LOGO

அருள்மிகு பால சுப்பிரமணியர் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு பால சுப்பிரமணியர் திருக்கோயில் [Arulmigu subramaniar Temple bridge]
  கோயில் வகை   முருகன் கோயில்
  மூலவர்   பால சுப்பிரமணியர்
  பழமை   1000-2000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு பால சுப்பிரமணியர் திருக்கோயில், சீலநாயக்கன்பட்டியில், ஊத்துமலை- சேலம் மாவட்டம்
  ஊர்   சீலநாயக்கன்பட்டி, ஊத்துமலை
  மாவட்டம்   சேலம் [ Salem ] -
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

அகத்தியர் இங்கு தான் அகத்தியம் என்னும் தமிழ் இலக்கண நூலை எழுதினார். இங்கு மூலவர் பால சுப்பிரமணியர் நின்ற திருக்கோலத்தில், மயில் 
வாகனத்துடன், கையில் வேலுடன் காட்சி தருகிறார். இடப்பக்கம் விநாயகரும், வலப்பக்கம் நந்தியுடன் கூடிய சிவலிங்கமும் உள்ளன. இந்த மலையில் 
சமணர்கள் வாழ்ந்திருக்கக்கூடும் என்பதை இங்குள்ள குகைகள் மூலம் அறியலாம். இங்குள்ள முருகனை அகத்தியர் பூஜித்ததற்கான ஆதாரங்கள் 
இருக்கின்றன. அத்துடன் மிகப்பெருமை வாய்ந்த ஸ்ரீ சக்ராதேவியும், 43 முக்கோணங்கள் கொண்ட சக்தி யந்திரங்களும் உருவாக்கப்பட்டுள்ளது. சகல 
சக்திகளையும் உள்ளடக்கியதாக கருதப்படும் ஸ்ரீ சக்கரத்தின் ஒரு பக்கம் ஒரு குடில் உள்ளது. அந்த குடிலில் ரிஷிபத்தினி ஒருவர் தவக்கோலத்தில் 
இருக்கிறார். ஸ்ரீ சக்கரத்தின் மற்றொரு பக்கத்தில் புலித்தோல் மீது அகத்தியர் ஒரு மரத்தடியில் அமர்ந்த நிலையில் உள்ளார். முருகன் கோயிலுக்கு எதிரில் 
கபிலர் குகை அமைந்துள்ளது. இந்த குகையில் கபிலர் தவக்கோலத்தில் இருப்பது புடைப்புச் சிற்பமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. அவர் அருகே மரம், பசு, 
சூலாயுதம் ஆகியவை உள்ளன. சிவராத்திரி நாட்களில் அதிகாலை வேளையில் அமாவாசை பிறக்கும் சமயத்தில் சப்தரிஷிகளும் அங்குள்ள சுனை, 
தீர்த்தங்களில் நீராடிவிட்டு சதாசிவ மூர்த்திக்கு சப்தரிஷி பூஜை செய்ததாக தலபுராணம் கூறுகிறது. சிவசித்தர், கஞ்சமலை சித்தர், கரடி சித்தர், பழநி போகர் 
ஆகியோர் இங்கு வாசம் செய்துள்ளனர் என்ற தகவலை கொங்கு மண்டல சதகமும், பாபநாச புராண ஓலைச்சுவடியும் குறிப்பிடுகின்றன. 

அகத்தியர் இங்கு தான் அகத்தியம் என்னும் தமிழ் இலக்கண நூலை எழுதினார். இங்கு மூலவர் பால சுப்பிரமணியர் நின்ற திருக்கோலத்தில், மயில் வாகனத்துடன், கையில் வேலுடன் காட்சி தருகிறார். இடப்பக்கம் விநாயகரும், வலப்பக்கம் நந்தியுடன் கூடிய சிவலிங்கமும் உள்ளன. இந்த மலையில் சமணர்கள் வாழ்ந்திருக்கக்கூடும் என்பதை இங்குள்ள குகைகள் மூலம் அறியலாம். இங்குள்ள முருகனை அகத்தியர் பூஜித்ததற்கான ஆதாரங்கள் 
இருக்கின்றன.

அத்துடன் மிகப்பெருமை வாய்ந்த ஸ்ரீ சக்ராதேவியும், 43 முக்கோணங்கள் கொண்ட சக்தி யந்திரங்களும் உருவாக்கப்பட்டுள்ளது. சகல சக்திகளையும் உள்ளடக்கியதாக கருதப்படும் ஸ்ரீ சக்கரத்தின் ஒரு பக்கம் ஒரு குடில் உள்ளது. அந்த குடிலில் ரிஷிபத்தினி ஒருவர் தவக்கோலத்தில் இருக்கிறார். ஸ்ரீ சக்கரத்தின் மற்றொரு பக்கத்தில் புலித்தோல் மீது அகத்தியர் ஒரு மரத்தடியில் அமர்ந்த நிலையில் உள்ளார். முருகன் கோயிலுக்கு எதிரில் கபிலர் குகை அமைந்துள்ளது. இந்த குகையில் கபிலர் தவக்கோலத்தில் இருப்பது புடைப்புச் சிற்பமாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

அவர் அருகே மரம், பசு, சூலாயுதம் ஆகியவை உள்ளன. சிவராத்திரி நாட்களில் அதிகாலை வேளையில் அமாவாசை பிறக்கும் சமயத்தில் சப்தரிஷிகளும் அங்குள்ள சுனை, தீர்த்தங்களில் நீராடிவிட்டு சதாசிவ மூர்த்திக்கு சப்தரிஷி பூஜை செய்ததாக தலபுராணம் கூறுகிறது. சிவசித்தர், கஞ்சமலை சித்தர், கரடி சித்தர், பழநி போகர் ஆகியோர் இங்கு வாசம் செய்துள்ளனர் என்ற தகவலை கொங்கு மண்டல சதகமும், பாபநாச புராண ஓலைச்சுவடியும் குறிப்பிடுகின்றன. 

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு பரமத்தி பீமேஸ்வரர் திருக்கோயில் பரமத்திவேலூர், மாவுரெட்டி , சேலம்
    அருள்மிகு கரபுரநாதர் திருக்கோயில் உத்தமசோழபுரம் , சேலம்
    அருள்மிகு அறப்பளீஸ்வரர் திருக்கோயில் கொல்லிமலை , சேலம்
    அருள்மிகு இளமீஸ்வரர் திருக்கோயில் தாரமங்கலம் , சேலம்
    அருள்மிகு ஆட்கொண்டீஸ்வரர் திருக்கோயில் பெத்தநாயக்கன்பாளையம் , சேலம்
    அருள்மிகு காயநிர்மாலேஸ்வரர் திருக்கோயில் ஆறகழூர் , சேலம்
    அருள்மிகு சாம்பமூர்த்தீஸ்வரர் திருக்கோயில் ஏத்தாப்பூர் , சேலம்
    அருள்மிகு சுகவனேஸ்வரர் திருக்கோயில் சேலம் , சேலம்
    அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் தாரமங்கலம் , சேலம்
    அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில் பேளூர் , சேலம்
    அருள்மிகு சோமேஸ்வரர் (லட்சுமி நரசிம்மர்) திருக்கோயில் நங்கவள்ளி , சேலம்
    அருள்மிகு விருத்தாச்சலேஸ்வரர் திருக்கோயில் வெங்கனூர் , சேலம்
    அருள்மிகு முனியப்பன் திருக்கோயில் வெண்ணங்கொடி , சேலம்
    அருள்மிகு வீரபத்திரசுவாமி திருக்கோயில் சேலம் , சேலம்
    அருள்மிகு வீர ஆஞ்சநேயர் திருக்கோயில் ஆத்தூர் , சேலம்
    அருள்மிகு மயிலேறும் பெருமான் சாஸ்தா திருக்கோயில் ஸ்ரீவைகுண்டம் , தூத்துக்குடி
    அருள்மிகு ஐயப்பன் திருக்கோயில் சாஸ்தாநகர் , சேலம்
    அருள்மிகு கஞ்சமலை சித்தேஸ்வரர் திருக்கோயில் கஞ்சமலை , சேலம்
    அருள்மிகு இடும்பன் திருக்கோயில் பழநி , திண்டுக்கல்
    அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயில் வடபழநி , சென்னை

TEMPLES

    முத்துக்கருப்பண்ண சுவாமி கோயில்     நட்சத்திர கோயில்
    திவ்ய தேசம்     சிவாலயம்
    மாணிக்கவாசகர் கோயில்     தெட்சிணாமூர்த்தி கோயில்
    வீரபத்திரர் கோயில்     பிரம்மன் கோயில்
    அகத்தீஸ்வரர் கோயில்     சனீஸ்வரன் கோயில்
    காரைக்காலம்மையார் கோயில்     பட்டினத்தார் கோயில்
    முருகன் கோயில்     வள்ளலார் கோயில்
    அறுபடைவீடு     ஆஞ்சநேயர் கோயில்
    சிவன் கோயில்     அம்மன் கோயில்
    அய்யனார் கோயில்     விஷ்ணு கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்