LOGO
  முதல் பக்கம்    சினிமா    திரைவிமர்சனம் Print Friendly and PDF

நான் சிகப்பு மனிதன் - திரைவிமர்சனம்!!

இயக்கம் : திரு

 

தயாரிப்பு : விஷால் பிலிம் பேக்டரி

 

நடிகர் : விஷால்

 

நடிகை : லட்சுமி மேனன்

 

எழுத்து : திரு

 

இசை : ஜி. வி. பிரகாஷ் குமார்

 

திரைப்படவியல் : ரிச்சர்ட் எம். நாதன்

 

படத்தொகுப்பு : அந்தோணி எல். ரூபன்

 

திரு இயக்கி விஷால் நடித்து வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் 'நான் சிகப்பு மனிதன்'. இப்படத்தை விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்துள்ளது. லட்சுமி மேனன் இப்படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார்.

 

விஷால் இப்படத்தில் நார்கோலப்ஸி எனும் தூக்க வியாதியால் பாதிக்கப்பட்டவர். லட்சத்தில் ஒருவருக்கு இயற்கையாகவே இருக்கும் இந்த தூக்க வியாதியால் அல்லல்பட்டு வரும் விஷாலுக்கு நல்ல வேலையும், நல்ல பெண்ணும் கிடைப்பது பெரும் சவாலாக இருக்கிறது. 

 

இந்த வியாதியே விஷாலுக்கு திருப்புமுனையாக அமைகிறது, மெடிக்கல் காலேஜ் பாடமாகிறார் விஷால். இதன்மூலம்  ஐம்பதாயிரம் பணம் சம்பாதிக்கிறார். அந்த பணத்தை வைத்து பார்ட்-டைம் ஜாப், லேப்-டாப் , மாதம் இருபதாயிரம் என கலக்குகிறார் விஷால். அதன் பிறகு லட்சுமி மேனனுடன் நட்ப்பு கிடைகிறது. பின்பு நட்ப்பு காதலாக மாறுகிறது. நார்கோலப்ஸிக்கு சொந்தக்காரரான விஷாலுக்கு தான் உணர்ச்சிகள் தூண்டப்படும்போது தூக்கம் வந்துவிடுகிறது. அப்புறம் எப்படி வாரிசுக்கு வழி வகுக்க முடியும்.

 

விஷாலுக்கு தண்ணீரில் தூக்கம் வராது எனும் உண்மையை பின்பு கண்டுபிடிக்கிறார் லட்சுமிமேனன். அப்புறமென்ன லட்சுமிமேனன் கல்யாணம் ஆகாமலே கற்பம் ஆகிறார். பின்பு அப்பாவிடம் கூறி அடுத்து கல்யாணம் தான் என இருவரும் சந்தோசமாக இருக்கும் நேரத்தில், ஒரு கும்பல் இருவரையும் சுற்றி வளைக்கிறது.  அதிர்ச்சியில் தூங்கும் விஷாலை அப்படியே விட்டு விட்டு, லட்சுமி மேனனை கதற கதற கற்பழிக்கிறது, விஷால் விழித்தெழும்போது கோமா ஸ்டேஜில் லட்சுமி கிடக்க, அதை கண்டு கொதித்தெழும் விஷால் அந்தக் கும்பலை வேட்டையாடுகிறார். பின்பு அந்த கற்பழிப்புக்கு பின்னணியில் இருக்கும் நபரை தேடிக் கொள்வதும், அந்த  நபருடன் விஷாலுக்கு என்ன பகை என்பது தான் படத்தின் மீதிக் கதை.


தன் கண்ணீரையும் நடிக்க வைத்த விஷாலை பாராட்ட வார்த்தைகளே இல்லை. விஷால் படத்தின் முதல் பாதயில் தூங்கும் மனிதனாகவும் பின்பாதியில் சிகப்பு  மனிதனாகவும் மாறுவது  'நான் சிகப்பு மனிதன்' படத்தின் எதிர்பாராத திருப்பும்.


மொத்தத்தில் 'நான் சிகப்பு மனிதன்' ரசிகர்களுக்கு கோடை விருந்து.

 

இயக்கம் : திரு
தயாரிப்பு : விஷால் பிலிம் பேக்டரி
நடிகர் : விஷால்
நடிகை : லட்சுமி மேனன்
எழுத்து : திரு
இசை : ஜி. வி. பிரகாஷ் குமார்
திரைப்படவியல் : ரிச்சர்ட் எம். நாதன்
படத்தொகுப்பு : அந்தோணி எல். ரூபன்
விஷால் தனது விஷால் பிலிம் பேக்டரி பட நிறுவனத்தின் மூலம் தயாரித்து, நடித்திருக்கும் திரைப்படம், விஷால் நடித்த 'தீராத விளையாட்டு பிள்ளை', 'சமர்' ஆகிய இரண்டு படங்களை இயக்கிய இளம் இயக்குனர் திரு இயக்கத்தில், விஷால் நடித்து மீண்டும் வெளிவந்திருக்கும் படம், இவை எல்லாவற்றுக்கு மேல் லட்சுமி மேனனுடன், விஷால் தரையில் உதட்டோடு உதடு வைத்து உறியும் முத்தக்காட்சி, தண்ணீருக்குள் முழுதும் நனையும்(!) காட்சி... என ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளை கிளப்பிவிட்டு வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் 'நான் சிகப்பு மனிதன்'.
அதிர்ச்சிகள், ஆச்சர்யங்கள், ''அந்த'' மாதிரி விஷயங்கள் என்றால் நின்றபடியோ, நடந்தபடியோ உட்கார்ந்தபடியோ, எந்த நிலையில் இருக்கிறாரோ அந்த நிலையிலேயே தூங்கி விழும் நார்கோலப்ஸி எனும் தூக்க வியாதிக்கு சொந்தக்காரர் விஷால், ஸ்கூல் டீச்சரம்மா சரண்யா பொன்வண்ணனுக்கு ஒற்றை வாரிசு. பிறந்தது முதலே லட்சத்தில் ஒருவருக்கு இயற்கையாகவே இருக்கும் இந்த தூக்க வியாதியால் அல்லல்பட்டு வரும் விஷாலுக்கு நல்ல வேலையும், நல்ல பெண்ணும் கிடைப்பது குதிரை கொம்பாக இருக்கிறது.
அப்புறம்? அப்புறமென்ன.? இலையுதிர் காலம் இருந்ததென்றால் வசந்தகாலமும் வந்துதானே ஆக வேண்டும்.?! அரிதான வியாதியான நார்கோலப்ஸி பர்ஸனான விஷால், மெடிக்கல் காலேஜ் பாடமாகிறார். அதன்மூலம் ஐம்பதாயிரம் பணம் சம்பாதிக்கிறார். அதை வைத்து ஒரு லேப்-டாப், அதன்மூலம் பார்ட்-டைம் ஜாப், மாசம் இருபதாயிரம் சம்பாத்தியம் என கலக்குகிறார். கூடவே பெரிய இடத்துப் பெண் லட்சுமி மேனனின் நட்பும் கிடைக்கிறது. நட்பு, காதல் ஆகிறது. எனக்கு உன் மூலம் என் மகளுக்கு ஒரு வாரிசு வேண்டும், அது கிடைக்குமென்றால் காசு, பணம், ஜாதி, மதம் எதுபற்றியும் கவலை இல்லை... என்கிறார் லட்சுமியின் அப்பா ஜெயப்பிரகாஷ்!
நார்கோலப்ஸி (அதாங்க திடீர் தூக்க வியாதி...) கேரக்டரான விஷாலுக்கு தான் உணர்ச்சிகள் தூண்டப்படும்போது தூக்கம் வந்துவிடுமே... அப்புறம் எப்படி வாரிசுக்கு வழி வகுக்க முடியும்?. லட்சுமி மேனனின் தீவிர முயற்சியால் விஷாலுக்கு தண்ணீரில் தூக்கம் வராது... எனும் உண்மை கண்டுபிடிக்கப்படுகிறது. அப்புறமென்ன? ஜலகிரீடையில்(நமக்கு காட்டப்படுவதென்னவோ வெறும் முத்தம் மட்டும் தான் ஹீ... ஹீ...!) லட்சுமி, கல்யாணம் ஆகாமலே சுமார் இரண்டு மாத கர்ப்பமும் ஆகிறார்! அப்பா ஜெ.பி.யிடம் சொல்லி, அடுத்து டும் டும் டும் தான் என இருவரும் மகிழ்வோடு இருக்கும் வேளையில், இருவரையும் சுற்றி வளைக்கும் ஒரு முரட்டு கும்பல், அதிர்ச்சியில் தூங்கும் விஷாலை அப்படியே விட்டு விட்டு, லட்சுமி மேனனை கதற கதற கற்பழிக்கிறது! விஷால் விழித்தெழும்போது கோமா ஸ்டேஜில் லட்சுமி கிடக்க, கொதித்தெழும் விஷால், தேடிப்பிடித்து முரட்டு கும்பலையும், அந்த கற்பழிப்புக்கு பின்னணியில் இருக்கும் நபரையும் கொன்று குவிப்பதும், அந்த பின்னணி நபருக்கு விஷாலுடன் என்ன பகை? என்பது தான் எதிர்பாரா திருப்பங்கள் நிரம்பிய 'நான் சிகப்பு மனிதன்' வித்தியாசமும், விறுவிறுப்புமான மீதிக்கதை!
விஷால் முன்பாதியில் தூக்க மனிதனாகவும், பின்பாதியில் சிகப்பு மனிதனாகவும் வழக்கம் போலவே... இல்லை, இல்லை... வழக்கத்திற்கு மாறாக பொளந்துகட்டியிருக்கிறார். தன் முகக்கண்கள் தூங்கியபடி இருக்க, மூளைக்கண்கள் முழித்திருக்க அக்கண், அகக்கண் எதிரேயே லட்சுமி மேனன் கற்பழிக்கப்படும் காட்சியில், விஷால் விக்கித்துப்போய் தூங்கும் காட்சியில் தன் கண்ணீரையும் நடிக்க வைத்திருக்கிறார் என்றால் மிகையல்ல! இது மாதிரி ஒவ்வொரு காட்சிக்கும், ஓராயிரம் முறை விஷாலின் நடிப்பை பாராட்டலாம்.
லட்சுமி மேனன், தான் கதாநாயகி என்றபோதும் நான்கு பேர் கற்பழிக்கும் காட்சியில் நடிக்க ஒப்புக்கொண்டிருப்பதற்காகவே அவருக்கு ஹேட்ஸ் ஆப் சொல்ல வேண்டும். விஷாலின் முத்த ஆசை உள்ளிட்ட மொத்த ஆசைகளையும் நிறைவேற்ற அவர் எடுக்கும் முயற்சிகள் கவிநயம், கலைநயம், காதல் காவியம்!
நண்பன் கம் வில்லன் சுந்தர் ராமின் பாத்திரத்திற்கு துரோகி கருணாவின் பெயரையும், அவரது மனைவியாகவும், கோடீஸ்வரர் ஸ்ரீனிவாசனின் கள்ளக்காதலியாகவும் வரும் கவிதா எனும் இனியாவின் பாத்திரமும், அவரது பணம் பறிக்கும் பாத்திர படைப்பும் செம கொடூரம்!
சரண்யா பொன்வண்ணன், ஜெகன், பிரமிட் நடராஜன், ஜெயப்பிரகாஷ், ரிஷி உள்ளிட்டவர்களும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர். பலே! பலே!! எப்போதும் ஜெகன், சுந்தர்ராமு உள்ளிட்டவர்களின் துணையுடன் வெளியில் போய் திரும்பும் விஷால், ப்ளாஷ்பேக் காட்சிகளில் தனித்து சுற்றுவது சற்றே லாஜிக்காக இடிக்கிறது. மற்றபடி ரிச்சர்ட் எம்.நாதனின் ஓவிய ஒளிப்பதிவு, ஜீ.வி.பிரகாஷ் குமாரின் மின்னலடிக்கும் பாடல்கள் இசை, மிரட்டும் பின்னணி இசை உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகளுடன் வித்தியாசமாக கதை சொல்ல முயன்று அதில் வெற்றியும் பெற்றிருக்கும் திரு-வின் எழுத்து-இயக்கத்தில், 'நான் சிகப்பு மனிதன்' - 'ரசிகர்களிடம் வெற்றி மனிதன்!'
by Swathi   on 16 Apr 2014  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
”அறம்”  இது கோபி நயினாரின் முதல் திரைப்படமாமே? நம்பவே முடியவில்லை! ”அறம்” இது கோபி நயினாரின் முதல் திரைப்படமாமே? நம்பவே முடியவில்லை!
விவேகம் படம் எப்படி இருக்கு... - இது ட்விட்டர் அப்டேட்... விவேகம் படம் எப்படி இருக்கு... - இது ட்விட்டர் அப்டேட்...
சமுத்திரக்கனியின் - அப்பா சமுத்திரக்கனியின் - அப்பா
ருத்ரமாதேவி திரைவிமர்சனம் !! ருத்ரமாதேவி திரைவிமர்சனம் !!
குற்றம் கடிதல் திரை விமர்சனம் !! குற்றம் கடிதல் திரை விமர்சனம் !!
49 ஓ திரை விமர்சனம் !! 49 ஓ திரை விமர்சனம் !!
யட்சன் திரை விமர்சனம் யட்சன் திரை விமர்சனம்
சண்டி வீரன் திரை விமர்சனம் !! சண்டி வீரன் திரை விமர்சனம் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.