LOGO
  முதல் பக்கம்    சமையல்    ஆரோக்கிய உணவு/சிறுதானியம் Print Friendly and PDF

முளைக்கட்டிய பயறு புலாவ்

தேவையானவை :

1. வேக வைத்த முளைக்கட்டிய பச்சை பயறு - அரை கப்  

2. வேக வைத்த முளைக்கட்டிய தட்டைப் பயறு - அரை கப்  

3. வேக வைத்த கைக்குத்தல் அரிசி - இரண்டு கப்

4. குடைமிளகாய் - 1 (பெரியது, நறுக்கியது)

5. பீன்ஸ் - 4 (நறுக்கியது)

6. தக்காளி - 2 (நறுக்கியது)

7. வெங்காயம் - 1 (பெரியது, நறுக்கியது)

8. இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்

9. மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

10. சீரகப் பொடி - 1 டீஸ்பூன்

11. மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்
 
12. மல்லி தூள் - அரை டீஸ்பூன்

13. சீரகம் - 1 டீஸ்பூன்

14. நறுக்கிய கொத்தமல்லி - சிறிது

15. எண்ணெய் - 2 டீஸ்பூன்

16. உப்பு - தேவையான அளவு

செய்முறை :


1. ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம் சேர்த்து தாளித்து, மிதமான தீயில் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு, பொன்னிறமாக வதக்க வேண்டும்.

2. பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி, பீன்ஸ், குடைமிளகாய் மற்றும் உப்பு சேர்த்து, ஐந்து நிமிடம் தொடர்ந்து கிளறி விட வேண்டும். பின்பு தக்காளி, மஞ்சள் தூள், சீரகப் பொடி, மல்லி தூள், மிளகாய் தூள் சேர்த்து, தீயை குறைவில் வைத்து நான்கு நிமிடம் வதக்கி விட வேண்டும்.

3. அடுத்து முளைக்கட்டிய பச்சை பயறு மற்றும் தட்டைப் பயறை சேர்த்து ஐந்து நிமிடம் கிளறி, வேக வைத்துள்ள கைக்குத்தல் அரிசியை சேர்த்து, உப்பு மற்றும் கொத்தமல்லியைத் தூவி, மூன்று நிமிடம் பிரட்டி இறக்கினால், ஆரோக்கியமான முளைக்கட்டிய பயறு புலாவ் ரெடி!!!

by Swathi   on 11 Feb 2016  1 Comments
Tags: புலாவ்   முளைக்கட்டிய பயறு   பயறு புலாவ்   Payaru Pulao   Pulao        
 தொடர்புடையவை-Related Articles
முளைக்கட்டிய பயறு புலாவ் முளைக்கட்டிய பயறு புலாவ்
கருத்துகள்
08-May-2016 21:06:42 vignesh said : Report Abuse
Dear Team, please tell as many breakfast flavours of சிறு தானியம் so it should be helpful for us to prepare it. Thanks,
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.