ஆறாவது ஐபிஎல் தொடரின் 33 வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் நேற்று மோதின. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது, அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்களை எடுத்தது. பின்னர் 160 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 19.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. மும்பை அணியின் சிமித் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
|