிவானவர். அடியவர்களின் இடர் நீங்க, மற்போர் பயின்ற திரண்ட தோளையுடைய எம் முதல்வராய்த் திருவலஞ்சுழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார். மன்னுயிர்களை ஆளும் அரசரான அச்சிவபெருமானைச் சார்ந்து போற்றி வழிபடுபவர்கள் புண்ணியர்கள் ஆவர். 

3941 வெஞ்சின வாளரக்கன் வரையைவிறலா லெடுத்தான்றோள்அஞ்சுமொ ராறிரு நான்குமொன்றுமடர்த்தா ரழகாய நஞ்சிருள் கண்டத்து நாதரென்றுநணுகு மிடம்போலும்மஞ்சுல வும்பொழில் வண்டுகெண்டும்வலஞ்சுழி மாநகரே3.106.8
கடுஞ்சினமுடைய கொடிய அசுரனான இராவணன் தன் வலிமையால் கயிலை மலையைப் பெயர்க்க, அவன் இருபது தோள்களையும் அடர்த்தவர் சிவபெருமான். அவர் நஞ்சுண்டு இருண்ட அழகிய கண்டத்தையுடைய தலைவர். அவர் விரும்பி வீற்றிருந்தருளும் இடம் மேகத்தைத் தொடும்படி உயர்ந்துள்ள சோலைகளிலுள்ள மலர்களை வண்டுகள் காலால் கிண்டும் திரு வலஞ்சுழி என்னும் திருத்தலமாகும். 

3942 ஏடிய னான்முகன் சீர்நெடுமாலெனநின் றவர்காணார்கூடிய கூரெரி யாய்நிமிர்ந்தகுழக ருலகேத்தவாடிய வெண்டலை கையிலேந்திவலஞ்சுழி மேயவெம்மான்பாடிய நான்மறை யாளர்செய்யுஞ்சரிதை பலபலவே3.106.9
இதழ்களையுடைய தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனும், திருமாலும் காணமுடியாத வண்ணம் நெருப்புப் பிழம்பாய் ஓங்கி நின்றவர் சிவபெருமான். அவர் உலகோர் போற்றி வணங்குமாறு, வற்றிய பிரமகபாலத்தைக் கையிலேந்தி திருவலஞ்சுழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார். எம் தலைவரான அவரை நான்கு வேதங்களையும் நன்கு கற்றுவல்லவர்கள் பாடிப் போற்றும் தன்மையில் அவர் புரியும் திருவிளையாடல்கள் பலபல வாகும். 

3943 குண்டரும் புத்தருங் கூறையின்றிக்குழுவா ருரைநீத்துத்தொண்டருந் தன்றொழில் பேணநின்றகழலா னழலாடி வண்டம ரும்பொழின் மல்குபொன்னிவலஞ்சுழி வாணனெம்மான்பண்டொரு வேள்வி முனிந்துசெற்றபரிசே பகர்வோமே3.106.10
தீவினைக்கஞ்சாத சமணர்கள், ஆடையின்றிக் கூட்டமாயிருப்பவர்கள். அவர்களும் புத்தர்களும் இறைவனை உணராது கூறும் மொழிகளைத் தள்ளிவிடுங்கள். தொண்டர்கள் சரியைத் தொழிலில் விரும்பி வழிபட்டு நிற்க. கழலணிந்த திருவடிகளையுடைய சிவபெருமான் அழல் ஏந்தி ஆடுபவன். வண்டுகள் விரும்புகின்ற சோலைகளையுடையதும், காவிரியாறு வலஞ்சுழித்துப் பாய்கின்றதுமான திருவலஞ்சுழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற சிவபெருமான் முன்னொரு காலத்தில் அவனை நினையாது தக்கன் செய்த வேள்வியைக் கோபித்து அழித்த தன்மையைப் பகர்வோமாக. 

3944 வாழியெம் மானெனக் கெந்தைமேயவலஞ்சுழி மாநகர்மேல்காழியுண் ஞானசம் பந்தன்சொன்னகருத்தின் றமிழ்மாலைஆழியிவ் வையகத் தேத்தவல்லாரவர்க்குந் தமருக்கும்ஊழி யொருபெரு மின்பமோக்கும்உருவும் முயர்வாமே3.106.11
எம் தலைவனும், தந்தையுமான, சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருவலஞ்சுழி என்னும் மாநகரை வாழ்த்தி, சீகாழியில் அவதரித்த ஞானசம்பந்தன் அருளிய சிறந்த பயனைத் தரும் கருத்துக்கள் அடங்கிய தமிழ்மாலையாகிய இத்திருப்பதிகத்தை ஏத்த வல்லவர்களும், அவர்களுடைய சுற்றத்தார்களும் கடல் சூழ்ந்த இவ்வையகத்திலேயே பேரின்பம் துய்ப்பர். ஊழிக்காலத்திலும் நனிவிளங்கும் உயர்ந்த புகழடைவர். 

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 02 Apr 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.