LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

மூன்றாம் திருமுறை-67

3.067.திருப்பிரமபுரம் 
பண் - சாதாரி 
திருச்சிற்றம்பலம் 
திருப்பிரமபுர மென்பது சீர்காழி. இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - பிரமபுரீசர். 
தேவியார் - திருநிலைநாயகி. 
3514 சுரருலகு நரர்கள்பயி றரணிதல
முரணழிய வரணமதின்முப்
புரமெரிய விரவுவகை சரவிசைகொள்
கரமுடைய பரமனிடமாம்
வரமருள வரன்முறையி னிரைநிறைகொள்
வருசுருதி சிரவுரையினாற்
பிரமனுய ரரனெழில்கொள் சரணவிணை
பரவவளர் பிரமபுரமே
3.067.1
தேவர் வாழ்கின்ற விண்ணுலகமும், மனிதர்கள் வாழ்கின்ற இப்பூவுலகமும் வலிமை அழியும்படி துன்புறுத்திய, காவலாகக் கோட்டை மதில்களையுடைய முப்புரங்களும் எரிந்து சாம்பலாகுமாறு ஓர் அம்பை விரைவாகச் செலுத்தும் ஆற்றலுடையவர் சிவபெருமான். எல்லாச் சுரங்களும் வரிசைபெற அமைந்த, வேதசிரமாகிய உபநிடதஉரைகளை வரன்முறையோடு ஓதி, அரனாரின் எழில் மிகுந்த புகழை எடுத்துரைத்துச் சரணடைந்து அவர் இணை மலரடியைத் தான் வரம் பெற வேண்டிப் பிரமன் துதித்தலால் புகழால் ஓங்கிய பிரமாபுரம் எனப்பட்டது. 
3515 தாணுமிகு வாணிசைகொ டாணுவியர் 
பேணுமது காணுமளவிற் 
கோணுநுத னீணயனி கோணில்பிடி
மாணிமது நாணும்வகையே 
ஏணுகரி பூணழிய வாணியல்கொண்
மாணிபதி சேணமரர்கோன் 
வேணுவினை யேணிநகர் காணிறிவி 
காணநடு வேணுபுரமே
3.067.2
தன்னை அன்பால் வழிபடும் தேவர்கள் கயமுகாசுரனால் துன்புற்று அஞ்சி வழிபட, நிலைபெற்ற சிவபெருமான் வலிமைமிகுந்த ஆண்யானையின் வடிவம் கொண்டருளினார். வளைந்த நெற்றியையும், நீண்ட கண்களையு முடைய உமாதேவி குற்றமில்லாதபடி பெண்யானையின் உருவை எடுத்தாள். மது என்னும் அசுரன் வெட்கப்படும்படியும், வலிமைகொண்டு தீமை செய்த கயமுகாசுரன் அழியுமாறும் ஆற்றல்மிக்க அழகிய விநாயகக் கடவுளைத் தோற்றுவித்த பெருமைக்குரிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் பதியாவது, வானுலகிலுள்ள தேவர்களின் தலைவனான இந்திரன் சூரபதுமனுக்கு அஞ்சி ஒளிந்து வாழ்ந்தால் மூங்கிலை ஏணியாகக் கொண்டு, தான் நேரே காணமுடியாத தேவலோகத்தின் நிலையை ஒளிந்து காணும்பொருட்டு நட்ட வேணுபுரம் ஆகும். சூரபதுமனுக்கு அஞ்சி இந்திரன் வந்து மூங்கிலில் மறைந்திருந்து பூசித்த வரலாற்றால் போந்தபெயர் வேணுபுரம் என்பது. 
3516 பகலொளிசெய் நகமணியை முகைமலரை 
நிகழ்சரண வகவுமுனிவர்க் 
ககலமலி சகலகலை மிகவுரைசெய் 
முகமுடைய பகவனிடமாம் 
பகைகளையும் வகையிலறு முகவிறையை 
மிகவருள நிகரிலிமையோர் 
புகவுலகு புகழவெழி றிகழநிக 
ழலர்பெருகு புகலிநகரே
3.067.3
சூரியனைப் போல் பிரகாசிக்கும் மலையிற் பிறந்த நாகரத்தினத்தையும், அரும்பு விரிந்த செந்தாமரையையும் போன்ற திருவடிகளைச் சரணாக அடைந்த சனகாதி முனிவர்கட்குச் சகல கலைகளையும் நன்கு உணருமாறு விரித்து உபதேசித்தருளிய திருவருள் நோக்கத்தையுடையவர் சிவபெருமான். அத்தகைய பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது பகையசுரர்களை வேர் அறுக்கும் வகையில் அறுமுகக்கடவுளை அருளும்படி ஒப்பற்ற தேவர்கள் சரண்புக அழகுடன் திகழும் புகழ்மிக்க திருப்புகலி என்னும் திருத்தலமாகும். தேவர்கள் புகலடைந்தமையால் புகலி எனப் பெயர் பெற்றது. 
3517 அங்கண்மதி கங்கைநதி வெங்கணர
வங்களெழி றங்குமிதழித்
துங்கமலர் தங்குசடை யங்கிநிக
ரெங்களிறை தங்குமிடமாம்
வெங்கதிர்வி ளங்குலக மெங்குமெதிர்
பொங்கெரிபு லன்கள்களைவோர்
வெங்குருவி ளங்கியுமை பங்கர்சர
ணங்கள்பணி வெங்குருவதே
3.067.4
அழகிய சந்திரனும், கங்கை நதியும், கொடிய பாம்புகளும், அழகிய இதழ்களையுடைய கொன்றை மலரும் நெருப்புப் போன்ற சடைமுடியில் அணிந்தவர், எங்கள் இறைவராகிய சிவபெருமான். அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது, சூரியனால் விளங்குகின்ற இவ்வுலகிலுள்ளோர் நல்வழிக்கு மாறாக மிக வருத்துகின்ற மனம் முதலிய அந்தக் கரணங்களின் சேட்டையால் வரும் துன்பத்தைக் களைய விரும்புபவர்கள் பணியும் வெங்குரு ஆகும். அது தேவகுருவாகிய வியாழபகவான் உமை பங்கராகிய பரமனைப் பணிந்து பேறு பெற்ற தலமாகும். 
3518 ஆணியல்பு காணவன வாணவியல்
பேணியெதிர் பாணமழைசேர்
தூணியற நாணியற வேணுசிலை
பேணியற நாணிவிசயன்
பாணியமர் பூணவருண் மாணுபிர
மாணியிட மேணிமுறையிற்
பாணியுல காளமிக வாணின்மலி
தோணிநிகர் தோணிபுரமே
3.067.5
விசயனுடைய வீரத்தன்மையை உமை காண வனத்தில் வாழும் வேடன் வடிவம் கொண்டு, அவனுக்கு எதிராகப் போர் தொடங்கி, அவன் சொரியும் மழைபோன்ற அம்புகளும், அவ்வம்புகள் தங்கிய அம்பறாத்துணியும் நீங்கவும், வில்நாண் அறுபடவும், வளைந்த மூங்கிலால் வடிவமைத்த வில்லைத் துணித்தவர். அதனால் அர்ச்சுனன் நாணமுற்றுக் கையால் அடித்துச் செய்யும் மற்போர் செய்யவர, அவனுக்கு அருள்புரிந்தவர், பிரமாணமான மறைகட்கு வாச்சியமாக (பொருளாக) உள்ள சிவபெருமான். அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது காலாந்தரத்தில் பிரளயகால வெள்ளமானது உலகம் முழுவதையும் மூழ்கச் செய்ய, ஆற்றல் பெருகுமாறு ஊழி வெள்ளத்தில் தோணிபோல் மிதந்த தோணிபுரம் எனப்படும் திருத்தலமாகும். பிரமாணி - பிரமாணமாகிய மறைகட்கு வாச்சியமாக உள்ளவர். 
3519 நிராமய பராபர புராதன
பராவுசிவ ராகவருளென்
றிராவுமெ திராயது பராநினை
புராணனம ராதிபதியாம்
அராமிசை யிராதெழி றராயர
பராயண வராகவுருவா
தராயனை விராயெரி பராய்மிகு
தராய்மொழி விராயபதியே
3.067.6
இறைவன் நோயற்றவன். அனைத்துப் பொருட்கட்கும் மேலான பரம்பொருள். மிகப்பழமையானவன். பராவுசிவன் என்று இரவும், பகலும் போற்றித் தியானிக்கப்படுகின்ற பழமை யானவன். தேவர்கட்கெல்லாம் தலைவனாக விளங்கும் அச்சிவ பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது, இரணியாக்கனால் கொள்ளப்பட்டுக் கடலில் கிடந்த அழகிய பூமியை, திருமால் பாற்கடலில் அரவணையிலிருந்து எழுந்து வந்து வெள்ளைப் பன்றி உருவெடுத்து இரணியாக்கனைக் கொன்று பூமியைக் கொம்பிலேற்றி அவனை வருத்திய பழிபோகச் சிவனை வழிபட்ட புகழ்மிக்க பூந்தராய் என்னும் திருத்தலமாகும். 
3520 அரணையுறு முரணர்பலர் மரணம்வர
விரணமதி லரமலிபடைக்
கரம்விசிறு விரகனமர் கரணனுயர்
பரனெறிகொள் கரனதிடமாம்
பரவமுது விரவவிடல் புரளமுறு
மரவையரி சிரமரியவச்
சிரமரன சரணமவை பரவவிரு
கிரகமமர் சிரபுரமதே
3.067.7
மும்மதில்களை அரணாகக் கொண்ட திரிபுரத்தசுரர்களால் பலருக்கு மரணம் ஏற்பட, காயங்கள் முதலான உண்டாக்கித் துன்புறுத்தும் அம்மதிலின் மேல் அரத்தால் அராவப்பட்டஆயுதத்தைக் கையினால் ஏவிய சமர்த்தனும், தன்னைச் சரணடைந்தவர்களின் கரணங்களின் சேட்டையை அடக்குவிப் போனும், யாவரினும் உயர்ந்த மேன்மையுடையவனும், உபதேசிக்கும் முறையைக் கொண்ட திருக்கரத்தை உடையவனுமான சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது, எல்லோராலும் போற்றப்படுகின்ற அமுதத்தைப் பாற்கடலிலிருந்து கடைந்து எடுத்த காலத்தில், தனக்குக் கிடைக்கும்படி பந்தியில் வந்த பாம்பின் சிரத்தினைத் திருமால் அரிந்து வீச, அந்தத் தலையானது சிவபெருமானைச் சரணடைந்து துதித்தலால் இரு கிரகங்களாக நவக்கிரக வரிசையில் பொலியும் சிரபுரம் என்னும் திருத்தலம் ஆகும். 
3521 அறமழிவு பெறவுலகு தெறுபுயவன்
விறலழிய நிறுவிவிரன்மா
மறையினொலி முறைமுரல்செய் பிறையெயிற
னுறவருளு மிறைவனிடமாங்
குறைவின்மிக நிறைதையுழி மறையமரர்
நிறையருள முறையொடுவரும்
புறவனெதிர் நிறைநிலவு பொறையனுடல்
பெறவருளு புறவமதுவே
3.067.8
தருமம் அழியுமாறு உலகத்தைத் துன்புறுத்திய புயவலிமையுடைய இராவணனது வலிமை அழியுமாறு தம் காற்பெருவிரலை ஊன்றி, பின் இராவணன் தவறுணர்ந்து சாமகானம் பாடிப் போற்ற வளைந்த பற்களையுடைய அந்த இராவணனுக்கு நீண்ட வாழ்நாளும், ஒளிபொருந்திய வாளும் அருளியவர் சிவபெருமான். அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது, வேதங்கட்கும், தேவர்கட்கும் ஒத்ததாகிய நீதியை வழங்கும்படி, முறையிட்டு வந்த புறாவிற்குரியவனாகிய வேடன் எதிரே, புறாவின் எடைக்குச் சமமாகத் தன் சதையை அறுத்து வைத்தும் நிரம்பாது தான் துலையேறி எடை சமன்பெறுமாறு செய்த சிபிச்சக்கரவர்த்தி குறையில்லா உடம்பைப் பெற அருள் புரிந்ததும், தான் செய்த பழிபோக புறா உருவில் வந்த தீக்கடவுள் பூசித்ததும் ஆகிய புறவம் என்னும் திருத்தலமாகும். 
3522 விண்பயில மண்பகிரி வண்பிரம
னெண்பெரிய பண்படை கொண்மால்
கண்பரியு மொண்பொழிய நுண்பொருள்கள்
தண்புகழ்கொள் கண்டனிடமாம்
மண்பரியு மொண்பொழிய நுண்புசகர்
புண்பயில விண்படரவச்
சண்பைமொழி பண்பமுனி கண்பழிசெய்
பண்புகளை சண்பைநகரே
3.067.9
சிறந்த பிரமன் அன்ன உரு எடுத்து ஆகாயத்தில் சென்றும், மிக்க மதிப்புடைய தகுதியான சக்கராயுதப் படையைக் கொண்ட திருமால் பன்றி உரு எடுத்து மண்ணைப் பிளந்து சென்றும் காணப்பெறாது, கண்ணால் பற்றக்கூடிய ஒளி நீங்க, நுண்ணிய பொருளாக, இனிய கீர்த்தியைக் கொண்ட அகண்டனாகிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம், மண்ணின் நுண்புழுதிபோல் அராவிய இரும்பு உலக்கைத்தூள் சண்பைப் புல்லாக முளைக்க அவற்றால் யாதவ குமாரர்கள் ஒருவரையொருவர் அடித்துக்கொண்டு இறந்து விண்ணுலகை அடைய, துருவாச முனிவரை இழிவு செய்து பழிகொண்ட தன் இனத்தவர்கட்கு நற்கதி உண்டாகுமாறும் சண்பை என்னும் கோரையால் உண்டான புண்கள் தீருமாறும் கண்ணபிரான் போற்றி வழிபட்டுச் சாபத்தை நீக்கியதால், சண்பை என்னும் பெயர் பெற்ற திருத்தலமாகும். 
3523 பாழியுறை வேழநிகர் பாழமணர்
சூழமுட லாளருணரா
ஏழினிசை யாழின்மொழி யேழையவள்
வாழுமிறை தாழுமிடமாங்
கீழிசைகொண் மேலுலகில் வாழரசு
சூழரசு வாழவரனுக்
காழியசில் காழிசெய வேழுலகி
லூழிவளர் காழிநகரே
3.067.10
பாழியில் தங்கும், யானையை ஒத்த சமணர்களும், கூட்டமாக வாழும் உடலைப் பாதுகாப்போராகிய பௌத்தர்களும் இறைவனை உணராதவர்கள். ஏழிசையும், யாழின் இனிமையும் போன்ற மொழியுடைய உமாதேவியை உடனாகக் கொண்டு சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம், கீழுலகில் புகழ்கொண்ட அரசர்களும், மேலுலகில் வாழ்கின்ற அரசனாகிய இந்திரனும், மற்றும் சூழ்ந்துள்ளவர்களும் வாழும்பொருட்டு நடனம் புரிந்த இறைவனிடம் ஆடலில் தோற்று, தன் குற்றம் நீங்குமாறு அப்பெருமானை வழிபட்டு காளி அருள் பெற்ற செயல் சப்தலோகங்களிலும் பல ஊழிக்காலமாக பேசப்பட்டு வரும் பெருமையுடைய காழிநகராகும். 
3524 நச்சரவு கச்செனவ சைச்சுமதி
யுச்சியின்மி லைச்சொருகையான்
மெய்ச்சிர மனைச்சுலகி னிச்சமிடு
பிச்சையமர் பிச்சனிடமாம்
மச்சமத நச்சிமத மச்சிறுமி
யைச்செய்தவ வச்சவிரதக்
கொச்சைமுர வச்சர்பணி யச்சுரர்க
ணச்சிமிடை கொச்சைநகரே
3.067.11
நஞ்சையுடைய பாம்பைக் கச்சாகக் கட்டி, சந்திரனைத் தலையிலே சூடி, ஒரு கையில் பிரமகபாலத்தைத் தாங்கி, உலகிலே நாடோறும் இடுகின்ற பிச்சையை விரும்பும் பித்தனாகிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம், மீன் நாற்றத்தை விரும்பும் மச்சகந்தியை வசமிழந்து ஆற்றினிடையில் புணர்ந்த கொச்சைத் தன்மைக்குக் கதறி அது நீங்க பராசரமுனிவர் வணங்க, தேவர்களும் விரும்பி அணுகும் கொச்சைவயம் எனப்படும் திருத்தலமாகும். 
3525 ஒழுகலரி தழிகலியி லுழியுலகு
பழிபெருகு வழியைநினையா
முழுதுடலி லெழுமயிர்க டழுவுமுனி
குழுவினொடு கெழுவுசிவனைத்
தொழுதுலகி லிழுகுமல மழியும்வகை
கழுவுமுரை கழுமலநகர்ப்
பழுதிலிறை யெழுதுமொழி தமிழ்விரகன்
வழிமொழிகண் மொழிதகையவே
3.067.12
நல்லொழுக்கத்தில் நிற்றல் அரிதாகி அழிகின்ற கலிகாலத்தில் உலகில் பழிபெருகுதலை நினைந்து வருந்தி, உடல் முழுவதும் முடி முளைத்துள்ள உரோமச முனிவர் தம் குழுவினருடன் அங்குத் தங்கி, சிவபெருமானைத் தொழுது, உலக இச்சைக்கு இழுக்கின்ற மலங்கள் நீங்கிச் சிவஞான உபதேசம் பெற்றதால் கழுமலம் எனப் போற்றப்படும் திருத்தலத்தினை வணங்குவோரின் குற்றம் இல்லையாகச் செய்கின்ற தலைவனும், எழுதும் வேதமெனப் போற்றப்படும் தமிழ் வல்லவனுமாகிய ஞானசம்பந்தன் அருளிய இந்த வழிமொழித் திருவிராகப் பாசுரங்கள் பாடிப் பயன்பெறும் தன்மை உடையன.
திருச்சிற்றம்பலம்

3.067.திருப்பிரமபுரம் 
பண் - சாதாரி 
திருச்சிற்றம்பலம் 

திருப்பிரமபுர மென்பது சீர்காழி. இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - பிரமபுரீசர். தேவியார் - திருநிலைநாயகி. 

3514 சுரருலகு நரர்கள்பயி றரணிதலமுரணழிய வரணமதின்முப்புரமெரிய விரவுவகை சரவிசைகொள்கரமுடைய பரமனிடமாம்வரமருள வரன்முறையி னிரைநிறைகொள்வருசுருதி சிரவுரையினாற்பிரமனுய ரரனெழில்கொள் சரணவிணைபரவவளர் பிரமபுரமே3.067.1
தேவர் வாழ்கின்ற விண்ணுலகமும், மனிதர்கள் வாழ்கின்ற இப்பூவுலகமும் வலிமை அழியும்படி துன்புறுத்திய, காவலாகக் கோட்டை மதில்களையுடைய முப்புரங்களும் எரிந்து சாம்பலாகுமாறு ஓர் அம்பை விரைவாகச் செலுத்தும் ஆற்றலுடையவர் சிவபெருமான். எல்லாச் சுரங்களும் வரிசைபெற அமைந்த, வேதசிரமாகிய உபநிடதஉரைகளை வரன்முறையோடு ஓதி, அரனாரின் எழில் மிகுந்த புகழை எடுத்துரைத்துச் சரணடைந்து அவர் இணை மலரடியைத் தான் வரம் பெற வேண்டிப் பிரமன் துதித்தலால் புகழால் ஓங்கிய பிரமாபுரம் எனப்பட்டது. 

3515 தாணுமிகு வாணிசைகொ டாணுவியர் பேணுமது காணுமளவிற் கோணுநுத னீணயனி கோணில்பிடிமாணிமது நாணும்வகையே ஏணுகரி பூணழிய வாணியல்கொண்மாணிபதி சேணமரர்கோன் வேணுவினை யேணிநகர் காணிறிவி காணநடு வேணுபுரமே3.067.2
தன்னை அன்பால் வழிபடும் தேவர்கள் கயமுகாசுரனால் துன்புற்று அஞ்சி வழிபட, நிலைபெற்ற சிவபெருமான் வலிமைமிகுந்த ஆண்யானையின் வடிவம் கொண்டருளினார். வளைந்த நெற்றியையும், நீண்ட கண்களையு முடைய உமாதேவி குற்றமில்லாதபடி பெண்யானையின் உருவை எடுத்தாள். மது என்னும் அசுரன் வெட்கப்படும்படியும், வலிமைகொண்டு தீமை செய்த கயமுகாசுரன் அழியுமாறும் ஆற்றல்மிக்க அழகிய விநாயகக் கடவுளைத் தோற்றுவித்த பெருமைக்குரிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் பதியாவது, வானுலகிலுள்ள தேவர்களின் தலைவனான இந்திரன் சூரபதுமனுக்கு அஞ்சி ஒளிந்து வாழ்ந்தால் மூங்கிலை ஏணியாகக் கொண்டு, தான் நேரே காணமுடியாத தேவலோகத்தின் நிலையை ஒளிந்து காணும்பொருட்டு நட்ட வேணுபுரம் ஆகும். சூரபதுமனுக்கு அஞ்சி இந்திரன் வந்து மூங்கிலில் மறைந்திருந்து பூசித்த வரலாற்றால் போந்தபெயர் வேணுபுரம் என்பது. 

3516 பகலொளிசெய் நகமணியை முகைமலரை நிகழ்சரண வகவுமுனிவர்க் ககலமலி சகலகலை மிகவுரைசெய் முகமுடைய பகவனிடமாம் பகைகளையும் வகையிலறு முகவிறையை மிகவருள நிகரிலிமையோர் புகவுலகு புகழவெழி றிகழநிக ழலர்பெருகு புகலிநகரே3.067.3
சூரியனைப் போல் பிரகாசிக்கும் மலையிற் பிறந்த நாகரத்தினத்தையும், அரும்பு விரிந்த செந்தாமரையையும் போன்ற திருவடிகளைச் சரணாக அடைந்த சனகாதி முனிவர்கட்குச் சகல கலைகளையும் நன்கு உணருமாறு விரித்து உபதேசித்தருளிய திருவருள் நோக்கத்தையுடையவர் சிவபெருமான். அத்தகைய பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது பகையசுரர்களை வேர் அறுக்கும் வகையில் அறுமுகக்கடவுளை அருளும்படி ஒப்பற்ற தேவர்கள் சரண்புக அழகுடன் திகழும் புகழ்மிக்க திருப்புகலி என்னும் திருத்தலமாகும். தேவர்கள் புகலடைந்தமையால் புகலி எனப் பெயர் பெற்றது. 

3517 அங்கண்மதி கங்கைநதி வெங்கணரவங்களெழி றங்குமிதழித்துங்கமலர் தங்குசடை யங்கிநிகரெங்களிறை தங்குமிடமாம்வெங்கதிர்வி ளங்குலக மெங்குமெதிர்பொங்கெரிபு லன்கள்களைவோர்வெங்குருவி ளங்கியுமை பங்கர்சரணங்கள்பணி வெங்குருவதே3.067.4
அழகிய சந்திரனும், கங்கை நதியும், கொடிய பாம்புகளும், அழகிய இதழ்களையுடைய கொன்றை மலரும் நெருப்புப் போன்ற சடைமுடியில் அணிந்தவர், எங்கள் இறைவராகிய சிவபெருமான். அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது, சூரியனால் விளங்குகின்ற இவ்வுலகிலுள்ளோர் நல்வழிக்கு மாறாக மிக வருத்துகின்ற மனம் முதலிய அந்தக் கரணங்களின் சேட்டையால் வரும் துன்பத்தைக் களைய விரும்புபவர்கள் பணியும் வெங்குரு ஆகும். அது தேவகுருவாகிய வியாழபகவான் உமை பங்கராகிய பரமனைப் பணிந்து பேறு பெற்ற தலமாகும். 

3518 ஆணியல்பு காணவன வாணவியல்பேணியெதிர் பாணமழைசேர்தூணியற நாணியற வேணுசிலைபேணியற நாணிவிசயன்பாணியமர் பூணவருண் மாணுபிரமாணியிட மேணிமுறையிற்பாணியுல காளமிக வாணின்மலிதோணிநிகர் தோணிபுரமே3.067.5
விசயனுடைய வீரத்தன்மையை உமை காண வனத்தில் வாழும் வேடன் வடிவம் கொண்டு, அவனுக்கு எதிராகப் போர் தொடங்கி, அவன் சொரியும் மழைபோன்ற அம்புகளும், அவ்வம்புகள் தங்கிய அம்பறாத்துணியும் நீங்கவும், வில்நாண் அறுபடவும், வளைந்த மூங்கிலால் வடிவமைத்த வில்லைத் துணித்தவர். அதனால் அர்ச்சுனன் நாணமுற்றுக் கையால் அடித்துச் செய்யும் மற்போர் செய்யவர, அவனுக்கு அருள்புரிந்தவர், பிரமாணமான மறைகட்கு வாச்சியமாக (பொருளாக) உள்ள சிவபெருமான். அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது காலாந்தரத்தில் பிரளயகால வெள்ளமானது உலகம் முழுவதையும் மூழ்கச் செய்ய, ஆற்றல் பெருகுமாறு ஊழி வெள்ளத்தில் தோணிபோல் மிதந்த தோணிபுரம் எனப்படும் திருத்தலமாகும். பிரமாணி - பிரமாணமாகிய மறைகட்கு வாச்சியமாக உள்ளவர். 

3519 நிராமய பராபர புராதனபராவுசிவ ராகவருளென்றிராவுமெ திராயது பராநினைபுராணனம ராதிபதியாம்அராமிசை யிராதெழி றராயரபராயண வராகவுருவாதராயனை விராயெரி பராய்மிகுதராய்மொழி விராயபதியே3.067.6
இறைவன் நோயற்றவன். அனைத்துப் பொருட்கட்கும் மேலான பரம்பொருள். மிகப்பழமையானவன். பராவுசிவன் என்று இரவும், பகலும் போற்றித் தியானிக்கப்படுகின்ற பழமை யானவன். தேவர்கட்கெல்லாம் தலைவனாக விளங்கும் அச்சிவ பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது, இரணியாக்கனால் கொள்ளப்பட்டுக் கடலில் கிடந்த அழகிய பூமியை, திருமால் பாற்கடலில் அரவணையிலிருந்து எழுந்து வந்து வெள்ளைப் பன்றி உருவெடுத்து இரணியாக்கனைக் கொன்று பூமியைக் கொம்பிலேற்றி அவனை வருத்திய பழிபோகச் சிவனை வழிபட்ட புகழ்மிக்க பூந்தராய் என்னும் திருத்தலமாகும். 

3520 அரணையுறு முரணர்பலர் மரணம்வரவிரணமதி லரமலிபடைக்கரம்விசிறு விரகனமர் கரணனுயர்பரனெறிகொள் கரனதிடமாம்பரவமுது விரவவிடல் புரளமுறுமரவையரி சிரமரியவச்சிரமரன சரணமவை பரவவிருகிரகமமர் சிரபுரமதே3.067.7
மும்மதில்களை அரணாகக் கொண்ட திரிபுரத்தசுரர்களால் பலருக்கு மரணம் ஏற்பட, காயங்கள் முதலான உண்டாக்கித் துன்புறுத்தும் அம்மதிலின் மேல் அரத்தால் அராவப்பட்டஆயுதத்தைக் கையினால் ஏவிய சமர்த்தனும், தன்னைச் சரணடைந்தவர்களின் கரணங்களின் சேட்டையை அடக்குவிப் போனும், யாவரினும் உயர்ந்த மேன்மையுடையவனும், உபதேசிக்கும் முறையைக் கொண்ட திருக்கரத்தை உடையவனுமான சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது, எல்லோராலும் போற்றப்படுகின்ற அமுதத்தைப் பாற்கடலிலிருந்து கடைந்து எடுத்த காலத்தில், தனக்குக் கிடைக்கும்படி பந்தியில் வந்த பாம்பின் சிரத்தினைத் திருமால் அரிந்து வீச, அந்தத் தலையானது சிவபெருமானைச் சரணடைந்து துதித்தலால் இரு கிரகங்களாக நவக்கிரக வரிசையில் பொலியும் சிரபுரம் என்னும் திருத்தலம் ஆகும். 

3521 அறமழிவு பெறவுலகு தெறுபுயவன்விறலழிய நிறுவிவிரன்மாமறையினொலி முறைமுரல்செய் பிறையெயிறனுறவருளு மிறைவனிடமாங்குறைவின்மிக நிறைதையுழி மறையமரர்நிறையருள முறையொடுவரும்புறவனெதிர் நிறைநிலவு பொறையனுடல்பெறவருளு புறவமதுவே3.067.8
தருமம் அழியுமாறு உலகத்தைத் துன்புறுத்திய புயவலிமையுடைய இராவணனது வலிமை அழியுமாறு தம் காற்பெருவிரலை ஊன்றி, பின் இராவணன் தவறுணர்ந்து சாமகானம் பாடிப் போற்ற வளைந்த பற்களையுடைய அந்த இராவணனுக்கு நீண்ட வாழ்நாளும், ஒளிபொருந்திய வாளும் அருளியவர் சிவபெருமான். அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது, வேதங்கட்கும், தேவர்கட்கும் ஒத்ததாகிய நீதியை வழங்கும்படி, முறையிட்டு வந்த புறாவிற்குரியவனாகிய வேடன் எதிரே, புறாவின் எடைக்குச் சமமாகத் தன் சதையை அறுத்து வைத்தும் நிரம்பாது தான் துலையேறி எடை சமன்பெறுமாறு செய்த சிபிச்சக்கரவர்த்தி குறையில்லா உடம்பைப் பெற அருள் புரிந்ததும், தான் செய்த பழிபோக புறா உருவில் வந்த தீக்கடவுள் பூசித்ததும் ஆகிய புறவம் என்னும் திருத்தலமாகும். 

3522 விண்பயில மண்பகிரி வண்பிரமனெண்பெரிய பண்படை கொண்மால்கண்பரியு மொண்பொழிய நுண்பொருள்கள்தண்புகழ்கொள் கண்டனிடமாம்மண்பரியு மொண்பொழிய நுண்புசகர்புண்பயில விண்படரவச்சண்பைமொழி பண்பமுனி கண்பழிசெய்பண்புகளை சண்பைநகரே3.067.9
சிறந்த பிரமன் அன்ன உரு எடுத்து ஆகாயத்தில் சென்றும், மிக்க மதிப்புடைய தகுதியான சக்கராயுதப் படையைக் கொண்ட திருமால் பன்றி உரு எடுத்து மண்ணைப் பிளந்து சென்றும் காணப்பெறாது, கண்ணால் பற்றக்கூடிய ஒளி நீங்க, நுண்ணிய பொருளாக, இனிய கீர்த்தியைக் கொண்ட அகண்டனாகிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம், மண்ணின் நுண்புழுதிபோல் அராவிய இரும்பு உலக்கைத்தூள் சண்பைப் புல்லாக முளைக்க அவற்றால் யாதவ குமாரர்கள் ஒருவரையொருவர் அடித்துக்கொண்டு இறந்து விண்ணுலகை அடைய, துருவாச முனிவரை இழிவு செய்து பழிகொண்ட தன் இனத்தவர்கட்கு நற்கதி உண்டாகுமாறும் சண்பை என்னும் கோரையால் உண்டான புண்கள் தீருமாறும் கண்ணபிரான் போற்றி வழிபட்டுச் சாபத்தை நீக்கியதால், சண்பை என்னும் பெயர் பெற்ற திருத்தலமாகும். 

3523 பாழியுறை வேழநிகர் பாழமணர்சூழமுட லாளருணராஏழினிசை யாழின்மொழி யேழையவள்வாழுமிறை தாழுமிடமாங்கீழிசைகொண் மேலுலகில் வாழரசுசூழரசு வாழவரனுக்காழியசில் காழிசெய வேழுலகிலூழிவளர் காழிநகரே3.067.10
பாழியில் தங்கும், யானையை ஒத்த சமணர்களும், கூட்டமாக வாழும் உடலைப் பாதுகாப்போராகிய பௌத்தர்களும் இறைவனை உணராதவர்கள். ஏழிசையும், யாழின் இனிமையும் போன்ற மொழியுடைய உமாதேவியை உடனாகக் கொண்டு சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம், கீழுலகில் புகழ்கொண்ட அரசர்களும், மேலுலகில் வாழ்கின்ற அரசனாகிய இந்திரனும், மற்றும் சூழ்ந்துள்ளவர்களும் வாழும்பொருட்டு நடனம் புரிந்த இறைவனிடம் ஆடலில் தோற்று, தன் குற்றம் நீங்குமாறு அப்பெருமானை வழிபட்டு காளி அருள் பெற்ற செயல் சப்தலோகங்களிலும் பல ஊழிக்காலமாக பேசப்பட்டு வரும் பெருமையுடைய காழிநகராகும். 

3524 நச்சரவு கச்செனவ சைச்சுமதியுச்சியின்மி லைச்சொருகையான்மெய்ச்சிர மனைச்சுலகி னிச்சமிடுபிச்சையமர் பிச்சனிடமாம்மச்சமத நச்சிமத மச்சிறுமியைச்செய்தவ வச்சவிரதக்கொச்சைமுர வச்சர்பணி யச்சுரர்கணச்சிமிடை கொச்சைநகரே3.067.11
நஞ்சையுடைய பாம்பைக் கச்சாகக் கட்டி, சந்திரனைத் தலையிலே சூடி, ஒரு கையில் பிரமகபாலத்தைத் தாங்கி, உலகிலே நாடோறும் இடுகின்ற பிச்சையை விரும்பும் பித்தனாகிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம், மீன் நாற்றத்தை விரும்பும் மச்சகந்தியை வசமிழந்து ஆற்றினிடையில் புணர்ந்த கொச்சைத் தன்மைக்குக் கதறி அது நீங்க பராசரமுனிவர் வணங்க, தேவர்களும் விரும்பி அணுகும் கொச்சைவயம் எனப்படும் திருத்தலமாகும். 

3525 ஒழுகலரி தழிகலியி லுழியுலகுபழிபெருகு வழியைநினையாமுழுதுடலி லெழுமயிர்க டழுவுமுனிகுழுவினொடு கெழுவுசிவனைத்தொழுதுலகி லிழுகுமல மழியும்வகைகழுவுமுரை கழுமலநகர்ப்பழுதிலிறை யெழுதுமொழி தமிழ்விரகன்வழிமொழிகண் மொழிதகையவே3.067.12
நல்லொழுக்கத்தில் நிற்றல் அரிதாகி அழிகின்ற கலிகாலத்தில் உலகில் பழிபெருகுதலை நினைந்து வருந்தி, உடல் முழுவதும் முடி முளைத்துள்ள உரோமச முனிவர் தம் குழுவினருடன் அங்குத் தங்கி, சிவபெருமானைத் தொழுது, உலக இச்சைக்கு இழுக்கின்ற மலங்கள் நீங்கிச் சிவஞான உபதேசம் பெற்றதால் கழுமலம் எனப் போற்றப்படும் திருத்தலத்தினை வணங்குவோரின் குற்றம் இல்லையாகச் செய்கின்ற தலைவனும், எழுதும் வேதமெனப் போற்றப்படும் தமிழ் வல்லவனுமாகிய ஞானசம்பந்தன் அருளிய இந்த வழிமொழித் திருவிராகப் பாசுரங்கள் பாடிப் பயன்பெறும் தன்மை உடையன.

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 02 Apr 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.