LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

மூன்றாம் திருமுறை-118

3.118.திருக்கழுமலம் 
பண் - புறநீர்மை 
திருச்சிற்றம்பலம் 
கழுமலம் என்பது சீகாழிக்கொருபெயர். இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - பிரமபுரீசர். 
தேவியார் - திருநிலைநாயகி. 
4068 மடன்மலி கொன்றை துன்றுவா ளெருக்கும்
வன்னியு மத்தமுஞ் சடைமேற்
படலொலி திரைகண் மோதிய கங்கைத்
தலைவனார் தம்மிடம் பகரில்
விடலொளி பரந்த வெண்டிரை முத்த
மிப்பிகள் கொணர்ந்துவெள் ளருவிக்
கடலொலி யோத மோதவந் தலைக்குங்
கழுமல நகரென லாமே
3.118.1
இதழ்கள் நிறைந்த கொன்றை மாலையும், நெருங்கிய ஒளியுடைய வெள்ளெருக்க மாலையும், ஊமத்தம் பூ மாலையும் அணிந்த சடையின்மேல், ஒலி அடங்கிய அலை மோதும்படியான கங்கைக்குத் தலைவரான சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் எது என்றால், ஒலி மிகுந்த வெள்ளிய அலைகள் முத்துக்களையும், சிப்பிகளையும் அடித்துக் கொணர்ந்து ஒதுக்கும் கடலினொலி தன் வெள்ளப் பெருக்கைக் கரைமோதச் செய்யும் திருக்கழுமலநகர் எனக் கூறலாம். 
4069 மின்னிய வரவும் வெறிமலர் பலவும்
விரும்பிய திங்களுந் தங்கு
சென்னிய துடையான் றேவர்தம் பெருமான்
சேயிழை யொடுமுறை விடமாம்
பொன்னியன் மணியு முரிகரி மருப்புஞ்
சந்தமு முந்துவன் றிரைகள்
கன்னிய ராடக் கடலொலி மலியுங்
கழுமல நகரென லாமே
3.118.2
மின்னும் பாம்பும், நறுமணம் கமழும் மலர்களும், இறைவனின் திருவடியைச் சரணடைந்த பிறைச்சந்திரனும் தங்கிய தலையுடையவர் சிவபெருமான். அவர் தேவர்கட்கெல்லாம் தலைவர். அப்பெருமான் செம்மையான ஆபரணமணிந்த உமாதேவியோடு வீற்றிருந்தருளும் இடம், பொன், மணி, யானையின் வளைந்த தந்தம், சந்தனக்கட்டை இவற்றை உந்தித் தள்ளுகின்ற வலிய அலைகளையுடையதும், கன்னிப்பெண்கள் கடற்கரையில் விளையாடுதலையுடையதும், கடலொலி மிகுதலையுடையதுமான திருக்கழுமலநகர் எனலாம். 
4070 சீருறு தொண்டர் கொண்டடி போற்றச்
செழுமலர் புனலொடு தூபந்
தாருறு கொன்றை தம்முடி வைத்த
சைவனார் தங்கிட மெங்கும் 
ஊருறு பதிக ளுலகுடன் பொங்கி
யொலிபுனல் கொளவுடன் மிதந்த
காருறு செம்மை நன்மையான் மிக்க
கழுமல நகரென லாமே
3.118.3
பெருமை மிக்க சிவதொண்டர்கள் நறுமலரும், நீரும், தூபமுங் கொண்டு திருவடிகளைப் பூசிக்கும்படி, கொன்றை மாலையினைத் தமது திருமுடிமேல் வைத்தருளிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது, பலவூர்களைத் தம்பாற் கொண்டுள்ள பதிகளை உலகுடன் கொள்ளும்படி கடல் பொங்கி எழுந்தபோது திருவருளால் தோணிபோல் மிதந்து மழையினாற் பெறும் நன்மைகள் குறைவறச் சிறந்துள்ள திருக்கழுமலநகர் எனலாம். 
4071 மண்ணினா ரேத்த வானுளார் பரச
வந்தரத் தமரர்கள் போற்றப்
பண்ணினா ரெல்லாம் பலபல வேட
முடையவர் பயில்விட மெங்கும்
எண்ணினான் மிக்கா ரியல்பினா னிறைந்தா
ரேந்திழை யவரொடு மைந்தர்
கண்ணினா லின்பங் கண்டொளி பரக்குங்
கழுமல நகரென லாமே
3.118.4
மண்ணுலக மெய்யன்பர்கள் போற்றி வணங்கவும், வானத்திலுள்ள தேவர்கள் துதிக்கவும், பிரமன், திருமால் முதலியோர்கள் போற்றவும் விளங்கி, எல்லாவற்றையும் ஆக்கியருளியவரும், பலபல சிவமூர்த்தங்களாக விளங்குபவருமான சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது, இறைவனின் திருவடி மறவா நினைவால் சிறந்த உள்ளம் உடையவர்களும், செவ்விய அணிகலன்கள் அணிந்துள்ள மகளிரும் அவரொடு நீங்காது ஒன்றித்து வாழும் ஆண்மை மிக்க ஆடவர்களும், காணுந்தோறும் இன்பம் நுகரத் திருவருள் ஒளியைப் பரப்புகின்ற திருக்கழுமலநகர் எனக் கூறலாம். 
4072 சுருதியான் றலையும் நாமகண் மூக்குஞ்
சுடரவன் கரமுமுன் னியங்கு
பரிதியான் பல்லு மிறுத்தவர்க் கருளும்
பரமனார் பயின்றினி திருக்கை
விருதினான் மறையு மங்கமோ ராறும்
வேள்வியும் வேட்டவர் ஞானங்
கருதினா ருலகிற் கருத்துடை யார்சேர்
கழுமல நகரென லாமே
3.118.5
பிரமனது தலையையும், சரஸ்வதியின் மூக்கையும், தீக்கடவுளின் கையையும், காலம் காட்டி முன் செல்லும் சூரியனின் பல்லையும் இறுத்து, பின் உமாதேவி வேண்ட அவர்கட்கு அருளும் புரிந்த சிவபெருமான் பயின்று இனிதாக வீற்றிருந்தருளும் இடமாவது, வழிவழிக் கேட்கும் தொழிலாகப் பயின்று வரும் புகழுடைய நான்கு வேதங்களையும், ஆறு அங்கங்களையும் அறிந்து, அவற்றின்படி வேத வேள்விகளைச் செய்பவர்களும், ஞான வேட்கை உடையவர்களும், உலகில் பிறந்ததன் பெரும்பயனை அடைய விரும்பும் கருத்துடையவர்களும் வசிக்கின்ற திருக்கழுமலநகர் எனக் கூறலாம். 
4073 புற்றில்வா ளரவு மாமையும் பூண்ட
புனிதனார் பனிமலர்க் கொன்றை
பற்றிவான் மதியஞ் சடையிடை வைத்த
படிறனார் பயின்றினி திருக்கை
செற்றுவன் றிரைக ளொன்றொடொன் றோடிச்
செயிர்த்துவண் சங்கொடு வங்கங்
கற்றுறை வரைகள் கரைக்குவந் துரைக்குங்
கழுமல நகரென லாமே
3.118.6
புற்றில் வாழுந் தன்மையுடைய ஒளிமிக்க பாம்பையும், ஆமையோட்டையும் ஆபரணமாகப் பூண்ட புனிதரும், குளிர்ச்சி பொருந்திய கொன்றை மலருடன், வானத்திலுள்ள சந்திரனையும் சடையில் வைத்த எம் உள்ளம் கவர் கள்வருமான சிவபெருமான் பயின்று இனிதாக வீற்றிருந்தருளும் இடம், வலிய அலைகள் ஒன்றோடொன்று மோதிப் பொரும் கடலானது வளமையான சங்குகளோடு, கப்பல்களையும் கொண்டு வந்து மலைகள் போலக் கரை வந்து சாரச்செய்யும் திருக்கழுமலநகர் எனக் கூறலாம். 
4074 அலைபுனற் கங்கை தங்கிய சடையா
ரடனெடு மதிலொரு மூன்று
கொலையிடைச் செந்தீ வெந்தறக் கண்ட
குழகனார் கோயில தென்பர்
மலையின்மிக் குயர்ந்த மரக்கலஞ் சரக்கு
மற்றுமற் றிடையிடை யெங்குங்
கலைகளித் தேறிக் கானலில் வாழுங்
கழுமல நகரென லாமே
3.118.7
அலைகளோடு கூடிய கங்கையைத் தாங்கிய சடையை உடையவர் சிவபெருமான்.நீண்ட மூன்று மதில்களும் கொலை நிகழ்வதாகிய போரினிடையே செந்தீயினால் வெந்தழியும் படி செய்தவர், இளமையும், அழகுடைய சிவபெருமான் ஆவார். வீற்றிருந்தருளும் கோயிலையுடைய திருத்தலமாவது, மலைகளை விட மிக்குயர்ந்த சரக்கு மரக்கலங்கள் கடற்கரையில் நிற்க, கடற்கரைச் சோலைகளில் மான்கள் மகிழ்ந்து ஓடி வாழ்தலுடைய திருக்கழுமல நகர் எனக் கூறலாம். 
4075 ஒருக்கமுன் னினையாத் தக்கன்றன் வேள்வி
யுடைதர வுழறிய படையார்
அரக்கனை வரையா லாற்றலன் றழித்த
வழகனா ரமர்ந்துறை கோயில்
பரக்கும்வண் புகழார் பழியவை பார்த்துப்
பலபல வறங்களே பயிற்றிக்
கரக்குமா றறியா வண்மையார் வாழுங்
கழுமல நகரென லாமே
3.118.8
இறைவனை நினையாது முற்காலத்தில் தக்கன் செய்த யாகமாவது ஒருங்கே அழியும்படி கலக்கிய பூதப்படைகளை உடையவரும், அரக்கனான இராவணனது ஆற்றலை மலையைச் சற்றே கால்விரலால் ஊன்றி நெருக்குதலால் அழித்த அழகருமான சிவபெருமான் விரும்பி வீற்றிருந்தருளும் கோயிலுள்ள திருத் தலமாவது பரவுதலையுடைய மெய்ம்மையான புகழையுடையவரும், குற்றங்கள் வாராவண்ணம் நன்கு ஆராய்ந்து ஒல்லும் வகையான் ஓவாது அறம்புரியும் மிக்க பயிற்சியுடையாரும், கனவிலும் கரக்கும் எண்ணம் இல்லாத வள்ளன்மையுடையாரும் ஆகிய செந்நெறிச் செல்வர்கள் வாழும் கழுமலநகரெனக் கூறலாம். 
4076 அருவரை பொறுத்த வாற்றலி னானு
மணிகிளர் தாமரை யானும்
இருவரு மேத்த வெரியுரு வான
விறைவனா ருறைவிடம் வினவில்
ஒருவரிவ் வுலகில் வாழ்கிலா வண்ண
மொலிபுனல் வெள்ளமுன் பரப்பக்
கருவரை சூழ்ந்த கடலிடை மிதக்குங்
கழுமல நகரென லாமே
3.118.9
கோவர்த்தன மலையைக் குடையாகத் தாங்கிய ஆற்றலுடைய திருமாலும், அழகிய செந்தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனும் ஏத்தித் துதிக்கும்படியாகத் தீப்பிழம்பின் உருவாய் நின்ற சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம், ஒருவரும் இவ்வுலகில் வாழ இயலா வண்ணம், பேரூழிக் காலத்தில் பெருவெளள்ம் பெருக்கெடுக்க, அப்பரப்பில் கருவரை போன்ற திருமால் கிடந்து அறிதுயில் கொள்ளும் கடலிடைத் திருத்தோணி போன்று மிதந்த சிறப்பு வாய்ந்த திருக்கழுமலநகர் எனக் கூறலாம். 
4077 உரிந்துய ருருவி லுடைதவிர்ந் தாரு
மத்துகில் போர்த்துழல் வாருந்
தெரிந்துபுன் மொழிகள் செப்பின கேளாச்
செம்மையார் நன்மையா லுறைவாங்
குருந்துயர் கோங்கு கொடிவிடு முல்லை
மல்லிகை சண்பகம் வேங்கை
கருத்தடங் கண்ணின் மங்கைமார் கொய்யுங்
கழுமல நகரென லாமே
3.118.10
உயர்ந்த தமது உடலின்றும் உடையினை நீக்கிய சமணர்களும், மிக்க ஆடையினை உடல் முழுவதும் போர்த்துத் திருச்சிற்றம்பலம் திரியும் புத்தர்களம் ஆராய்ந்துணரும் அறிவிலாது ஏனைச் செந்நெறியாளர்களை இழிமொழிகளால் இகழ்ந்துரைப்பர். அப்புன்மொழிகளைப் ‘புறம் கேளோம்’ என்ற மறையின்படி ஒரு பொருளாகக் கொள்ளாத செம்மையாளர்கட்கு நன்மைபுரியும் சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது, குருந்து, கோங்கு, முல்லை, மல்லிகை, சண்பகம், வேங்கை ஆகிய மலர்களைக் கரிய அகன்ற கண்களையுடைய மங்கையர்கள் கொய்கின்ற திருக்கழுமலநகர் எனக் கூறலாம். 
4078 கானலங் கழனி யோதம்வந் துலவுங்
கழுமல நகருறை வார்மேல்
ஞானசம் பந்த னற்றமிழ் மாலை
நன்மையா லுரைசெய்து நவில்வார்
ஊனசம் பந்தத் துறுபிணி நீங்கி
யுள்ளமு மொருவழிக் கொண்டு 
வானிடை வாழ்வர் மண்மிசைப் பிறவார்
மற்றிதற் காணையும் நமதே
3.118.11
கடற்கரைச் சோலைகளை அடுத்த வயல்களில் கடல்நீர் வந்து பாய்தலையுடைய திருக்கழுமலம் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் இறைவனைப் போற்றிப் பாடிய ஞானசம்பந்தனுடைய நல்ல தமிழ்மாலைகளைப் பத்தியோடு பொருள் உணர்ந்து பாடித் துதிப்பவர்கள் உடலுடன் தொடர்பு கொண்டதான பிறவிப் பிணி நீங்கி, உள்ளம் ஒருமைப்பாட்டினையுடைய சிவலோகத்தில் வாழ்வர். மீண்டும் நிலவுலகில் வந்து பிறவார். இதற்கு ஆணையும் நம்முடையதே ஆகும். 
திருச்சிற்றம்பலம்

3.118.திருக்கழுமலம் 
பண் - புறநீர்மை 
திருச்சிற்றம்பலம் 

கழுமலம் என்பது சீகாழிக்கொருபெயர். இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - பிரமபுரீசர். தேவியார் - திருநிலைநாயகி. 

4068 மடன்மலி கொன்றை துன்றுவா ளெருக்கும்வன்னியு மத்தமுஞ் சடைமேற்படலொலி திரைகண் மோதிய கங்கைத்தலைவனார் தம்மிடம் பகரில்விடலொளி பரந்த வெண்டிரை முத்தமிப்பிகள் கொணர்ந்துவெள் ளருவிக்கடலொலி யோத மோதவந் தலைக்குங்கழுமல நகரென லாமே3.118.1
இதழ்கள் நிறைந்த கொன்றை மாலையும், நெருங்கிய ஒளியுடைய வெள்ளெருக்க மாலையும், ஊமத்தம் பூ மாலையும் அணிந்த சடையின்மேல், ஒலி அடங்கிய அலை மோதும்படியான கங்கைக்குத் தலைவரான சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் எது என்றால், ஒலி மிகுந்த வெள்ளிய அலைகள் முத்துக்களையும், சிப்பிகளையும் அடித்துக் கொணர்ந்து ஒதுக்கும் கடலினொலி தன் வெள்ளப் பெருக்கைக் கரைமோதச் செய்யும் திருக்கழுமலநகர் எனக் கூறலாம். 

4069 மின்னிய வரவும் வெறிமலர் பலவும்விரும்பிய திங்களுந் தங்குசென்னிய துடையான் றேவர்தம் பெருமான்சேயிழை யொடுமுறை விடமாம்பொன்னியன் மணியு முரிகரி மருப்புஞ்சந்தமு முந்துவன் றிரைகள்கன்னிய ராடக் கடலொலி மலியுங்கழுமல நகரென லாமே3.118.2
மின்னும் பாம்பும், நறுமணம் கமழும் மலர்களும், இறைவனின் திருவடியைச் சரணடைந்த பிறைச்சந்திரனும் தங்கிய தலையுடையவர் சிவபெருமான். அவர் தேவர்கட்கெல்லாம் தலைவர். அப்பெருமான் செம்மையான ஆபரணமணிந்த உமாதேவியோடு வீற்றிருந்தருளும் இடம், பொன், மணி, யானையின் வளைந்த தந்தம், சந்தனக்கட்டை இவற்றை உந்தித் தள்ளுகின்ற வலிய அலைகளையுடையதும், கன்னிப்பெண்கள் கடற்கரையில் விளையாடுதலையுடையதும், கடலொலி மிகுதலையுடையதுமான திருக்கழுமலநகர் எனலாம். 

4070 சீருறு தொண்டர் கொண்டடி போற்றச்செழுமலர் புனலொடு தூபந்தாருறு கொன்றை தம்முடி வைத்தசைவனார் தங்கிட மெங்கும் ஊருறு பதிக ளுலகுடன் பொங்கியொலிபுனல் கொளவுடன் மிதந்தகாருறு செம்மை நன்மையான் மிக்ககழுமல நகரென லாமே3.118.3
பெருமை மிக்க சிவதொண்டர்கள் நறுமலரும், நீரும், தூபமுங் கொண்டு திருவடிகளைப் பூசிக்கும்படி, கொன்றை மாலையினைத் தமது திருமுடிமேல் வைத்தருளிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது, பலவூர்களைத் தம்பாற் கொண்டுள்ள பதிகளை உலகுடன் கொள்ளும்படி கடல் பொங்கி எழுந்தபோது திருவருளால் தோணிபோல் மிதந்து மழையினாற் பெறும் நன்மைகள் குறைவறச் சிறந்துள்ள திருக்கழுமலநகர் எனலாம். 

4071 மண்ணினா ரேத்த வானுளார் பரசவந்தரத் தமரர்கள் போற்றப்பண்ணினா ரெல்லாம் பலபல வேடமுடையவர் பயில்விட மெங்கும்எண்ணினான் மிக்கா ரியல்பினா னிறைந்தாரேந்திழை யவரொடு மைந்தர்கண்ணினா லின்பங் கண்டொளி பரக்குங்கழுமல நகரென லாமே3.118.4
மண்ணுலக மெய்யன்பர்கள் போற்றி வணங்கவும், வானத்திலுள்ள தேவர்கள் துதிக்கவும், பிரமன், திருமால் முதலியோர்கள் போற்றவும் விளங்கி, எல்லாவற்றையும் ஆக்கியருளியவரும், பலபல சிவமூர்த்தங்களாக விளங்குபவருமான சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது, இறைவனின் திருவடி மறவா நினைவால் சிறந்த உள்ளம் உடையவர்களும், செவ்விய அணிகலன்கள் அணிந்துள்ள மகளிரும் அவரொடு நீங்காது ஒன்றித்து வாழும் ஆண்மை மிக்க ஆடவர்களும், காணுந்தோறும் இன்பம் நுகரத் திருவருள் ஒளியைப் பரப்புகின்ற திருக்கழுமலநகர் எனக் கூறலாம். 

4072 சுருதியான் றலையும் நாமகண் மூக்குஞ்சுடரவன் கரமுமுன் னியங்குபரிதியான் பல்லு மிறுத்தவர்க் கருளும்பரமனார் பயின்றினி திருக்கைவிருதினான் மறையு மங்கமோ ராறும்வேள்வியும் வேட்டவர் ஞானங்கருதினா ருலகிற் கருத்துடை யார்சேர்கழுமல நகரென லாமே3.118.5
பிரமனது தலையையும், சரஸ்வதியின் மூக்கையும், தீக்கடவுளின் கையையும், காலம் காட்டி முன் செல்லும் சூரியனின் பல்லையும் இறுத்து, பின் உமாதேவி வேண்ட அவர்கட்கு அருளும் புரிந்த சிவபெருமான் பயின்று இனிதாக வீற்றிருந்தருளும் இடமாவது, வழிவழிக் கேட்கும் தொழிலாகப் பயின்று வரும் புகழுடைய நான்கு வேதங்களையும், ஆறு அங்கங்களையும் அறிந்து, அவற்றின்படி வேத வேள்விகளைச் செய்பவர்களும், ஞான வேட்கை உடையவர்களும், உலகில் பிறந்ததன் பெரும்பயனை அடைய விரும்பும் கருத்துடையவர்களும் வசிக்கின்ற திருக்கழுமலநகர் எனக் கூறலாம். 

4073 புற்றில்வா ளரவு மாமையும் பூண்டபுனிதனார் பனிமலர்க் கொன்றைபற்றிவான் மதியஞ் சடையிடை வைத்தபடிறனார் பயின்றினி திருக்கைசெற்றுவன் றிரைக ளொன்றொடொன் றோடிச்செயிர்த்துவண் சங்கொடு வங்கங்கற்றுறை வரைகள் கரைக்குவந் துரைக்குங்கழுமல நகரென லாமே3.118.6
புற்றில் வாழுந் தன்மையுடைய ஒளிமிக்க பாம்பையும், ஆமையோட்டையும் ஆபரணமாகப் பூண்ட புனிதரும், குளிர்ச்சி பொருந்திய கொன்றை மலருடன், வானத்திலுள்ள சந்திரனையும் சடையில் வைத்த எம் உள்ளம் கவர் கள்வருமான சிவபெருமான் பயின்று இனிதாக வீற்றிருந்தருளும் இடம், வலிய அலைகள் ஒன்றோடொன்று மோதிப் பொரும் கடலானது வளமையான சங்குகளோடு, கப்பல்களையும் கொண்டு வந்து மலைகள் போலக் கரை வந்து சாரச்செய்யும் திருக்கழுமலநகர் எனக் கூறலாம். 

4074 அலைபுனற் கங்கை தங்கிய சடையாரடனெடு மதிலொரு மூன்றுகொலையிடைச் செந்தீ வெந்தறக் கண்டகுழகனார் கோயில தென்பர்மலையின்மிக் குயர்ந்த மரக்கலஞ் சரக்குமற்றுமற் றிடையிடை யெங்குங்கலைகளித் தேறிக் கானலில் வாழுங்கழுமல நகரென லாமே3.118.7
அலைகளோடு கூடிய கங்கையைத் தாங்கிய சடையை உடையவர் சிவபெருமான்.நீண்ட மூன்று மதில்களும் கொலை நிகழ்வதாகிய போரினிடையே செந்தீயினால் வெந்தழியும் படி செய்தவர், இளமையும், அழகுடைய சிவபெருமான் ஆவார். வீற்றிருந்தருளும் கோயிலையுடைய திருத்தலமாவது, மலைகளை விட மிக்குயர்ந்த சரக்கு மரக்கலங்கள் கடற்கரையில் நிற்க, கடற்கரைச் சோலைகளில் மான்கள் மகிழ்ந்து ஓடி வாழ்தலுடைய திருக்கழுமல நகர் எனக் கூறலாம். 

4075 ஒருக்கமுன் னினையாத் தக்கன்றன் வேள்வியுடைதர வுழறிய படையார்அரக்கனை வரையா லாற்றலன் றழித்தவழகனா ரமர்ந்துறை கோயில்பரக்கும்வண் புகழார் பழியவை பார்த்துப்பலபல வறங்களே பயிற்றிக்கரக்குமா றறியா வண்மையார் வாழுங்கழுமல நகரென லாமே3.118.8
இறைவனை நினையாது முற்காலத்தில் தக்கன் செய்த யாகமாவது ஒருங்கே அழியும்படி கலக்கிய பூதப்படைகளை உடையவரும், அரக்கனான இராவணனது ஆற்றலை மலையைச் சற்றே கால்விரலால் ஊன்றி நெருக்குதலால் அழித்த அழகருமான சிவபெருமான் விரும்பி வீற்றிருந்தருளும் கோயிலுள்ள திருத் தலமாவது பரவுதலையுடைய மெய்ம்மையான புகழையுடையவரும், குற்றங்கள் வாராவண்ணம் நன்கு ஆராய்ந்து ஒல்லும் வகையான் ஓவாது அறம்புரியும் மிக்க பயிற்சியுடையாரும், கனவிலும் கரக்கும் எண்ணம் இல்லாத வள்ளன்மையுடையாரும் ஆகிய செந்நெறிச் செல்வர்கள் வாழும் கழுமலநகரெனக் கூறலாம். 

4076 அருவரை பொறுத்த வாற்றலி னானுமணிகிளர் தாமரை யானும்இருவரு மேத்த வெரியுரு வானவிறைவனா ருறைவிடம் வினவில்ஒருவரிவ் வுலகில் வாழ்கிலா வண்ணமொலிபுனல் வெள்ளமுன் பரப்பக்கருவரை சூழ்ந்த கடலிடை மிதக்குங்கழுமல நகரென லாமே3.118.9
கோவர்த்தன மலையைக் குடையாகத் தாங்கிய ஆற்றலுடைய திருமாலும், அழகிய செந்தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனும் ஏத்தித் துதிக்கும்படியாகத் தீப்பிழம்பின் உருவாய் நின்ற சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம், ஒருவரும் இவ்வுலகில் வாழ இயலா வண்ணம், பேரூழிக் காலத்தில் பெருவெளள்ம் பெருக்கெடுக்க, அப்பரப்பில் கருவரை போன்ற திருமால் கிடந்து அறிதுயில் கொள்ளும் கடலிடைத் திருத்தோணி போன்று மிதந்த சிறப்பு வாய்ந்த திருக்கழுமலநகர் எனக் கூறலாம். 

4077 உரிந்துய ருருவி லுடைதவிர்ந் தாருமத்துகில் போர்த்துழல் வாருந்தெரிந்துபுன் மொழிகள் செப்பின கேளாச்செம்மையார் நன்மையா லுறைவாங்குருந்துயர் கோங்கு கொடிவிடு முல்லைமல்லிகை சண்பகம் வேங்கைகருத்தடங் கண்ணின் மங்கைமார் கொய்யுங்கழுமல நகரென லாமே3.118.10
உயர்ந்த தமது உடலின்றும் உடையினை நீக்கிய சமணர்களும், மிக்க ஆடையினை உடல் முழுவதும் போர்த்துத் திருச்சிற்றம்பலம் திரியும் புத்தர்களம் ஆராய்ந்துணரும் அறிவிலாது ஏனைச் செந்நெறியாளர்களை இழிமொழிகளால் இகழ்ந்துரைப்பர். அப்புன்மொழிகளைப் ‘புறம் கேளோம்’ என்ற மறையின்படி ஒரு பொருளாகக் கொள்ளாத செம்மையாளர்கட்கு நன்மைபுரியும் சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது, குருந்து, கோங்கு, முல்லை, மல்லிகை, சண்பகம், வேங்கை ஆகிய மலர்களைக் கரிய அகன்ற கண்களையுடைய மங்கையர்கள் கொய்கின்ற திருக்கழுமலநகர் எனக் கூறலாம். 

4078 கானலங் கழனி யோதம்வந் துலவுங்கழுமல நகருறை வார்மேல்ஞானசம் பந்த னற்றமிழ் மாலைநன்மையா லுரைசெய்து நவில்வார்ஊனசம் பந்தத் துறுபிணி நீங்கியுள்ளமு மொருவழிக் கொண்டு வானிடை வாழ்வர் மண்மிசைப் பிறவார்மற்றிதற் காணையும் நமதே3.118.11
கடற்கரைச் சோலைகளை அடுத்த வயல்களில் கடல்நீர் வந்து பாய்தலையுடைய திருக்கழுமலம் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் இறைவனைப் போற்றிப் பாடிய ஞானசம்பந்தனுடைய நல்ல தமிழ்மாலைகளைப் பத்தியோடு பொருள் உணர்ந்து பாடித் துதிப்பவர்கள் உடலுடன் தொடர்பு கொண்டதான பிறவிப் பிணி நீங்கி, உள்ளம் ஒருமைப்பாட்டினையுடைய சிவலோகத்தில் வாழ்வர். மீண்டும் நிலவுலகில் வந்து பிறவார். இதற்கு ஆணையும் நம்முடையதே ஆகும். 

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 02 Apr 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.