லாரன்ஸ் தற்போது முனி படத்தின் 3வது பாகத்தை இயக்கி, நடித்து வருகிறார்.
இந்த படத்தில், லாரன்ஸுக்கு ஜோடியாக டாப்சி நடித்து வருகிறார். இவர்கள் தவிர நித்யா மேனன், கோவை சரளா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
தமன் இந்த படத்திற்கு இசை அமைக்கிறார். முனி படத்தின் 3வது பாகத்தின் படபிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், பாடல் கட்சிகள் மட்டும் பாக்கி உள்ளது. தற்போது படத்தின் காட்சிகளை எடிட்டிங் செய்யும் பணியில் லாரன்ஸ் மும்முரமாக இறங்கி உள்ளார். இதனால் விரைவிலேயே படம் வெளியாகும் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது.
|