LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- குகன்

முகத்திரண்டு ....

யாரங்கே

வள்ளுவப் பெருந்தகையா

வாருங்கள் இங்கே ....


உங்கள் கருத்தோடு

கொஞ்சம் பிணக்கு

எனக்கு......


“ கல்லாதார் முகத்திரண்டு

புண்ணுடையார்

சொன்னது நீர்தானே ...


கற்றதனால்தான்

கண்ணிருந்தும்

அனாதைகளாய் திரிகிறோம்

நாங்கள் ....


பாசமிழந்து

பந்தமிழந்து

சுற்றமிழந்து

சுகமிழந்து

எங்கள்

சுபமிழந்து ...


வந்த இடத்தில்

எங்கள்

முகவரி இழந்து ...


வாழ்ந்தாக வேண்டுமென்று

நிர்பந்தத்தோடு

இழப்புகளை மட்டுமே

சொந்தமாக்கிக் கொண்ட

தனிமங்கள் நாங்கள் ...


உங்கள் காலத்தில்

கல்வி அறிவுக்கண்

திறந்து ...


அப்படித்தானே ...


இந்த

வேறு காலம் ...


இப்போதெல்லாம்

“ லட்சுமிதேவியின் “

துணையோடு தான்

வகுப்பறைகளில்

“ சரசுவதிதேவியை “

சந்திக்க வேண்டிருக்கிறது ....


ஏதுமறியா

சிறு பிஞ்சுகளுக்கு

நேர் முகத்தேர்வுகள் .....


உங்கள் காலத்தில்

மண்ணிலிருந்து தானே

சட்டி செய்தீர்கள் ....


இப்போது

அப்படியல்ல ...


பெற்றோர்கள்

சட்டி செய்யவேண்டும் ....


கல்விக் கூடங்கள்

அதை சுட்டுத்தரும் ...


எங்களை

அனாதைகளாக்க

சிறு வயதிலிருந்தே

கனவு காணுகிறார்கள்

எங்கள் பெற்றோர்கள் ...


என்றைக்காவது

அறிவில் சிறந்த

நீங்கள் புத்தக மூட்டை

சுமந்ததுண்டா ...


உங்கள் காலத்தில்

கழுதைகள்தானே

பொதிசுமக்கும் ....


ஆனால் இப்போது

நாங்கள்

சுமக்கிறோம் ...


பிற்காலத்தில் எங்களுக்கு

தேவையில்லையென்று

தெரிந்தாலும் ...


உங்கள் காலத்தில்

கல்வி என்பது

அறிவுப் பரிமாற்றம்

இல்லையா பெருந்தகையே ....


இப்போது

அதுவல்ல நிலைப்பாடு ...


உண்டு உயிர்க்க

தழைத்துச் செழிக்க

வழிசொல்லுகிற வியாபாரம்

கல்வி அவ்வளவுதான் ....


இன்னொன்று

தெரியுமா பெருந்தகையே ...


நொந்து போவீர்கள்

கேள்விப்பட்டால் ...


உழைக்க மறுப்பதும்

உழைப்பு உறிஞ்சுவதும்

பிழைப்பு ஏய்ப்பதும்

பச்சோந்தியாய்

நிறம் மாறிப்பன்பு

கொள்வதும்

கற்றறிந்தோரின்

ஆளுமைத்திறன்கள் ...


நீங்கள் சொன்ன

“ முகத்திரண்டு புண்னூடையோர் “

பெரும்பாலும்  நல்லவர்கள்

வள்ளுவரே ..


அந்தவகையில்

என் மரியாதைக்குரியவர்கள்

அவர்களே ...


-      குகன்

by Guhan   on 06 Dec 2011  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
ஆற்றின் கரையோரம் ஆற்றின் கரையோரம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.