LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

மூன்றாம் திருமுறை-54

3.054.திருப்பாசுரம் 
பண் - கௌசிகம் 
திருச்சிற்றம்பலம் 
3372 வாழ்க அந்தணர் வானவ ரானினம்
வீழ்க தண்புனல் வேந்தனு மோங்குக
ஆழ்க தீயதெல் லாமர னாமமே
சூழ்க வையக முந்துயர் தீர்கவே 3.054.1
உலக நன்மையின் பொருட்டு வேள்விகள், அர்ச்சனைகள், வழிபாடுகள் ஆகியவை செய்யும் அந்தணர்கள் வாழ்க. அவ்வேள்விகளைச் சிவன் நியதிப்படி ஏற்றுச் செலுத்தும் வானவர்கள் வாழ்க. வேள்வி, ‘வழிபாடு இவற்றிற்குரிய பஞ்ச கௌவியங்களையும், திருநீற்றினையும் அளிக்கும் பசுக்கூட்டங்கள் வாழ்க. வேள்வியின் பயனால் குளிர்ந்த மழை பொழிக. சிவாலய பூசை முதலியவற்றை அழியாது காத்துவரும் மன்னனின் செங்கோலாட்சி ஓங்குக. வேள்விகளால் வரும் நலங்களை அடைய வொட்டாது கேடுவிளைவிக்கும் அயனெறிகளிலுள்ள தீயவை ஆழ்க. உயிர்கள் யாவும் சிவன் நாமத்தை ஓதுக. இவ்வுலக மக்களின் துன்பம் நீங்குக. 
3373 அரிய காட்சிய ராய்த்தம தங்கைசேர்
எரிய ரேறுகந் தேறுவர் கண்டமும்
கரியர் காடுறை வாழ்க்கைய ராயினும்
பெரிய ராரறி வாரவர் பெற்றியே
3.054.2
பாச ஞானத்தாலும், பசு ஞானத்தாலும் காண்பதற்கு அரியவர். பதிஞானத்தால் உணரும் மெய்யன்புடைய அடியவர்க்கு அவர் திருமேனி தரித்து வந்து, நெருப்பேந்திய கையர், ஏறுகந்தேறுவர், கண்டமும் கரியவர், காடுறை வாழ்க்கையராய் எளிதிற்காட்சி அருளுவர். ஆயினும் உலகத்தையே தம் வடிவமாகக் கொண்ட பெரியவர். அவருடைய தன்மையை யாவரால் அறிந்து கொள்ள முடியும்? 
3374 வெந்த சாம்பல் விரையெனப் பூசியே
தந்தை யாரொடு தாயிலர் தம்மையே
சிந்தியா வெழு வார்வினை தீர்ப்பரால்
எந்தை யாரவ ரெவ்வகையார் கொலோ 3.054.3
இறைவன் வெந்த சாம்பலை வாசனைப் பொடியெனப் பூசியவர். தந்தையும், தாயுமில்லாதவர். தம்மை இடையறாது சிந்திப்பவர்கள் வினையைத் தீர்ப்பவர். அத்தகைய எம் தந்தையாரான அவரின் பண்புகளை எவ்வகைக் கூற்றால் கூறுவது. 
3375 ஆட்பா லவர்க்கருளும் வண்ணமு மாதி மாண்பும்
கேட்பான் புகிலள வில்லை கிளக்க வேண்டா
கோட்பா லனவும் வினையுங் குறுகாமை யெந்தை
தாட்பால் வணங்கித் தலைநின் றிவைகேட்க தக்கார் 3.054.4
இறைவன் பக்குவமுடைய உயிர்கட்கு அருள்புரிகின்ற தன்மையும், பழமை வாய்ந்த புகழும் கேட்கவும், சொல்லவும் தொடங்கினால் அளவில்லாதன. ஆதலால் அவைபற்றிய ஆராய்ச்சி வேண்டா. எம் தந்தையாகிய இறைவனின் திருவடிகளைச் சார்ந்து வணங்கி அவன் புகழைக் கேட்கும் அடியவர்கட்குக் கோள்களாலும், தீயவினைகளாலும் துன்பம் உண்டாகாது. தாட்பால் வணங்கித் தலைநின்றிவை கேட்க - என்றது திருவடி ஞானம் கைகாட்ட அதனுள் அடங்கி நின்றுணர்வதாகிய நிட்டை கூடல் என்னும் நான்காவது ஞானநிலை. 
3376 ஏதுக்க ளாலு மெடுத்த மொழியாலு மிக்குச்
சோதிக்க வேண்டா சுடர்விட்டுள னெங்கள் சோதி
மாதுக்க நீங்க லுறுவீர் மனம்பற்றி வாழ்மின்
சாதுக்கண் மிக்கீரிறையே வந்து சார்மின்களே 3.054.5
இறைவனை அன்பால் வழிபடும் ஞானிகளே! அனுமானப் பிரமாணத்தாலும் உரையளவையாலும் இறைவனை மிகுதியாகச் சோதிக்க வேண்டா. அவன் ஊனக்கண் கொண்டு நோக்கப்புறத்தே சோதி வடிவமாகவும், அன்போடு கூடி அகத்தால் ஞானக்கண் கொண்டு நோக்க உள்ளொளியாகவும் விளங்குபவன். அவனை விரைவில் வந்து சார்ந்து, மனம் ஒன்றி வழிபட்டுப் பிறவித்துன்பத்தைப் போக்கிக் கொள்ளுங்கள். இறைவன் அளவைகளால் அறியப்படும் ஆராய்ச்சிக்கு அப்பாற் பட்டவன். 
3377 ஆடும் மெனவும் மருஞ்கூற்ற முதைத்து வேதம்
பாடும் மெனவும் புகழல்லது பாவநீங்கக்
கேடும் பிறப்பும் மறுக்கும் மெனக்கேட் டீராகில்
நாடுந் திறத்தார்க் கருளல்லது நாட்ட லாமே 3.054.6
இறைவன் திருநடனம் புரிவதும், மார்க்கண்டேயருக்காகக் காலனைக் காலால் உதைத்ததும், வேதங்களை அருளிச் செய்ததும் ஆகிய செயல்கள் புகழ் கருதியா, மன்னுயிர்களின் தீவினைகளை நீக்குவதற்கா, பிறப்பை அறுத்துப் பிறவா நெறியை அளிப்பதற்கா என்று கேட்பீராயின், இவை தன்னைச் சார்ந்த அடியார்கட்கு அருள் செய்வதற்கேயன்றி வேறு காரணத்தாலல்ல என்று உறுதியாகக் கூறலாம். இறைவன் உயிர்களிடத்துக் கொண்ட அளப்பருங் கருணையே அவன் செயல்கட்குக் காரணம். 
3378 கடிசேர்ந்த போது மலரான கைக்கொண்டு நல்ல
படிசேர்ந்த பால்கொண்டங் காட்டிடத் தாதை பண்டு
முடிசேர்ந்த காலையற வெட்டிட முக்கண் மூர்த்தி
அடிசேர்ந்த வண்ணம் மறிவார் சொலக்கேட்டு 
மன்றே 3.054.7
சண்டீசர் நறுமணமுடைய மலர்களைத் தூவிப் போற்றி, நல்ல பசுவின் பால் கொண்டு மணலாலான சிவலிங்கத்திற்குத் திருமுழுக்காட்டத் தந்தை கோபம் கொண்டு காலால் இடற, சிவ பூசைக்கு இடையூறு செய்த கால் மீது அருகிலுள்ள கோலை எடுத்து ஓச்ச, அது மழுவாக மாறிக் காலை வெட்டினாலும், முக்கண் மூர்த்தியான் சிவபெருமான் அவ்வடியவருக்குத் திருவடிப்பேற்றினை அளித்தருளியதை அறிவு சால் அன்பர்கள் அன்றே சொல்லக் கேட்டோம் அல்லமோ? 
3379 வேத முதல்வன் முதலாக விளங்கி வையம்
ஏதப் படாமை யுலகத்தவ ரேத்தல் செய்யப்
பூத முதல்வன் முதலே முதலாப் பொலிந்த
சூத னொலிமாலை யென்றே கலிக்கோவை சொல்லே 3.054.8
வேதத்தை அருளிச் செய்தவனாய், வேதப் பொருளாகவும் விளங்கும் சிவபெருமானை முதல்வனாகக் கொண்டு, குற்றம் செய்யாது நன்னெறியில் நிற்கும் பொருட்டு உலகத்தோர் அவனைப் போற்றிசைக்க, பூத நாயகனான அவனைப் போற்றிச் சூதமுனிவர் அருளிச் செய்த பதினெட்டு புராணங்களும் ஒழுக்கத்தைப் போதிப்பனவாகும். 
3380 பாராழி வட்டம் பகையா னலிந்தாட்ட வாடிப்
பேராழி யானதிடர் கண்டருள் செய்தல் பேணி
நீராழி விட்டேறி நெஞ்சிடங் கொண்ட வர்க்குப்
போராழி யீந்த புகழும் புகழுற்ற தன்றே 3.054.9
கடல்போல் பெருகியுள்ள இப்பூவுலக மக்கள் பகைவர்களால் நலிவுறுத்தி அலைக்கப்பட, அவர்கள் துன்பத்தை அறிந்து அருள் செய்ய விரும்பி, தான் கண்துயிலும் கடலைவிட்டுப் பூமிக்கு வந்து, தம்மைத் தன்நெஞ்சிடமாகக் கொண்ட திருமாலுக்கு அவர் வேண்டுகோளுக்கிணங்கக் காத்தல் தொழில் நன்கு நிகழப் பேராற்றல் மிகுந்த சக்கராயுதப் படையைச் சிவபெருமான் ஈந்தது மெய்யான புகழ் அன்றோ? 
3381 மாலா யவனும் மறைவல்ல நான்மு கனும்
பாலாய தேவர் பகரில் லமு தூட்டல் பேணிக்
காலாய முந்நீர் கடைந்தார்க் கரிதா யெழுந்த
ஆலால முண்டங்கம ரர்க்கருள் செய்த தாமே 3.054.10
திருமாலும், நான்மறைகளையும் நன்கு கற்ற பிரமனும், பலராகிய தேவர்களும் சொல்வதற்கரிய அமுதுண்ண விரும்பி, பாற்கடலைக் கடைய அரிதாய் எழுந்த ஆலகால விடத்தை உண்டு, தேவர்களைக் காத்து அருள்செய்தவர் சிவபெருமான். 
3382 அற்றன்றி யந்தண் மதுரைத் தொகை யாக்கினானும்
தெற்றென்று தெய்வந் தௌயார் கரைக்கோலை தெண்ணீர்ப்
பற்றின்றிப் பாங்கெதிர்வி னூரவும் பண்பு நோக்கில்
பெற்றொன் றுயர்த்த பெருமான் பெருமானு 
மன்றே 3.054.11
சிவபெருமான் முன்னர்க்கூறிய புகழுரைகட்கு மட்டுமன்றி, மதுரையில் தமிழ்ச்சங்கம் அமைத்து தமிழ் வளர்த்தருளியவர். சிவபெருமானே முழுமுதற்பொருள் எனத் தௌவு பெறாதவர்கள் தௌவுபெறும் பொருட்டு வாதத்தில் உண்மைகாண ஞானசம்பந்தர் இட்ட ஏடு பற்றற்ற சிவஞானிகளின் மனம் பிறவியாற்றை எதிர்த்துச் செல்வது போல, வையையாற்றை எதிர்த்துச் சென்ற தன்மையை நோக்கில், இடபவாகனத்தின் மீதேறிய சிவபெருமானே முழுமுதற்கடவுள் என்பது உண்மையாகும். ஆதலால் அவர்பால் அன்பு செய்தல் கடன் என்பது குறிப்பு. ஞானசம்பந்தர் சமணர்களோடு புனல்வாதம் செய்ததற்கும், அப்போது அவரிட்ட ஏடு வையையாற்றை எதிர்த்துச் சென்ற அற்புத நிகழ்ச்சிக்கும் இப்பாடலே அகச்சான்றாகும். 
3383 நல்லார்கள் சேர்புகலி ஞானசம் பந்தனல்ல
எல்லார்களும்பரவு மீசனை யேத்து பாடல்
பல்லார் களும்மதிக்கப் பாசுரஞ் சொன்ன பத்தும்
வல்லார்கள் வானோ ருலகாளவும் வல்ல ரன்றே 3.054.12
சிவஞானிகள் வாழ்கின்ற புகலி எனப்படும் சீகாழியில் அவதரித்த ஞானசம்பந்தன், மெய்யன்பர்களால் நன்கு வணங்கப்படும் சிவபெருமானைப் போற்றிப் பாடிய பாடல்கள் பலராலும் மதிக்கப்படும் திருப்பாசுரம் ஆகும். இதனை ஓத வல்லவர்கள் வானுலகை ஆளும் வல்லமை பெறுவர். 
திருச்சிற்றம்பலம்

3.054.திருப்பாசுரம் 
பண் - கௌசிகம் 
திருச்சிற்றம்பலம் 

3372 வாழ்க அந்தணர் வானவ ரானினம்வீழ்க தண்புனல் வேந்தனு மோங்குகஆழ்க தீயதெல் லாமர னாமமேசூழ்க வையக முந்துயர் தீர்கவே 3.054.1
உலக நன்மையின் பொருட்டு வேள்விகள், அர்ச்சனைகள், வழிபாடுகள் ஆகியவை செய்யும் அந்தணர்கள் வாழ்க. அவ்வேள்விகளைச் சிவன் நியதிப்படி ஏற்றுச் செலுத்தும் வானவர்கள் வாழ்க. வேள்வி, ‘வழிபாடு இவற்றிற்குரிய பஞ்ச கௌவியங்களையும், திருநீற்றினையும் அளிக்கும் பசுக்கூட்டங்கள் வாழ்க. வேள்வியின் பயனால் குளிர்ந்த மழை பொழிக. சிவாலய பூசை முதலியவற்றை அழியாது காத்துவரும் மன்னனின் செங்கோலாட்சி ஓங்குக. வேள்விகளால் வரும் நலங்களை அடைய வொட்டாது கேடுவிளைவிக்கும் அயனெறிகளிலுள்ள தீயவை ஆழ்க. உயிர்கள் யாவும் சிவன் நாமத்தை ஓதுக. இவ்வுலக மக்களின் துன்பம் நீங்குக. 

3373 அரிய காட்சிய ராய்த்தம தங்கைசேர்எரிய ரேறுகந் தேறுவர் கண்டமும்கரியர் காடுறை வாழ்க்கைய ராயினும்பெரிய ராரறி வாரவர் பெற்றியே3.054.2
பாச ஞானத்தாலும், பசு ஞானத்தாலும் காண்பதற்கு அரியவர். பதிஞானத்தால் உணரும் மெய்யன்புடைய அடியவர்க்கு அவர் திருமேனி தரித்து வந்து, நெருப்பேந்திய கையர், ஏறுகந்தேறுவர், கண்டமும் கரியவர், காடுறை வாழ்க்கையராய் எளிதிற்காட்சி அருளுவர். ஆயினும் உலகத்தையே தம் வடிவமாகக் கொண்ட பெரியவர். அவருடைய தன்மையை யாவரால் அறிந்து கொள்ள முடியும்? 

3374 வெந்த சாம்பல் விரையெனப் பூசியேதந்தை யாரொடு தாயிலர் தம்மையேசிந்தியா வெழு வார்வினை தீர்ப்பரால்எந்தை யாரவ ரெவ்வகையார் கொலோ 3.054.3
இறைவன் வெந்த சாம்பலை வாசனைப் பொடியெனப் பூசியவர். தந்தையும், தாயுமில்லாதவர். தம்மை இடையறாது சிந்திப்பவர்கள் வினையைத் தீர்ப்பவர். அத்தகைய எம் தந்தையாரான அவரின் பண்புகளை எவ்வகைக் கூற்றால் கூறுவது. 

3375 ஆட்பா லவர்க்கருளும் வண்ணமு மாதி மாண்பும்கேட்பான் புகிலள வில்லை கிளக்க வேண்டாகோட்பா லனவும் வினையுங் குறுகாமை யெந்தைதாட்பால் வணங்கித் தலைநின் றிவைகேட்க தக்கார் 3.054.4
இறைவன் பக்குவமுடைய உயிர்கட்கு அருள்புரிகின்ற தன்மையும், பழமை வாய்ந்த புகழும் கேட்கவும், சொல்லவும் தொடங்கினால் அளவில்லாதன. ஆதலால் அவைபற்றிய ஆராய்ச்சி வேண்டா. எம் தந்தையாகிய இறைவனின் திருவடிகளைச் சார்ந்து வணங்கி அவன் புகழைக் கேட்கும் அடியவர்கட்குக் கோள்களாலும், தீயவினைகளாலும் துன்பம் உண்டாகாது. தாட்பால் வணங்கித் தலைநின்றிவை கேட்க - என்றது திருவடி ஞானம் கைகாட்ட அதனுள் அடங்கி நின்றுணர்வதாகிய நிட்டை கூடல் என்னும் நான்காவது ஞானநிலை. 

3376 ஏதுக்க ளாலு மெடுத்த மொழியாலு மிக்குச்சோதிக்க வேண்டா சுடர்விட்டுள னெங்கள் சோதிமாதுக்க நீங்க லுறுவீர் மனம்பற்றி வாழ்மின்சாதுக்கண் மிக்கீரிறையே வந்து சார்மின்களே 3.054.5
இறைவனை அன்பால் வழிபடும் ஞானிகளே! அனுமானப் பிரமாணத்தாலும் உரையளவையாலும் இறைவனை மிகுதியாகச் சோதிக்க வேண்டா. அவன் ஊனக்கண் கொண்டு நோக்கப்புறத்தே சோதி வடிவமாகவும், அன்போடு கூடி அகத்தால் ஞானக்கண் கொண்டு நோக்க உள்ளொளியாகவும் விளங்குபவன். அவனை விரைவில் வந்து சார்ந்து, மனம் ஒன்றி வழிபட்டுப் பிறவித்துன்பத்தைப் போக்கிக் கொள்ளுங்கள். இறைவன் அளவைகளால் அறியப்படும் ஆராய்ச்சிக்கு அப்பாற் பட்டவன். 

3377 ஆடும் மெனவும் மருஞ்கூற்ற முதைத்து வேதம்பாடும் மெனவும் புகழல்லது பாவநீங்கக்கேடும் பிறப்பும் மறுக்கும் மெனக்கேட் டீராகில்நாடுந் திறத்தார்க் கருளல்லது நாட்ட லாமே 3.054.6
இறைவன் திருநடனம் புரிவதும், மார்க்கண்டேயருக்காகக் காலனைக் காலால் உதைத்ததும், வேதங்களை அருளிச் செய்ததும் ஆகிய செயல்கள் புகழ் கருதியா, மன்னுயிர்களின் தீவினைகளை நீக்குவதற்கா, பிறப்பை அறுத்துப் பிறவா நெறியை அளிப்பதற்கா என்று கேட்பீராயின், இவை தன்னைச் சார்ந்த அடியார்கட்கு அருள் செய்வதற்கேயன்றி வேறு காரணத்தாலல்ல என்று உறுதியாகக் கூறலாம். இறைவன் உயிர்களிடத்துக் கொண்ட அளப்பருங் கருணையே அவன் செயல்கட்குக் காரணம். 

3378 கடிசேர்ந்த போது மலரான கைக்கொண்டு நல்லபடிசேர்ந்த பால்கொண்டங் காட்டிடத் தாதை பண்டுமுடிசேர்ந்த காலையற வெட்டிட முக்கண் மூர்த்திஅடிசேர்ந்த வண்ணம் மறிவார் சொலக்கேட்டு மன்றே 3.054.7
சண்டீசர் நறுமணமுடைய மலர்களைத் தூவிப் போற்றி, நல்ல பசுவின் பால் கொண்டு மணலாலான சிவலிங்கத்திற்குத் திருமுழுக்காட்டத் தந்தை கோபம் கொண்டு காலால் இடற, சிவ பூசைக்கு இடையூறு செய்த கால் மீது அருகிலுள்ள கோலை எடுத்து ஓச்ச, அது மழுவாக மாறிக் காலை வெட்டினாலும், முக்கண் மூர்த்தியான் சிவபெருமான் அவ்வடியவருக்குத் திருவடிப்பேற்றினை அளித்தருளியதை அறிவு சால் அன்பர்கள் அன்றே சொல்லக் கேட்டோம் அல்லமோ? 

3379 வேத முதல்வன் முதலாக விளங்கி வையம்ஏதப் படாமை யுலகத்தவ ரேத்தல் செய்யப்பூத முதல்வன் முதலே முதலாப் பொலிந்தசூத னொலிமாலை யென்றே கலிக்கோவை சொல்லே 3.054.8
வேதத்தை அருளிச் செய்தவனாய், வேதப் பொருளாகவும் விளங்கும் சிவபெருமானை முதல்வனாகக் கொண்டு, குற்றம் செய்யாது நன்னெறியில் நிற்கும் பொருட்டு உலகத்தோர் அவனைப் போற்றிசைக்க, பூத நாயகனான அவனைப் போற்றிச் சூதமுனிவர் அருளிச் செய்த பதினெட்டு புராணங்களும் ஒழுக்கத்தைப் போதிப்பனவாகும். 

3380 பாராழி வட்டம் பகையா னலிந்தாட்ட வாடிப்பேராழி யானதிடர் கண்டருள் செய்தல் பேணிநீராழி விட்டேறி நெஞ்சிடங் கொண்ட வர்க்குப்போராழி யீந்த புகழும் புகழுற்ற தன்றே 3.054.9
கடல்போல் பெருகியுள்ள இப்பூவுலக மக்கள் பகைவர்களால் நலிவுறுத்தி அலைக்கப்பட, அவர்கள் துன்பத்தை அறிந்து அருள் செய்ய விரும்பி, தான் கண்துயிலும் கடலைவிட்டுப் பூமிக்கு வந்து, தம்மைத் தன்நெஞ்சிடமாகக் கொண்ட திருமாலுக்கு அவர் வேண்டுகோளுக்கிணங்கக் காத்தல் தொழில் நன்கு நிகழப் பேராற்றல் மிகுந்த சக்கராயுதப் படையைச் சிவபெருமான் ஈந்தது மெய்யான புகழ் அன்றோ? 

3381 மாலா யவனும் மறைவல்ல நான்மு கனும்பாலாய தேவர் பகரில் லமு தூட்டல் பேணிக்காலாய முந்நீர் கடைந்தார்க் கரிதா யெழுந்தஆலால முண்டங்கம ரர்க்கருள் செய்த தாமே 3.054.10
திருமாலும், நான்மறைகளையும் நன்கு கற்ற பிரமனும், பலராகிய தேவர்களும் சொல்வதற்கரிய அமுதுண்ண விரும்பி, பாற்கடலைக் கடைய அரிதாய் எழுந்த ஆலகால விடத்தை உண்டு, தேவர்களைக் காத்து அருள்செய்தவர் சிவபெருமான். 

3382 அற்றன்றி யந்தண் மதுரைத் தொகை யாக்கினானும்தெற்றென்று தெய்வந் தௌயார் கரைக்கோலை தெண்ணீர்ப்பற்றின்றிப் பாங்கெதிர்வி னூரவும் பண்பு நோக்கில்பெற்றொன் றுயர்த்த பெருமான் பெருமானு மன்றே 3.054.11
சிவபெருமான் முன்னர்க்கூறிய புகழுரைகட்கு மட்டுமன்றி, மதுரையில் தமிழ்ச்சங்கம் அமைத்து தமிழ் வளர்த்தருளியவர். சிவபெருமானே முழுமுதற்பொருள் எனத் தௌவு பெறாதவர்கள் தௌவுபெறும் பொருட்டு வாதத்தில் உண்மைகாண ஞானசம்பந்தர் இட்ட ஏடு பற்றற்ற சிவஞானிகளின் மனம் பிறவியாற்றை எதிர்த்துச் செல்வது போல, வையையாற்றை எதிர்த்துச் சென்ற தன்மையை நோக்கில், இடபவாகனத்தின் மீதேறிய சிவபெருமானே முழுமுதற்கடவுள் என்பது உண்மையாகும். ஆதலால் அவர்பால் அன்பு செய்தல் கடன் என்பது குறிப்பு. ஞானசம்பந்தர் சமணர்களோடு புனல்வாதம் செய்ததற்கும், அப்போது அவரிட்ட ஏடு வையையாற்றை எதிர்த்துச் சென்ற அற்புத நிகழ்ச்சிக்கும் இப்பாடலே அகச்சான்றாகும். 

3383 நல்லார்கள் சேர்புகலி ஞானசம் பந்தனல்லஎல்லார்களும்பரவு மீசனை யேத்து பாடல்பல்லார் களும்மதிக்கப் பாசுரஞ் சொன்ன பத்தும்வல்லார்கள் வானோ ருலகாளவும் வல்ல ரன்றே 3.054.12
சிவஞானிகள் வாழ்கின்ற புகலி எனப்படும் சீகாழியில் அவதரித்த ஞானசம்பந்தன், மெய்யன்பர்களால் நன்கு வணங்கப்படும் சிவபெருமானைப் போற்றிப் பாடிய பாடல்கள் பலராலும் மதிக்கப்படும் திருப்பாசுரம் ஆகும். இதனை ஓத வல்லவர்கள் வானுலகை ஆளும் வல்லமை பெறுவர். 

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 31 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.