LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- சிந்துப்பாவியல்

முடுகியல்

முடுகியல் சந்த முறைப்படி நடக்கும்.
கருத்து : சிந்துப் பாடல்களில் வரும் முடுகியல் அடிகள் சந்தப் பாடல்களின் இலக்கண முறைப்படி அமைந்து இயங்கும்.
விளக்கம் : இசை நீட்டத்திற்கு இடமின்றிப் பாடலுக்குரிய நடையில் ஒருவகைச் சந்த ஓசையுடன் விரைந்து செல்லுமாறு அமைக்கப் பட்ட சீர்களை உடையது முடுகியல் அடியாகும்.
சிந்துப் பாக்களின் சீர்களில் உள்ள
ஒவ்வோர் உயிரும் ஓரசை யாகும் (நூ. 6)
என்பது முன்பு விளக்கப்பட்டது.
சிந்துப் பாடல்கள் சிலவற்றில் அப்பாடல்களின் இடையில் முடுகியல் அடிகள் வருவதுண்டு. குறிப்பிட்ட ஒரு நடையிலமைந்த பாடலில் முடுகியற் சீர்கள் மட்டும் விரைவு நடையில் (ஓரசைக்கு இரண்டு உயிராக) நடப்பதுண்டு. முடுகியலின் சீரமைப்புச் சந்தப் பாடலின் இலக்கணத்தைப் பெற்றிருக்கும். 
சந்தப்பா இலக்கணப்படிக் குறில் ஒரு மாத்திரை பெறும்; குறிலொற்று, நெடில், நெடிலொற்றுகள் இரண்டு மாத்திரை பெறும்; அரையடி, அடியிறுதியில் உள்ள குறில் நெடிலாகவும் ஒலிக்கும்.
இதன்படி முடுகியற் சீர்கள் தாம் அமைந்துள்ள பாடலின் நடைக்கேற்ற மாத்திரையைப் பெற்றுவரும்.
காட்டு : (1)
  வன் னத் தி னை மா வைத் தெள் ளி யே . உண் ணும்
வாழ்க் கைக் கு றக் குல வள் ளி யே . உயிர்
வாங் கப் பி றந் திட் ட கள் ளி யே . இ ரு
வட மே ருவை நிக ரா கிய புய மீ தணி பல மா மணி
மா லை ப டீ ரெ னத் துள் ளி யே . வி ழ
வான் ம தி வீ சுந் தீ அள் ளி யே . .
இது மும்மை நடைப் பாடல். இதில்
| வட மே ருவை | நிக ரா கிய | புய மீ தணி | பல மா மணி |
என்ற நான்கு சீர்களும் முடுகியற் சீர்கள். இச்சீர்கள் இசை நீட்டத்திற்கு இடமின்றி பாடலுக்குரிய நடையைல் ஒரு வகைச் சந்த ஓசையோடு விரைந்து செல்வதைக் காணலாம்.
காட்டு : (2)
        கண் ணா . மி ரம் டைத் த
    விண் ணூ . ரி டம் ரித் த
    கன வயி ரப் படை யவன் மக ளைப் புணர்
    கர்த் த னே . . . தி ருக்
    கழு கும லைப் பதி யனு தின முற் றிடு
    சுத் னே   . . .              
(கா. சி. க.வ. ப. 167)
இது நான்மை நடைப் பாடல். இதில்
| ‘கன வயி ரப் படை | யவன் மக ளைப் புணர்’ |, ‘கழு கும லைப் பதி | யனு தின முற் றிடு’ |
என்ற நான்கு சீர்களும் முடுகியற் சீர்கள். இச் சீர்களில் உள்ள ஒவ்வோர் அசையும் இரண்டிரண்டு உயிர்களைப் பெற்று வந்துள்ளதையும் சந்த ஓசையோடு விரைவு நான்மை நடப்பதையும் உணரலாம். எல்லாப் பாடல்களிலும் முடுகியல் வருவதில்லை.
முடிகியல்கள் காவடிச் சிந்துப் பாக்களுக்கு மிகுந்த ஒலி நயத்தைத் தருகின்றன. முடிகியல் பாடலுக்குரிய நடையில் மட்டுமே நடக்கும் என்பதை வலியுறுத்தாமையால், மிகச் சில காவடிச் சிந்துகளில் பாடல் ஒரு நடையிலும் முடுகியல் வேறு நடையிலும் அமைவதுண்டு.
காட்டு :
திரு வு . ற் றி  லகு  கங் . க     வரை  யி . ற்  பு கழ் மிகுந் . த
திக ழ . த் தி  னமு றைந் . த    வா . ச . னை  - . மி . கு .
மகி மை . ச்சு  கீர்த தொண் . டர் நே . ச . னைப் - . ப . ல .
தீய பாதக காரராகிய
சிக ர . க்கி   ரிபி  ளந் . த    வே . ல . னை - . உ . மை.
தக ர . க்கு   ழல்கொள்வஞ் .  சி பா . ல . னை .
(கா. சி. க வ. ப.131)
----
26.
முடுகியல் அடியே நாற்சீர்த் தாகும்.
கருத்து : சிந்துப் பாடல்களில் வரும் முடுகியல் அடிகள் நான்கு சீர்கள் உடையனவாக இருக்கும்.
விளக்கம் : சிந்துப் பாடல்களின் இடையில் வருகின்ற முடுகியல் அடிகள் நான்கு சீர்களைக் கொண்டவைகளாக இருக்கும்.

     வாழ்க் கைக் கு றக் கு ல வள் ளி யே . உ யிர்

(க . சி. க.வ.ப. 180)
இதில்
|வடமேருவை |நிகராகிய| புயமீதணி |பலமாமணி|
என்ற முடுகியல் அடி நான்கு சீர்களைக் கொண்டுள்ளது. இவ்வாறே முடுகியல் அடியுடைய பாடல்களை நோக்கி உணர்க. 

by Swathi   on 20 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.