LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

மூன்றாம் திருமுறை-78

3.078.திருவேதிகுடி 
பண் - சாதாரி 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - வேதபுரீசுவரர். 
தேவியார் - மங்கையர்க்கரசியம்மை. 
3635 நீறுவரி யாடரவொ டாமைமன
வென்புநிரை பூண்பரிடபம்
ஏறுவரி யாவரு மிறைஞ்சுகழ
லாதிய ரிருந்தவிடமாம்
தாறுவிரி பூகமலி வாழைவிரை
நாறவிணை வாளைமடுவில்
வேறுபிரி யாதுவிளை யாடவள
மாரும்வயல் வேதிகுடியே
3.078.1
திருநீற்றினையும், வரிகளையுடைய ஆடும் பாம்பையும், ஆமையோட்டையும், அக்குமணியையும், எலும்பு மாலையையும் சிவபெருமான் அணிந்துள்ளார். அவர் இட பவாகனத்தில் ஏறுவார். யாவரும் வணங்கத்தக்க முதல்வராகிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம், பாளைகள் விரிந்த பாக்குமரங்கள் நிறைந்த சோலைகளிலும், பழங்கள் கனிந்த வாழைத் தோட்டங்களிலும் நறுமணம் வீச, மடுக்களில் ஆணும், பெண்ணுமான வாளை மீன்கள் வேறு பிரியாமல் விளையாடும், வயல்வளமிக்க திருவேதிகுடி ஆகும். 
3636 சொற்பிரிவி லாதமறை பாடிநட,
மாடுவர்தொ லானையுரிவை
மற்புரி புயத்தினிது மேவுவரெந்
நாளும்வளர் வானவர்தொழத்
துற்பரிய நஞ்சமுத மாகமு
னயின்றவ ரியன்றதொகுசீர்
வெற்பரையன் மங்கையொரு பங்கர்நக
ரென்பர்திரு வேதிகுடியே
3.078.2
சிவபெருமான் இசையும், சொல்லின் மெய்ப்பொருளும் பிரிதல் இல்லாத வேதத்தைப்பாடி நடனம் ஆடுவர். முதிர்ந்த யானையின் தோலை உரித்து மல்யுத்தம் புரியவல்ல தோளில் இனிதாக அணிவார். நாள்தோறும் தேவர்கள் வணங்க, உண்ணுதற்கரிய நஞ்சை அமுதமாக முற்காலத்தில் உண்டருளியவர். பலவாற்றானும் புகழ்மிக்க மலையரையன் மகளாகிய உமாதேவியாரை ஒருபாகமாகக் கொண்டருளிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலம் திருவேதிகுடி என்பதாம். 
3637 போழுமதி பூணரவு கொன்றைமலர்
துன்றுசடை வென்றிபுகமேல்
வாழுநதி தாழுமரு ளாளரிரு
ளார்மிடறர் மாதரிமையோர்
சூழுமிர வாளர்திரு மார்பில்விரி
நூலர்வரி தோலருடைமேல்
வேழவுரி போர்வையினர் மேவுபதி
யென்பர்திரு வேதிகுடியே
3.078.3
சிவபெருமான் வட்டத்தைப் பிளந்தாலனைய பிறைச்சந்திரனை அணிந்தவர். பாம்பு, கொன்றைமலர் இவற்றைச் சடையிலணிந்த, அதில் தங்கிய கங்காநதியைப் பகீரதன் முயற்சிக்கு வெற்றி உண்டாக உலகிற் பாயச்செய்த அருளாளர். விடம் உண்டதால் கருநிறம் வாய்ந்த கண்டத்தையுடையவர். தேவ லோகத்திலுள்ள மகளிரும், ஆடவரும் தங்கள் குறைகளைக் கூறி அவை தீர அருளை வேண்டுபவர். அழகிய மார்பில் முப்புரிநூல் அணிந்தவர். புலித் தோலாடை அணிந்தவர். அதன் மேல் யானைத்தோலைப் போர்த்தவர். அத்தகைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலம் திருவேதிகுடி ஆகும். 
3638 காடர்கரி காலர்கனல் கையரனன்
மெய்யருடல் செய்யர்செவியில்
தோடர்தெரி கீளர்சரி கோவணவ
ராவணவர் தொல்லைநகர்தான்
பாடலுடை யார்களடி யார்கண்மல
ரோடுபுனல் கொண்டுபணிவார்
வேடமொளி யானபொடி பூசியிசை
மேவுதிரு வேதிகுடியே
3.078.4
சிவபெருமான் சுடுகாட்டில் இருப்பவர். யானையின் தோலை உரித்து அதற்குக் காலனாக ஆனவர். நெருப்பைக் கையில் ஏந்தியவர். நெருப்புப் போன்ற சிவந்த மேனி உடையவர். தூய உடம்பினர். காதில் தோட்டை அணிந்தவர். கிழிந்த ஆடை அணிந்தவர். சரிந்த கோவணத்தை அணிந்தவர். பசுவேறி வரும் கோலத்தையுடையவர். அச்சிவபெருமான் வீற்றிருந்தருளும் பழமையான நகரானது, தோத்திரம் பாடும் அடியார்கள் புனிதநீரால் அபிடேகம் செய்து, மலரால் அர்ச்சித்து வணங்கி, சிவவேடத்தை நினைப்பூட்டும் திருவெண்ணீற்றினைப் பூசிக் கீர்த்தியுடன் விளங்குகின்ற திருவேதிகுடி என்னும் திருத்தலமாகும். 
3639 சொக்கர்துணை மிக்கவெயி லுக்கற
முனிந்துதொழு மூவர்மகிழத்
தக்கவருள் பக்கமுற வைத்தவர
னாரினிது தங்குநகர்தான்
கொக்கரவ முற்றபொழில் வெற்றிநிழல்
பற்றிவரி வண்டிசைகுலாம்
மிக்கமரர் மெச்சியினி தச்சமிடர்
போகநல்கு வேதிகுடியே
3.078.5
 சிவபெருமான் மிக்க அழகுடையவன். கோபத்தால். சிரித்து மும்மதில்களும் வெந்தழியுமாறு செய்தபோது, அங்கிருந்த மூவர் தன்னை வணங்கிப் போற்ற அவர்கள் மகிழும்படியாகத் தன் பக்கத்திலே இருக்கும்படி அருள்புரிந்தவன். அப்பெருமான் வீற்றிருந்தருளும் நகராவது, மாமரச் சோலைகளில் மகளிர் விளையாடும் ஆரவாரமும், மகளிரின் மேனி ஒளியானது மாந்தளிர்களை வென்ற வெற்றி பற்றி வரிவண்டுகள் இசைபாடும் ஒலியும், தேவர்களை போற்றும் ஒலியும் கொண்டு, தன்னையடைந்து வழிபடுபவர்களின் அச்சமும், துன்பமும் நீங்க நன்மையை அளிக்கும் திருவேதிகுடி என்னும் திருத்தலமாகும். 
3640 செய்யதிரு மேனிமிசை வெண்பொடி
யணிந்துகரு மானுரிவைபோர்த்
தையமிடு மென்றுமட மங்கையொ
டகந்திரியு மண்ணலிடமாம்
வையம்விலை மாறிடினு மேறுபுகழ்
யாதவவர் வேதிகுடியே
3.078.6
சிவபெருமான் தம் சிவந்த திருமேனியில் வெண்ணிறத் திருநீற்றை அணிந்தவர். கரிய யானையின் தோலைப் போர்த்தவர். 'பிச்சையிடுங்கள்' என்று இளமைவாய்ந்த உமா தேவியாரோடு வீடுவீடாகத் திரிகின்றவர், நம் தலைவரான சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது, இப்பூமியில் பஞ்சத்தால் பண்டங்களின் விலை ஏறினாலும், மிகுந்த புகழும், குறையாத பண்பாடும் உடையவர்களும், இனிய புலவர்கட்குக் கொடையளிக்கும் போது வன்சொற்கள் சொல்லாத் தன்மையுடையவர்களும் ஆகிய மாந்தர்கள் வாழ்கின்ற திருவேதிகுடி என்னும் திருத்தலமாகும். 
3641 உன்னியிரு போதுமடி பேணுமடி
யார்தமிட ரொல்கவருளித்
துன்னியொரு நால்வருட னானிழ
லிருந்ததுணை வன்றனிடமாம்
கன்னியரொ டாடவர்கண் மாமணம்
விரும்பியரு மங்கலமிக
மின்னியலு நுண்ணிடைநன் மங்கைய
ரியற்றுபதி வேதிகுடியே
3.078.7
காலை, மாலை ஆகிய இருவேளைகளிலும் தியானித்துத் தன் திருவடிகளைப் போற்றும் அடியார்களுடைய துன்பங்கள் நீங்கும்படி அருள்செய்பவன் சிவபெருமான். தன்னையடைந்த சனகர், சனந்தனர், சனாதனர், சனற் குமாரர் என்ற நான்கு முனிவர்கட்கும் கல்லால மரத்தின்கீழ் தட்சிணாமூர்த்தி கோலம் கொண்டு அறம் உரைத்தவன். அனைத்துயிர்கட்கும் பற்றுக்கோடாய் விளங்குபவன். அவன் உறைவிடம் கன்னியர்களும், ஆடவர்களும் சிறப்பான வகையில் திருமணம் செய்து கொள்ளும் மங்கலநாளில் திருமணத்திற்குரிய மங்கலச் சடங்குகளை மிகச் சிறப்புற நடத்துகின்ற மின்னலைப் போன்ற நுண்ணிடையுடைய மகளிர்கள் வாழும் திருவேதிகுடி என்னும் திருத்தலமாகும். 
3642 உரக்கநெ ருப்பெழநெ ருக்கிவரை
பற்றியவொ ருத்தன்முடிதோள்
அரக்கனை யடர்த்தவனி சைக்கினிது
நல்கியரு ளங்கணனிடம்
முருக்கிதழ் மடக்கொடி மடந்தையரு
மாடவரு மொய்த்த கலவை
விரைக்குழன் மிகக்கமழ விண்ணிசை
யுலாவுதிரு வேதிகுடியே
3.078.8
கயிலைமலையைப் பெயர்த்து எடுக்க முயன்ற அரக்கனான இராவணனின் தலைகளையும், தோள்களையும், நெஞ்சிலும், கரத்திலும் நெருப்புப்போல வருத்துமாறு மலையின்கீழ் அடர்த்து, பின் அவன் சாமகானம் இசைக்க அவனுக்கு ஒளி பொருந்திய வெற்றிவாளையும், நீண்ட வாழ்நாளையும் அருளிய பெருங்கருணையாளனான சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலமாவது, கல்யாண முருங்கைப்பூப் போன்ற உதடுகளையுடைய, இளங்கொடி போன்ற பெண்களும், ஆடவர்களும், நறுமணம் கமழும் கலவையைக் கூந்தலில் தடவ, அதன் மணமானது விண்ணுலகிலும் பரவ விளங்கும் திருவேதிகுடி என்னும் திருத்தலமாகும். 
3643 பூவின்மிசை யந்தணனொ டாழிபொலி
யங்கையனு நேடவெரியாய்த்
தேவுமிவ ரல்லரினி யாவரென
நின்றுதிகழ் கின்றவரிடம்
பாவலர்க ளோசையியல் கேள்விய
தறாதகொடை யாளர்பயில்வாம்
மேவரிய செல்வநெடு மாடம்வளர்
வீதிநிகழ் வேதிகுடியே
3.078.9
தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனுடன்,
3644 வஞ்சமணர் தேரர்மதி கேடர்த
மனத்தறிவி லாதவர்மொழி
தஞ்சமென வென்றுமுண ராதவடி
யார்கருது சைவனிடமாம்
அஞ்சுபுலன் வென்றறு வகைப்பொரு
டெரிந்தெழு விசைக்கிளவியால்
வெஞ்சின மொழித்தவர்கண் மேவிநிகழ்
கின்றதிரு வேதிகுடியே
3.078.10
வஞ்சனையுடைய சமணர்களும், புத்தர்களும் கெட்ட மதியுடையவர்கள். இறைவனை உணரும் அறிவில்லாத அவர்கள் கூறும் மொழிகள் பற்றுக் கோடாகத் தக்கன என்று எந்நாளும் நினையாத அடியார்கள் தியானிக்கின்ற சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது ஐம்புலன்களை வென்று, அறுவகைச் சமய நூற்பொருள்களை ஆராய்ந்து, ஏழுவகைச் சுரங்களால் இசைப்பாடல்களைப் பாடி, கோபத்தை ஒழித்த அருளாளர்கள் மேவி விளங்குகின்ற திருவேதிகுடி ஆகும். 
3645 கந்தமலி தண்பொழினன் மாடமிடை
காழிவளர் ஞானமுணர்சம்
பந்தன்மலி செந்தமிழின் மாலைகொடு
வேதிகுடி யாதி கழலே
சிந்தைசெய வல்லவர்க ணல்லவர்க
ளென்னநிகழ் வெய்தியிமையோர்
அந்தவுல கெய்தியர சாளுமது
வேசரத மாணைநமதே
3.078.11
நறுமணம் கமழும் குளிர்ந்த சோலைகளும், அழகிய மாடங்களும் நெருங்கிய சீகாழியில் அவதரித்த ஞான சம்பந்தன் பொருட்செறிவுடைய செந்தமிழில் அருளிய இப்பாமாலை கொண்டு திருவேதிகுடியில் வீற்றிருந்தருளும் முதல்வனான சிவபெருமானின் திருவடிகளைச் சிந்தித்துப் போற்றுபவர்கள் நல்லவர்களாய்த் திகழ்வர். மறுமையில் தேவலோகத்தை அடைந்து அரசாள்வர். இது நமது ஆணை. 
திருச்சிற்றம்பலம்

3.078.திருவேதிகுடி 
பண் - சாதாரி 
திருச்சிற்றம்பலம் 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - வேதபுரீசுவரர். தேவியார் - மங்கையர்க்கரசியம்மை. 

3635 நீறுவரி யாடரவொ டாமைமனவென்புநிரை பூண்பரிடபம்ஏறுவரி யாவரு மிறைஞ்சுகழலாதிய ரிருந்தவிடமாம்தாறுவிரி பூகமலி வாழைவிரைநாறவிணை வாளைமடுவில்வேறுபிரி யாதுவிளை யாடவளமாரும்வயல் வேதிகுடியே3.078.1
திருநீற்றினையும், வரிகளையுடைய ஆடும் பாம்பையும், ஆமையோட்டையும், அக்குமணியையும், எலும்பு மாலையையும் சிவபெருமான் அணிந்துள்ளார். அவர் இட பவாகனத்தில் ஏறுவார். யாவரும் வணங்கத்தக்க முதல்வராகிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம், பாளைகள் விரிந்த பாக்குமரங்கள் நிறைந்த சோலைகளிலும், பழங்கள் கனிந்த வாழைத் தோட்டங்களிலும் நறுமணம் வீச, மடுக்களில் ஆணும், பெண்ணுமான வாளை மீன்கள் வேறு பிரியாமல் விளையாடும், வயல்வளமிக்க திருவேதிகுடி ஆகும். 

3636 சொற்பிரிவி லாதமறை பாடிநட,மாடுவர்தொ லானையுரிவைமற்புரி புயத்தினிது மேவுவரெந்நாளும்வளர் வானவர்தொழத்துற்பரிய நஞ்சமுத மாகமுனயின்றவ ரியன்றதொகுசீர்வெற்பரையன் மங்கையொரு பங்கர்நகரென்பர்திரு வேதிகுடியே3.078.2
சிவபெருமான் இசையும், சொல்லின் மெய்ப்பொருளும் பிரிதல் இல்லாத வேதத்தைப்பாடி நடனம் ஆடுவர். முதிர்ந்த யானையின் தோலை உரித்து மல்யுத்தம் புரியவல்ல தோளில் இனிதாக அணிவார். நாள்தோறும் தேவர்கள் வணங்க, உண்ணுதற்கரிய நஞ்சை அமுதமாக முற்காலத்தில் உண்டருளியவர். பலவாற்றானும் புகழ்மிக்க மலையரையன் மகளாகிய உமாதேவியாரை ஒருபாகமாகக் கொண்டருளிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலம் திருவேதிகுடி என்பதாம். 

3637 போழுமதி பூணரவு கொன்றைமலர்துன்றுசடை வென்றிபுகமேல்வாழுநதி தாழுமரு ளாளரிருளார்மிடறர் மாதரிமையோர்சூழுமிர வாளர்திரு மார்பில்விரிநூலர்வரி தோலருடைமேல்வேழவுரி போர்வையினர் மேவுபதியென்பர்திரு வேதிகுடியே3.078.3
சிவபெருமான் வட்டத்தைப் பிளந்தாலனைய பிறைச்சந்திரனை அணிந்தவர். பாம்பு, கொன்றைமலர் இவற்றைச் சடையிலணிந்த, அதில் தங்கிய கங்காநதியைப் பகீரதன் முயற்சிக்கு வெற்றி உண்டாக உலகிற் பாயச்செய்த அருளாளர். விடம் உண்டதால் கருநிறம் வாய்ந்த கண்டத்தையுடையவர். தேவ லோகத்திலுள்ள மகளிரும், ஆடவரும் தங்கள் குறைகளைக் கூறி அவை தீர அருளை வேண்டுபவர். அழகிய மார்பில் முப்புரிநூல் அணிந்தவர். புலித் தோலாடை அணிந்தவர். அதன் மேல் யானைத்தோலைப் போர்த்தவர். அத்தகைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலம் திருவேதிகுடி ஆகும். 

3638 காடர்கரி காலர்கனல் கையரனன்மெய்யருடல் செய்யர்செவியில்தோடர்தெரி கீளர்சரி கோவணவராவணவர் தொல்லைநகர்தான்பாடலுடை யார்களடி யார்கண்மலரோடுபுனல் கொண்டுபணிவார்வேடமொளி யானபொடி பூசியிசைமேவுதிரு வேதிகுடியே3.078.4
சிவபெருமான் சுடுகாட்டில் இருப்பவர். யானையின் தோலை உரித்து அதற்குக் காலனாக ஆனவர். நெருப்பைக் கையில் ஏந்தியவர். நெருப்புப் போன்ற சிவந்த மேனி உடையவர். தூய உடம்பினர். காதில் தோட்டை அணிந்தவர். கிழிந்த ஆடை அணிந்தவர். சரிந்த கோவணத்தை அணிந்தவர். பசுவேறி வரும் கோலத்தையுடையவர். அச்சிவபெருமான் வீற்றிருந்தருளும் பழமையான நகரானது, தோத்திரம் பாடும் அடியார்கள் புனிதநீரால் அபிடேகம் செய்து, மலரால் அர்ச்சித்து வணங்கி, சிவவேடத்தை நினைப்பூட்டும் திருவெண்ணீற்றினைப் பூசிக் கீர்த்தியுடன் விளங்குகின்ற திருவேதிகுடி என்னும் திருத்தலமாகும். 

3639 சொக்கர்துணை மிக்கவெயி லுக்கறமுனிந்துதொழு மூவர்மகிழத்தக்கவருள் பக்கமுற வைத்தவரனாரினிது தங்குநகர்தான்கொக்கரவ முற்றபொழில் வெற்றிநிழல்பற்றிவரி வண்டிசைகுலாம்மிக்கமரர் மெச்சியினி தச்சமிடர்போகநல்கு வேதிகுடியே3.078.5
 சிவபெருமான் மிக்க அழகுடையவன். கோபத்தால். சிரித்து மும்மதில்களும் வெந்தழியுமாறு செய்தபோது, அங்கிருந்த மூவர் தன்னை வணங்கிப் போற்ற அவர்கள் மகிழும்படியாகத் தன் பக்கத்திலே இருக்கும்படி அருள்புரிந்தவன். அப்பெருமான் வீற்றிருந்தருளும் நகராவது, மாமரச் சோலைகளில் மகளிர் விளையாடும் ஆரவாரமும், மகளிரின் மேனி ஒளியானது மாந்தளிர்களை வென்ற வெற்றி பற்றி வரிவண்டுகள் இசைபாடும் ஒலியும், தேவர்களை போற்றும் ஒலியும் கொண்டு, தன்னையடைந்து வழிபடுபவர்களின் அச்சமும், துன்பமும் நீங்க நன்மையை அளிக்கும் திருவேதிகுடி என்னும் திருத்தலமாகும். 

3640 செய்யதிரு மேனிமிசை வெண்பொடியணிந்துகரு மானுரிவைபோர்த்தையமிடு மென்றுமட மங்கையொடகந்திரியு மண்ணலிடமாம்வையம்விலை மாறிடினு மேறுபுகழ்யாதவவர் வேதிகுடியே3.078.6
சிவபெருமான் தம் சிவந்த திருமேனியில் வெண்ணிறத் திருநீற்றை அணிந்தவர். கரிய யானையின் தோலைப் போர்த்தவர். 'பிச்சையிடுங்கள்' என்று இளமைவாய்ந்த உமா தேவியாரோடு வீடுவீடாகத் திரிகின்றவர், நம் தலைவரான சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது, இப்பூமியில் பஞ்சத்தால் பண்டங்களின் விலை ஏறினாலும், மிகுந்த புகழும், குறையாத பண்பாடும் உடையவர்களும், இனிய புலவர்கட்குக் கொடையளிக்கும் போது வன்சொற்கள் சொல்லாத் தன்மையுடையவர்களும் ஆகிய மாந்தர்கள் வாழ்கின்ற திருவேதிகுடி என்னும் திருத்தலமாகும். 

3641 உன்னியிரு போதுமடி பேணுமடியார்தமிட ரொல்கவருளித்துன்னியொரு நால்வருட னானிழலிருந்ததுணை வன்றனிடமாம்கன்னியரொ டாடவர்கண் மாமணம்விரும்பியரு மங்கலமிகமின்னியலு நுண்ணிடைநன் மங்கையரியற்றுபதி வேதிகுடியே3.078.7
காலை, மாலை ஆகிய இருவேளைகளிலும் தியானித்துத் தன் திருவடிகளைப் போற்றும் அடியார்களுடைய துன்பங்கள் நீங்கும்படி அருள்செய்பவன் சிவபெருமான். தன்னையடைந்த சனகர், சனந்தனர், சனாதனர், சனற் குமாரர் என்ற நான்கு முனிவர்கட்கும் கல்லால மரத்தின்கீழ் தட்சிணாமூர்த்தி கோலம் கொண்டு அறம் உரைத்தவன். அனைத்துயிர்கட்கும் பற்றுக்கோடாய் விளங்குபவன். அவன் உறைவிடம் கன்னியர்களும், ஆடவர்களும் சிறப்பான வகையில் திருமணம் செய்து கொள்ளும் மங்கலநாளில் திருமணத்திற்குரிய மங்கலச் சடங்குகளை மிகச் சிறப்புற நடத்துகின்ற மின்னலைப் போன்ற நுண்ணிடையுடைய மகளிர்கள் வாழும் திருவேதிகுடி என்னும் திருத்தலமாகும். 

3642 உரக்கநெ ருப்பெழநெ ருக்கிவரைபற்றியவொ ருத்தன்முடிதோள்அரக்கனை யடர்த்தவனி சைக்கினிதுநல்கியரு ளங்கணனிடம்முருக்கிதழ் மடக்கொடி மடந்தையருமாடவரு மொய்த்த கலவைவிரைக்குழன் மிகக்கமழ விண்ணிசையுலாவுதிரு வேதிகுடியே3.078.8
கயிலைமலையைப் பெயர்த்து எடுக்க முயன்ற அரக்கனான இராவணனின் தலைகளையும், தோள்களையும், நெஞ்சிலும், கரத்திலும் நெருப்புப்போல வருத்துமாறு மலையின்கீழ் அடர்த்து, பின் அவன் சாமகானம் இசைக்க அவனுக்கு ஒளி பொருந்திய வெற்றிவாளையும், நீண்ட வாழ்நாளையும் அருளிய பெருங்கருணையாளனான சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலமாவது, கல்யாண முருங்கைப்பூப் போன்ற உதடுகளையுடைய, இளங்கொடி போன்ற பெண்களும், ஆடவர்களும், நறுமணம் கமழும் கலவையைக் கூந்தலில் தடவ, அதன் மணமானது விண்ணுலகிலும் பரவ விளங்கும் திருவேதிகுடி என்னும் திருத்தலமாகும். 

3643 பூவின்மிசை யந்தணனொ டாழிபொலியங்கையனு நேடவெரியாய்த்தேவுமிவ ரல்லரினி யாவரெனநின்றுதிகழ் கின்றவரிடம்பாவலர்க ளோசையியல் கேள்வியதறாதகொடை யாளர்பயில்வாம்மேவரிய செல்வநெடு மாடம்வளர்வீதிநிகழ் வேதிகுடியே3.078.9
தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனுடன்,

3644 வஞ்சமணர் தேரர்மதி கேடர்தமனத்தறிவி லாதவர்மொழிதஞ்சமென வென்றுமுண ராதவடியார்கருது சைவனிடமாம்அஞ்சுபுலன் வென்றறு வகைப்பொருடெரிந்தெழு விசைக்கிளவியால்வெஞ்சின மொழித்தவர்கண் மேவிநிகழ்கின்றதிரு வேதிகுடியே3.078.10
வஞ்சனையுடைய சமணர்களும், புத்தர்களும் கெட்ட மதியுடையவர்கள். இறைவனை உணரும் அறிவில்லாத அவர்கள் கூறும் மொழிகள் பற்றுக் கோடாகத் தக்கன என்று எந்நாளும் நினையாத அடியார்கள் தியானிக்கின்ற சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது ஐம்புலன்களை வென்று, அறுவகைச் சமய நூற்பொருள்களை ஆராய்ந்து, ஏழுவகைச் சுரங்களால் இசைப்பாடல்களைப் பாடி, கோபத்தை ஒழித்த அருளாளர்கள் மேவி விளங்குகின்ற திருவேதிகுடி ஆகும். 

3645 கந்தமலி தண்பொழினன் மாடமிடைகாழிவளர் ஞானமுணர்சம்பந்தன்மலி செந்தமிழின் மாலைகொடுவேதிகுடி யாதி கழலேசிந்தைசெய வல்லவர்க ணல்லவர்களென்னநிகழ் வெய்தியிமையோர்அந்தவுல கெய்தியர சாளுமதுவேசரத மாணைநமதே3.078.11
நறுமணம் கமழும் குளிர்ந்த சோலைகளும், அழகிய மாடங்களும் நெருங்கிய சீகாழியில் அவதரித்த ஞான சம்பந்தன் பொருட்செறிவுடைய செந்தமிழில் அருளிய இப்பாமாலை கொண்டு திருவேதிகுடியில் வீற்றிருந்தருளும் முதல்வனான சிவபெருமானின் திருவடிகளைச் சிந்தித்துப் போற்றுபவர்கள் நல்லவர்களாய்த் திகழ்வர். மறுமையில் தேவலோகத்தை அடைந்து அரசாள்வர். இது நமது ஆணை. 

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 02 Apr 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.