LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

மூன்றாம் திருமுறை-110

3.110.திருப்பிரமபுரம் 
பண் - பழம்பஞ்சுரம் 
திருச்சிற்றம்பலம் 
திருப்பிரமபுர மென்பது சீர்காழி. இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - பிரமபுரீசர். 
தேவியார் - திருநிலைநாயகி. 
3978 வரமதேகொளா வுரமதேசெயும்
புரமெரித்தவன் பிரமநற்புரத்
தரனனாமமே பரவுவார்கள்சீர்
விரவுநீள் புவியே
3.110.1
தவம் செய்து பெற்ற வரத்தை நன்முறையில் பயன்படுத்தாது, தமது வலிமையைப் பயன்படுத்தித் தீமை செய்த அசுரர்களின் முப்புரங்களை எரித்தவர் சிவபெருமான். திருப் பிரமபுரம் என்னும் நன்னகரில் வீற்றிருந்தருளும் அச்சிவபெருமானின் புகழைப் போற்றி வணங்கும் அடியார்களின் பெருமை இவ்வகன்ற பூமி முழுவதும் பரவும். 
3979 சேணுலாமதில் வேணுமண்ணுளோர்
காணமன்றலார் வேணுநற்புரத்
தாணுவின்கழல் பேணுகின்றவ
ராணியொத் தவரே
3.110.2
ஆகாயத்தை அளாவிய மதில் விண்உலகத்தவர் இறங்குவதற்கு வைத்த மூங்கில் ஏணி என மண்ணுலகத்தவர் காணும்படி அமைந்த, நறுமணம் கமழும் திருவேணுபுரம் என்னும் நன்னகரில் வீற்றிருந்தருளும் தாணுவாகிய சிவபெருமானின் திருவடிகளைப் போற்றி வழிபடுகிறவர்கள் ஆணிப்பொன் போன்று சிறந்தவர்கள் ஆவர். 
3980 அகலமார்தரைப் புகலுநான் மறைக்
கிகலியோர்கள்வாழ் புகலிமாநகர்ப்
பகல்செய்வோனெதிர்ச் சகலசேகர
னகிலநா யகனே
3.110.3
விரிந்த இப்பூமியிலுள்ளவர்களால் சிறப்பித்துச் சொல்லப்படுகின்ற நான்கு வேதங்களிலும் வல்லவர்கள் வாழ்கின்ற திருப்புகலி என்னும் பெரிய நகரத்தில் வீற்றிருந்தருள்கின்றவரும், சூரியனுக்கு எதிரான கலையோடு கூடிய சந்திரனை முடியில் அணிந்தவருமான சிவபெருமானே அகில உலகத்திற்கும் தலைவர் ஆவார். 
3981 துங்கமாகரி பங்கமாவடுஞ்
செங்கையானிகழ் வெங்குருத்திகழ்
அங்கணானடி தங்கையாற்றொழத்
தங்குமோ வினையே
3.110.4
உயர்ந்ததும், பெரியதுமான யானை துன்புறும்படி கொன்று அதன் தோலையுரித்த சிவந்த கைகளையுடையவனும், புகழுடன் விளங்கும் திருவெங்குரு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற அழகிய கண்களை உடையவனுமான சிவபெருமான் திருவடிகளைத் தங்கள் கைகளால் தொழுபவர்களிடம் வினைகள் தங்கா. 
3982 காணியொண்பொருட் கற்றவர்க்கீகை
யுடைமையோரவர் காதல்செய்யுநற்
றோணிவண்புரத் தாணியென்பவர்
தூமதி யினரே
3.110.5
நிலங்களையும், அறவழியில் ஈட்டிய பொருள்களையும் கற்றவர்கட்குக் கொடையாகக் கொடுப்போர் விரும்பி வாழ்கின்ற திருத்தோணிபுரம் என்னும் நல்ல வளமைமிக்க நகரில் வீற்றிருந்தருளுகின்ற ஆணிப்பொன் போன்று அரிய பொருளாய் விளங்கும் சிவபெருமானைத் துதிப்பவர்கள் தூய சிவஞானம் பெறுவர். 
3983 ஏந்தராவெதிர் வாய்ந்தநுண்ணிடைப்
பூந்தணோதியாள் சேர்ந்தபங்கினன்
பூந்தராய்தொழு மாந்தர் மேனிமேற்
சேர்ந்திரா வினையே
3.110.6
படம் விரிக்கும் பாம்பிற்கு ஒப்பான நுண்ணிய இடையை உடையவளாய்ப் பூ அணிந்த குளிர்ந்த கூந்தலையுடைய உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்ட சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருப்பூந்தராய் என்னும் திருத்தலத்தைப் தொழும் மக்கள்மேல் பிணி முதலிய துன்பங்கள் உடம்பைப் பற்றி நில்லாமல் விலகிவிடும். 
3984 சுரபுரத்தினைத் துயர்செய்தாரகன்
துஞ்சவெஞ்சினக் காளியைத்தருஞ்
சிரபுரத்துளா னென்னவல்லவர்
சித்திபெற் றவரே
3.110.7
தேவருலகத்தைத் துன்புறுத்திய தாரகாசுரனைக் கொல்லும்படி வெஞ்சினம் கொண்ட காளியை அம்பிகையின் அம்சமாகத் தோற்றுவித்தருளிய திருச்சிரபுரத்தில் வீற்றிருந்தருளும் சிவபெருமானைப் போற்றி வழிபடுபவர்கள் அட்டமாசித்திகள் அனைத்தும் பெறுவர். 
3985 உறவுமாகியற் றவர்களுக்குமா
நெதிகொடுத்துநீள் புவியிலங்குசீர்ப்
புறவமாநகர்க் கிறைவனேயெனத்
தெறகிலா வினையே
3.110.8
வறியவர்கட்கு உறவினராகி அவர்கட்கு மாபெருஞ் செல்வத்தைக் கொடுத்து அருள்செய்கின்ற, இந்த நீண்டபூமியில் மக்கள் புகழுடன் விளங்குகின்ற திருப்புறவம் என்னும் மாநகரில் வீற்றிருந் தருளுகின்ற சிவபெருமானே என்று போற்றி வணங்குபவர்களை வினைகள் துன்பம் செய்யா. 
3986 பண்புசேரிலங் கைக்குநாதனன்
முடிகள்பத்தையுங் கெடநெரித்தவன்
சண்பையாதியைத் தொழுமவர்களைச்
சாதியா வினையே
3.110.9
பெருமைகள் பலவுடைய இலங்கைக்கு அரசனான இராவணன் முடிகள் பத்தையும் நெரித்த, திருச்சண்பை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற ஆதியாகிய சிவபெருமானைத் தொழுபவர்கள் வினைகள் துன்புறுத்தா. வலியிழந்துபோம். 
3987 ஆழியங்கையிற் கொண்டமாலய
னறிவொணாததோர் வடிவுகொண்டவன்
காழிமாநகர்க் கடவுணாமமே
கற்றல்நற் றவமே
3.110.10
சக்கரப்படையை அழகிய கையில் கொண்ட திருமாலும், பிரமனும் அறிய வொண்ணாதபடி நெருப்புப் பிழம்பு வடிவாய் நின்றவனும், சீகாழி என்னும் மாநகரில் வீற்றிருந்தருளுகின்ற கடவுளுமான சிவபெருமானின் புகழ்களையே கற்றல் நல்ல தவமாகும். 
3988 விச்சையொன்றிலாச் சமணர்சாக்கியப்
பிச்சர்தங்களைக் கரிசறுத்தவன்
கொச்சைமாநகர்க் கன்புசெய்பவர்
குணங்கள் கூறுமினே
3.110.11
மெய்யுணர்வு தரும் கல்வியறிவு இல்லாத சமணர், புத்தர்களாகிய பித்தர்களின் குற்றங்களை நீக்கிய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருக்கொச்சை மாநகரிடத்து அன்பு செய்பவர்களுடைய குணங்களை எடுத்துக் கூறுங்கள். 
3989 கழுமலத்தினுட் கடவுள்பாதமே
கருதுஞானசம் பந்தனின்தமிழ்
முழுதும்வல்லவர்க் கின்பமேதரு
முக்கணெம் மிறையே
3.110.12
திருக்கழுமலம் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற கடவுளாகிய சிவபெருமானின் திருவடிகளையே தியானிக்கின்ற ஞானசம்பந்தனின் இத்தமிழ்மாலையை முழுமையாக ஓதவல்லவர்கட்கு முக்கண் இறையாகிய அச்சிவபெருமான் அனைத்து இன்பங்களையும் தந்தருள்வான். 
திருச்சிற்றம்பலம்

3.110.திருப்பிரமபுரம் 
பண் - பழம்பஞ்சுரம் 
திருச்சிற்றம்பலம் 

திருப்பிரமபுர மென்பது சீர்காழி. இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - பிரமபுரீசர். தேவியார் - திருநிலைநாயகி. 

3978 வரமதேகொளா வுரமதேசெயும்புரமெரித்தவன் பிரமநற்புரத்தரனனாமமே பரவுவார்கள்சீர்விரவுநீள் புவியே3.110.1
தவம் செய்து பெற்ற வரத்தை நன்முறையில் பயன்படுத்தாது, தமது வலிமையைப் பயன்படுத்தித் தீமை செய்த அசுரர்களின் முப்புரங்களை எரித்தவர் சிவபெருமான். திருப் பிரமபுரம் என்னும் நன்னகரில் வீற்றிருந்தருளும் அச்சிவபெருமானின் புகழைப் போற்றி வணங்கும் அடியார்களின் பெருமை இவ்வகன்ற பூமி முழுவதும் பரவும். 

3979 சேணுலாமதில் வேணுமண்ணுளோர்காணமன்றலார் வேணுநற்புரத்தாணுவின்கழல் பேணுகின்றவராணியொத் தவரே3.110.2
ஆகாயத்தை அளாவிய மதில் விண்உலகத்தவர் இறங்குவதற்கு வைத்த மூங்கில் ஏணி என மண்ணுலகத்தவர் காணும்படி அமைந்த, நறுமணம் கமழும் திருவேணுபுரம் என்னும் நன்னகரில் வீற்றிருந்தருளும் தாணுவாகிய சிவபெருமானின் திருவடிகளைப் போற்றி வழிபடுகிறவர்கள் ஆணிப்பொன் போன்று சிறந்தவர்கள் ஆவர். 

3980 அகலமார்தரைப் புகலுநான் மறைக்கிகலியோர்கள்வாழ் புகலிமாநகர்ப்பகல்செய்வோனெதிர்ச் சகலசேகரனகிலநா யகனே3.110.3
விரிந்த இப்பூமியிலுள்ளவர்களால் சிறப்பித்துச் சொல்லப்படுகின்ற நான்கு வேதங்களிலும் வல்லவர்கள் வாழ்கின்ற திருப்புகலி என்னும் பெரிய நகரத்தில் வீற்றிருந்தருள்கின்றவரும், சூரியனுக்கு எதிரான கலையோடு கூடிய சந்திரனை முடியில் அணிந்தவருமான சிவபெருமானே அகில உலகத்திற்கும் தலைவர் ஆவார். 

3981 துங்கமாகரி பங்கமாவடுஞ்செங்கையானிகழ் வெங்குருத்திகழ்அங்கணானடி தங்கையாற்றொழத்தங்குமோ வினையே3.110.4
உயர்ந்ததும், பெரியதுமான யானை துன்புறும்படி கொன்று அதன் தோலையுரித்த சிவந்த கைகளையுடையவனும், புகழுடன் விளங்கும் திருவெங்குரு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற அழகிய கண்களை உடையவனுமான சிவபெருமான் திருவடிகளைத் தங்கள் கைகளால் தொழுபவர்களிடம் வினைகள் தங்கா. 

3982 காணியொண்பொருட் கற்றவர்க்கீகையுடைமையோரவர் காதல்செய்யுநற்றோணிவண்புரத் தாணியென்பவர்தூமதி யினரே3.110.5
நிலங்களையும், அறவழியில் ஈட்டிய பொருள்களையும் கற்றவர்கட்குக் கொடையாகக் கொடுப்போர் விரும்பி வாழ்கின்ற திருத்தோணிபுரம் என்னும் நல்ல வளமைமிக்க நகரில் வீற்றிருந்தருளுகின்ற ஆணிப்பொன் போன்று அரிய பொருளாய் விளங்கும் சிவபெருமானைத் துதிப்பவர்கள் தூய சிவஞானம் பெறுவர். 

3983 ஏந்தராவெதிர் வாய்ந்தநுண்ணிடைப்பூந்தணோதியாள் சேர்ந்தபங்கினன்பூந்தராய்தொழு மாந்தர் மேனிமேற்சேர்ந்திரா வினையே3.110.6
படம் விரிக்கும் பாம்பிற்கு ஒப்பான நுண்ணிய இடையை உடையவளாய்ப் பூ அணிந்த குளிர்ந்த கூந்தலையுடைய உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்ட சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருப்பூந்தராய் என்னும் திருத்தலத்தைப் தொழும் மக்கள்மேல் பிணி முதலிய துன்பங்கள் உடம்பைப் பற்றி நில்லாமல் விலகிவிடும். 

3984 சுரபுரத்தினைத் துயர்செய்தாரகன்துஞ்சவெஞ்சினக் காளியைத்தருஞ்சிரபுரத்துளா னென்னவல்லவர்சித்திபெற் றவரே3.110.7
தேவருலகத்தைத் துன்புறுத்திய தாரகாசுரனைக் கொல்லும்படி வெஞ்சினம் கொண்ட காளியை அம்பிகையின் அம்சமாகத் தோற்றுவித்தருளிய திருச்சிரபுரத்தில் வீற்றிருந்தருளும் சிவபெருமானைப் போற்றி வழிபடுபவர்கள் அட்டமாசித்திகள் அனைத்தும் பெறுவர். 

3985 உறவுமாகியற் றவர்களுக்குமாநெதிகொடுத்துநீள் புவியிலங்குசீர்ப்புறவமாநகர்க் கிறைவனேயெனத்தெறகிலா வினையே3.110.8
வறியவர்கட்கு உறவினராகி அவர்கட்கு மாபெருஞ் செல்வத்தைக் கொடுத்து அருள்செய்கின்ற, இந்த நீண்டபூமியில் மக்கள் புகழுடன் விளங்குகின்ற திருப்புறவம் என்னும் மாநகரில் வீற்றிருந் தருளுகின்ற சிவபெருமானே என்று போற்றி வணங்குபவர்களை வினைகள் துன்பம் செய்யா. 

3986 பண்புசேரிலங் கைக்குநாதனன்முடிகள்பத்தையுங் கெடநெரித்தவன்சண்பையாதியைத் தொழுமவர்களைச்சாதியா வினையே3.110.9
பெருமைகள் பலவுடைய இலங்கைக்கு அரசனான இராவணன் முடிகள் பத்தையும் நெரித்த, திருச்சண்பை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற ஆதியாகிய சிவபெருமானைத் தொழுபவர்கள் வினைகள் துன்புறுத்தா. வலியிழந்துபோம். 

3987 ஆழியங்கையிற் கொண்டமாலயனறிவொணாததோர் வடிவுகொண்டவன்காழிமாநகர்க் கடவுணாமமேகற்றல்நற் றவமே3.110.10
சக்கரப்படையை அழகிய கையில் கொண்ட திருமாலும், பிரமனும் அறிய வொண்ணாதபடி நெருப்புப் பிழம்பு வடிவாய் நின்றவனும், சீகாழி என்னும் மாநகரில் வீற்றிருந்தருளுகின்ற கடவுளுமான சிவபெருமானின் புகழ்களையே கற்றல் நல்ல தவமாகும். 

3988 விச்சையொன்றிலாச் சமணர்சாக்கியப்பிச்சர்தங்களைக் கரிசறுத்தவன்கொச்சைமாநகர்க் கன்புசெய்பவர்குணங்கள் கூறுமினே3.110.11
மெய்யுணர்வு தரும் கல்வியறிவு இல்லாத சமணர், புத்தர்களாகிய பித்தர்களின் குற்றங்களை நீக்கிய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருக்கொச்சை மாநகரிடத்து அன்பு செய்பவர்களுடைய குணங்களை எடுத்துக் கூறுங்கள். 

3989 கழுமலத்தினுட் கடவுள்பாதமேகருதுஞானசம் பந்தனின்தமிழ்முழுதும்வல்லவர்க் கின்பமேதருமுக்கணெம் மிறையே3.110.12
திருக்கழுமலம் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற கடவுளாகிய சிவபெருமானின் திருவடிகளையே தியானிக்கின்ற ஞானசம்பந்தனின் இத்தமிழ்மாலையை முழுமையாக ஓதவல்லவர்கட்கு முக்கண் இறையாகிய அச்சிவபெருமான் அனைத்து இன்பங்களையும் தந்தருள்வான். 

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 02 Apr 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.