LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

மூன்றாம் திருமுறை-79

3.079.திருக்கோகரணம் 
பண் - சாதாரி 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் துளுவதேசத்திலிருப்பது. அந்தத்தேயத்தில் இது ஒரேதலம். 
சுவாமிபெயர் - மாபலநாதர். 
தேவியார் - கோகரணநாயகியம்மை. 
3646 என்றுமரி யானயல வர்க்கிய
லிசைப்பொருள்க ளாகியெனதுள்
நன்றுமொளி யானொளிசி றந்தபொன்
முடிக்கடவு ணண்ணுமிடமாம்
ஒன்றியம னத்தடியர் கூடியிமை
யோர்பரவு நீடரவமார்
குன்றுகணெ ருங்கிவிரி தண்டலை
மிடைந்துவளர் கோகரணமே
3.079.1
சிவபெருமான் அடியார் அல்லாதவர்க்கு எப்பொழுதும் காண்டற்கு அரியவன். இயற்றமிழும், இசைத்தமிழும் ஆகி எனது உள்ளத்தில் நன்கு ஒளியாகி வீற்றிருப்பவன். பொன் போன்று ஒளிரும் சடைமுடியுடைய அக்கடவுள் வீற்றிருந்தருளும் இடமாவது, ஒன்றிய மனமுடைய அடியவர்களுடன் தேவர்களும் கூடியிருந்து பரவுகின்ற குன்றுகளும், சோலைகளும் விளங்கும் திருக்கோகரணம் என்னும் திருத்தலமாகும். 
3647 பேதைமட மங்கையொரு பங்கிட
மிகுத்திடப மேறியமரர்
வாதைபட வண்கடலெ ழுந்தவிட
முண்டசிவன் வாழுமிடமாம்
மாதரொடு மாடவர்கள் வந்தடி
யிறைஞ்சிநிறை மாமலர்கடூய்க்
கோதைவரி வண்டிசைகொள் கீதமுரல்
கின்றவளர் கோகரணமே
3.079.2
பேதைமைக் குணத்தையுடைய இளம் பெண்ணாகிய உமாதேவியை இடப்பாகமாகக் கொண்டு, இடப வாகனத்தின் மேலேறி, தேவர்கள் துன்பத்தில் அழுந்தியபோது கடலில் தோன்றியவிடத்தை உட்கொண்டு சிவபெருமான் காத்தருளினார். அப்பெருமான் வீற்றிருந்தருள்கின்ற இடமாவது பெண்களோடு ஆடவர்களும் வந்து இறைவனின் திருவடிகளை வணங்கி, சிறந்த மலர்களைத் தூவிப் போற்ற, சாத்திய மாலைகளில் வரி வண்டுகள் மொய்த்து இன்னிசை எழுப்பும் கீர்த்தி மிகுந்த திருக்கோகரணம் என்னும் திருத்தலமாகும். 
3648 முறைத்திறமு றப்பொருடெரிந்துமுனி
வர்க்கருளி யாலநிழல்வாய்
மறைத்திற மறத்தொகுதி கண்டுசம
யங்களைவ குத்தவனிடம்
துறைத்துறை மிகுத்தருவி தூமலர்
சுமந்துவரை யுந்திமதகைக்
குறைத்தறை யிடக்கரி புரிந்திடறு
சாரன்மலி கோகரணமே
3.079.3
கல்லால நிழலின் கீழ்ச் சனகாதி முனிவர்கட்கு அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு பொருள்களையும் சிவபெருமான் முறையோடு உபதேசித்தார். வேதத்தின் பொருளாகிய சரியை முதலிய நாற்பாதப் பொருட்களையும் கண்டு அறுவகைச் சமயங்களை வகுத்தவர் சிவபெருமான். அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம் துறைகள்தோறும் அருவிநீர் தூய்மையான மலர்களைச் சுமந்து கொண்டு, மூங்கில்களைத் தள்ளி, மதகுகளைச் சிதைத்து, யானை பிளிற மோதும் சாரலையுடைய திருக்கோகரணம் என்னும் தலமாகும். 
3649 இலைத்தலை மிகுந்தபடை யெண்கரம்
விளங்கவெரி வீசிமுடிமேல்
அலைத்தலை தொகுத்தபுனல் செஞ்சடையில்
வைத்தவழ கன்றனிடமாம்
மலைத்தலை வகுத்தமுழை தோறுமுழை
வாளரிகள் கேழல்களிறு
கொலைத்தலை மடப்பிடிகள் கூடிவிளை
யாடிநிகழ் கோகரணமே
3.079.4
சிவபெருமான் இலைபோன்ற நுனியுடைய சூலப்படையை உடையவன். எட்டுக்கரங்களை உடையவன். நெருப்பைக் கையிலேந்தி எண்தோள் வீசி நடனம் ஆடுபவன். தலையிலுள்ள செஞ்சடையில் அலைகளையுடைய கங்கையைத் தாங்கியவன். அத்தகைய அழகான சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது மலைகளிலுள்ள குகைகளில் மான்களும், சிங்கங்களும், பன்றிகளும், யானைகளும், கொம்பாற் கொல்லுதலையுடைய இளம் பெண்யானைகளும் கூடி விளையாடுகின்ற திருக்கோகரணம் என்னும் தலமாகும். 
3650 தொடைத்தலை மலைத்திதழி துன்னிய
வெருக்கலரி வன்னிமுடியின்
சடைத்தலை மிலைச்சியத போதனனெ
மாதிபயில் கின்றபதியாம்
படைத்தலை பிடித்துமற வாளரொடு
வேடர்கள் பயின்றுகுழுமிக்
குடைத்தலை நதிப்படிய நின்றுபழி
தீரநல்கு கோகரணமே
3.079.5
சிவபெருமான் தலைமாலை அணிந்தவர். சடையில் கொன்றை, எருக்கு, அலரி, வன்னிப்பத்திரங்களையும் அணிந்தவர். எம் முதல்வரான சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற இடமானது வெற்றி பொருந்திய வாளாயுதத்தை ஏந்திய வீரர்களுடன் வேடர்கள் நட்புக் கொண்டு கூடி அலைகளையுடைய புனித நதியில் குடைந்து மூழ்கி வணங்க அப்பெருமான் அவர்களின் பழிபாவத்தை நீக்கி அருள்புரியும் திருக்கோகரணமாகும். 
3651 நீறுதிரு மேனிமிசை யாடிநிறை
வார்கழல் சிலம்பொலிசெய
ஏறுவிளை யாடவிசை கொண்டிடு
பலிக்குவரு மீசனிடமாம்
ஆறுசம யங்களும்வி ரும்பியடி
பேணியர னாகமமிகக்
கூறுமனம் வேறிரதி வந்தடியர்
கம்பம்வரு கோகரணமே
3.079.6
சிவபெருமான் திருநீற்றைத் திருமேனியில் பூசியவர். திருக்கழலில் அணிந்த சிலம்பு ஒலி செய்ய இடபத்தில் ஏறி இசைபாடிப் பலி ஏற்று வருவார். அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடமானது சிவாகம விதிப்படி இறைவனின் திருவடிகளை விரும்பி வழிபடுகின்ற ஆறு சமயத்தவர்களும், மனத்தில் சிவானந்தம் மேலிட உடலில் நடுக்கம் வருகின்ற அடியவர்களாய் வாழ்கின்ற திருக்கோகரணமாகும். 
3652 கல்லவட மொந்தைகுழ றாளமலி
கொக்கரைய ரக்கரைமிசை
பல்லபட நாகம்விரி கோவணவ
ராளுநக ரென்பரயலே
நல்லமட மாதரர னாமமு
நவிற்றிய திருத்தமுழுகக்
கொல்லவிட நோயகல் தரப்புகல்கொ
டுத்தருளு கோகரணமே
3.079.7
ஓசைமிகுந்த கல்லவடம், மொந்தை, குழல், தாளம், வலம்புரிச்சங்கு ஆகிய வாத்தியங்களுக்கு ஏற்ப சிவ பெருமான் நடனமாடுவார். அக்குப்பாசி அணிந்த இடுப்பில், நச்சுப்பற்களும், படமும் உடைய பாம்பை அணிந்து கோவண ஆடை உடுத்தவர். அத்தகைய சிவபெருமான் ஆளும் நகர் நற்குண, நற்செய்கை யுடையவர்களாகிய பெண்கள் சிவபெருமானது திருப்பெயரைச் சொல்லித் தீர்த்தத்தில் முழுக, கொல்லும் விடநோய் போன்ற வினைகளைத் தீர்த்து, காரியம் யாவினும் வெற்றி கொடுத்தருளும் திருக்கோகரணமாகும். 
3653 வரைத்தல நெருக்கிய முருட்டிரு
ணிறத்தவன வாய்களலற
விரற்றலை யுகிர்ச்சிறிது வைத்தபெரு
மானினிது மேவுமிடமாம்
புரைத்தலை கெடுத்தமுனி வாணர்பொலி
வாகிவினை தீரவதன்மேல்
குரைத்தலை கழற்பணிய வோமம்வில
கும்புகைசெய் கோகரணமே
3.079.8
முரட்டுத்தனமும், இருண்ட நிறமுமுடைய இராவணனின் பத்து வாய்களும் அலறும்படி, தன் காற்பெருவிரலை ஊன்றி அவனைக் கயிலைமலையின் கீழ் நெருக்கிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது, முனிவர்களும், வேத வல்லுநர்களும் வினைதீர, ஒலிக்கின்ற கழலணிந்த சிவபெருமானின் திருவடிகளைப் பணிந்து, அரநாமத்தினை ஓதி வேள்வி புரிய அப்புகை பரவுகின்ற திருக்கோகரணம் ஆகும். 
3654 வில்லிமையி னால்விற லரக்கனுயிர்
செற்றவனும் வேதமுதலோன்
இல்லையுள தென்றிகலி நேடவெரி
யாகியுயர் கின்றபரனூர்
எல்லையில் வரைத்தகடல் வட்டமு
மிறைஞ்சிநிறை வாசமுருவக்
கொல்லையி லிளங்குறவர் தம்மயிர்
புலர்த்திவளர் கோகரணமே
3.079.9
வில்லாற்றலால் வலிமையுடைய அரக்கனான இராவணனின் உயிரைப் போக்கிய திருமாலும், வேதத்தை ஓதும் பிரமனும், தம்முள் மாறுபட்டு இல்லையென்றும், உள்ளது என்றும் அறியமுடியாதவாறு தேட, நெருப்புவடிவாகி ஓங்கி நின்ற சிவ பெருமான் வீற்றிருந்தருளும் ஊர், எல்லையாக அளவுபடுத்திய கடலால் சூழப்பட்ட பூவுலகத்தோரும், தேவலோகத்தவரும் வணங்க, தினைப்புனங்களில் இளங்குறவர்கள் நறுமணம் கமழும் கூந்தலை உலர்த்தும் எழில்மிகுந்த திருக்கோகரணம் ஆகும். 
3655 நேசமின் மனச்சமணர் தேரர்க
ணிரந்தமொழி பொய்களகல்வித்
தாசைகொண் மனத்தையடி யாரவர்
தமக்கருளு மங்கணனிடம்
பாசம தறுத்தவனி யிற்பெயர்கள்
பத்துடைய மன்னனவனைக்
கூசவகை கண்டுபி னவற்கருள்க
ணல்கவல கோகரணமே
3.079.10
உள்ளன்பில்லாத சமணர்களும், புத்தர்களும் கூறும் சொற்களைப் பொய்யென நீக்கி, தன்னிடத்து ஆசை கொள்ளும்படியான மனத்தையுடைய அடியவர்களுக்கு அருளும் அழகிய கருணையையுடைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது, இவ்வரிய பூவுலகில் பத்துப்பெயர்களையுடைய அர்ச்சுனனின் பாசத்தைப் போக்கி, அவன் நாணும்படி போர்செய்து பின் அருள் புரிந்த திருக்கோகரணம் ஆகும். 
3656 கோடலர வீனும்விரி சாரன்மு
னெருங்கிவளர் கோகரணமே
ஈடமினி தாகவுறை வானடிகள்
பேணியணி காழிநகரான்
நாடிய தமிழ்க்கிளவி யின்னிசைசெய்
ஞானசம் பந்தன்மொழிகள்
பாடவல பத்தரவ ரெத்திசையு
மாள்வர்பர லோகமௌதே
3.079.11
காந்தட்செடிகள் பாம்புபோல் மலர்கின்ற அகன்ற மலைச்சாரலையுடைய வளம்பெருகும் திருக்கோகரணத்தை இடமாகக் கொண்டு இனிது வீற்றிருந்தருளும் சிவபெருமானின் திருவடிகளைப் போற்றி, ஆராய்ந்து தமிழ்ச்சொற்களால் சீகாழியில் அவதரித்த திருஞானசம்பந்தன் அருளிய இனிய இசைப்பாடல்களைப் பாடவல்ல பக்தர்கள் அரசராகிய எல்லாத் திசையும் ஆள்வர். பின் சிவலோகமும் எளிதில் அடைவர். 
திருச்சிற்றம்பலம்

3.079.திருக்கோகரணம் 
பண் - சாதாரி 
திருச்சிற்றம்பலம் 

இத்தலம் துளுவதேசத்திலிருப்பது. அந்தத்தேயத்தில் இது ஒரேதலம். 
சுவாமிபெயர் - மாபலநாதர். தேவியார் - கோகரணநாயகியம்மை. 

3646 என்றுமரி யானயல வர்க்கியலிசைப்பொருள்க ளாகியெனதுள்நன்றுமொளி யானொளிசி றந்தபொன்முடிக்கடவு ணண்ணுமிடமாம்ஒன்றியம னத்தடியர் கூடியிமையோர்பரவு நீடரவமார்குன்றுகணெ ருங்கிவிரி தண்டலைமிடைந்துவளர் கோகரணமே3.079.1
சிவபெருமான் அடியார் அல்லாதவர்க்கு எப்பொழுதும் காண்டற்கு அரியவன். இயற்றமிழும், இசைத்தமிழும் ஆகி எனது உள்ளத்தில் நன்கு ஒளியாகி வீற்றிருப்பவன். பொன் போன்று ஒளிரும் சடைமுடியுடைய அக்கடவுள் வீற்றிருந்தருளும் இடமாவது, ஒன்றிய மனமுடைய அடியவர்களுடன் தேவர்களும் கூடியிருந்து பரவுகின்ற குன்றுகளும், சோலைகளும் விளங்கும் திருக்கோகரணம் என்னும் திருத்தலமாகும். 

3647 பேதைமட மங்கையொரு பங்கிடமிகுத்திடப மேறியமரர்வாதைபட வண்கடலெ ழுந்தவிடமுண்டசிவன் வாழுமிடமாம்மாதரொடு மாடவர்கள் வந்தடியிறைஞ்சிநிறை மாமலர்கடூய்க்கோதைவரி வண்டிசைகொள் கீதமுரல்கின்றவளர் கோகரணமே3.079.2
பேதைமைக் குணத்தையுடைய இளம் பெண்ணாகிய உமாதேவியை இடப்பாகமாகக் கொண்டு, இடப வாகனத்தின் மேலேறி, தேவர்கள் துன்பத்தில் அழுந்தியபோது கடலில் தோன்றியவிடத்தை உட்கொண்டு சிவபெருமான் காத்தருளினார். அப்பெருமான் வீற்றிருந்தருள்கின்ற இடமாவது பெண்களோடு ஆடவர்களும் வந்து இறைவனின் திருவடிகளை வணங்கி, சிறந்த மலர்களைத் தூவிப் போற்ற, சாத்திய மாலைகளில் வரி வண்டுகள் மொய்த்து இன்னிசை எழுப்பும் கீர்த்தி மிகுந்த திருக்கோகரணம் என்னும் திருத்தலமாகும். 

3648 முறைத்திறமு றப்பொருடெரிந்துமுனிவர்க்கருளி யாலநிழல்வாய்மறைத்திற மறத்தொகுதி கண்டுசமயங்களைவ குத்தவனிடம்துறைத்துறை மிகுத்தருவி தூமலர்சுமந்துவரை யுந்திமதகைக்குறைத்தறை யிடக்கரி புரிந்திடறுசாரன்மலி கோகரணமே3.079.3
கல்லால நிழலின் கீழ்ச் சனகாதி முனிவர்கட்கு அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு பொருள்களையும் சிவபெருமான் முறையோடு உபதேசித்தார். வேதத்தின் பொருளாகிய சரியை முதலிய நாற்பாதப் பொருட்களையும் கண்டு அறுவகைச் சமயங்களை வகுத்தவர் சிவபெருமான். அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம் துறைகள்தோறும் அருவிநீர் தூய்மையான மலர்களைச் சுமந்து கொண்டு, மூங்கில்களைத் தள்ளி, மதகுகளைச் சிதைத்து, யானை பிளிற மோதும் சாரலையுடைய திருக்கோகரணம் என்னும் தலமாகும். 

3649 இலைத்தலை மிகுந்தபடை யெண்கரம்விளங்கவெரி வீசிமுடிமேல்அலைத்தலை தொகுத்தபுனல் செஞ்சடையில்வைத்தவழ கன்றனிடமாம்மலைத்தலை வகுத்தமுழை தோறுமுழைவாளரிகள் கேழல்களிறுகொலைத்தலை மடப்பிடிகள் கூடிவிளையாடிநிகழ் கோகரணமே3.079.4
சிவபெருமான் இலைபோன்ற நுனியுடைய சூலப்படையை உடையவன். எட்டுக்கரங்களை உடையவன். நெருப்பைக் கையிலேந்தி எண்தோள் வீசி நடனம் ஆடுபவன். தலையிலுள்ள செஞ்சடையில் அலைகளையுடைய கங்கையைத் தாங்கியவன். அத்தகைய அழகான சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது மலைகளிலுள்ள குகைகளில் மான்களும், சிங்கங்களும், பன்றிகளும், யானைகளும், கொம்பாற் கொல்லுதலையுடைய இளம் பெண்யானைகளும் கூடி விளையாடுகின்ற திருக்கோகரணம் என்னும் தலமாகும். 

3650 தொடைத்தலை மலைத்திதழி துன்னியவெருக்கலரி வன்னிமுடியின்சடைத்தலை மிலைச்சியத போதனனெமாதிபயில் கின்றபதியாம்படைத்தலை பிடித்துமற வாளரொடுவேடர்கள் பயின்றுகுழுமிக்குடைத்தலை நதிப்படிய நின்றுபழிதீரநல்கு கோகரணமே3.079.5
சிவபெருமான் தலைமாலை அணிந்தவர். சடையில் கொன்றை, எருக்கு, அலரி, வன்னிப்பத்திரங்களையும் அணிந்தவர். எம் முதல்வரான சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற இடமானது வெற்றி பொருந்திய வாளாயுதத்தை ஏந்திய வீரர்களுடன் வேடர்கள் நட்புக் கொண்டு கூடி அலைகளையுடைய புனித நதியில் குடைந்து மூழ்கி வணங்க அப்பெருமான் அவர்களின் பழிபாவத்தை நீக்கி அருள்புரியும் திருக்கோகரணமாகும். 

3651 நீறுதிரு மேனிமிசை யாடிநிறைவார்கழல் சிலம்பொலிசெயஏறுவிளை யாடவிசை கொண்டிடுபலிக்குவரு மீசனிடமாம்ஆறுசம யங்களும்வி ரும்பியடிபேணியர னாகமமிகக்கூறுமனம் வேறிரதி வந்தடியர்கம்பம்வரு கோகரணமே3.079.6
சிவபெருமான் திருநீற்றைத் திருமேனியில் பூசியவர். திருக்கழலில் அணிந்த சிலம்பு ஒலி செய்ய இடபத்தில் ஏறி இசைபாடிப் பலி ஏற்று வருவார். அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடமானது சிவாகம விதிப்படி இறைவனின் திருவடிகளை விரும்பி வழிபடுகின்ற ஆறு சமயத்தவர்களும், மனத்தில் சிவானந்தம் மேலிட உடலில் நடுக்கம் வருகின்ற அடியவர்களாய் வாழ்கின்ற திருக்கோகரணமாகும். 

3652 கல்லவட மொந்தைகுழ றாளமலிகொக்கரைய ரக்கரைமிசைபல்லபட நாகம்விரி கோவணவராளுநக ரென்பரயலேநல்லமட மாதரர னாமமுநவிற்றிய திருத்தமுழுகக்கொல்லவிட நோயகல் தரப்புகல்கொடுத்தருளு கோகரணமே3.079.7
ஓசைமிகுந்த கல்லவடம், மொந்தை, குழல், தாளம், வலம்புரிச்சங்கு ஆகிய வாத்தியங்களுக்கு ஏற்ப சிவ பெருமான் நடனமாடுவார். அக்குப்பாசி அணிந்த இடுப்பில், நச்சுப்பற்களும், படமும் உடைய பாம்பை அணிந்து கோவண ஆடை உடுத்தவர். அத்தகைய சிவபெருமான் ஆளும் நகர் நற்குண, நற்செய்கை யுடையவர்களாகிய பெண்கள் சிவபெருமானது திருப்பெயரைச் சொல்லித் தீர்த்தத்தில் முழுக, கொல்லும் விடநோய் போன்ற வினைகளைத் தீர்த்து, காரியம் யாவினும் வெற்றி கொடுத்தருளும் திருக்கோகரணமாகும். 

3653 வரைத்தல நெருக்கிய முருட்டிருணிறத்தவன வாய்களலறவிரற்றலை யுகிர்ச்சிறிது வைத்தபெருமானினிது மேவுமிடமாம்புரைத்தலை கெடுத்தமுனி வாணர்பொலிவாகிவினை தீரவதன்மேல்குரைத்தலை கழற்பணிய வோமம்விலகும்புகைசெய் கோகரணமே3.079.8
முரட்டுத்தனமும், இருண்ட நிறமுமுடைய இராவணனின் பத்து வாய்களும் அலறும்படி, தன் காற்பெருவிரலை ஊன்றி அவனைக் கயிலைமலையின் கீழ் நெருக்கிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது, முனிவர்களும், வேத வல்லுநர்களும் வினைதீர, ஒலிக்கின்ற கழலணிந்த சிவபெருமானின் திருவடிகளைப் பணிந்து, அரநாமத்தினை ஓதி வேள்வி புரிய அப்புகை பரவுகின்ற திருக்கோகரணம் ஆகும். 

3654 வில்லிமையி னால்விற லரக்கனுயிர்செற்றவனும் வேதமுதலோன்இல்லையுள தென்றிகலி நேடவெரியாகியுயர் கின்றபரனூர்எல்லையில் வரைத்தகடல் வட்டமுமிறைஞ்சிநிறை வாசமுருவக்கொல்லையி லிளங்குறவர் தம்மயிர்புலர்த்திவளர் கோகரணமே3.079.9
வில்லாற்றலால் வலிமையுடைய அரக்கனான இராவணனின் உயிரைப் போக்கிய திருமாலும், வேதத்தை ஓதும் பிரமனும், தம்முள் மாறுபட்டு இல்லையென்றும், உள்ளது என்றும் அறியமுடியாதவாறு தேட, நெருப்புவடிவாகி ஓங்கி நின்ற சிவ பெருமான் வீற்றிருந்தருளும் ஊர், எல்லையாக அளவுபடுத்திய கடலால் சூழப்பட்ட பூவுலகத்தோரும், தேவலோகத்தவரும் வணங்க, தினைப்புனங்களில் இளங்குறவர்கள் நறுமணம் கமழும் கூந்தலை உலர்த்தும் எழில்மிகுந்த திருக்கோகரணம் ஆகும். 

3655 நேசமின் மனச்சமணர் தேரர்கணிரந்தமொழி பொய்களகல்வித்தாசைகொண் மனத்தையடி யாரவர்தமக்கருளு மங்கணனிடம்பாசம தறுத்தவனி யிற்பெயர்கள்பத்துடைய மன்னனவனைக்கூசவகை கண்டுபி னவற்கருள்கணல்கவல கோகரணமே3.079.10
உள்ளன்பில்லாத சமணர்களும், புத்தர்களும் கூறும் சொற்களைப் பொய்யென நீக்கி, தன்னிடத்து ஆசை கொள்ளும்படியான மனத்தையுடைய அடியவர்களுக்கு அருளும் அழகிய கருணையையுடைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது, இவ்வரிய பூவுலகில் பத்துப்பெயர்களையுடைய அர்ச்சுனனின் பாசத்தைப் போக்கி, அவன் நாணும்படி போர்செய்து பின் அருள் புரிந்த திருக்கோகரணம் ஆகும். 

3656 கோடலர வீனும்விரி சாரன்முனெருங்கிவளர் கோகரணமேஈடமினி தாகவுறை வானடிகள்பேணியணி காழிநகரான்நாடிய தமிழ்க்கிளவி யின்னிசைசெய்ஞானசம் பந்தன்மொழிகள்பாடவல பத்தரவ ரெத்திசையுமாள்வர்பர லோகமௌதே3.079.11
காந்தட்செடிகள் பாம்புபோல் மலர்கின்ற அகன்ற மலைச்சாரலையுடைய வளம்பெருகும் திருக்கோகரணத்தை இடமாகக் கொண்டு இனிது வீற்றிருந்தருளும் சிவபெருமானின் திருவடிகளைப் போற்றி, ஆராய்ந்து தமிழ்ச்சொற்களால் சீகாழியில் அவதரித்த திருஞானசம்பந்தன் அருளிய இனிய இசைப்பாடல்களைப் பாடவல்ல பக்தர்கள் அரசராகிய எல்லாத் திசையும் ஆள்வர். பின் சிவலோகமும் எளிதில் அடைவர். 

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 02 Apr 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.