LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

மூன்றாம் திருமுறை-55

3.055.திருவான்மியூர் 
பண் - கௌசிகம் 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - மருந்தீசுவரர். 
தேவியார் - சுந்தரமாது (அ) சொக்கநாயகி. 
3384 விரையார் கொன்றையினாய் விடமுண்ட
மிடற்றினனே
உரையார் பல்புகழா யுமைநங்கையொர்
பங்குடையாய்
திரையார் தெண்கடல்சூழ் திருவான்மி
யூருறையும்
அரையா வுன்னையல்லா லடையாதென
தாதரவே
3.055.1
நறுமணம் கமழும் கொன்றைமலரை அணிந்தவனே. விடமுண்ட கறுத்த கண்டத்தினனே. அடியவர்களால் பலவாகப் புகழ்ந்துரைக்கப் படுபவனே. உமாதேவியைத் தன்திரு மேனியில் ஒரு பாகமாகக் கொண்டவனே. அலைவீசும் அழகிய கடல் சூழ்ந்த திருவான்மியூரில் வீற்றிருந்தருளும் அரசனே! உன்னைத்தவிர என்மனம் ஆதரவாக வேறெதையும் அடையாது. 
3385 இடியா ரேறுடையா யிமையோர்தம்
மணிமுடியாய்
கொடியார் மாமதியோ டரவம்மலர்க்
கொன்றையினாய்
செடியார் மாதவிசூழ் திருவான்மி
யூருறையும்
அடிகே ளுன்னையல்லா லடையாதென
தாதரவே
3.055.2
இடிபோல் முழங்கும் இடபத்தை வாகனமாக உடையவனே! தேவர்கள் தங்கள் மணிமுடி உன் திருப்பாதத்தில் படும்படி வணங்க அவர்கட்கு வாழ்வளிக்கும் முதற்பொருளே! இடபக்கொடியும், சந்திரனும், பாம்பும், கொன்றைமலரும் உடைய இறைவனே! செடிகளோடு கூடிய மாதவி மலரின் மணம் சூழ்ந்த திருவான்மியூரில் வீற்றிருந்தருளும் தலைவனான சிவபெருமானே! உன்னைத் தவிர என் மனம், ஆதரவாக வேறெதையும் அடையாது. 
3386 கையார் வெண்மழுவா கனல்போற்றிரு
மேனியனே
மையா ரொண்கணல்லா ளுமையாள்வளர்
மார்பினனே
செய்யார் செங்கயல்பாய் திருவான்மி
யூருறையும்
ஐயா வுன்னையல்லா லடையாதென
தாதரவே
3.055.3
கையின்கண் பொருந்திய வெண்மையான மழுவாயுதத்தை உடையவனே! கனல் போன்ற சிவந்த திருமேனியனே! மை பூசப் பெற்ற, ஒளி பொருந்திய கண்களை உடைய நல்லவளாகிய உமையம்மை கண்வளரும் மார்பினனே! வயல்களில் செங்கயல்கள் பாயும் வளம் பொருந்திய திருவான்மியூரில் உறையும் ஐயனே! உன்னையல்லால் எனது அன்பு பிறிதொருவரைச் சென்றடையாது. 
3387 பொன்போ லுஞ்சடைமேற் புனல்தாங்கிய
புண்ணியனே
மின்போ லும்புரிநூல் விடையேறிய
வேதியனே
தென்பால் வையமெலாந் திகழுந்திரு
வான்மிதன்னில் 
அன்பா வுன்னையல்லா லடையாதென
தாதரவே
3.055.4
பொன்போல் ஒளிரும் சடைமேல் கங்கையைத் தாங்கிய புண்ணியமூர்த்தியே! மின்போல் ஒளிரும் முப்புரிநூல் அணிந்து, இடப வாகனத்திலேறி, வேதங்களை அருளிச் செய்தவனாய், வேதப் பொருளாகவும் விளங்குபவனே! உலகெலாம் இன்புறத் திருவான்மியூர் என்னும் தலத்தில் வீற்றிருந்தருளும் அன்புருவான உன்னையல்லால் என் மனம் வேறெதையும் ஆதரவாக அடையாது. 
3388 கண்ணா ருந்நுதலாய் கதிர்சூழொளி
மேனியின்மேல்
எண்ணார் வெண்பொடிநீ றணிவாயெழில்
வார்பொழில்சூழ்
திண்ணார் வண்புரிசைத் திருவான்மி
யூருறையும்
அண்ணா வுன்னையல்லா லடையாதென
தாதரவே
3.055.5
நெற்றிக்கண்ணை உடையவனே! கதிர்போல் ஒளிரும் திருமேனி மீது திருவெண்ணீற்றினை அணிந்துள்ளவனே! அழகிய சோலைகள் சூழ்ந்த உறுதியான மதில்களை உடைய திருவான்மியூரில் வீற்றிருந்தருளும் தந்தையே! உன்னையல்லால் என்மனம் வேறெதையும் ஆதரவாக அடையாது. 
3389 நீதி நின்னையல்லா னெறியாதும்
நினைந்தறியேன்
ஓதீ நான்மறைகள் மறையோன்றலை
யொன்றினையும்
சேதீ சேதமில்லாத் திருவான்மி
யூருறையும்
ஆதீ யுன்னையல்லா லடையாதென
தாதரவே
3.055.6
நீதிவடிவாயுள்ளவனே! உன்னையே நினைப்பதல்லாமல் உன்னை வழிபடுதற்குரிய நெறி வேறொன்றை அறிந்திலேன். நால்வேதங்களை அருளிச் செய்தவனே! பிரமன் தலை ஒன்றை நகத்தால் கிள்ளியவனே! எத்தகைய குறைவுமின்றி வளம் பொருந்திய திருவான்மியூரில் வீற்றிருந்தருளும் ஆதிமூர்த்தியே! உன்னையல்லால் என்மனம் வேறெதையும் ஆதரவாக அடையாது. 
3390 வானார் மாமதிசேர் சடையாய்வரை
போலவரும்
கானா ரானையின்றோ லுரித்தாய்கறை 
மாமிடற்றாய்
தேனார் சோலைகள்சூழ் திருவான்மி
யூருறையும்
ஆனா யுன்னையல்லா லடையாதென
தாதரவே
3.055.7
வானில் விளங்கும் சந்திரனைச் சடையில் தரித்தவனே! மலைபோல வரும் பாட்டிலுள்ள யானையின் தோலை உரித்தவனே! நஞ்சுண்டு கறுத்த கண்டத்தையுடையவனே! தேன் துளிக்கும் மலர்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த திருவான்மியூரில் இடபவாகனத்தில வீற்றிருந்தருளும் இறைவனே! உன்னையல்லால் என்மனம் வேறெதையும் ஆதரவாக அடையாது. 
3391 பொறிவாய் நாகணையா னொடுபூமிசை
மேயவனும்
நெறியார் நீள்கழன்மேன் முடிகாண்பரி
தாயவனே
செறிவார் மாமதில்சூழ் திருவான்மி
யூருறையும்
அறிவே யுன்னையல்லா லடையாதென
தாதரவே
3.055.9
நெருப்புப் பொறிபோல் விடம் கக்கும் வாயுடைய பாம்பைப் படுக்கையாகக் கொண்ட திருமாலும், தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனும், நன்னெறி காட்டும் உனது நீண்ட திருவடியையும், மேலோங்கும் திருமுடியையும் காண்பதற்கு அரியவனாய் விளங்கியவனே! நெருக்கமாக நீண்ட பெரிய மதில்கள் சூழ்ந்த திருவான்மியூரில் வீற்றிருந்தருளும் முற்றுணர்வும், இயற்கை உணர்வுமுடையவனே! உன்னையல்லால் என் மனம் வேறெதையும் ஆதரவாக அடையாது. 
3392 குண்டா டுஞ்சமணர் கொடுஞ்சாக்கிய
ரென்றிவர்கள்
கண்டார் காரணங்கள் கருதாதவர்
பேசநின்றாய்
திண்டேர் வீதியதார் திருவான்மி
யூருறையும்
அண்டா வுன்னையல்லா லடையாதென
தாதரவே
3.055.10
விதண்டாவாதம் செய்கின்ற சமணர்களும், முரட்டுத் தன்மையுடைய புத்தர்களும் காரணம் அறியாதவராய் உன்னைப்பேச வீற்றிருந்தாய். வலிமை வாய்ந்த தேரோடும் வீதிகளையுடைய திருவான்மியூரில் வீற்றிருந்தருளும் தேவனே! உன்னையல்லால் என் மனமானது ஆதரவாக வேறெதையும் நாடாது. 
3393 கன்றா ருங்கமுகின் வயல்சூழ்தரு
காழிதனில்
நன்றான புகழான் மிகுஞானசம்
பந்தனுரை
சென்றார் தம்மிடர்தீர் திருவான்மி
யூரதன்மேல்
குன்றா தேத்தவல்லார் கொடுவல்வினை
போயறுமே
3.055.11
பாக்குமரக் கன்றுகள் வயல்களைச் சூழ்ந்து விளங்குகின்ற சீகாழியில் அவதரித்து, நல்ல புகழ் மிகுந்த ஞானசம்பந்தன், இடர்தீர்க்கும் திருவான்மியூரின் மேல் போற்றி அருளிய இத்திருப்பதிகத்தை ஓதவல்லவர்கட்குக் கொடிய தீவினையானது நீங்கும். 
திருச்சிற்றம்பலம்

3.055.திருவான்மியூர் 
பண் - கௌசிகம் 
திருச்சிற்றம்பலம் 

இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - மருந்தீசுவரர். தேவியார் - சுந்தரமாது (அ) சொக்கநாயகி. 

3384 விரையார் கொன்றையினாய் விடமுண்டமிடற்றினனேஉரையார் பல்புகழா யுமைநங்கையொர்பங்குடையாய்திரையார் தெண்கடல்சூழ் திருவான்மியூருறையும்அரையா வுன்னையல்லா லடையாதெனதாதரவே3.055.1
நறுமணம் கமழும் கொன்றைமலரை அணிந்தவனே. விடமுண்ட கறுத்த கண்டத்தினனே. அடியவர்களால் பலவாகப் புகழ்ந்துரைக்கப் படுபவனே. உமாதேவியைத் தன்திரு மேனியில் ஒரு பாகமாகக் கொண்டவனே. அலைவீசும் அழகிய கடல் சூழ்ந்த திருவான்மியூரில் வீற்றிருந்தருளும் அரசனே! உன்னைத்தவிர என்மனம் ஆதரவாக வேறெதையும் அடையாது. 

3385 இடியா ரேறுடையா யிமையோர்தம்மணிமுடியாய்கொடியார் மாமதியோ டரவம்மலர்க்கொன்றையினாய்செடியார் மாதவிசூழ் திருவான்மியூருறையும்அடிகே ளுன்னையல்லா லடையாதெனதாதரவே3.055.2
இடிபோல் முழங்கும் இடபத்தை வாகனமாக உடையவனே! தேவர்கள் தங்கள் மணிமுடி உன் திருப்பாதத்தில் படும்படி வணங்க அவர்கட்கு வாழ்வளிக்கும் முதற்பொருளே! இடபக்கொடியும், சந்திரனும், பாம்பும், கொன்றைமலரும் உடைய இறைவனே! செடிகளோடு கூடிய மாதவி மலரின் மணம் சூழ்ந்த திருவான்மியூரில் வீற்றிருந்தருளும் தலைவனான சிவபெருமானே! உன்னைத் தவிர என் மனம், ஆதரவாக வேறெதையும் அடையாது. 

3386 கையார் வெண்மழுவா கனல்போற்றிருமேனியனேமையா ரொண்கணல்லா ளுமையாள்வளர்மார்பினனேசெய்யார் செங்கயல்பாய் திருவான்மியூருறையும்ஐயா வுன்னையல்லா லடையாதெனதாதரவே3.055.3
கையின்கண் பொருந்திய வெண்மையான மழுவாயுதத்தை உடையவனே! கனல் போன்ற சிவந்த திருமேனியனே! மை பூசப் பெற்ற, ஒளி பொருந்திய கண்களை உடைய நல்லவளாகிய உமையம்மை கண்வளரும் மார்பினனே! வயல்களில் செங்கயல்கள் பாயும் வளம் பொருந்திய திருவான்மியூரில் உறையும் ஐயனே! உன்னையல்லால் எனது அன்பு பிறிதொருவரைச் சென்றடையாது. 

3387 பொன்போ லுஞ்சடைமேற் புனல்தாங்கியபுண்ணியனேமின்போ லும்புரிநூல் விடையேறியவேதியனேதென்பால் வையமெலாந் திகழுந்திருவான்மிதன்னில் அன்பா வுன்னையல்லா லடையாதெனதாதரவே3.055.4
பொன்போல் ஒளிரும் சடைமேல் கங்கையைத் தாங்கிய புண்ணியமூர்த்தியே! மின்போல் ஒளிரும் முப்புரிநூல் அணிந்து, இடப வாகனத்திலேறி, வேதங்களை அருளிச் செய்தவனாய், வேதப் பொருளாகவும் விளங்குபவனே! உலகெலாம் இன்புறத் திருவான்மியூர் என்னும் தலத்தில் வீற்றிருந்தருளும் அன்புருவான உன்னையல்லால் என் மனம் வேறெதையும் ஆதரவாக அடையாது. 

3388 கண்ணா ருந்நுதலாய் கதிர்சூழொளிமேனியின்மேல்எண்ணார் வெண்பொடிநீ றணிவாயெழில்வார்பொழில்சூழ்திண்ணார் வண்புரிசைத் திருவான்மியூருறையும்அண்ணா வுன்னையல்லா லடையாதெனதாதரவே3.055.5
நெற்றிக்கண்ணை உடையவனே! கதிர்போல் ஒளிரும் திருமேனி மீது திருவெண்ணீற்றினை அணிந்துள்ளவனே! அழகிய சோலைகள் சூழ்ந்த உறுதியான மதில்களை உடைய திருவான்மியூரில் வீற்றிருந்தருளும் தந்தையே! உன்னையல்லால் என்மனம் வேறெதையும் ஆதரவாக அடையாது. 

3389 நீதி நின்னையல்லா னெறியாதும்நினைந்தறியேன்ஓதீ நான்மறைகள் மறையோன்றலையொன்றினையும்சேதீ சேதமில்லாத் திருவான்மியூருறையும்ஆதீ யுன்னையல்லா லடையாதெனதாதரவே3.055.6
நீதிவடிவாயுள்ளவனே! உன்னையே நினைப்பதல்லாமல் உன்னை வழிபடுதற்குரிய நெறி வேறொன்றை அறிந்திலேன். நால்வேதங்களை அருளிச் செய்தவனே! பிரமன் தலை ஒன்றை நகத்தால் கிள்ளியவனே! எத்தகைய குறைவுமின்றி வளம் பொருந்திய திருவான்மியூரில் வீற்றிருந்தருளும் ஆதிமூர்த்தியே! உன்னையல்லால் என்மனம் வேறெதையும் ஆதரவாக அடையாது. 

3390 வானார் மாமதிசேர் சடையாய்வரைபோலவரும்கானா ரானையின்றோ லுரித்தாய்கறை மாமிடற்றாய்தேனார் சோலைகள்சூழ் திருவான்மியூருறையும்ஆனா யுன்னையல்லா லடையாதெனதாதரவே3.055.7
வானில் விளங்கும் சந்திரனைச் சடையில் தரித்தவனே! மலைபோல வரும் பாட்டிலுள்ள யானையின் தோலை உரித்தவனே! நஞ்சுண்டு கறுத்த கண்டத்தையுடையவனே! தேன் துளிக்கும் மலர்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த திருவான்மியூரில் இடபவாகனத்தில வீற்றிருந்தருளும் இறைவனே! உன்னையல்லால் என்மனம் வேறெதையும் ஆதரவாக அடையாது. 

3391 பொறிவாய் நாகணையா னொடுபூமிசைமேயவனும்நெறியார் நீள்கழன்மேன் முடிகாண்பரிதாயவனேசெறிவார் மாமதில்சூழ் திருவான்மியூருறையும்அறிவே யுன்னையல்லா லடையாதெனதாதரவே3.055.9
நெருப்புப் பொறிபோல் விடம் கக்கும் வாயுடைய பாம்பைப் படுக்கையாகக் கொண்ட திருமாலும், தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனும், நன்னெறி காட்டும் உனது நீண்ட திருவடியையும், மேலோங்கும் திருமுடியையும் காண்பதற்கு அரியவனாய் விளங்கியவனே! நெருக்கமாக நீண்ட பெரிய மதில்கள் சூழ்ந்த திருவான்மியூரில் வீற்றிருந்தருளும் முற்றுணர்வும், இயற்கை உணர்வுமுடையவனே! உன்னையல்லால் என் மனம் வேறெதையும் ஆதரவாக அடையாது. 

3392 குண்டா டுஞ்சமணர் கொடுஞ்சாக்கியரென்றிவர்கள்கண்டார் காரணங்கள் கருதாதவர்பேசநின்றாய்திண்டேர் வீதியதார் திருவான்மியூருறையும்அண்டா வுன்னையல்லா லடையாதெனதாதரவே3.055.10
விதண்டாவாதம் செய்கின்ற சமணர்களும், முரட்டுத் தன்மையுடைய புத்தர்களும் காரணம் அறியாதவராய் உன்னைப்பேச வீற்றிருந்தாய். வலிமை வாய்ந்த தேரோடும் வீதிகளையுடைய திருவான்மியூரில் வீற்றிருந்தருளும் தேவனே! உன்னையல்லால் என் மனமானது ஆதரவாக வேறெதையும் நாடாது. 

3393 கன்றா ருங்கமுகின் வயல்சூழ்தருகாழிதனில்நன்றான புகழான் மிகுஞானசம்பந்தனுரைசென்றார் தம்மிடர்தீர் திருவான்மியூரதன்மேல்குன்றா தேத்தவல்லார் கொடுவல்வினைபோயறுமே3.055.11
பாக்குமரக் கன்றுகள் வயல்களைச் சூழ்ந்து விளங்குகின்ற சீகாழியில் அவதரித்து, நல்ல புகழ் மிகுந்த ஞானசம்பந்தன், இடர்தீர்க்கும் திருவான்மியூரின் மேல் போற்றி அருளிய இத்திருப்பதிகத்தை ஓதவல்லவர்கட்குக் கொடிய தீவினையானது நீங்கும். 

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 31 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.