LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

மூன்றாம் திருமுறை-66

3.066.திருவேட்டக்குடி 
பண் - பஞ்சமம் 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - திருமேனியழகீசுவரர். 
தேவியார் - சாந்தநாயகியம்மை. 
3503 வண்டிரைக்கும் மலர்க்கொன்றை
விரிசடைமேல் வரியரவம்
கண்டிரைக்கும் பிறைச்சென்னிக்
காபாலி கனைகழல்கள்
தொண்டிரைத்துத் தொழுதிறைஞ்சத்
துளங்கொளிநீர்ச் சுடர்ப்பவளம்
தெண்டிரைக்கள் கொணர்ந்தெறியுந்
திருவேட்டக் குடியாரே
3.066.1
வண்டுகள் ஆரவாரிக்கும் கொன்றை மாலையை விரிந்த சடையின்மேல் அணிந்து, வரிகளையுடைய பாம்பைக் கண்டு பயத்தால் ஆரவாரிக்கும் சந்திரனைச் சடையில் சூடியுள்ள சிவபெருமானின் வீரக்கழல்கள் அணிந்த திருவடிகளைத் தொண்டர்கள் ஆரவாரித்துப் போற்றி வணங்க, விளங்குகின்ற ஒளியையுடைய கடலிலுள்ள சுடர்போல் செந்நிறமான பவளத்தை அலைகள் கொணர்ந்து எறியும் திருவேட்டக்குடி என்னும் திருத்தலத்தில் அவர் வீற்றிருந்தருளுகின்றார். 
3504 பாய்திமிலர் வலையோடு
மீன்வாரிப் பயின்றெங்கும்
காசினியிற் கொணர்ந்தட்டுங்
கைதல்சூழ் கழிக்கானல்
போயிரவிற் பேயோடும்
புறங்காட்டிற் புரிந்தழகார்
தீயெரிகை மகிழ்ந்தாருந்
திருவேட்டக் குடியாரே
3.066.2
வலைஞர்கள் பாய்ந்து செல்லும் படகுகளில், வலையுடன் கடலில் எப்பக்கமும் திரிந்து வலைவீசி மீன்களைப் பிடித்து வாரி தரைக்குக் கொண்டு வந்து குவிக்கும் தாழை சூழ்ந்த கழியுடைய சோலை விளங்க, நள்ளிரவில் பேய்க் கூட்டங்களோடு சுடுகாட்டில் கையில் நெருப்பேந்தி நடனம் ஆடும் சிவபெருமான் திருவேட்டக்குடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருள்கின்றான். 
3505 தோத்திரமா மணலிலிங்கந் 
தொடங்கியவா னிரையிற்பால் 
பாத்திரமா வாட்டுதலும் 
பரஞ்சோதி பரிந்தருளி 
ஆத்தமென மறைநால்வர்க்
கறம்புரிநூ லன்றுரைத்த
தீர்த்தமல்கு சடையாருந்
திருவேட்டக் குடியாரே
3.066.3
வழிபாடு செய்வதற்காக மணலில் இலிங்கத்தை அமைத்து, தாம் மேய்க்கும் பசுக்கூட்டங்களின் பாலைப் பாத்திரத்தில் பொருந்தக் கொண்டு, அபிடேகம் செய்து வழிபட்ட சண்டேசுரர்க்கு மேலான சோதிவடிவை அருள்புரிந்தவன் சிவபெருமான், தனக்கு அன்பர் என்று வேதங்களில் வல்ல சனகாதி முனிவர் நால்வர்க்கும் அன்று அறம் உரைத்தவன் சிவபெருமான். அப்பெருமான் புனித தீர்த்தமாகிய கங்கையைச் சடையிலே தாங்கித் திருவேட்டக்குடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றான். 
3506 கலவஞ்சேர் கழிக்கானல்
கதிர்முத்தங் கலந்தெங்கும்
அலவஞ்சே ரணைவாரிக்
கொணர்ந்தெறியு மகன்றுறைவாய்
நிலவஞ்சேர் நுண்ணிடைய
நேரிழையா ளவளோடும்
திலகஞ்சேர் நெற்றியினார்
திருவேட்டக் குடியாரே
3.066.4
மயில்கள் தோகை விரித்து ஆடும் கடற்கரைச் சோலைகளை உடைய, கடல் நண்டுகள் சேர்ந்த குவியல்களை வாரிக்கொணர்ந்து சேர்க்கின்ற காவிரியின் அகன்ற கரையில், ஒளி பொருந்திய குறுகிய இடையை உடைய அழகான அணிகலன்களை அணிந்த உமாதேவியோடு, திலகம் போன்று சுடர்தரும் நெற்றியுடைய சிவபெருமான் திருவேட்டக்குடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றான். 
3507 பங்கமார் கடலலறப்
பருவரையோ டரவுழலச்
செங்கண்மால் கடையவெழு
நஞ்சருந்துஞ் சிவமூர்த்தி
அங்கநான் மறைநால்வர்க்
கறம்பொருளின் பயனளித்த
திங்கள்சேர் சடையாருந்
திருவேட்டக் குடியாரே
3.066.5
சேறாகும் வண்ணம் கடல்நீர் அலைப்புற, மேருமலையை மத்தாகவும், வாசுகி என்ற பாம்பைக் கயிறாகவும் கொண்டு, சிவந்த கண்களையுடைய திருமால் முன்னின்று கடைய எழுந்த நஞ்சையருந்தியவர் சிவமூர்த்தி. நால் வேதங்களையும், அவற்றின் ஆறங்கங்களையும் உணர்ந்த சனகாதிமுனிவர்கள் நால்வர்க்கும் அறநூற் பொருளின் பயனாகிய அனுபவத்தை உணர்த்தியருளிய பிறை சூடிய சடையையுடைய சிவபெருமான் திருவேட்டக்குடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார். 
3508 நாவாய பிறைச்சென்னி
நலந்திகழு மிலங்கிப்பி
கோவாத நித்திலங்கள்
கொணர்ந்தெறியுங் குளிர்கானல்
ஏவாரும் வெஞ்சிலையா
லெயின்மூன்று மெரிசெய்த
தேவாதி தேவனார்
திருவேட்டக் குடியாரே
3.066.6
சிவபெருமான் தோணிபோன்ற வடிவுடைய பிறைச்சந்திரனைச் சடையிலே தரித்தவர். அழகாய் விளங்கும் சங்குப்பூச்சிகளையும், கோத்தற்குரிய துளையில்லாத நல்முத்துக்களையும் கடலலைகள் கொணர்ந்து சேர்கின்ற குளிர்ந்த கடற்கரைச் சோலைகளையுடைய திருவேட்டக்குடி என்னும் திருத்தலத்தில் அக்கினியாகிய கணையினால் மேருமலையை வில்லாகக் கொண்டு முப்புரங்களை எரித்த தேவாதி தேவனான அச்சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றார். 
3509 பானிலவும் பங்கையத்துப்
பைங்கானல் வெண்குருகு
கானிலவு மலர்ப்பொய்கைக்
கைதல்சூழ் கழிக்கானல்
மானின்விழி மலைமகளோ
டொருபாகம் பிரிவரியார்
தேனிலவு மலர்ச்சோலைத்
திருவேட்டக் குடியாரே
3.066.7
பால்போல் விளங்குகின்ற வெண்தாமரையானது ஒளிர, பசுமை வாய்ந்த கடற்கரைச் சோலைகளில் வெண்ணிறப் பறவைகள் விளங்க, மணம் வீசும் மலர்களையுடைய குளங்களும், தாழைகள் சூழ்ந்த கடற்கரைச் சோலைகளும், தேன்துளிர்க்கும் மலர்ச் சோலைகளும் விளங்கும் திருவேட்டக்குடி என்னும் திருத்தலத்தில், மான் போன்ற மருண்ட பார்வையுடைய மலைமகளான உமாதேவியைத் தம் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு பிரிதலில்லாமல் வீற்றிருந்தருளுகின்றார் சிவபெருமான். 
3510 துறையுலவு கடலோதஞ்
சுரிசங்க மிடறிப்போய் 
நறையுலவும் பொழிற்புன்னை
நன்னீழற் கீழமரும்
இறைபயிலு மிராவணன்றன்
றலைபத்து மிருபதுதோள்
திறலழிய வடர்த்தாருந்
திருவேட்டக் குடியாரே
3.066.8
கரையை வந்தடைகின்ற கடலலைகள் சுரி சங்குகளை வீச, தேன் துளிக்கும் நறுமணமுடைய புன்னை மரங்கள் நிறைந்த சோலைகள் நிழலைத்தரத் திருவேட்டக்குடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் சிவபெருமான் இலங்கை வேந்தனான இராவணனின் தலைகள் பத்தும் இருபது தோள்களும் வலிமை இழக்குமாறு அடர்த்தவர். 
3511 அருமறைநான் முகத்தானு
மகலிடநீ ரேற்றானும்
இருவருமா யளப்பரிய
வெரியுருவாய் நீண்டபிரான்
வருபுனலின் மணியுந்தி
மறிதிரையார் சுடர்ப்பவளத்
திருவுருவில் வெண்ணீற்றார்
திருவேட்டக் குடியாரே
3.066.9
அரிய நால்வேதங்களையும் கற்ற பிரமனும், மாவலிச் சக்கரவர்த்தியிடம் மூன்றடி நிலம் வேண்டி நீர் ஏற்ற திருமாலும் ஆகிய இருவரும் அளந்தறிய முடியாவண்ணம் நெருப்புப் பிழம்பாய் ஓங்கி நின்றவர் சிவபெருமான். பெருக்கெடுத்துவரும் காவிரியாற்றின், வீசுகின்ற அலைகள் மணிகளை உந்தித் தள்ளிச் சேர்க்கும் வளமிகுந்த திருவேட்டக்குடி என்னும் திருத்தலத்தில், சுடர்விடும் பவளம் போன்ற தம் திருமேனியில் திருவெண்ணீறு பூசப் பெற்றவராய், சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றார். 
3512 இகழ்ந்துரைக்குஞ் சமணர்களு
மிடும்போர்வைச் சாக்கியரும்
புகழ்ந்துரையாப் பாவிகள்சொற்
கொள்ளேன்மின் பொருளென்ன
நிகழ்ந்திலங்கு வெண்மணலி
ணிறைத்துண்டப் பிறைக்கற்றை
திகழ்ந்திலங்கு செஞ்சடையார்
திருவேட்டக் குடியாரே
3.066.10
வேதவள்ளியை நிந்தனை செய்யும் சமணர்களும், பௌத்தர்களும் இறைவனைப் புகழ்ந்துரையாத பாவிகள். ஆதலால் அவர்களுடைய சொற்களைப் பொருளெனக் கொள்ள வேண்டா. வெண்மணலைப் போன்ற ஒளிக்கற்றையுடைய பிறைச் சந்திரனைச் சிவந்த சடையில் கொண்டு திகழும் சிவபெருமான் திருவேட்டக்குடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார். அப்பெருமானைப் போற்றி வழிபடுங்கள். 
3513 தெண்டிரைசேர் வயலுடுத்த
திருவேட்டக் குடியாரைத்
தண்டலைசூழ் கலிக்காழித்
தமிழ்ஞான சம்பந்தன்
ஒண்டமிழ்நூ லிவைபத்து
முணர்ந்தேத்த வல்லார்போய்
உண்டுடுப்பில் வானவரோ
டுயர்வானத் திருப்பாரே
3.066.11
தௌந்த நீர் அலைகளையுடைய வயல்கள் நிறைந்த திருவேட்டக்குடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் சிவபெருமானைப் போற்றி, சோலைகள் சூழ்ந்த, திருவிழாக்களின் ஓசை மிகுந்த சீகாழியில் அவதரித்த தமிழ் ஞானசம்பந்தன் ஒண்தமிழில் அருளிய இத்திருப்பதிகத்தை நன்கு பொருளுணர்ந்து ஏத்தியும், ஓதியும் வழிபடுபவர்கள் மானிடர்களைப் போல் உண்டலும், உடுத்தலும் இல்லாது வேறுபட்ட தன்மையுடைய தேவர்களை ஒத்து உயர் வானுலகில் இருப்பர். 
திருச்சிற்றம்பலம்

3.066.திருவேட்டக்குடி 
பண் - பஞ்சமம் 
திருச்சிற்றம்பலம் 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - திருமேனியழகீசுவரர். தேவியார் - சாந்தநாயகியம்மை. 

3503 வண்டிரைக்கும் மலர்க்கொன்றைவிரிசடைமேல் வரியரவம்கண்டிரைக்கும் பிறைச்சென்னிக்காபாலி கனைகழல்கள்தொண்டிரைத்துத் தொழுதிறைஞ்சத்துளங்கொளிநீர்ச் சுடர்ப்பவளம்தெண்டிரைக்கள் கொணர்ந்தெறியுந்திருவேட்டக் குடியாரே3.066.1
வண்டுகள் ஆரவாரிக்கும் கொன்றை மாலையை விரிந்த சடையின்மேல் அணிந்து, வரிகளையுடைய பாம்பைக் கண்டு பயத்தால் ஆரவாரிக்கும் சந்திரனைச் சடையில் சூடியுள்ள சிவபெருமானின் வீரக்கழல்கள் அணிந்த திருவடிகளைத் தொண்டர்கள் ஆரவாரித்துப் போற்றி வணங்க, விளங்குகின்ற ஒளியையுடைய கடலிலுள்ள சுடர்போல் செந்நிறமான பவளத்தை அலைகள் கொணர்ந்து எறியும் திருவேட்டக்குடி என்னும் திருத்தலத்தில் அவர் வீற்றிருந்தருளுகின்றார். 

3504 பாய்திமிலர் வலையோடுமீன்வாரிப் பயின்றெங்கும்காசினியிற் கொணர்ந்தட்டுங்கைதல்சூழ் கழிக்கானல்போயிரவிற் பேயோடும்புறங்காட்டிற் புரிந்தழகார்தீயெரிகை மகிழ்ந்தாருந்திருவேட்டக் குடியாரே3.066.2
வலைஞர்கள் பாய்ந்து செல்லும் படகுகளில், வலையுடன் கடலில் எப்பக்கமும் திரிந்து வலைவீசி மீன்களைப் பிடித்து வாரி தரைக்குக் கொண்டு வந்து குவிக்கும் தாழை சூழ்ந்த கழியுடைய சோலை விளங்க, நள்ளிரவில் பேய்க் கூட்டங்களோடு சுடுகாட்டில் கையில் நெருப்பேந்தி நடனம் ஆடும் சிவபெருமான் திருவேட்டக்குடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருள்கின்றான். 

3505 தோத்திரமா மணலிலிங்கந் தொடங்கியவா னிரையிற்பால் பாத்திரமா வாட்டுதலும் பரஞ்சோதி பரிந்தருளி ஆத்தமென மறைநால்வர்க்கறம்புரிநூ லன்றுரைத்ததீர்த்தமல்கு சடையாருந்திருவேட்டக் குடியாரே3.066.3
வழிபாடு செய்வதற்காக மணலில் இலிங்கத்தை அமைத்து, தாம் மேய்க்கும் பசுக்கூட்டங்களின் பாலைப் பாத்திரத்தில் பொருந்தக் கொண்டு, அபிடேகம் செய்து வழிபட்ட சண்டேசுரர்க்கு மேலான சோதிவடிவை அருள்புரிந்தவன் சிவபெருமான், தனக்கு அன்பர் என்று வேதங்களில் வல்ல சனகாதி முனிவர் நால்வர்க்கும் அன்று அறம் உரைத்தவன் சிவபெருமான். அப்பெருமான் புனித தீர்த்தமாகிய கங்கையைச் சடையிலே தாங்கித் திருவேட்டக்குடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றான். 

3506 கலவஞ்சேர் கழிக்கானல்கதிர்முத்தங் கலந்தெங்கும்அலவஞ்சே ரணைவாரிக்கொணர்ந்தெறியு மகன்றுறைவாய்நிலவஞ்சேர் நுண்ணிடையநேரிழையா ளவளோடும்திலகஞ்சேர் நெற்றியினார்திருவேட்டக் குடியாரே3.066.4
மயில்கள் தோகை விரித்து ஆடும் கடற்கரைச் சோலைகளை உடைய, கடல் நண்டுகள் சேர்ந்த குவியல்களை வாரிக்கொணர்ந்து சேர்க்கின்ற காவிரியின் அகன்ற கரையில், ஒளி பொருந்திய குறுகிய இடையை உடைய அழகான அணிகலன்களை அணிந்த உமாதேவியோடு, திலகம் போன்று சுடர்தரும் நெற்றியுடைய சிவபெருமான் திருவேட்டக்குடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றான். 

3507 பங்கமார் கடலலறப்பருவரையோ டரவுழலச்செங்கண்மால் கடையவெழுநஞ்சருந்துஞ் சிவமூர்த்திஅங்கநான் மறைநால்வர்க்கறம்பொருளின் பயனளித்ததிங்கள்சேர் சடையாருந்திருவேட்டக் குடியாரே3.066.5
சேறாகும் வண்ணம் கடல்நீர் அலைப்புற, மேருமலையை மத்தாகவும், வாசுகி என்ற பாம்பைக் கயிறாகவும் கொண்டு, சிவந்த கண்களையுடைய திருமால் முன்னின்று கடைய எழுந்த நஞ்சையருந்தியவர் சிவமூர்த்தி. நால் வேதங்களையும், அவற்றின் ஆறங்கங்களையும் உணர்ந்த சனகாதிமுனிவர்கள் நால்வர்க்கும் அறநூற் பொருளின் பயனாகிய அனுபவத்தை உணர்த்தியருளிய பிறை சூடிய சடையையுடைய சிவபெருமான் திருவேட்டக்குடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார். 

3508 நாவாய பிறைச்சென்னிநலந்திகழு மிலங்கிப்பிகோவாத நித்திலங்கள்கொணர்ந்தெறியுங் குளிர்கானல்ஏவாரும் வெஞ்சிலையாலெயின்மூன்று மெரிசெய்ததேவாதி தேவனார்திருவேட்டக் குடியாரே3.066.6
சிவபெருமான் தோணிபோன்ற வடிவுடைய பிறைச்சந்திரனைச் சடையிலே தரித்தவர். அழகாய் விளங்கும் சங்குப்பூச்சிகளையும், கோத்தற்குரிய துளையில்லாத நல்முத்துக்களையும் கடலலைகள் கொணர்ந்து சேர்கின்ற குளிர்ந்த கடற்கரைச் சோலைகளையுடைய திருவேட்டக்குடி என்னும் திருத்தலத்தில் அக்கினியாகிய கணையினால் மேருமலையை வில்லாகக் கொண்டு முப்புரங்களை எரித்த தேவாதி தேவனான அச்சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றார். 

3509 பானிலவும் பங்கையத்துப்பைங்கானல் வெண்குருகுகானிலவு மலர்ப்பொய்கைக்கைதல்சூழ் கழிக்கானல்மானின்விழி மலைமகளோடொருபாகம் பிரிவரியார்தேனிலவு மலர்ச்சோலைத்திருவேட்டக் குடியாரே3.066.7
பால்போல் விளங்குகின்ற வெண்தாமரையானது ஒளிர, பசுமை வாய்ந்த கடற்கரைச் சோலைகளில் வெண்ணிறப் பறவைகள் விளங்க, மணம் வீசும் மலர்களையுடைய குளங்களும், தாழைகள் சூழ்ந்த கடற்கரைச் சோலைகளும், தேன்துளிர்க்கும் மலர்ச் சோலைகளும் விளங்கும் திருவேட்டக்குடி என்னும் திருத்தலத்தில், மான் போன்ற மருண்ட பார்வையுடைய மலைமகளான உமாதேவியைத் தம் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு பிரிதலில்லாமல் வீற்றிருந்தருளுகின்றார் சிவபெருமான். 

3510 துறையுலவு கடலோதஞ்சுரிசங்க மிடறிப்போய் நறையுலவும் பொழிற்புன்னைநன்னீழற் கீழமரும்இறைபயிலு மிராவணன்றன்றலைபத்து மிருபதுதோள்திறலழிய வடர்த்தாருந்திருவேட்டக் குடியாரே3.066.8
கரையை வந்தடைகின்ற கடலலைகள் சுரி சங்குகளை வீச, தேன் துளிக்கும் நறுமணமுடைய புன்னை மரங்கள் நிறைந்த சோலைகள் நிழலைத்தரத் திருவேட்டக்குடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் சிவபெருமான் இலங்கை வேந்தனான இராவணனின் தலைகள் பத்தும் இருபது தோள்களும் வலிமை இழக்குமாறு அடர்த்தவர். 

3511 அருமறைநான் முகத்தானுமகலிடநீ ரேற்றானும்இருவருமா யளப்பரியவெரியுருவாய் நீண்டபிரான்வருபுனலின் மணியுந்திமறிதிரையார் சுடர்ப்பவளத்திருவுருவில் வெண்ணீற்றார்திருவேட்டக் குடியாரே3.066.9
அரிய நால்வேதங்களையும் கற்ற பிரமனும், மாவலிச் சக்கரவர்த்தியிடம் மூன்றடி நிலம் வேண்டி நீர் ஏற்ற திருமாலும் ஆகிய இருவரும் அளந்தறிய முடியாவண்ணம் நெருப்புப் பிழம்பாய் ஓங்கி நின்றவர் சிவபெருமான். பெருக்கெடுத்துவரும் காவிரியாற்றின், வீசுகின்ற அலைகள் மணிகளை உந்தித் தள்ளிச் சேர்க்கும் வளமிகுந்த திருவேட்டக்குடி என்னும் திருத்தலத்தில், சுடர்விடும் பவளம் போன்ற தம் திருமேனியில் திருவெண்ணீறு பூசப் பெற்றவராய், சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றார். 

3512 இகழ்ந்துரைக்குஞ் சமணர்களுமிடும்போர்வைச் சாக்கியரும்புகழ்ந்துரையாப் பாவிகள்சொற்கொள்ளேன்மின் பொருளென்னநிகழ்ந்திலங்கு வெண்மணலிணிறைத்துண்டப் பிறைக்கற்றைதிகழ்ந்திலங்கு செஞ்சடையார்திருவேட்டக் குடியாரே3.066.10
வேதவள்ளியை நிந்தனை செய்யும் சமணர்களும், பௌத்தர்களும் இறைவனைப் புகழ்ந்துரையாத பாவிகள். ஆதலால் அவர்களுடைய சொற்களைப் பொருளெனக் கொள்ள வேண்டா. வெண்மணலைப் போன்ற ஒளிக்கற்றையுடைய பிறைச் சந்திரனைச் சிவந்த சடையில் கொண்டு திகழும் சிவபெருமான் திருவேட்டக்குடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார். அப்பெருமானைப் போற்றி வழிபடுங்கள். 

3513 தெண்டிரைசேர் வயலுடுத்ததிருவேட்டக் குடியாரைத்தண்டலைசூழ் கலிக்காழித்தமிழ்ஞான சம்பந்தன்ஒண்டமிழ்நூ லிவைபத்துமுணர்ந்தேத்த வல்லார்போய்உண்டுடுப்பில் வானவரோடுயர்வானத் திருப்பாரே3.066.11
தௌந்த நீர் அலைகளையுடைய வயல்கள் நிறைந்த திருவேட்டக்குடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் சிவபெருமானைப் போற்றி, சோலைகள் சூழ்ந்த, திருவிழாக்களின் ஓசை மிகுந்த சீகாழியில் அவதரித்த தமிழ் ஞானசம்பந்தன் ஒண்தமிழில் அருளிய இத்திருப்பதிகத்தை நன்கு பொருளுணர்ந்து ஏத்தியும், ஓதியும் வழிபடுபவர்கள் மானிடர்களைப் போல் உண்டலும், உடுத்தலும் இல்லாது வேறுபட்ட தன்மையுடைய தேவர்களை ஒத்து உயர் வானுலகில் இருப்பர். 

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 02 Apr 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.