LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

மூன்றாம் திருமுறை-82

3.082.திருஅவளிவணல்லூர் 
பண் - சாதாரி 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - சாட்சிநாயகர். 
தேவியார் - சவுந்தரநாயகியம்மை. 
3679 கொம்பிரிய வண்டுலவு கொன்றைபுரி
நூலொடுகு லாவித்
தம்பரிசி னோடுசுடு நீறுதட
வந்திடப மேறிக்
கம்பரிய செம்பொனெடு மாடமதில்
கல்வரைவி லாக
அம்பெரிய வெய்தபெரு மானுறைவ
தவளிவண லூரே
3.082.1
இறைவர் வண்டுகள் மொய்க்கும் கொன்றை மாலை அணிந்தவர். முப்புரிநூல் அணிந்த திருமார்பினர். திருவெண்ணீறு பூசியவர். இடப வாகனத்தில் ஏறி வீற்றிருப்பவர். ஆகாயத்தில் திரிந்த பொன், வெள்ளி, இரும்பு ஆகிய கோட்டைகளின் மதில்களை, மேருமலையை வில்லாகக் கொண்டு அம்பு எய்து எரித்தவர். அப்பெருமான் வீற்றிருந்தருளும் தலம் திரு அவளிவணல்லூர் ஆகும். 
3680 ஓமையன கள்ளியன வாகையன 
கூகைமுர லோசை 
ஈமமெரி சூழ்சுடலை வாசமுது
காடுநட மாடித்
தூய்மையுடை யக்கொடர வம்விரவி
மிக்கொளிது லங்க
ஆமையொடு பூணுமடி கள்ளுறைவ
தவளிவண லூரே
3.082.2
ஓமை, கள்ளி, வாகை முதலிய மரங்கள் நிறைந்ததும், கோட்டான்கள் கத்தும் ஓசையும் உடையதும் ஆன கொள்ளி நெருப்புச் சூழ்ந்த சுடலை வாசமுடைய சுடுகாட்டில் திருநடனம் செய்பவர் சிவபெருமான். தூய்மையான எலும்பும், பாம்பும் கலந்து ஒளி துலங்க, ஆமையோட்டினை ஆபரணமாக அணிந்துள்ள சிவபெருமான் வீற்றிருந்தருளுவது திருஅவளிவணல்லூர் என்னும் திருத்தலமாகும். 
3681 நீறுடைய மார்பிலிம வான்மகளொர்
பாகநிலை செய்து
கூறுடைய வேடமொடு கூடியழ
காயதொரு கோலம்
ஏறுடைய ரேனுமிடு காடிரவி
னின்றுநட மாடும்
ஆறுடைய வார்சடையி னானுறைவ
தவளிவண லூரே
3.082.3
சிவபெருமான் திருநீறணிந்த தம் திருமார்பில் இமவான் மகளாகிய உமாதேவியை ஒருபாகமாகக் கொண்டு அர்த்தநாரி என்னும் அழகிய கோலத்தில் இடபவாகனத்தில் வீற்றிருப்பவர். சுடுகாட்டில் இரவில் நடனம் ஆடுபவர். கங்கையை நீண்ட சடையில் தாங்கியவர். அப்பெருமான் வீற்றிருந்தருளுவது திருஅவளிவணல்லூர் என்னும் திருத்தலமாகும். 
3682 பிணியுமிலர் கேடுமிலர் தோற்றமில
ரென்றுலகு பேணிப்
பணியுமடி யார்களன பாவமற
வின்னருள்ப யந்து
துணியுடைய தோலுமுடை கோவணமு
நாகமுட றொங்க
அணியுமழ காகவுடை யானுறைவ
தவளிவண லூரே
3.082.4
பிணியும், இறப்பும், பிறப்பும் இல்லாதவர் என்று உலகத்தவரால் போற்றப் படும் சிவபெருமான் தம்மை வணங்கும் அடியவர்களின் பாவம் யாவும் நீங்குமாறு செய்து, இன்னருள் புரிபவர். கிழிந்த தோலையும், கோவணத்தையும் ஆடையாக உடுத்ததுடன், பாம்பை அழகிய ஆபரணமாக அணிந்து விளங்கும் அவர் வீற்றிருந்தருளுவது திருஅவளிவண்ணலூர் என்னும் திருத்தலமாகும். 
3683 குழலின்வரி வண்டுமுரன் மெல்லியன
பொன்மலர்கள் கொண்டு
கழலின்மிசை யிண்டைபுனை வார்கடவு
ளென்றமரர் கூடித்
தொழலும்வழி பாடுமுடை யார்துயரு
நோயுமிலராவர்
அழலுமழு வேந்துகையி னானுறைவ
தவளிவணலூரே
3.082.5
குழலின் ஓசைபோல் வண்டுகள் ஒலி எழுப்பி மொய்க்கும் மெல்லிய அழகிய மலர்களைக் கொண்டு இண்டைமாலைகட்டி, சிவபெருமான் திருவடிகளில் சார்த்தித் தேவர்கள் எல்லாம் ஒன்றுகூடி, "இவரே முழுமுதற் கடவுள்" என்று தொழுது போற்றுவர். அத்தகைய வழிபாட்டைச் செய்பவர்கட்கு, உள்ளத்தால் வரும் துயரும், உடலால் வரும் நோயும் இல்லை. அவ்வாறு அடியவர்கட்கு அருள்புரியும் இறைவன், நெருப்புப்போல் ஒளிவீசும் மழுவேந்திய கையுடையவனாய் வீற்றிருந்தருளுவது திருஅவளிவணல்லூர் என்னும் திருத்தலமாகும். 
3684 துஞ்சலில ராயமரர் நின்றுதொழுப 
தேத்தவருள் செய்து
நஞ்சுமிட றுண்டுகரி தாயவெளி
தாகியொரு நம்பன்
மஞ்சுறநி மிர்ந்துமைந டுங்கவக
லத்தொடுவ ளாவி
அஞ்சமத வேழவுரி யானுறைவ
தவளிவண லூரே
3.082.6
உறக்கமின்றித் தேவர்கள் இடையறாது தம்மைத் தொழுது போற்ற, நஞ்சினையுண்டு அவர்களைக் காத்து அருள் செய்து, கண்டம் கரியதாகவும் ஏனைய உருவம் படிகம் போல் வெண்மையாகவும் விளங்குபவர் சிவபெருமான். மதம் பிடித்த யானை அஞ்சும்படி, வானளாவ நிமிர்ந்து அதன் தோலை உரித்து, உமை நடுங்கத் தம் மார்பில் போர்த்தவர். அப்பெருமான் வீற்றிருந் தருளுவது திருஅவளிவணல்லூர் என்னும் திருத்தலமாகும். 
3685 கூடரவ மொந்தைகுழல் யாழ்முழவி
னோடுமிசை செய்யப்
பீடரவ மாகுபட ரம்புசெய்து
பேரிடப மோடும்
காடரவ மாகுகனல் கொண்டிரவில்
நின்றுநட மாடி
ஆடரவ மார்த்தபெரு மானுறைவ
தவளிவண லூரே
3.082.7
மொந்தை, குழல், யாழ், முழவு முதலிய வாத்தியங்கள் ஒலிக்க, எண்தோள்வீசி ஆடும்போது சடையிலுள்ள கங்கைநீர் அம்பு போலப் பாய, பெரிய இடப வாகனத்தோடு, சுடுகாட்டில் ஓசையுடன் எரியும் நருப்பையேந்தி இரவில் நடனமாடி, படமெடுத்தாடும் பாம்பைக் கச்சாகக் கட்டிய சிவபெருமான் வீற்றிருந்தருளுவது திருஅவளிவணல்லூர் என்னும் திருத்தலம் ஆகும். 
3686 ஒருவரையு மேல்வலிகொ டேனெனவெ
ழுந்தவிற லோனிப்
பெருவரையின் மேலொர்பெரு மானுமுளனோ
வெனவெ குண்ட
கருவரையு மாழ்கடலு மன்னதிறல்
கைகளுடை யோனை
அருவரையி லூன்றியடர்த் தானுறைவ
தவளிவண லூரே
3.082.8
எனக்கு மேல் ஒருவரையும் வலிமையுடையவராகக் காணப்பொறேன் என வீரத்துடன் எழுந்து, இக்கயிலைமலையின் மேல்ஒரு பெருமான் உளனோ என வெகுண்டு, மலையைப் பெயர்த்த பெரியமலை போன்றும், ஆழமான கடல்போன்றும் வலிமையுடைய அரக்கனான இராவணனைத் தன்காற் பெருவிரலை ஊன்றி, அம்மலையின்கீழ் நெரியும்படி செய்த சிவபெருமான் வீற்றிருந்தருளுவது திருஅவளிவணல்லூர் என்னும் திருத்தலமாகும் . 
3687 பொறிவரிய நாகமுயர் பொங்கணைய
ணைந்தபுக ழோனும்
வெறிவரிய வண்டறைய விண்டமலர்
மேல்விழுமி யோனும்
செறிவரிய தோற்றமொடு வாற்றன்மிக
நின்றுசிறி தேயும்
அறிவரிய னாயபெரு மானுறைவ
தவளிவண லூரே
3.082.9
புள்ளிகளையுடைய நெடிய பாம்பை உயர்ந்த படுக்கையாகக் கொண்டு விளங்குகின்ற புகழ்மிக்க திருமாலும், வாசனையறிகின்ற கீற்றுகளையுடைய வண்டு ஒலித்து ஊத, அதனால் விரிந்த தாமரைமேல் வசிக்கின்ற பிரமனும், பிறர்க்கு அரிய வலிமையுடைய தோற்றத்தோடு தமது ஆற்றல் முழுவதையும் செலுத்தித் தேடியும், சிறிதளவும் அறிவதற்கு அரியவராகிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது திருஅவளிவணல்லூர் என்னும் திருத்தலமாகும். 
3688 கழியருகு பள்ளியிட மாகவடு
மீன்கள்கவர் வாரும்
வழியருகு சாரவெயி னின்றடிசி
லுள்கிவரு வாரும்
பழியருகி னாரொழிக பான்மையொடு
நின்றுதொழு தேத்தும்
அழியருவி தோய்ந்தபெரு மானுறைவ
தவளிவண லூரே
3.082.10
ஆற்றங்கழி அருகிலிருக்கும் சமணப்பள்ளி இடமாக நின்று, சமைத்து உண்பதற்குரிய மீன்களைக் கவரும் சமணர்களும், தெருக்களில் உச்சிவேளையில் நின்று உணவு ஏற்க வரும் புத்தர்களும் கூறும் பழிக்கு அடுத்துச் சொல்வதாகிய பாவத்தை உடையவர்கள். பக்தியால் தொழுதேத்தும் அடியவர்கள் கண்களில் இருந்து தோன்றும் அருவி போன்ற நீரில் தோய்ந்து விளங்கும் சிவபெருமான் வீற்றிருந்தருளுவது திருஅவளிவணல்லூர் என்னும் திருத்தலமாகும். 
3689 ஆனமொழி யானதிற லோர்பரவு
மவளிவண லூர்மேல்
போனமொழி நன்மொழி களாயபுகழ்
தோணிபுர வூரன்
ஞானமொழி மாலைபல நாடுபுகழ்
ஞானசம் பந்தன்
தேனமொழி மாலைபுகழ் வார்துயர்க
டீயதிலர் தாமே
3.082.11
பொருளுடைய புகழ்மொழிகளால் மெய்ஞ்ஞானிகள் துதிக்கின்ற அவளிவணல்லூர் என்னும் திருத்தலத்தைத் திசைகள் தோறும் பரவிய நன்மொழியால் புகழ்போற்றும் தோணிபுரத்தில் அவதரித்த சிவஞானங் கமழ்கின்ற திருப்பதிகங்களால் நல்ல நாடுகளெல்லாம் புகழ்கின்ற ஞானசம்பந்தன் அருளிய தேன்போன்ற இனிமையான மொழிகளால் ஆன இப்பாமாலையால் புகழ்ந்து போற்றுபவர் துயரற்றவர் ஆவர். அவர்களைத் தீமை அணுகாது. 
திருச்சிற்றம்பலம்

3.082.திருஅவளிவணல்லூர் 
பண் - சாதாரி 
திருச்சிற்றம்பலம் 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - சாட்சிநாயகர். தேவியார் - சவுந்தரநாயகியம்மை. 

3679 கொம்பிரிய வண்டுலவு கொன்றைபுரிநூலொடுகு லாவித்தம்பரிசி னோடுசுடு நீறுதடவந்திடப மேறிக்கம்பரிய செம்பொனெடு மாடமதில்கல்வரைவி லாகஅம்பெரிய வெய்தபெரு மானுறைவதவளிவண லூரே3.082.1
இறைவர் வண்டுகள் மொய்க்கும் கொன்றை மாலை அணிந்தவர். முப்புரிநூல் அணிந்த திருமார்பினர். திருவெண்ணீறு பூசியவர். இடப வாகனத்தில் ஏறி வீற்றிருப்பவர். ஆகாயத்தில் திரிந்த பொன், வெள்ளி, இரும்பு ஆகிய கோட்டைகளின் மதில்களை, மேருமலையை வில்லாகக் கொண்டு அம்பு எய்து எரித்தவர். அப்பெருமான் வீற்றிருந்தருளும் தலம் திரு அவளிவணல்லூர் ஆகும். 

3680 ஓமையன கள்ளியன வாகையன கூகைமுர லோசை ஈமமெரி சூழ்சுடலை வாசமுதுகாடுநட மாடித்தூய்மையுடை யக்கொடர வம்விரவிமிக்கொளிது லங்கஆமையொடு பூணுமடி கள்ளுறைவதவளிவண லூரே3.082.2
ஓமை, கள்ளி, வாகை முதலிய மரங்கள் நிறைந்ததும், கோட்டான்கள் கத்தும் ஓசையும் உடையதும் ஆன கொள்ளி நெருப்புச் சூழ்ந்த சுடலை வாசமுடைய சுடுகாட்டில் திருநடனம் செய்பவர் சிவபெருமான். தூய்மையான எலும்பும், பாம்பும் கலந்து ஒளி துலங்க, ஆமையோட்டினை ஆபரணமாக அணிந்துள்ள சிவபெருமான் வீற்றிருந்தருளுவது திருஅவளிவணல்லூர் என்னும் திருத்தலமாகும். 

3681 நீறுடைய மார்பிலிம வான்மகளொர்பாகநிலை செய்துகூறுடைய வேடமொடு கூடியழகாயதொரு கோலம்ஏறுடைய ரேனுமிடு காடிரவினின்றுநட மாடும்ஆறுடைய வார்சடையி னானுறைவதவளிவண லூரே3.082.3
சிவபெருமான் திருநீறணிந்த தம் திருமார்பில் இமவான் மகளாகிய உமாதேவியை ஒருபாகமாகக் கொண்டு அர்த்தநாரி என்னும் அழகிய கோலத்தில் இடபவாகனத்தில் வீற்றிருப்பவர். சுடுகாட்டில் இரவில் நடனம் ஆடுபவர். கங்கையை நீண்ட சடையில் தாங்கியவர். அப்பெருமான் வீற்றிருந்தருளுவது திருஅவளிவணல்லூர் என்னும் திருத்தலமாகும். 

3682 பிணியுமிலர் கேடுமிலர் தோற்றமிலரென்றுலகு பேணிப்பணியுமடி யார்களன பாவமறவின்னருள்ப யந்துதுணியுடைய தோலுமுடை கோவணமுநாகமுட றொங்கஅணியுமழ காகவுடை யானுறைவதவளிவண லூரே3.082.4
பிணியும், இறப்பும், பிறப்பும் இல்லாதவர் என்று உலகத்தவரால் போற்றப் படும் சிவபெருமான் தம்மை வணங்கும் அடியவர்களின் பாவம் யாவும் நீங்குமாறு செய்து, இன்னருள் புரிபவர். கிழிந்த தோலையும், கோவணத்தையும் ஆடையாக உடுத்ததுடன், பாம்பை அழகிய ஆபரணமாக அணிந்து விளங்கும் அவர் வீற்றிருந்தருளுவது திருஅவளிவண்ணலூர் என்னும் திருத்தலமாகும். 

3683 குழலின்வரி வண்டுமுரன் மெல்லியனபொன்மலர்கள் கொண்டுகழலின்மிசை யிண்டைபுனை வார்கடவுளென்றமரர் கூடித்தொழலும்வழி பாடுமுடை யார்துயருநோயுமிலராவர்அழலுமழு வேந்துகையி னானுறைவதவளிவணலூரே3.082.5
குழலின் ஓசைபோல் வண்டுகள் ஒலி எழுப்பி மொய்க்கும் மெல்லிய அழகிய மலர்களைக் கொண்டு இண்டைமாலைகட்டி, சிவபெருமான் திருவடிகளில் சார்த்தித் தேவர்கள் எல்லாம் ஒன்றுகூடி, "இவரே முழுமுதற் கடவுள்" என்று தொழுது போற்றுவர். அத்தகைய வழிபாட்டைச் செய்பவர்கட்கு, உள்ளத்தால் வரும் துயரும், உடலால் வரும் நோயும் இல்லை. அவ்வாறு அடியவர்கட்கு அருள்புரியும் இறைவன், நெருப்புப்போல் ஒளிவீசும் மழுவேந்திய கையுடையவனாய் வீற்றிருந்தருளுவது திருஅவளிவணல்லூர் என்னும் திருத்தலமாகும். 

3684 துஞ்சலில ராயமரர் நின்றுதொழுப தேத்தவருள் செய்துநஞ்சுமிட றுண்டுகரி தாயவெளிதாகியொரு நம்பன்மஞ்சுறநி மிர்ந்துமைந டுங்கவகலத்தொடுவ ளாவிஅஞ்சமத வேழவுரி யானுறைவதவளிவண லூரே3.082.6
உறக்கமின்றித் தேவர்கள் இடையறாது தம்மைத் தொழுது போற்ற, நஞ்சினையுண்டு அவர்களைக் காத்து அருள் செய்து, கண்டம் கரியதாகவும் ஏனைய உருவம் படிகம் போல் வெண்மையாகவும் விளங்குபவர் சிவபெருமான். மதம் பிடித்த யானை அஞ்சும்படி, வானளாவ நிமிர்ந்து அதன் தோலை உரித்து, உமை நடுங்கத் தம் மார்பில் போர்த்தவர். அப்பெருமான் வீற்றிருந் தருளுவது திருஅவளிவணல்லூர் என்னும் திருத்தலமாகும். 

3685 கூடரவ மொந்தைகுழல் யாழ்முழவினோடுமிசை செய்யப்பீடரவ மாகுபட ரம்புசெய்துபேரிடப மோடும்காடரவ மாகுகனல் கொண்டிரவில்நின்றுநட மாடிஆடரவ மார்த்தபெரு மானுறைவதவளிவண லூரே3.082.7
மொந்தை, குழல், யாழ், முழவு முதலிய வாத்தியங்கள் ஒலிக்க, எண்தோள்வீசி ஆடும்போது சடையிலுள்ள கங்கைநீர் அம்பு போலப் பாய, பெரிய இடப வாகனத்தோடு, சுடுகாட்டில் ஓசையுடன் எரியும் நருப்பையேந்தி இரவில் நடனமாடி, படமெடுத்தாடும் பாம்பைக் கச்சாகக் கட்டிய சிவபெருமான் வீற்றிருந்தருளுவது திருஅவளிவணல்லூர் என்னும் திருத்தலம் ஆகும். 

3686 ஒருவரையு மேல்வலிகொ டேனெனவெழுந்தவிற லோனிப்பெருவரையின் மேலொர்பெரு மானுமுளனோவெனவெ குண்டகருவரையு மாழ்கடலு மன்னதிறல்கைகளுடை யோனைஅருவரையி லூன்றியடர்த் தானுறைவதவளிவண லூரே3.082.8
எனக்கு மேல் ஒருவரையும் வலிமையுடையவராகக் காணப்பொறேன் என வீரத்துடன் எழுந்து, இக்கயிலைமலையின் மேல்ஒரு பெருமான் உளனோ என வெகுண்டு, மலையைப் பெயர்த்த பெரியமலை போன்றும், ஆழமான கடல்போன்றும் வலிமையுடைய அரக்கனான இராவணனைத் தன்காற் பெருவிரலை ஊன்றி, அம்மலையின்கீழ் நெரியும்படி செய்த சிவபெருமான் வீற்றிருந்தருளுவது திருஅவளிவணல்லூர் என்னும் திருத்தலமாகும் . 

3687 பொறிவரிய நாகமுயர் பொங்கணையணைந்தபுக ழோனும்வெறிவரிய வண்டறைய விண்டமலர்மேல்விழுமி யோனும்செறிவரிய தோற்றமொடு வாற்றன்மிகநின்றுசிறி தேயும்அறிவரிய னாயபெரு மானுறைவதவளிவண லூரே3.082.9
புள்ளிகளையுடைய நெடிய பாம்பை உயர்ந்த படுக்கையாகக் கொண்டு விளங்குகின்ற புகழ்மிக்க திருமாலும், வாசனையறிகின்ற கீற்றுகளையுடைய வண்டு ஒலித்து ஊத, அதனால் விரிந்த தாமரைமேல் வசிக்கின்ற பிரமனும், பிறர்க்கு அரிய வலிமையுடைய தோற்றத்தோடு தமது ஆற்றல் முழுவதையும் செலுத்தித் தேடியும், சிறிதளவும் அறிவதற்கு அரியவராகிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது திருஅவளிவணல்லூர் என்னும் திருத்தலமாகும். 

3688 கழியருகு பள்ளியிட மாகவடுமீன்கள்கவர் வாரும்வழியருகு சாரவெயி னின்றடிசிலுள்கிவரு வாரும்பழியருகி னாரொழிக பான்மையொடுநின்றுதொழு தேத்தும்அழியருவி தோய்ந்தபெரு மானுறைவதவளிவண லூரே3.082.10
ஆற்றங்கழி அருகிலிருக்கும் சமணப்பள்ளி இடமாக நின்று, சமைத்து உண்பதற்குரிய மீன்களைக் கவரும் சமணர்களும், தெருக்களில் உச்சிவேளையில் நின்று உணவு ஏற்க வரும் புத்தர்களும் கூறும் பழிக்கு அடுத்துச் சொல்வதாகிய பாவத்தை உடையவர்கள். பக்தியால் தொழுதேத்தும் அடியவர்கள் கண்களில் இருந்து தோன்றும் அருவி போன்ற நீரில் தோய்ந்து விளங்கும் சிவபெருமான் வீற்றிருந்தருளுவது திருஅவளிவணல்லூர் என்னும் திருத்தலமாகும். 

3689 ஆனமொழி யானதிற லோர்பரவுமவளிவண லூர்மேல்போனமொழி நன்மொழி களாயபுகழ்தோணிபுர வூரன்ஞானமொழி மாலைபல நாடுபுகழ்ஞானசம் பந்தன்தேனமொழி மாலைபுகழ் வார்துயர்கடீயதிலர் தாமே3.082.11
பொருளுடைய புகழ்மொழிகளால் மெய்ஞ்ஞானிகள் துதிக்கின்ற அவளிவணல்லூர் என்னும் திருத்தலத்தைத் திசைகள் தோறும் பரவிய நன்மொழியால் புகழ்போற்றும் தோணிபுரத்தில் அவதரித்த சிவஞானங் கமழ்கின்ற திருப்பதிகங்களால் நல்ல நாடுகளெல்லாம் புகழ்கின்ற ஞானசம்பந்தன் அருளிய தேன்போன்ற இனிமையான மொழிகளால் ஆன இப்பாமாலையால் புகழ்ந்து போற்றுபவர் துயரற்றவர் ஆவர். அவர்களைத் தீமை அணுகாது. 

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 02 Apr 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.