LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

மூன்றாம் திருமுறை-75

3.075.திருச்சண்பைநகர் 
பண் - சாதாரி 
திருச்சிற்றம்பலம் 
3603 எந்தமது சிந்தைபிரி யாதபெரு
மானென விறைஞ்சியிமையோர்
வந்துதுதி செய்யவளர் தூபமொடு
தீபமலி வாய்மையதனால்
அந்தியமர் சந்திபல வர்ச்சனைகள்
செய்யவமர் கின்றவழகன்
சந்தமலி குந்தளநன் மாதினொடு
மேவுபதி சண்பைநகரே
3.075.1
‘எங்கள் சிந்தையிலிருந்து நீங்காத தலைவனே!’ என்று தேவர்கள் தொழுது போற்ற, நறுமணம் கமழும் தூபதீபம் முதலிய உபசாரங்களோடு பூசாவிதிப்படி மாலை, முதலிய சந்தியா காலங்களில் அர்ச்சனைகள் செய்ய வீற்றிருக்கும் அழகனான சிவபெருமான், நறுமணம் கமழும் கூந்தலையுடைய உமாதேவியை உடனாகக் கொண்டு விளங்குகின்ற தலம் திருச்சண்பைநகர் ஆகும். 
3604 அங்கம்விரி துத்தியர வாமைவிர
வாரமமர் மார்பிலழகன்
பங்கய முகத்தரிவை யோடுபிரி
யாதுபயில் கின்றபதிதான்
பொங்குபர வைத்திரை கொணர்ந்துபவ
ளத்திரள் பொலிந்தவயலே
சங்குபுரி யிப்பிதர ளத்திரள்
பிறங்கொளிகொள் சண்பைநகரே
3.075.2
திருமேனியிலே பரந்த புள்ளிகளையுடைய பாம்பையும், ஆமையோட்டையும் கலந்த மாலையாக மார்பிலே விரும்பியணிந்த அழகனாகிய சிவபெருமான், தாமரை மலர்போன்ற முகத்தையுடைய உமாதேவியாரோடு பிரியாது வாழ்கின்ற தலமாவது, பொங்கியெழும் கடலலைகள் அடித்துக்கொண்டு வந்து குவிக்கின்ற பவளத்திரள்களின் பக்கத்திலே, வலம்புரிச் சங்குகளும், சிப்பிகளும் சொரிந்த முத்துக் குவியல்களின் மிகுதியான பிரகாசத்தைக் கொண்ட திருச்சண்பை நகராகும். 
3605 போழுமதி தாழுநதி பொங்கரவு
தங்குபுரி புன்சடையினன்
யாழின்மொழி மாழைவிழி யேழையிள
மாதினொ டிருந்தபதிதான்
வாழைவளர் ஞாழன்மகிழ் மன்னுபுனை
துன்னுபொழின் மாடுமடலார்
தாழைமுகிழ் வேழமிகு தந்தமென
வுந்துதகு சண்பைநகரே
3.075.3
வட்டவடிவைப் பிளந்தாற் போன்ற பிறைச் சந்திரனும், கீழே பாய்ந்து ஓடுகின்ற கங்கையாறும், சீறும் பாம்புகளும் தங்குகின்ற முறுக்குண்ட செஞ்சடையுடையவன் சிவபெருமான், யாழ் போன்ற இனிய மொழியையும், மாம்பிஞ்சு போன்ற விழிகளையும் கொண்டு தன்னையே பற்றுக் கோடாகக் கொண்ட உமாதேவியோடு அப்பெருமான் வீற்றிருந்தருளும் தலம், வாழை, புலிநகக் கொன்றை, மகிழ், புன்னை முதலிய மரங்கள் நிறைந்து அடர்ந்த சோலைகளின் பக்கத்தில் மடல்கள் பொருந்திய தாழையின் அரும்பை யானையின் ஒடிந்த தந்தம் என்று சூடாது அலட்சியம் செய்யும் திருச்சண்பை நகராகும். 
3606 கொட்டமுழ விட்டவடி வட்டணைகள்
கட்டநட மாடிகுலவும்
பட்டநுதல் கட்டுமலர் மட்டுமலி
பாவையொடு மேவுபதிதான்
வட்டமதி தட்டுபொழி லுட்டமது
வாய்மைவழு வாதமொழியார்
சட்டகலை யெட்டுமரு வெட்டும்வளர்
தத்தைபயில் சண்பைநகரே
3.075.4
முழவு முதலிய வாத்தியங்கள் ஒலிக்க, வைத்த பாதங்கள் வட்டணை என்னும் நாட்டிய வகைகளைச் செய்யத் திருநடனம் செய்யும் சிவபெருமான் பட்டத்தை நெற்றியில் அணிந்து, சூடிய மலர்மாலைகளின் நறுமணம் மிகுந்த பாவை போன்ற உமாதேவியாரோடு வீற்றிருந்தருளுகின்ற தலமாவது, எப்போதும் உண்மையே பேசுகின்ற, அறுபத்து நான்கு கலைகளையும் பயில்கின்ற கற்றவர்கள் கூறுவனவற்றை, சந்திரனொளி நுழைய முடியாதவாறு ஓங்கி உயர்ந்து அடத்தியாக உள்ள சோலைகளில் வளர்கின்ற கிளிகள் சொல்லும் பான்மையுடன் விளங்கும் திருச்சண்பை நகராகும். 
3607 பணங்கெழுவு பாடலினொ டாடல்பிரி
யாதபர மேட்டிபகவன்
அணங்கெழுவு பாகமுடை யாகமுடை
யன்பர்பெரு மானதிடமாம்
இணங்கெழுவி யாடுகொடி மாடமதி
னீடுவிரை யார் புறவெலாந்
தணங்கெழுவி யேடலர்கொ டாமரையி
லன்னம்வளர் சண்பைநகரே
3.075.5
 பண்ணிசையோடு கூடிய பாடலும், ஆடலும் நீங்காத பரம்பொருளும், ஐசுவரியம் முதலிய ஆறுகுணங்களை உடையவனும், உமாதேவியைத் தன் திருமேனியில் இடப்பாகமாகக் கொண்டவனும், அன்பர்கட்கு அருள்புரிகின்ற பெருமானுமாகிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலமாவது, ஒன்றோடொன்று இணங்கியாடுமாறு நாட்டப்பட்ட கொடிகளையுடைய மாடங்களும், மதில்களும் உடையதும், மணம் பொருந்திய புறவிடங்களிலெல்லாம் குளிர்ச்சி பொருந்திய இதழ்கள் விரிந்த தாமரைமலர்கள் மேல் அன்னங்கள் வளர்கின்ற இயல்பினதும் ஆகிய திருச்சண்பைநகர் ஆகும். 
3608 பாலனுயிர் மேலணவு காலனுயிர்
பாறவுதை செய்தபரமன்
ஆலுமயில் போலியலி யாயிழைத
னோடுமமர் வெய்துமிடமாம்
ஏலமலி சோலையின வண்டுமலர்
கிண்டிநற வுண்டிசைசெயச்
சாலிவயல் கோலமலி சேலுகள
நீலம்வளர் சண்பைநகரே
3.075.6
பாலனான மார்க்கண்டேயனின் உயிரைக் கவர வந்த எமனது உயிர் நீங்கும்படி உதைத்த பரமன், ஆடுகின்ற மயில் போன்ற சாயலையுடைய ஆராய்ந்து தேர்ந்தெடுத்த ஆபரணங்களையணிந்த உமாதேவியோடு வீற்றிருந்தருளும் தலமாவது, ஏலம் முதலிய வாசனைப் பொருள்கள் மிகுந்த சோலைகளில் வண்டுகளின் கூட்டம் மலர்களைக் கிளறி, தேனைக்குடித்து இசைபாட, அழகிய மீன்கள் துள்ளிப்பாய, நீலோற் பல மலர்கள் செழித்து வளர்கின்ற திருச்சண்பை நகர் ஆகும். 
3609 விண்பொயத னான்மழைவி ழாதொழியி
னும்விளைவு தான்மிகவுடை
மண்பொயத னால்வளமி லாதொழியி
னுந்தமது வண்மைவழுவார்
உண்பகர வாருலகி னூழிபல
தோறுநிலை யானபதிதான்
சண்பைநக ரீசனடி தாழுமடி
யார்தமது தன்மையதுவே
3.075.7
வானம் பொய்த்து மழை பெய்யாது ஒழிந்தாலும், மிகுந்த விளைச்சலைத்தரும் நிலம் வறண்டதால் வளம் இல்லாமல் போனாலும், அடியவர்கட்கும், மற்றும் பசித்தவர்கட்கும் உணவுதரத் தம் கொடைத்தன்மையில் தவறாதவர்கள், நெடிய உலகத்தில் பல ஊழிகளிலும் நிலையாக இருந்த தலம் திருச்சண்பைநகர் ஆகும். அங்குக் கோயில் கொண்ட சிவபெருமான் திருவடிகளைத் தொழுது வணங்குகின்ற அடியார்களின் தன்மையும் அதுவேயாகும். 
3610 வரைக்குலம கட்கொரு மறுக்கம்வரு
வித்தமதி யில்வலியுடை
அரக்கனது ரக்கரசி ரத்துற
வடர்த்தருள் புரிந்தவழகன்
இருக்கையத ருக்கன்முத லானவிமை
யோர்குழுமி யேழ்விழவினிற்
றருக்குல நெருக்குமலி தண்பொழில்கள்
கொண்டலன சண்பைநகரே
3.075.8
கயிலைமலையைப் பெயர்த்து இமயமலையரசனின் மகளான உமாதேவிக்கு அச்சத்தை உண்டாக்கிய, அறிவற்ற ஆனால் வலிமையுடைய இராவணனின் மார்பு, கைகள், தலைகள் ஆகியவை மலையின்கீழ் நொறுங்கும் படி தன் காற்பெருவிரலை ஊன்றி, பின் அவன் தன் தவறுணர்ந்து இறைஞ்ச ஒளிபொருந்திய வெற்றிவாளும், நீண்ட ஆயுளும் கொடுத்து அருள்புரிந்த அழகனான சிவபெருமான் வீற்றிருந் தருளும் தலமாவது, சூரியன் முதலான தேவர்கள் ஏழாந்திரு விழாவில் கூடிவந்து வணங்க, தேவலோகத்திலுள்ள கற்பகச்சோலையை நெருக்கும்படி, மேகம் படிந்த குளிர்ச்சி பொருந்திய சோலைகள் சூழ்ந்த வளமிக்க திருச்சண்பைநகர் ஆகும். 
3611 நீலவரை போலநிகழ் கேழலுரு
நீள்பறவை நேருருவமாம்
மாலுமல ரானுமறி யாமைவளர்
தீயுருவ மானவரதன்
சேலுமின வேலுமன கண்ணியொடு
நண்ணுபதி சூழ்புறவெலாஞ்
சாலிமலி சோலைகுயில் புள்ளினொடு
கிள்ளைபயில் சண்பைநகரே
3.075.9
நீலமலைபோன்ற பெரிய பன்றி உருவம் கொண்ட திருமாலும், பெரிய அன்னப்பறவையின் உருவம் தாங்கிய பிரமனும், அறியாத வகையில் வளர்ந்தோங்கிய நெருப்புப் பிழம்பு வடிவாகிய வணங்குவோர்க்கு வேண்டும் வரங்கள் தருகின்ற சிவபெருமான், சேல்மீனும், வேலும் ஒத்த கண்களையுடைய உமாதேவியோடு வீற்றிருந்தருளும் தலம், சுற்றியுள்ள அயலிடங்களிலெல்லாம் நெற்பயிர்கள் மலிந்ததும், சோலைகளில் குயில்களும், மற்ற பறவைகளோடு கிளிகளும் வசிக்கின்றதுமான திருச்சண்பை நகராகும். 
3612 போதியர்கள் பிண்டியர்கள் போதுவழு,
வாதவகை யுண்டுபலபொய்
ஓதியவர் கொண்டுசெய்வ தொன்றுமிலை
நன்றதுணர் வீருரைமினோ
ஆதியெமை யாளுடைய வரிவையொடு
பிரிவிலி யமர்ந்தபதிதான்
சாதிமணி தெண்டிரை கொணர்ந்துவயல்
புகவெறிகொள் சண்பைநகரே
3.075.10
அரசமரத்தை வணங்கும் புத்தர்களும், அசோக மரத்தை வணங்கும் சமணர்களும் நேரம்தோறும் தவறாது உண்டு பொய்ப்பொருளாம் நிலையற்ற உலகப்பொருள்களைப் பற்றிப் பேசுகின்ற, மெய்ப்பொருளாம் இறைவனைப் பற்றிப் போசாத அவர்கள் உரைகளை மேற்கொண்டு, செய்யத்தக்க பயனுடைய செயல்யாதுமில்லை. பயன்தரும் நெறி எது என்று அறிபவர்களே! முழுமுதற் கடவுளாகிய சிவபெருமானும், எங்களை ஆட்கொள்ளும் உமா தேவியும் பிரியாது தங்கி இருக்கும் தலமாவது, உயர்ந்த சாதி இரத்தினங்களைத் தௌந்த கடலலைகள் அடித்துக்கொண்டு வந்து வயல்களில் விழும்படி செய்கின்ற திருச்சண்பை நகராகும். அதனைப் புகழ்ந்து பேசி அத்தலத்து இறைவனை வழிபடுவீர்களாக. 
3613 வாரின்மலி கொங்கையுமை நங்கையொடு
சங்கரன் மகிழ்ந்தமரு
மூர்சாரின்முர றென்கடல் விசும்புற
முழங்கொலிகொள் சண்பைநகர்மேற்
பாரின்மலி கின்றபுகழ் நின்றதமிழ்
ஞானசம் பந்தனுரைசெய்
சீரின்மலி செந்தமிழ்கள் செப்புமவர்
சேர்வர்சிவ லோகநெறியே
3.075.11
கச்சணிந்த கொங்கைகளையுடைய உமைநங்கையோடு எவ்வுயிர்கட்கும் நன்மையைச் செய்கின்ற சங்கரன் என்ற பெயர் கொண்ட சிவபெருமான் மகிழ்ந்து வீற்றிருந்தருளும் தலமாவதும், வீதிகள் முதலிய இடங்களில் கடலோசைபோல் முழங்குகின்ற பேரொலியானது, வானுலகைச் சென்றடையுமாறு உள்ளதும் ஆகிய திருச்சண்பை நகரைப் போற்றி, இப்பூவுலகில் நிலைத்த புகழுடைய தமிழ் ஞானசம்பந்தன் அருளிய சிறப்புடைய இச்செந்தமிழ்ப் பாக்களைப் பாடுகிறவர்கள் சிவலோகத்தை அடைவர். 
திருச்சிற்றம்பலம்

3.075.திருச்சண்பைநகர் 
பண் - சாதாரி 
திருச்சிற்றம்பலம் 

3603 எந்தமது சிந்தைபிரி யாதபெருமானென விறைஞ்சியிமையோர்வந்துதுதி செய்யவளர் தூபமொடுதீபமலி வாய்மையதனால்அந்தியமர் சந்திபல வர்ச்சனைகள்செய்யவமர் கின்றவழகன்சந்தமலி குந்தளநன் மாதினொடுமேவுபதி சண்பைநகரே3.075.1
‘எங்கள் சிந்தையிலிருந்து நீங்காத தலைவனே!’ என்று தேவர்கள் தொழுது போற்ற, நறுமணம் கமழும் தூபதீபம் முதலிய உபசாரங்களோடு பூசாவிதிப்படி மாலை, முதலிய சந்தியா காலங்களில் அர்ச்சனைகள் செய்ய வீற்றிருக்கும் அழகனான சிவபெருமான், நறுமணம் கமழும் கூந்தலையுடைய உமாதேவியை உடனாகக் கொண்டு விளங்குகின்ற தலம் திருச்சண்பைநகர் ஆகும். 

3604 அங்கம்விரி துத்தியர வாமைவிரவாரமமர் மார்பிலழகன்பங்கய முகத்தரிவை யோடுபிரியாதுபயில் கின்றபதிதான்பொங்குபர வைத்திரை கொணர்ந்துபவளத்திரள் பொலிந்தவயலேசங்குபுரி யிப்பிதர ளத்திரள்பிறங்கொளிகொள் சண்பைநகரே3.075.2
திருமேனியிலே பரந்த புள்ளிகளையுடைய பாம்பையும், ஆமையோட்டையும் கலந்த மாலையாக மார்பிலே விரும்பியணிந்த அழகனாகிய சிவபெருமான், தாமரை மலர்போன்ற முகத்தையுடைய உமாதேவியாரோடு பிரியாது வாழ்கின்ற தலமாவது, பொங்கியெழும் கடலலைகள் அடித்துக்கொண்டு வந்து குவிக்கின்ற பவளத்திரள்களின் பக்கத்திலே, வலம்புரிச் சங்குகளும், சிப்பிகளும் சொரிந்த முத்துக் குவியல்களின் மிகுதியான பிரகாசத்தைக் கொண்ட திருச்சண்பை நகராகும். 

3605 போழுமதி தாழுநதி பொங்கரவுதங்குபுரி புன்சடையினன்யாழின்மொழி மாழைவிழி யேழையிளமாதினொ டிருந்தபதிதான்வாழைவளர் ஞாழன்மகிழ் மன்னுபுனைதுன்னுபொழின் மாடுமடலார்தாழைமுகிழ் வேழமிகு தந்தமெனவுந்துதகு சண்பைநகரே3.075.3
வட்டவடிவைப் பிளந்தாற் போன்ற பிறைச் சந்திரனும், கீழே பாய்ந்து ஓடுகின்ற கங்கையாறும், சீறும் பாம்புகளும் தங்குகின்ற முறுக்குண்ட செஞ்சடையுடையவன் சிவபெருமான், யாழ் போன்ற இனிய மொழியையும், மாம்பிஞ்சு போன்ற விழிகளையும் கொண்டு தன்னையே பற்றுக் கோடாகக் கொண்ட உமாதேவியோடு அப்பெருமான் வீற்றிருந்தருளும் தலம், வாழை, புலிநகக் கொன்றை, மகிழ், புன்னை முதலிய மரங்கள் நிறைந்து அடர்ந்த சோலைகளின் பக்கத்தில் மடல்கள் பொருந்திய தாழையின் அரும்பை யானையின் ஒடிந்த தந்தம் என்று சூடாது அலட்சியம் செய்யும் திருச்சண்பை நகராகும். 

3606 கொட்டமுழ விட்டவடி வட்டணைகள்கட்டநட மாடிகுலவும்பட்டநுதல் கட்டுமலர் மட்டுமலிபாவையொடு மேவுபதிதான்வட்டமதி தட்டுபொழி லுட்டமதுவாய்மைவழு வாதமொழியார்சட்டகலை யெட்டுமரு வெட்டும்வளர்தத்தைபயில் சண்பைநகரே3.075.4
முழவு முதலிய வாத்தியங்கள் ஒலிக்க, வைத்த பாதங்கள் வட்டணை என்னும் நாட்டிய வகைகளைச் செய்யத் திருநடனம் செய்யும் சிவபெருமான் பட்டத்தை நெற்றியில் அணிந்து, சூடிய மலர்மாலைகளின் நறுமணம் மிகுந்த பாவை போன்ற உமாதேவியாரோடு வீற்றிருந்தருளுகின்ற தலமாவது, எப்போதும் உண்மையே பேசுகின்ற, அறுபத்து நான்கு கலைகளையும் பயில்கின்ற கற்றவர்கள் கூறுவனவற்றை, சந்திரனொளி நுழைய முடியாதவாறு ஓங்கி உயர்ந்து அடத்தியாக உள்ள சோலைகளில் வளர்கின்ற கிளிகள் சொல்லும் பான்மையுடன் விளங்கும் திருச்சண்பை நகராகும். 

3607 பணங்கெழுவு பாடலினொ டாடல்பிரியாதபர மேட்டிபகவன்அணங்கெழுவு பாகமுடை யாகமுடையன்பர்பெரு மானதிடமாம்இணங்கெழுவி யாடுகொடி மாடமதினீடுவிரை யார் புறவெலாந்தணங்கெழுவி யேடலர்கொ டாமரையிலன்னம்வளர் சண்பைநகரே3.075.5
 பண்ணிசையோடு கூடிய பாடலும், ஆடலும் நீங்காத பரம்பொருளும், ஐசுவரியம் முதலிய ஆறுகுணங்களை உடையவனும், உமாதேவியைத் தன் திருமேனியில் இடப்பாகமாகக் கொண்டவனும், அன்பர்கட்கு அருள்புரிகின்ற பெருமானுமாகிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலமாவது, ஒன்றோடொன்று இணங்கியாடுமாறு நாட்டப்பட்ட கொடிகளையுடைய மாடங்களும், மதில்களும் உடையதும், மணம் பொருந்திய புறவிடங்களிலெல்லாம் குளிர்ச்சி பொருந்திய இதழ்கள் விரிந்த தாமரைமலர்கள் மேல் அன்னங்கள் வளர்கின்ற இயல்பினதும் ஆகிய திருச்சண்பைநகர் ஆகும். 

3608 பாலனுயிர் மேலணவு காலனுயிர்பாறவுதை செய்தபரமன்ஆலுமயில் போலியலி யாயிழைதனோடுமமர் வெய்துமிடமாம்ஏலமலி சோலையின வண்டுமலர்கிண்டிநற வுண்டிசைசெயச்சாலிவயல் கோலமலி சேலுகளநீலம்வளர் சண்பைநகரே3.075.6
பாலனான மார்க்கண்டேயனின் உயிரைக் கவர வந்த எமனது உயிர் நீங்கும்படி உதைத்த பரமன், ஆடுகின்ற மயில் போன்ற சாயலையுடைய ஆராய்ந்து தேர்ந்தெடுத்த ஆபரணங்களையணிந்த உமாதேவியோடு வீற்றிருந்தருளும் தலமாவது, ஏலம் முதலிய வாசனைப் பொருள்கள் மிகுந்த சோலைகளில் வண்டுகளின் கூட்டம் மலர்களைக் கிளறி, தேனைக்குடித்து இசைபாட, அழகிய மீன்கள் துள்ளிப்பாய, நீலோற் பல மலர்கள் செழித்து வளர்கின்ற திருச்சண்பை நகர் ஆகும். 

3609 விண்பொயத னான்மழைவி ழாதொழியினும்விளைவு தான்மிகவுடைமண்பொயத னால்வளமி லாதொழியினுந்தமது வண்மைவழுவார்உண்பகர வாருலகி னூழிபலதோறுநிலை யானபதிதான்சண்பைநக ரீசனடி தாழுமடியார்தமது தன்மையதுவே3.075.7
வானம் பொய்த்து மழை பெய்யாது ஒழிந்தாலும், மிகுந்த விளைச்சலைத்தரும் நிலம் வறண்டதால் வளம் இல்லாமல் போனாலும், அடியவர்கட்கும், மற்றும் பசித்தவர்கட்கும் உணவுதரத் தம் கொடைத்தன்மையில் தவறாதவர்கள், நெடிய உலகத்தில் பல ஊழிகளிலும் நிலையாக இருந்த தலம் திருச்சண்பைநகர் ஆகும். அங்குக் கோயில் கொண்ட சிவபெருமான் திருவடிகளைத் தொழுது வணங்குகின்ற அடியார்களின் தன்மையும் அதுவேயாகும். 

3610 வரைக்குலம கட்கொரு மறுக்கம்வருவித்தமதி யில்வலியுடைஅரக்கனது ரக்கரசி ரத்துறவடர்த்தருள் புரிந்தவழகன்இருக்கையத ருக்கன்முத லானவிமையோர்குழுமி யேழ்விழவினிற்றருக்குல நெருக்குமலி தண்பொழில்கள்கொண்டலன சண்பைநகரே3.075.8
கயிலைமலையைப் பெயர்த்து இமயமலையரசனின் மகளான உமாதேவிக்கு அச்சத்தை உண்டாக்கிய, அறிவற்ற ஆனால் வலிமையுடைய இராவணனின் மார்பு, கைகள், தலைகள் ஆகியவை மலையின்கீழ் நொறுங்கும் படி தன் காற்பெருவிரலை ஊன்றி, பின் அவன் தன் தவறுணர்ந்து இறைஞ்ச ஒளிபொருந்திய வெற்றிவாளும், நீண்ட ஆயுளும் கொடுத்து அருள்புரிந்த அழகனான சிவபெருமான் வீற்றிருந் தருளும் தலமாவது, சூரியன் முதலான தேவர்கள் ஏழாந்திரு விழாவில் கூடிவந்து வணங்க, தேவலோகத்திலுள்ள கற்பகச்சோலையை நெருக்கும்படி, மேகம் படிந்த குளிர்ச்சி பொருந்திய சோலைகள் சூழ்ந்த வளமிக்க திருச்சண்பைநகர் ஆகும். 

3611 நீலவரை போலநிகழ் கேழலுருநீள்பறவை நேருருவமாம்மாலுமல ரானுமறி யாமைவளர்தீயுருவ மானவரதன்சேலுமின வேலுமன கண்ணியொடுநண்ணுபதி சூழ்புறவெலாஞ்சாலிமலி சோலைகுயில் புள்ளினொடுகிள்ளைபயில் சண்பைநகரே3.075.9
நீலமலைபோன்ற பெரிய பன்றி உருவம் கொண்ட திருமாலும், பெரிய அன்னப்பறவையின் உருவம் தாங்கிய பிரமனும், அறியாத வகையில் வளர்ந்தோங்கிய நெருப்புப் பிழம்பு வடிவாகிய வணங்குவோர்க்கு வேண்டும் வரங்கள் தருகின்ற சிவபெருமான், சேல்மீனும், வேலும் ஒத்த கண்களையுடைய உமாதேவியோடு வீற்றிருந்தருளும் தலம், சுற்றியுள்ள அயலிடங்களிலெல்லாம் நெற்பயிர்கள் மலிந்ததும், சோலைகளில் குயில்களும், மற்ற பறவைகளோடு கிளிகளும் வசிக்கின்றதுமான திருச்சண்பை நகராகும். 

3612 போதியர்கள் பிண்டியர்கள் போதுவழு,வாதவகை யுண்டுபலபொய்ஓதியவர் கொண்டுசெய்வ தொன்றுமிலைநன்றதுணர் வீருரைமினோஆதியெமை யாளுடைய வரிவையொடுபிரிவிலி யமர்ந்தபதிதான்சாதிமணி தெண்டிரை கொணர்ந்துவயல்புகவெறிகொள் சண்பைநகரே3.075.10
அரசமரத்தை வணங்கும் புத்தர்களும், அசோக மரத்தை வணங்கும் சமணர்களும் நேரம்தோறும் தவறாது உண்டு பொய்ப்பொருளாம் நிலையற்ற உலகப்பொருள்களைப் பற்றிப் பேசுகின்ற, மெய்ப்பொருளாம் இறைவனைப் பற்றிப் போசாத அவர்கள் உரைகளை மேற்கொண்டு, செய்யத்தக்க பயனுடைய செயல்யாதுமில்லை. பயன்தரும் நெறி எது என்று அறிபவர்களே! முழுமுதற் கடவுளாகிய சிவபெருமானும், எங்களை ஆட்கொள்ளும் உமா தேவியும் பிரியாது தங்கி இருக்கும் தலமாவது, உயர்ந்த சாதி இரத்தினங்களைத் தௌந்த கடலலைகள் அடித்துக்கொண்டு வந்து வயல்களில் விழும்படி செய்கின்ற திருச்சண்பை நகராகும். அதனைப் புகழ்ந்து பேசி அத்தலத்து இறைவனை வழிபடுவீர்களாக. 

3613 வாரின்மலி கொங்கையுமை நங்கையொடுசங்கரன் மகிழ்ந்தமருமூர்சாரின்முர றென்கடல் விசும்புறமுழங்கொலிகொள் சண்பைநகர்மேற்பாரின்மலி கின்றபுகழ் நின்றதமிழ்ஞானசம் பந்தனுரைசெய்சீரின்மலி செந்தமிழ்கள் செப்புமவர்சேர்வர்சிவ லோகநெறியே3.075.11
கச்சணிந்த கொங்கைகளையுடைய உமைநங்கையோடு எவ்வுயிர்கட்கும் நன்மையைச் செய்கின்ற சங்கரன் என்ற பெயர் கொண்ட சிவபெருமான் மகிழ்ந்து வீற்றிருந்தருளும் தலமாவதும், வீதிகள் முதலிய இடங்களில் கடலோசைபோல் முழங்குகின்ற பேரொலியானது, வானுலகைச் சென்றடையுமாறு உள்ளதும் ஆகிய திருச்சண்பை நகரைப் போற்றி, இப்பூவுலகில் நிலைத்த புகழுடைய தமிழ் ஞானசம்பந்தன் அருளிய சிறப்புடைய இச்செந்தமிழ்ப் பாக்களைப் பாடுகிறவர்கள் சிவலோகத்தை அடைவர். 

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 02 Apr 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.