LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- சாதம் (Rice)

மஷ்ரூம் தம் பிரியாணி (Mushroom Dum Biryani)

தேவையானவை :


காளான் - 1 பாக்கெட்

பச்சை பட்டாணி - 1 கப்

சோயா பீன்ஸ் - 10

பாசுமதி அரிசி - 3 கப்

வெங்காயம் - 3

தக்காளி - 2

நெய் - 100 கி

எண்ணெய் - பொரிப்பதற்கு ஏற்ப

சோள மாவு - 1/2 கப்

குங்கும பூ - சிறிதளவு

தனியா தூள் - 2 டீஸ் ஸ்பூன்

மஞ்சள் தூள் - 1/2 டீஸ் ஸ்பூன்

கரம் மசாலா தூள் - 1 டீஸ் ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

பச்சை மிளகாய் - 2

இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ் ஸ்பூன்

புதினா - 1 கப்

கொத்தமல்லி - 1 கப்

தயிர் - 3 டீஸ் ஸ்பூன்

எலுமிச்சை சாறு - 2 டீஸ் ஸ்பூன்

மிளகாய் தூள் - 2 டீஸ் ஸ்பூன்

காலா ஜீரா - 1/2 டீஸ் ஸ்பூன்

பட்டை, சோம்பு, லவங்கம், கிராம்பு, மராட்டி மொக்கு, பிரிஞ்சி இலை - தாளிப்பதற்கு


செய்முறை :


1.முதலில் வெங்காயத்தை நீளமாகவும் தக்காளி, புதினா மற்றும் கொத்தமல்லியை பொடியாகவும் நறுக்கவும்.காளானை நான்காக வெட்டி வைக்கவும்.நீளமாக நறுக்கிய வெங்காயத்தில் ஒரு பாதியை எடுத்து சோள மாவில் புரட்டி எண்ணையில் பொரித்தெடுக்கவும்.

2.ஒரு வாணலியில் நெய் விட்டு காய்ந்ததும் தாளிக்க கொடுத்துள்ளதை சேர்த்து பொரிய விடவும். பொரிந்ததும் மீதமுள்ள வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கி காளான், பட்டாணி மற்றும் ஊறவைத்து பிழிந்த சோயாவை சேர்த்து 3 நிமிடம் மிதமான தீயில் வதக்கவும்.

3.இதனுடன்  தக்காளி சேர்த்து 2 நிமிடம் வதக்கி உப்பு மற்றும் எல்லா தூளையும் சேர்க்கவும்.நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லி மற்றும் புதினாவில் பாதி சேர்த்து 2 நிமிடம் வதக்கி தயிர் சேர்த்து 5 நிமிடம் வதக்கி இறக்கவும்.

4.ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்கவிட்டு அரிசிக்கு தகுந்த உப்பு, சிறிது காலா ஜீரா எலுமிச்சை சாறு சேர்க்கவும். தண்ணீர் நன்கு கொதித்ததும் ஊறவைத்த அரிசியை சேர்த்து முக்கால் பாகம் வேகவைத்து வடிக்கட்டி ஆறவிடவும்.

5.குக்கரில் அடி பகுதியில் வதக்கிய மசாலா கலவையின் ஒரு பகுதியை நிரப்பி பாதி பிறகு மீதமுள்ள கொத்தமல்லி புதினா மற்றும் பதி பொறித்த வெங்காயம் தூவும்.பகுதி சாதத்தை மேல நிரப்பவும். இதே போல் மீதமுள்ளதையும் அடுக்கி மேல குங்கும பூ கரைத்து ஊற்றவும்.10 நிமிடம் மிதமான தீயில் வைத்து இறக்கி ரைதாவுடன் பரிமாறவும்.

Mushroom Dum Briyani

Ingredients for Mushroom Dum Briyani:

 

Mushroom-1 Packet

Green Peas-1 Cup

Soya Beans-10

Basmati Rice-3 Cup

Onion-3

Tomato-2

Ghee-100 G

Oil-as Needed

Corn Flour-1/2 Cup

Saffron-Lottle

Corinader Powder-2 Tsp

Turmeric Powder-1/2 Tsp

Garam Masala Powder-1 Tsp

Salt-as Needed

Green Chilly-2

Ginger, Garlic Paste-2 Tsp

Mint-1 Cup

Coriander-1 Cup

Curd-3 Tsp

Lemon Juice-2 Tsp

Chilly Powder-2 Tsp

Jeera-1/2 Tsp

Cinnamon, Fennel, Cloves, Bay Leaf-For Seasoning

 

Procedure to make Mushroom Dum Briyani:

 

1. Chop the onion, tomato and mushroom. Take half quantity of chopped onion and mix with corn flour and then deep fry in oil and set aside.

2. Heat ghee in a pan, add seasoning ingredients and let to splutter. Then add remaining onion and saute well. Now add ginger, garlic paste and fry for a while and then add mushroom, green peas, soaked soya and fry for 3 minutes in medium flame.

3. Then add tomatoes, salt and given masala powders. Add half quantity of coriander leaves and mint leaves and then add curd and fry for 5 minutes.

4. In a vessel, add water and boil well. Then add salt, jeera powder and lemon juice. When water boiled well, add rice and boil well.

5. In a cooker, add prepared masala, then coriander leaves and mint leaves and then add boiled rice. Then mix the saffron with water and add into rice. Allow this on medium flame for 10 minutes and remove from flame and serve it.

 

 

by anusiya   on 14 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.