LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

மூன்றாம் திருமுறை-88

3.088.திருவிளமர் 
பண் - சாதாரி 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - பதஞ்சலிமனோகரேசுவரர். 
தேவியார் - யாழினுமென்மொழியம்மை. 
3745 மத்தக மணிபெற மலர்வதொர் மதிபுரை
நுதல்கரம்
ஒத்தக நகமணி மிளிர்வதொ ரரவின
ரொளிகிளர்
அத்தக வடிதொழ வருள்பெறு கண்ணொடு
முமையவள்
வித்தக ருறைவது விரிபொழில் வளநகர்
விளமரே
3.088.1
சிவபெருமான், தலையில் அழகுற விளங்கும் பிறைச்சந்திரனை ஒத்த நெற்றியுடையவர். கரத்தில் விளங்கும் நகங்களைப் போல தலையிலுள்ள இரத்தினங்கள் பிரகாசிக்கும் ஐந்தலைப் பாம்பைக் கங்கணமாகக் கட்டியவர். இத்தகைய சிவபெருமானின் திருவடிகளைத் தொழுது யாம் உய்யும்பொருட்டு, அருள்பெருகும் கண்களையுடைய உமாதேவியோடு வித்தகராகிய அப்பெருமான் வீற்றிருந்தருளுவது விரிந்த சோலைகள் சூழ்ந்த வளமை வாய்ந்த திருவிளமர் என்னும் திருத்தலமாகும். 
3746 பட்டில கியமுலை யரிவைய ருலகினி
லிடுபலி
ஒட்டில கிணைமர வடியின ருமையுறு
வடிவினர்
சிட்டில கழகிய பொடியினர் விடைமிசை
சேர்வதோர்
விட்டில கழகொளி பெயரவ ருறைவது
விளமரே
3.088.2
சிவபெருமான், உலகில் பட்டாடையால் மூடப்பட்ட முலைகளையுடைய பெண்கள் இடுகின்ற பலிகளை ஏற்க, இசைத்துச் செல்கின்ற மரப்பாதுகைகளை அணிந்த திருவடிகளை உடையவர். உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்ட கோலத்தர். தூய்மையையும், ஞானத்தையும் உணர்த்தும் திருவெண்ணீற்றினைப் பூசியுள்ளவர். இடபவாகனத்தில் வீற்றிருப்பவர். சொல்லொணாப் பேரழகிய தோற்றப் பொலிவுடன் நடக்கும் சிவபெருமான் வீற்றிருந்தருளுவது திருவிளமர் என்னும் திருத்தலமாகும். 
3747 அங்கதி ரொளியின ரரையிடை மிளிர்வதொ
ரரவொடு
செங்கதி ரெனநிற மனையதொர் செழுமணி
மார்பினர்
சங்கதிர் பறைகுழன் முழவினொ டிசைதரு
சரிதையர்
வெங்கதி ருறுமழு வுடையவ ரிடமெனில்
விளமரே
3.088.3
சிவபெருமான் அழகிய ஒளிவீசும் தோற்றப் பொலிவுடையவர். இடையிலே பாம்பைக் கச்சாகக் கட்டியவர். செந்நிற கதிர் போன்ற நிறமுடையவர். அக்கதிர்போல் ஒளிவீசும் இரத்தினங்கள் பதிக்கப்பட்ட ஆபரணங்களை அணிந்துள்ள மார்பினர். சங்குகள் ஒலிக்க, பறை, குழல், முழவு போன்ற வாத்தியங்கள் இசைக்கத் திருக்கூத்து ஆடுபவர். வெண்ணிற ஒளிவீசும் மழுப்படையை உடையவர். இத்தகைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவிளமர் என்னும் திருத்தலமாகும். 
3748 மாடம தெனவளர் மதிலவை யெரிசெய்வர்
விரவுசீர்ப்
பீடென வருமறை யுரைசெய்வர் பெரியபல்
சரிதைகள்
பாடல ராடிய சுடலையி லிடமுற
நடநவில்
வேடம துடையவர் வியனக ரதுசொலில்
விளமரே
3.088.4
மாடம் போன்று உயர்ந்து விளங்கிய, தேவர்கட்குத் தீமை செய்த பகையசுரர்களின் மும்மதில்களைச் சிவபெருமான் எரித்தவர். தமது புகழ் பாடுவதையே பொருளாகக் கொண்ட வேதங்களை அருளிச் செய்தவர். தமது வரலாறுகள் அடியவர்களால் பாடலாகப் பாடப்படும் பெருமையுடையவர். சுடுகாட்டை அரங்கமாகக் கொண்ட திருநடனம் செய்யும் கோலத்தர். இத்தகைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் பெருமை மிக்க நகரானது திருவிளமர் என்னும் திருத்தலமாகும். 
3749 பண்டலை மழலைசெ யாழென மொழியுமை
பாகமாக்
கொண்டலை குரைகழ லடிதொழு மவர்வினை
குறுகிலர்
விண்டலை யமரர்கள் துதிசெய வருள்புரி
விறலினர்
வெண்டலை பலிகொளும் விமலர்தம் வளநகர்
விளமரே
3.088.5
பண்ணின் இசையை ஒலிக்கும் யாழ்போன்ற இனியமொழி பேசும் உமாதேவியைத் தம் திருமேனியின் ஒரு பாகமாகக் கொண்டவர் சிவபெருமான். அவருடைய, அசைகின்ற ஒலிக்கும் வீரக்கழல்களை அணிந்துள்ள திருவடிகளைத் தொழும் அடியவர்களை வினை சாராது. விண்ணுலகிலுள்ள தேவர்கள் தொழுது போற்ற அருள்செய்யும் பெருங்கருணையாளர். பிரமனுடைய மண்டையோட்டில் பிச்சையேற்றுத் திரிபவரும் இயல்பாகவே பாசங்களின் நீங்கியவருமான அச்சிவபெருமான் வீற்றிருந்தருளும் வளம் மிகுந்த நகர் திருவிளமர் என்னும் திருத்தலமாகும். 
3750 மனைகடொ றிடுபலி யதுகொள்வர் மதிபொதி
சடையினர்
கனைகட லடுவிட மமுதுசெய் கறையணி
மிடறினர்
முனைகெட வருமதி ளெரிசெய்த வவர்கழல்
பரவுவார்
வினைகெட வருள்புரி தொழிலினர் செழுநகர்
விளமரே
3.088.6
சிவபெருமான் தாருகவனத்தில் மனைகள்தொறும் சென்று பிச்சை ஏற்றவர். சந்திரனைத் தரித்த சடையுடையவர். ஒலிக்கின்ற கடலில் தோன்றி உயிர்களைக் கொல்ல வந்த விடத்தை அமுதமாக உண்டு கறை படிந்த அழகிய கண்டத்தர். போர் முனைப்பு உடன் எழுந்த பகையசுரர்களின் மும்மதில்களை எரித்தவர்.தம் திருவடிகளை வணங்குபவர்களின் வினைகெடும்படி அருள்புரியும் தொழிலுடையவர். இத்தகைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் செழிப்பான நகர் திருவிளமர் என்னும் திருத்தலமாகும். 
3751 நெறிகமழ் தருமுரை யுணர்வினர் 
புணர்வுறு மடவரல் 
செறிகமழ் தருமுரு வுடையவர் படைபல
பயில்பவர் 
பொறிகமழ் தருபட வரவினர் விரவிய 
சடைமிசை
வெறிகமழ் தருமல ரடைபவ ரிடமெனில்
விளமரே
3.088.7
சிவபெருமான் சரியை முதலிய நான்கு நெறிகளாலும், ஆகமங்களாலும் மன்னுயிர்கட்கு மெய்யுணர்வு நல்கியவர். தம்மின் வேறாகாத ஞானமே வடிவான உமாதேவியை இடப்பாகமாகப் பொருந்தி விளங்கும் உருவுடையவர். திருக்கரங்களில் படைகள் பல ஏந்தியவர். புள்ளிகளையுடைய படமெடுத்தாடும் பாம்பை அணிந்தவர். கங்கை, பிறைச்சந்திரன், பாம்பு இவை கலந்த சடைமுடியின் மீது அடியவர்கள் புனையும் நறுமணமலர்கள் அடையப் பெற்றவர். இத்தகைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவிளமர் என்னும் திருத்தலமாகும். 
3752 தெண்கடல் புடையணி நெடுமதி லிலங்கையர்
தலைவனைப்
பண்பட வரைதனி லடர்செய்த பைங்கழல்
வடிவினர்
திண்கட லடைபுனல் திகழ்சடை புகுவதொர்
சேர்வினார்
விண்கடல் விடமலி யடிகள்தம் வளநகர்
விளமரே
3.088.8
தௌவான நீரையுடைய கடல்சூழ்ந்த, அழகிய நீண்ட மதில்களையுடைய இலங்கை அரசனான இராவணன் பண் படையும்படி, கயிலைமலையின் கீழ் அடர்த்த கழலணிந்த திருவடிகளையுடையவர் சிவபெருமான். கடலையடையும் கங்கையை, சடையில் தாங்கியவர். விண்ணுலகிலுள்ள பரந்த பாற்கடலில் தோன்றிய விடத்தைத் தேக்கிய கண்டத்தர். இத்தகைய தலைவரான சிவபெருமான் வீற்றிருந்தருளும் வளமை பொருந்திய நகர் திரு விளமர் என்னும் திருத்தலமாகும். 
3753 தொண்டசை யுறவரு துயருறு காலனை
மாள்வுற
அண்டல்செய் திருவரை வெருவுற வாரழ
லாயினார்
கொண்டல்செய் தருதிரு மிடறின ரிடமெனி
லளியினம்
விண்டிசை யுறுமலர் நறுமது விரிபொழில்
விளமரே
3.088.9
சிவனுக்கு அடிமை பூணும் திருத்தொண்டின் நிலை அழியும்படி, மார்க்கண்டேயருக்குத் துன்பம் செய்ய வந்த காலனை மாளும் படி செய்து, பின்னர்த் தம் ஆணையின்படி ஒழுகுமாறு செய்தவர் சிவ பெருமான். பிரமன், திருமால் என்னும் இருவரையும் அஞ்சுவிக்கக் காண்டற்கரிய அழல் வடிவானவர். மேகம் போன்ற கரிய கண்டத்தை உடையவர். இத்தகைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம், வண்டினங்கள் விரிந்த மலர்களைக் கிண்டி நல்ல தேனை ஒலியுடன் பருகும் சோலைகளை உடைய திருவிளமர் என்னும் திருத்தலமாகும். 
3754 ஒள்ளியர் தொழுதெழ வுலகினி லுரைசெயு
மொழிபல
கொள்ளிய களவினர் குண்டிகை யவர்தவ
மறிகிலார்
பள்ளியை மெய்யெனக் கருதன்மின் பரிவொடு
பேணுவீர்
வெள்ளிய பிறையணி சடையினர் வளநகர்
விளமரே
3.088.10
உலகத்து அறிவுடையார்களால் வணங்கி ஏத்துதற்குரிய மதங்கள் பல உண்டு. வடமொழி, தமிழ் முதலிய பல மொழிகளிலுமுள்ள உயர்ந்த பொருள்களைக் களவுசெய்து தம்மதாகக் திருச்சிற்றம்பலம் காட்டும் திருட்டுத்தனமிக்கவரும், தவம் அறிகிலாதவருமான சமண, புத்தர்தம் பள்ளியினர் கூறும் நெறிகளை மெய்யென்று கருதற்க. வெண்ணிறப் பிறைச்சந்திரனை அணிந்த சடையையுடைய, வளம் மிகுந்த நகரான திருவிளமர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் சிவபெருமானை அன்போடு போற்றி வழிபடுங்கள். 
3755 வெந்தவெண் பொடியணி யடிகளை விளமருள்
விகிர்தரைச்
சிந்தையு ளிடைபெற வுரைசெய்த தமிழிவை
செழுவிய
அந்தணர் புகலியு ளழகம ரருமறை
ஞானசம்
பந்தன மொழியிவை யுரைசெயு மவர்வினை
பறையுமே
3.088.11
பசுவின் சாணம் வெந்ததாலான திருவெண்நீற்றினை அணிந்த தலைவரை, திருவிளமர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் வேறுபட்டவரை (விகிர்தர்), சிந்தையுள் இடையறாது இருத்தும்படி, அந்தணர்கள் வாழ்கின்ற செழுமையான திருப்புகலியில் அவதரித்த அருமறைவல்ல ஞானசம்பந்தர் போற்றி அருளிச் செய்த தமிழாகிய இத்திருப் பதிகத்தை ஓதுவோர் வினை அழியும். 
திருச்சிற்றம்பலம்

3.088.திருவிளமர் 
பண் - சாதாரி 
திருச்சிற்றம்பலம் 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - பதஞ்சலிமனோகரேசுவரர். தேவியார் - யாழினுமென்மொழியம்மை. 

3745 மத்தக மணிபெற மலர்வதொர் மதிபுரைநுதல்கரம்ஒத்தக நகமணி மிளிர்வதொ ரரவினரொளிகிளர்அத்தக வடிதொழ வருள்பெறு கண்ணொடுமுமையவள்வித்தக ருறைவது விரிபொழில் வளநகர்விளமரே3.088.1
சிவபெருமான், தலையில் அழகுற விளங்கும் பிறைச்சந்திரனை ஒத்த நெற்றியுடையவர். கரத்தில் விளங்கும் நகங்களைப் போல தலையிலுள்ள இரத்தினங்கள் பிரகாசிக்கும் ஐந்தலைப் பாம்பைக் கங்கணமாகக் கட்டியவர். இத்தகைய சிவபெருமானின் திருவடிகளைத் தொழுது யாம் உய்யும்பொருட்டு, அருள்பெருகும் கண்களையுடைய உமாதேவியோடு வித்தகராகிய அப்பெருமான் வீற்றிருந்தருளுவது விரிந்த சோலைகள் சூழ்ந்த வளமை வாய்ந்த திருவிளமர் என்னும் திருத்தலமாகும். 

3746 பட்டில கியமுலை யரிவைய ருலகினிலிடுபலிஒட்டில கிணைமர வடியின ருமையுறுவடிவினர்சிட்டில கழகிய பொடியினர் விடைமிசைசேர்வதோர்விட்டில கழகொளி பெயரவ ருறைவதுவிளமரே3.088.2
சிவபெருமான், உலகில் பட்டாடையால் மூடப்பட்ட முலைகளையுடைய பெண்கள் இடுகின்ற பலிகளை ஏற்க, இசைத்துச் செல்கின்ற மரப்பாதுகைகளை அணிந்த திருவடிகளை உடையவர். உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்ட கோலத்தர். தூய்மையையும், ஞானத்தையும் உணர்த்தும் திருவெண்ணீற்றினைப் பூசியுள்ளவர். இடபவாகனத்தில் வீற்றிருப்பவர். சொல்லொணாப் பேரழகிய தோற்றப் பொலிவுடன் நடக்கும் சிவபெருமான் வீற்றிருந்தருளுவது திருவிளமர் என்னும் திருத்தலமாகும். 

3747 அங்கதி ரொளியின ரரையிடை மிளிர்வதொரரவொடுசெங்கதி ரெனநிற மனையதொர் செழுமணிமார்பினர்சங்கதிர் பறைகுழன் முழவினொ டிசைதருசரிதையர்வெங்கதி ருறுமழு வுடையவ ரிடமெனில்விளமரே3.088.3
சிவபெருமான் அழகிய ஒளிவீசும் தோற்றப் பொலிவுடையவர். இடையிலே பாம்பைக் கச்சாகக் கட்டியவர். செந்நிற கதிர் போன்ற நிறமுடையவர். அக்கதிர்போல் ஒளிவீசும் இரத்தினங்கள் பதிக்கப்பட்ட ஆபரணங்களை அணிந்துள்ள மார்பினர். சங்குகள் ஒலிக்க, பறை, குழல், முழவு போன்ற வாத்தியங்கள் இசைக்கத் திருக்கூத்து ஆடுபவர். வெண்ணிற ஒளிவீசும் மழுப்படையை உடையவர். இத்தகைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவிளமர் என்னும் திருத்தலமாகும். 

3748 மாடம தெனவளர் மதிலவை யெரிசெய்வர்விரவுசீர்ப்பீடென வருமறை யுரைசெய்வர் பெரியபல்சரிதைகள்பாடல ராடிய சுடலையி லிடமுறநடநவில்வேடம துடையவர் வியனக ரதுசொலில்விளமரே3.088.4
மாடம் போன்று உயர்ந்து விளங்கிய, தேவர்கட்குத் தீமை செய்த பகையசுரர்களின் மும்மதில்களைச் சிவபெருமான் எரித்தவர். தமது புகழ் பாடுவதையே பொருளாகக் கொண்ட வேதங்களை அருளிச் செய்தவர். தமது வரலாறுகள் அடியவர்களால் பாடலாகப் பாடப்படும் பெருமையுடையவர். சுடுகாட்டை அரங்கமாகக் கொண்ட திருநடனம் செய்யும் கோலத்தர். இத்தகைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் பெருமை மிக்க நகரானது திருவிளமர் என்னும் திருத்தலமாகும். 

3749 பண்டலை மழலைசெ யாழென மொழியுமைபாகமாக்கொண்டலை குரைகழ லடிதொழு மவர்வினைகுறுகிலர்விண்டலை யமரர்கள் துதிசெய வருள்புரிவிறலினர்வெண்டலை பலிகொளும் விமலர்தம் வளநகர்விளமரே3.088.5
பண்ணின் இசையை ஒலிக்கும் யாழ்போன்ற இனியமொழி பேசும் உமாதேவியைத் தம் திருமேனியின் ஒரு பாகமாகக் கொண்டவர் சிவபெருமான். அவருடைய, அசைகின்ற ஒலிக்கும் வீரக்கழல்களை அணிந்துள்ள திருவடிகளைத் தொழும் அடியவர்களை வினை சாராது. விண்ணுலகிலுள்ள தேவர்கள் தொழுது போற்ற அருள்செய்யும் பெருங்கருணையாளர். பிரமனுடைய மண்டையோட்டில் பிச்சையேற்றுத் திரிபவரும் இயல்பாகவே பாசங்களின் நீங்கியவருமான அச்சிவபெருமான் வீற்றிருந்தருளும் வளம் மிகுந்த நகர் திருவிளமர் என்னும் திருத்தலமாகும். 

3750 மனைகடொ றிடுபலி யதுகொள்வர் மதிபொதிசடையினர்கனைகட லடுவிட மமுதுசெய் கறையணிமிடறினர்முனைகெட வருமதி ளெரிசெய்த வவர்கழல்பரவுவார்வினைகெட வருள்புரி தொழிலினர் செழுநகர்விளமரே3.088.6
சிவபெருமான் தாருகவனத்தில் மனைகள்தொறும் சென்று பிச்சை ஏற்றவர். சந்திரனைத் தரித்த சடையுடையவர். ஒலிக்கின்ற கடலில் தோன்றி உயிர்களைக் கொல்ல வந்த விடத்தை அமுதமாக உண்டு கறை படிந்த அழகிய கண்டத்தர். போர் முனைப்பு உடன் எழுந்த பகையசுரர்களின் மும்மதில்களை எரித்தவர்.தம் திருவடிகளை வணங்குபவர்களின் வினைகெடும்படி அருள்புரியும் தொழிலுடையவர். இத்தகைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் செழிப்பான நகர் திருவிளமர் என்னும் திருத்தலமாகும். 

3751 நெறிகமழ் தருமுரை யுணர்வினர் புணர்வுறு மடவரல் செறிகமழ் தருமுரு வுடையவர் படைபலபயில்பவர் பொறிகமழ் தருபட வரவினர் விரவிய சடைமிசைவெறிகமழ் தருமல ரடைபவ ரிடமெனில்விளமரே3.088.7
சிவபெருமான் சரியை முதலிய நான்கு நெறிகளாலும், ஆகமங்களாலும் மன்னுயிர்கட்கு மெய்யுணர்வு நல்கியவர். தம்மின் வேறாகாத ஞானமே வடிவான உமாதேவியை இடப்பாகமாகப் பொருந்தி விளங்கும் உருவுடையவர். திருக்கரங்களில் படைகள் பல ஏந்தியவர். புள்ளிகளையுடைய படமெடுத்தாடும் பாம்பை அணிந்தவர். கங்கை, பிறைச்சந்திரன், பாம்பு இவை கலந்த சடைமுடியின் மீது அடியவர்கள் புனையும் நறுமணமலர்கள் அடையப் பெற்றவர். இத்தகைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவிளமர் என்னும் திருத்தலமாகும். 

3752 தெண்கடல் புடையணி நெடுமதி லிலங்கையர்தலைவனைப்பண்பட வரைதனி லடர்செய்த பைங்கழல்வடிவினர்திண்கட லடைபுனல் திகழ்சடை புகுவதொர்சேர்வினார்விண்கடல் விடமலி யடிகள்தம் வளநகர்விளமரே3.088.8
தௌவான நீரையுடைய கடல்சூழ்ந்த, அழகிய நீண்ட மதில்களையுடைய இலங்கை அரசனான இராவணன் பண் படையும்படி, கயிலைமலையின் கீழ் அடர்த்த கழலணிந்த திருவடிகளையுடையவர் சிவபெருமான். கடலையடையும் கங்கையை, சடையில் தாங்கியவர். விண்ணுலகிலுள்ள பரந்த பாற்கடலில் தோன்றிய விடத்தைத் தேக்கிய கண்டத்தர். இத்தகைய தலைவரான சிவபெருமான் வீற்றிருந்தருளும் வளமை பொருந்திய நகர் திரு விளமர் என்னும் திருத்தலமாகும். 

3753 தொண்டசை யுறவரு துயருறு காலனைமாள்வுறஅண்டல்செய் திருவரை வெருவுற வாரழலாயினார்கொண்டல்செய் தருதிரு மிடறின ரிடமெனிலளியினம்விண்டிசை யுறுமலர் நறுமது விரிபொழில்விளமரே3.088.9
சிவனுக்கு அடிமை பூணும் திருத்தொண்டின் நிலை அழியும்படி, மார்க்கண்டேயருக்குத் துன்பம் செய்ய வந்த காலனை மாளும் படி செய்து, பின்னர்த் தம் ஆணையின்படி ஒழுகுமாறு செய்தவர் சிவ பெருமான். பிரமன், திருமால் என்னும் இருவரையும் அஞ்சுவிக்கக் காண்டற்கரிய அழல் வடிவானவர். மேகம் போன்ற கரிய கண்டத்தை உடையவர். இத்தகைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம், வண்டினங்கள் விரிந்த மலர்களைக் கிண்டி நல்ல தேனை ஒலியுடன் பருகும் சோலைகளை உடைய திருவிளமர் என்னும் திருத்தலமாகும். 

3754 ஒள்ளியர் தொழுதெழ வுலகினி லுரைசெயுமொழிபலகொள்ளிய களவினர் குண்டிகை யவர்தவமறிகிலார்பள்ளியை மெய்யெனக் கருதன்மின் பரிவொடுபேணுவீர்வெள்ளிய பிறையணி சடையினர் வளநகர்விளமரே3.088.10
உலகத்து அறிவுடையார்களால் வணங்கி ஏத்துதற்குரிய மதங்கள் பல உண்டு. வடமொழி, தமிழ் முதலிய பல மொழிகளிலுமுள்ள உயர்ந்த பொருள்களைக் களவுசெய்து தம்மதாகக் திருச்சிற்றம்பலம் காட்டும் திருட்டுத்தனமிக்கவரும், தவம் அறிகிலாதவருமான சமண, புத்தர்தம் பள்ளியினர் கூறும் நெறிகளை மெய்யென்று கருதற்க. வெண்ணிறப் பிறைச்சந்திரனை அணிந்த சடையையுடைய, வளம் மிகுந்த நகரான திருவிளமர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் சிவபெருமானை அன்போடு போற்றி வழிபடுங்கள். 

3755 வெந்தவெண் பொடியணி யடிகளை விளமருள்விகிர்தரைச்சிந்தையு ளிடைபெற வுரைசெய்த தமிழிவைசெழுவியஅந்தணர் புகலியு ளழகம ரருமறைஞானசம்பந்தன மொழியிவை யுரைசெயு மவர்வினைபறையுமே3.088.11
பசுவின் சாணம் வெந்ததாலான திருவெண்நீற்றினை அணிந்த தலைவரை, திருவிளமர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் வேறுபட்டவரை (விகிர்தர்), சிந்தையுள் இடையறாது இருத்தும்படி, அந்தணர்கள் வாழ்கின்ற செழுமையான திருப்புகலியில் அவதரித்த அருமறைவல்ல ஞானசம்பந்தர் போற்றி அருளிச் செய்த தமிழாகிய இத்திருப் பதிகத்தை ஓதுவோர் வினை அழியும். 

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 02 Apr 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.