LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    பண்டிகைகள் Print Friendly and PDF
- முஸ்லீம் பண்டிகைகள்

மொகரம்

 

இன்று மொகரம். இஸ்லாமிய புத்தாண்டின் முதல் மாதம் இது. ஜனநாயகத்தின் சிறப்பை, மக்களாட்சியின் மாண்பை காப்பதற்காக நபிகளாரின் பேரர்
ஹசரத் ஹுசைன்(ரலி) அவர்கள், கர்பலா களத்தில் தன் இன்னுயிரை ஈந்த நிகழ்வு இந்த மொகரம் பத்தாம் நாளில் தான் அரங்கேறியது.நபிகளார் அவர்கள் 
காலத்தில் மட்டுமல்ல, அதற்கு முன்பிருந்தே இம்மாதத்திற்கென தனித்த சிறப்பினை மக்கள் அளித்து வந்துள்ளனர். இந்நாளில் போர் புரிவதில்லை. 
பிர்அவ்னையும், அவனது கூட்டத்தாரையும் கடலில் மூழ்கடித்து, மூஸா(அலை) அவர்களையும், அவர்களது மக்களையும் அல்லாஹ் ஈடேற்றம் பெற வைத்த 
சிறப்பு இந்த மாதத்திற்கு இருக்கிறது. மொகரம் பத்தாம் நாளில் மூஸா(அலை) அவர்களும் நோன்பு நோற்றார்கள். நபிகளாரின் வாக்கின்படி மொகரம் 
மாதத்தின் 9 மற்றும்10ம் நாளில் நோன்பு நோற்பது அவசியம். மேலும், இந்நாளிலே நோன்பு வைப்பது அதற்கு முன்னர் செய்திருக்கும் ஓராண்டிற்குரிய சிறிய 
பாவங்களைப் போக்கிவிடும் எனவும் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் தெரிவித்துள்ளார்கள். இந்த நாளில் நாம் ஒவ்வொருவரும் குடும்பத்தினருக்கு 
அதிகப்படியாக செலவழிக்க வேண்டுமெனவும் நபிகளார் வலியுறுத்துகிறார்கள். இந்தமாதத்தின் பத்தாம் நாளில் ஹசரத் ஹுசைன்(ரலி) அவர்களின் தியாக 
வரலாற்றை மக்களுக்கு விளக்கிட  அறிஞர்களைக் கொண்ட கூட்டங்களும், புத்தகங்கள் வெளியிடுவதுமான நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். மொகரம் 
நாளில் பல்வேறு அற்புத நிகழ்வுகள்நடந்திருக்கிறது. :கலீல்' எனும் பட்டம்:  ஆஷுரா நாளில் தான், நபி இப்ராஹிம் அவர்கள் நம்ரூதின் எரிகுண்டத்திலிருந்து 
விடுதலை பெற்றார். இப்ராஹிம் அவர்கள் பிறந்ததும், அவர்களுக்கு "கலீல்' எனும் பட்டம் அல்லாஹ்வினால் சூட்டப்பட்டதும் இந்நாளில் தான் 
நிகழ்ந்தது.ஹ்சரத் அய்யூப் அவர்கள் நோயிலிருந்து குணம் பெற்றதும் இந்த புனித நாளில் தான்! மூஸா  அவர்கள் மட்டுமல்லாது ஹாருன் அவர்களின் 
இறைஞ்சுதலும் இந்நாளில் தான் ஏற்கப்பட்டது. 

     இன்று மொகரம். இஸ்லாமிய புத்தாண்டின் முதல் மாதம் இது. ஜனநாயகத்தின் சிறப்பை, மக்களாட்சியின் மாண்பை காப்பதற்காக நபிகளாரின் பேரர்ஹசரத் ஹுசைன் அவர்கள், கர்பலா களத்தில் தன் இன்னுயிரை ஈந்த நிகழ்வு இந்த மொகரம் பத்தாம் நாளில் தான் அரங்கேறியது.நபிகளார் அவர்கள் காலத்தில் மட்டுமல்ல, அதற்கு முன்பிருந்தே இம்மாதத்திற்கென தனித்த சிறப்பினை மக்கள் அளித்து வந்துள்ளனர். இந்நாளில் போர் புரிவதில்லை. பிர்அவ்னையும், அவனது கூட்டத்தாரையும் கடலில் மூழ்கடித்து, மூஸா அவர்களையும், அவர்களது மக்களையும் அல்லாஹ் ஈடேற்றம் பெற வைத்த சிறப்பு இந்த மாதத்திற்கு இருக்கிறது.

 

     மொகரம் பத்தாம் நாளில் மூஸா(அலை) அவர்களும் நோன்பு நோற்றார்கள். நபிகளாரின் வாக்கின்படி மொகரம்  மாதத்தின் 9 மற்றும்10ம் நாளில் நோன்பு நோற்பது அவசியம். மேலும், இந்நாளிலே நோன்பு வைப்பது அதற்கு முன்னர் செய்திருக்கும் ஓராண்டிற்குரிய சிறிய பாவங்களைப் போக்கிவிடும் எனவும் நபிகள் நாயகம் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். இந்த நாளில் நாம் ஒவ்வொருவரும் குடும்பத்தினருக்கு அதிகப்படியாக செலவழிக்க வேண்டுமெனவும் நபிகளார் வலியுறுத்துகிறார்கள். இந்தமாதத்தின் பத்தாம் நாளில் ஹசரத் ஹுசைன் அவர்களின் தியாக வரலாற்றை மக்களுக்கு விளக்கிட  அறிஞர்களைக் கொண்ட கூட்டங்களும், புத்தகங்கள் வெளியிடுவதுமான நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். மொகரம் நாளில் பல்வேறு அற்புத நிகழ்வுகள்நடந்திருக்கிறது.

 

கலீல்' எனும் பட்டம்:  

 

     ஆஷுரா நாளில் தான், நபி இப்ராஹிம் அவர்கள் நம்ரூதின் எரிகுண்டத்திலிருந்து விடுதலை பெற்றார். இப்ராஹிம் அவர்கள் பிறந்ததும், அவர்களுக்கு "கலீல்' எனும் பட்டம் அல்லாஹ்வினால் சூட்டப்பட்டதும் இந்நாளில்தான்  நிகழ்ந்தது. ஹ்சரத் அய்யூப் அவர்கள் நோயிலிருந்து குணம் பெற்றதும் இந்த புனித நாளில் தான்! மூஸா  அவர்கள் மட்டுமல்லாது ஹாருன் அவர்களின் இறைஞ்சுதலும் இந்நாளில் தான் ஏற்கப்பட்டது. 

by Swathi   on 10 Aug 2012  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
தமிழ்ப் பண்டிகைகளில் முக்கியமானது கார்த்திகையாகும்.. தமிழ்ப் பண்டிகைகளில் முக்கியமானது கார்த்திகையாகும்..
கார்த்திகை தீபம் கார்த்திகை தீபம்
தை முதல் நாளே- தமிழ்ப் புத்தாண்டு! தை முதல் நாளே- தமிழ்ப் புத்தாண்டு!
ஆவணி மாதத்தின் மகத்துவம்... ஆவணி மாதத்தின் மகத்துவம்...
காமன் பண்டிகை காமன் பண்டிகை
நவராத்திரி வழிபாடு ஒரு சிறப்பு பார்வை !! நவராத்திரி வழிபாடு ஒரு சிறப்பு பார்வை !!
சித்திரையை கொண்டாடுவோம் சித்திரையை கொண்டாடுவோம்
தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்? தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
கருத்துகள்
12-Oct-2016 00:47:44 Tahsee said : Report Abuse
ஆஸ்ஸலமலைக்கும் ஆஷுரா வை பற்றி இன்னும் விளக்கமாக தெரிவித்தால் நன்மையாக இருக்கும்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.