LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மற்றவை

முயன்றால் தொட்டுவிடலாம்... - தமிழ்நேசன் த.நாகராஜ்

வானத்தை எட்டி பிடிக்க முயன்றால்
மேகத்தை  தொட்டுவிடலாம்
ஆம் தொட்டதால் தான்
வெயில் மழையின் முன் அறிவிப்பு..!!!

சூரியனை எட்டி பிடிக்க முயன்றால்
சந்திரனை தொட்டுவிடலாம்
ஆம் தொட்டதால் தான்
சந்திரனில் மனிதன் கால் தடம்..!!!

ஆலமரத்தை எட்டி பிடிக்க முயன்றால்
விழுதுகளை தொட்டுவிடலாம்
ஆம் தொட்டதால் தான்
மரக்கிளையில் ஆடுகிறது ஊஞ்சல்..!!!


ஆகாயத்தை எட்டி பிடிக்க முயன்றால்
பறவைகளைக் தொட்டுவிடலாம்
ஆம் தொட்டதால் தான்
காற்றில் பயணிக்கிறது விமானம்..!!!

நினைவை எட்டி பிடிக்க முயன்றால்
நிகழ்வுகளை  தொட்டுவிடலாம்
ஆம் தொட்டதால் தான்
காட்சிகளை அள்ளித் தருகிறது தொலைகாட்சி..!!!

காற்றை எட்டி பிடிக்க முயன்றால்
காற்றலைகளை  தொட்டுவிடலாம்
ஆம் தொட்டதால் தான்
காதுகளுக்கு இனிமையான ஒலி தருகிறது வானொலி..!!!

எட்டிப் பிடிக்கும் தூரத்தில் வெற்றி இல்லை.!

அதை விட்டுவிடும் எண்ணத்தில் மனிதன் இல்லை..!!


- தமிழ்நேசன் த.நாகராஜ்

by Swathi   on 23 Aug 2015  0 Comments
Tags: முயன்றால் தொட்டுவிடலாம்   தமிழ்நேசன் த.நாகராஜ்   Muyantral Thottu Vidalam   Tamil Nesan           
 தொடர்புடையவை-Related Articles
முயன்றால் தொட்டுவிடலாம்... - தமிழ்நேசன் த.நாகராஜ் முயன்றால் தொட்டுவிடலாம்... - தமிழ்நேசன் த.நாகராஜ்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.