LOGO
  முதல் பக்கம்    சிறுவர்    தமிழ்க்கல்வி - Tamil Learning Print Friendly and PDF

தாய் வழி உறவுகள்

மகனுக்கு தனது தாய் மூலம் வரும் உறவுகளே தாய் வழி உறவுகள் ஆகும். தாய் வழி உறவுமுறைகள் பற்றியும் அவற்றிற்கான விளகங்களும் பின்வருமாறு:

தாத்தா :

அம்மாவின் அப்பா தாத்தா என்றழைக்கப்படுவார். இலங்கைத் தமிழர்கள் அம்மாவின் அப்பாவை அம்மப்பா என்றும் அழைப்பர்.

பாட்டி (அ) அம்மாயி :

அம்மாவின் அம்மா பாட்டி (அ) அம்மாயி என்றழைக்கப்படுவார். இலங்கைத் தமிழர்கள் அம்மாவின் அம்மாவை அம்மம்மா என்றும் அழைப்பர்.

மாமா :

அம்மாவின் உடன் பிறந்த சகோதரங்களுள் ஆண் சகோதரன் மாமா என்றழைக்கப்படுவார். தாய்மாமன் என்ற உறவு தமிழர்களின் உறவுமுறைகளிலே முக்கியமான உறவுமுறை ஆகும்.

அத்தை :


அம்மாவின் உடன் பிறந்த சகோதரனின் மனைவி அதாவது மாமனின் மனைவி அத்தை என்று அழைக்கப்படுவார்.

பெரியம்மா :

அம்மாவின் உடன் பிறந்த சகோதரங்களுள் மூத்த பெண் சகோதரி பெரியம்மா என்றழைக்கப்படுவார்.

பெரியப்பா :

அம்மாவின் உடன் பிறந்த சகோதரங்களுள் மூத்த பெண் சகோதரியின் கணவர் பெரியப்பா என்று அழைக்கப்படுவார்.

சின்னம்மா :

அம்மாவின் உடன் பிறந்த சகோதரங்களுள் இளைய பெண் சகோதரி சின்னம்மா அல்லது சித்தி என்றழைக்கப்படுவார்.

சித்தப்பா :

அம்மாவின் உடன் பிறந்த சகோதரங்களுள் இளைய பெண் சகோதரியின் கணவர் அதாவது சின்னம்மாவின் கணவர் சித்தப்பா என்று அழைக்கப்படுவார்.

மைத்துனன் (அ) மச்சான் :

மாமாவின் மகன் மைத்துனன் என்றழைக்கப்படுவார். மைத்துனன் என்ற முறையை பேச்சுவழக்கில் மச்சான் என்றும் அழைப்பர்.

மைத்துனி (அ) மச்சாள் :

மாமாவின் மகள் மைத்துனி என்றழைக்கப்படுவார். மைத்துனி என்ற முறையை பேச்சுவழக்கில் மச்சாள் என்றும் அழைப்பர்.

சகோதரன் :

ஒருவரின் பெரியம்மா அல்லது சின்னம்மாவின் மகன் அவருக்கு சகோதரன் முறை ஆவார். அச்சகோதரன் தன்னை விட வயதில் மூத்தவராக இருப்பின் அண்ணன் என்றும் இளையவராக இருப்பின் தம்பி என்றும் அழைக்கப்படுவார்.

சகோதரி :

ஒருவரின் பெரியம்மா அல்லது சின்னம்மாவின் மகள் அவருக்கு சகோதரி முறை ஆவார். அச்சகோதரி தன்னை விட வயதில் மூத்தவராக இருப்பின் அக்கா என்றும் இளையவராக இருப்பின் தங்கை என்றும் அழைக்கப்படுவார்.

by Swathi   on 02 Feb 2013  19 Comments
 தொடர்புடையவை-Related Articles
பறவைகள் சரணாலயம் பறவைகள் சரணாலயம்
முதன் முதலில் கடலை பார்க்கும் சிறார்கள் முதன் முதலில் கடலை பார்க்கும் சிறார்கள்
உயர பறந்திடுவோம் உயர பறந்திடுவோம்
ஒன்றாய் இருப்போம் ஒற்றுமையுடனே ஒன்றாய் இருப்போம் ஒற்றுமையுடனே
சூரிய அண்ணனின் கோபம் சூரிய அண்ணனின் கோபம்
எப்பொழுது பள்ளி செல்வோம் ? எப்பொழுது பள்ளி செல்வோம் ?
அயலக சூழலில் தமிழ்க்கல்வி -லெட்சுமிபிரியா அயலக சூழலில் தமிழ்க்கல்வி -லெட்சுமிபிரியா
பயணம் செய்தால் பயணம் செய்தால்
கருத்துகள்
30-Mar-2021 08:02:59 dena said : Report Abuse
enathu akkavin petti ennai enna vendu alaika vendum
 
28-Mar-2021 17:22:03 MOORTHY said : Report Abuse
எனது மனைியின் மாமா மகள் எனக்கு என்ன உறவு முறை...
 
15-Mar-2021 16:54:58 G.Narayanan said : Report Abuse
Enuduya Thaimaman machan magal enna murai enaku
 
10-Feb-2021 14:49:50 Ritha said : Report Abuse
Vanakkam, please clarify this doubt for me. thank you (எனது பாட்டி) அம்மாவின் அம்மா எனது காதலரின் தாத்தா (அவரின் அப்பாவின் அப்பா) எனது பாட்டியும் அவரின் தாத்தாவும் அண்ணன் தங்கை அப்படி என்றாள் நானும் எனது காதாலுறும் என்ன முறை வரும்?
 
02-Jan-2021 11:10:30 புவனேஸ்வரி said : Report Abuse
பெரியம்மா பையன் ஓட பையன் என்ன முறை வேனும்.
 
26-Oct-2020 16:26:06 Dinesh said : Report Abuse
மச்சாள் உடைய மகள் எனக்கு என்ன உறவு முறை
 
23-Aug-2020 18:01:13 Asha said : Report Abuse
என் சித்தியின் கணவருடய பெரியம்மா மகன் என்ன வேண்டும் எனக்கு
 
28-Jul-2020 17:14:18 Vijayalakshmi said : Report Abuse
என் அக்காவின் கணவர் எனக்கு மாமா. அவருடைய அக்கா எனக்கு என்ன முறை வேண்டும்?
 
10-Jun-2020 11:17:47 வின் னி said : Report Abuse
என் அம்மாவின் சித்தப்பா மகனின் மனைவியின் சித்தப்பா மகன் என்ன உறவு முறை
 
23-May-2020 17:31:09 Tharini said : Report Abuse
எனது பாட்டியின் அக்கா பேரன்(அக்கா பையன் மகன்)எனக்கு என்ன உறவு.
 
08-Mar-2020 03:59:39 ஜெயந்தி said : Report Abuse
தாய்மாமாவின்(அப்பா) மகன் தனதுஅப்பாவுடன் பிறந்த அக்கா மகளின் மகளுக்கு என்ன உறவுமுறை
 
01-Feb-2020 11:05:19 Thenmozhi said : Report Abuse
என் தாய் வழி பாட்டியின் தம்பி மகன் எனக்கு என்ன உறவுமுறை
 
20-Oct-2019 18:19:02 அ.ராஜா said : Report Abuse
என் (அப்பாவின் அக்கா) பெரியத்தை உடைய மகளின் மகள், என்ன முறை எனக்கு ?
 
25-May-2019 22:07:42 சங்கவி said : Report Abuse
அன்னியின் அக்கா வை எப்படி அழைப்பது
 
03-Feb-2019 06:26:42 அருள் மணி said : Report Abuse
எனது மனைவியின் அக்கா தங்கை மற்றும் தம்பி எனக்கு என்ன உறவுகள்.. மற்றும் அவற்றின் பேச்சு வழக்கு பெயர்கள் என்ன??
 
01-Nov-2018 14:46:29 Manikandan said : Report Abuse
என் அப்பாவின் பெரியம்மா மகளின் பேத்தி எனக்கு என்ன உறவு
 
14-Jun-2018 18:04:34 Kathiresan said : Report Abuse
பாட்டியின் தம்பி எனக்கு என்ற உறவு
 
10-Apr-2018 02:32:06 தன்ஷிகா said : Report Abuse
தங்கை உறவு
 
09-Apr-2018 12:06:19 கார்த்திக் said : Report Abuse
அம்மா வழி பெரியப்பா தம்பி மகள் என்ன உறவு (அம்மாவுடைய அக்கா கணவருடைய தம்பி மகள் எனக்கு என்ன உறவு)
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.