LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    பண்டிகைகள் Print Friendly and PDF
- ஹிந்து பண்டிகைகள்

நவராத்திரி வழிபாடு ஒரு சிறப்பு பார்வை !!

சிவனுக்கு ஒரு ராத்திரி அது சிவராத்திரி. உண்ணாமல் உறங்காமல் விரதம் இருந்து வழிபடவேண்டிய புண்ணிய தினம் அது. அம்பிகைக்கோ ஒன்பது ராத்திரிகள், அதாவது; நவராத்திரி. ஆனால், அம்மையானவள் நாம் உண்ணாமல் இருப்பதைப் பொறுப்பாளா? எனவேதான் நித்தம் ஒரு சுண்டல், நைவேத்திய பிரசாதம் என நவராத்திரியை கொண்டாட அருளியிருக்கிறாள்!' இதுவே நவராத்திரி வழிபாடு குறித்து கிருபானந்த வாரியார் அவர்களின் அற்புதமான விளக்கமாகும். 

நவராத்திரி தினத்தில் வீடுகளில் கொலு வைத்து கொண்டாடப்படும் வழக்கம் காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கொலு வைத்து கொண்டாப்படும் இந்த ஒன்பது நாட்களிலும் சிறுமிகள் முதல் வயது முதிர்ந்த பாட்டிகள் வரை மாலை நேரத்தில் அம்பிகையின் திருக்கதைகளையும், அவளைப் போற்றும் துதிப்பாடல்களையும் பாடி வழிபடுவார்கள்.

சிவனுக்கு ஒரு ராத்திரி அது சிவராத்திரி. உண்ணாமல் உறங்காமல் விரதம் இருந்து வழிபடவேண்டிய புண்ணிய தினம் அது. அம்பிகைக்கோ ஒன்பது ராத்திரிகள், அதாவது; நவராத்திரி. ஆனால்,

அம்மையானவள் நாம் உண்ணாமல் இருப்பதைப் பொறுப்பாளா? எனவேதான் நித்தம் ஒரு சுண்டல், நைவேத்திய பிரசாதம் என நவராத்திரியை கொண்டாட அருளியிருக்கிறாள்!' இதுவே நவராத்திரி வழிபாடு

குறித்து கிருபானந்த வாரியார் அவர்களின் அற்புதமான விளக்கமாகும்.  

நவராத்திரி தினத்தில் வீடுகளில் கொலு வைத்து கொண்டாடப்படும் வழக்கம் காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கொலு வைத்து கொண்டாப்படும் இந்த ஒன்பது நாட்களிலும் சிறுமிகள் முதல்

வயது முதிர்ந்த பாட்டிகள் வரை மாலை நேரத்தில் அம்பிகையின் திருக்கதைகளையும், அவளைப் போற்றும் துதிப்பாடல்களையும் பாடி வழிபடுவார்கள்.

நவராத்திரி தோன்றிய கதை

ஒரு முறை தேவர்களுக்கு பெரிய அளவில் துன்பங்கள் கொடுத்து வந்த மகிஷாசுரன் என்ற அரக்கனை கொல்ல சக்திவாய்ந்த தெய்வத்தை உருவாக்க சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய முப்பெரும்

தேவர்களும் முடிவு செய்தனர். மூன்று கடவுள்களின் வாயில் இருந்தும் வெளிப்பட்டது ஒரு அற்புதமான பெண் உருவம். அதற்கு 10 கைகள், ஆக்ரோஷமான முகம் கொண்டதாக இருந்தது. அந்த பெண் தெய்வம்தான் துர்க்கை. சிவபெருமானின் துணைவி பார்வதிதேவியின் ஒரு வடிவம். அந்த துர்க்கையிடம் அனைத்து கடவுளர்களும் தங்களின் விருப்பமான ஆயுதங்களையும், கவசங்களையும் அளித்தனர்.

துர்க்காதேவி உலகையே அச்சுறுத்தி வந்த மகிஷாசுரனை வீழ்த்தியதுதான் நவராத்திரி மற்றும் விஜயதசமி பண்டிகை. மைசூர் சாமுண்டீஸ்வரி மலையில் மகிஷாசுரனை துர்க்கை அழிப்பதுபோன்ற

பண்டையகால சிற்பம் இன்றும் காணப்படுகிறது. துர்காதேவி, லட்சுமி, சரஸ்வதி என வெவ்வேறு வடிவங்களில் போற்றப்பட்டு பக்தர்களால் வணங்கப்படுகிறார். மகாபாரதத்தில் 12 ஆண்டுகள் காட்டில்

திரிந்த பாண்டவர்கள் மாறுவேடத்தில் ஒரு ஆண்டை கழிக்க தங்கள் ஆயுதங்களை படையலிட்டு தங்களின் அடையாளத்தை அறிவித்தனர். அந்த நாள்தான் விஜயதசமி.

வழிபடுவது எப்படி?

புரட்டாசி மாத, அமாவாசைக்கு அடுத்த நாள் அதாவது பிரதமை திதியில் இருந்து நவராத்திரி துவங்குகிறது. தொடர்ந்து வரும் ஒன்பது நாட்களும் நவராத்திரி அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த தினத்தில்

அம்மனை எவ்வாறு வழிபட வேண்டும் என்ற வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் அம்மனை நவ கன்னிகையாகவும், சில இடங்களில் நவ துர்க்கையாகவும் நினைத்து வழிபடுகின்றனர்.

நவ கன்னிகை வழிபாடு :

பத்து வயது நிரம்பாத கன்னிகையாக நாள் ஒரு பருவத்தில் அம்பிகையை வழிபடுவது நவகன்னிகை வழிபாடு.

முதல் நாளில் - இரண்டு வயது குழந்தை - குமாரி

இரண்டாம் நாள் - மூன்று வயது குழந்தை - திரிபுரா

மூன்றாம் நாள் - நான்கு வயது குழந்தை - கல்யாணி

நான்காம் நாள் - ஐந்து வயது குழந்தை - ரோகினி

ஐந்தாம் நாள் - ஆறு வயது குழந்தை - காளிகா

ஆறாம் நாள் - ஏழு வயது குழந்தை - சண்டிகா

ஏழாம் நாள் - எட்டு வயது குழந்தை - சாம்பவி

எட்டாம் நாள் - ஒன்பது வயது குழந்தை - துர்க்கா

ஒன்பதாம் நாள் - பத்து வயது குழந்தை - சுபத்ரா

என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பெயரில் நவகன்னிகை வழிபாடு செய்ய வேண்டும்.

நவ துர்க்கை வழிபாடு :

பார்வதி தேவியின் பல்வேறு நிலைகளில் அம்பாளை துர்க்கையாக கருதி வழிபாடு செய்வது நவதுர்க்கை வழிபாடு.

முதல் நாள் - ஷைலபுத்ரி

இரண்டாம் நாள் - பிரம்மசாரிணி

மூன்றாம் நாள் - சந்தரகாந்தா

நான்காம் நாள் - கூஷ்மாண்டா

ஐந்தாம் நாள் - ஸ்கந்த மாதா

ஆறாம் நாள் - காத்யாயணி

ஏழாம் நாள் - காலராத்ரி

எட்டாம் நாள் - மகா கவுரி

ஒன்பதாம் நாள் - சித்திதாத்ரி

என்று நவ தினங்களிலும் நவ துர்க்கை வழிபாடு செய்வது சிறப்பு தரும்.

நவராத்திரி வழிபாட்டுக்காக பூஜை மண்டபம் அமைக்க வேண்டும், அந்த இடம் சமமாக இருக்க வேண்டும். பசுஞ்சாணத்தால் மெழுகி கோலமிட வேண்டும். அந்தக் கோலத்தில் லட்சுமி வாசம் செய்வாள்

என்பது ஐதீகம். நான்கு மூலைகளிலும் தூண்கள் அமைத்து, தொரனத்தால் அலங்கரிக்க வேண்டும். பூஜை செய்யும் இடத்தில் மேடை அமைத்து, அதில் அம்பிகையின் சிலையை வைத்து, அம்பாளை

அலங்கரிக்க வேண்டும். நவராத்திரி விரதம் இருக்க அம்பிகையிடம் ஆசி பெற்று பூஜைகளை துவங்க வேண்டும். நமது விரத முறையில் வீட்டில் கொலு  வைத்து வழிபடுவது மேலும் சிறப்பை சேர்க்கும்.

கொலு :

மகிசாசூரனை அழிப்பதற்கு அம்பிகை அவதரித்தபோது தேவர்கள் தங்கள் சக்திகளை ஸ்ரீதேவியிடம் கொடுத்துவிட்டு பொம்மைப்போல நின்றதை குறிப்பிடும் வகையில் கொலு அமைத்து வழிபாடு

செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் ஆதிசக்தியானவள் இந்த அகிலத்தில் எல்லா உயிர்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறாள். அவளின்றி அணுவும் அசையாது என்பதை உணர்த்துவதே கொலு

தத்துவம். அதனால்தான் ஓரறிவு உயிர்கள் முதல் அனைத்துக்கும் ஆதாரமான அம்பிகை வரையிலுமான பொம்மைகள் நவராத்திரி கொலுவில் இடம்பெறும். இந்த கொலு பொம்மைகளை எந்தெந்த படி

நிலைகளில் எப்படி அடுக்கவேண்டும் என்ற நியதியை முன்னோர் வகுத்துள்ளனர்.

கீழிருந்து முதல்படியில்: மரங்கள், செடிகொடிகள் போன்ற ஓரறிவு உயிர்கள் நிறைந்த பூங்காக்களை இடம்பெறச் செய்யலாம்.

இரண்டாம் படி: நத்தை, அட்டை முதலான மெள்ள ஊர்ந்து செல்லும் ஈரறிவு படைத்த உயிரினங்களை இடம்பெறச் செய்யலாம்.

மூன்றாம் படி: எறும்பு, பூரான் போன்ற மூன்றறிவு உயிரினங்களை இடம்பெறச் செய்யலாம்

நான்காம் படி: பறவைகள் முதலானகளை இடம்பெறச் செய்யலாம்.

ஐந்தாம் படி: பசு, யானை முதலான ஐந்தறிவு கொண்ட விலங்கினங்களை இடம்பெறச் செய்யலாம்.

ஆறாம் படி: மனிதர்கள் இடம்பெறலாம். வணிகர், குறவன்  குறத்தி முதலான பொம்மைகளை இடம்பெறச் செய்யலாம்.

ஏழாம் படி: தெய்வ அவதாரங்கள், நவகிரகங்கள் முதலான தெய்வ பொம்மைகளை இடம்பெறச் செய்யலாம்.

எட்டாம் படி: மும்மூர்த்தியரும் தேவியருடன் விளங்கும் பொம்மைகளை இடம்பெறச் செய்யலாம்.

ஒன்பதாம் படி: இதில் ராஜராஜேஸ்வரியின் வடிவம் பிரதானமாக இடம்பெற வேண்டும். பூரண கலசமும் வைப்பார்கள்.

கோலம் :

நவராத்திரியில் பிரதானமாக பார்க்கப்படுவது கோலம் தான். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக, ஒவ்வொரு பொருட்கள் கொண்டு கோலமிட வேண்டும்.

முதல் நாள்- அரிசி மாவு கொண்டு பொட்டு கோலம் போட வேண்டும்.

இரண்டாவது நாள்- கோதுமை மாவு கொண்டு கட்டம் கோலம் போடவும்.

மூன்றாவது நாள்- முத்து வைத்து மலர் வகை கோலம்.

நான்காவது நாள்- அட்சதை கொண்டு படிக்கட்டு வடிவ கோலம்.

ஐந்தாவது நாள்- கடலை கொண்டு பறவையினம் போல.

ஆறு நாள்- பருப்பு கொண்டு தேவியின் நாமம்.

ஏழாவது நாள்- மலரால் திட்டாணி வகை கோலம்.

எட்டாவது நாள்- காசு கொண்டு பத்மம் கோலம்.

ஒன்பதாவது நாள்- பச்சைக் கற்பூரம் கொண்டு ஆயுதக் கோலம்.

நைவேத்தியம் :

நவராத்திரி ஒன்பது நாட்களும், ஒவ்வொரு விதமான  நைவேத்தியம் படைத்து தேவியை வணங்க வேண்டும்.

முதலாவது நாள்  :

காலை எலுமிச்சை சாதம் கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, இஞ்சி, பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் போட்டு வதக்கவும். சாதத்தை பாத்திரத்தில்

போட்டு தாளித்தவற்றை கொட்டி, மஞ்சள் தூள் சேர்த்து கிளறவும். பிறகு எலுமிச்சை ஜூஸ் சேர்த்து கிளறி இறக்கவும்.

மாலை பாசிப்பயறு சுண்டல் பாசிப்பயறை சிவக்க வறுத்து, ஒரு மணி நேரம் ஊறியதும் வேகவைக்க வேண்டும். பிறகு, வெல்லப் பாகு காய்ச்சி, இதில் வேக வைத்த பயறு, ஏலக்காய்த் தூள், சுக்குப் பொடி,

தேங்காய் துருவல் சேர்த்து கலக்கினால் சுண்டல் ரெடி.

இரண்டாவது நாள் :

காலை எள்ளு சாதம் எள்ளை எண்ணெயில்லாமல் வறுக்கவும். பிறகு, எண்ணெயில் பெருங்காயத்தைப் பொரித்து, மிளகாய், உளுந்து, தேங்காய்த் துருவல் சேர்த்து சிவக்க வறுத்து, எள் சேர்த்து நைஸாக

பொடிக்கவும். சாதத்தில் பொடித்த எள் பொடி, உப்பைத் தூவி, நெய்யில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து கலக்கவும்.

மாலை மொச்சை மசாலா சுண்டல் முதல் நாளே ஊற வைத்த மொச்சையுடன் காய்ந்த மிளகாய், இஞ்சி, தனியா, உப்பு கலந்து அரைத்த விழுதை சேர்த்து, வேகவைத்து இறக்கவும். பிறகு தண்ணீரை

வடித்து, எண்ணெயில் கடுகு-கறிவேப்பிலை தாளிக்கவும்.

மூன்றாவது நாள் :

காலை தயிர் சாதம் சாதத்தை குழைவாக வடித்துக் கொள்ளவும். சாதம் சூடாக இருக்கும்போதே உப்பு, வெண்ணெய், பெருங்காயத்தூள், இஞ்சி, பச்சை மிளகாய் விழுது, பால் மற்றும் கறிவேப்பிலை,

கொத்தமல்லி சேர்த்துக் கலக்கவும்.

பிறகு, எண்ணெயில் கடுகு, காய்ந்த மிளகாய் தாளித்து, முந்திரி, திராட்சை போட்டு வறுத்து தாளித்துக் கொட்டி, தயிரை விட்டு கலக்கவும்.

மாலை காராமணி கார சுண்டல் காராமணியில் உப்பு சேர்த்து வேக வைத்து இறக்கவும். இதையடுத்து தண்ணீரை வடித்த பிறகு, இஞ்சி விழுது, மிளகுத்தூள், பெருங்காயத்தூள் ஆகியவற்றை கலந்து

எண்ணெயில் கடுகு தாளித்துக் கலக்கவும்.  

நான்காவது நாள் :

காலை சர்க்கரை பொங்கல் சிறிது நெய்யில் அரிசி, பயத்தம் பருப்பை லேசாக வறுத்து, 6 கப் தண்ணீரில் நன்றாகக் குழைய வேகவிடவும். பிறகு அதில் பால்விட்டு, கொதித்ததும் கெட்டியாக வரும்போது

தீயைக் குறைத்து, தயாராக வைத்திருக்கும் வெல்லப் பாகை சேர்த்து, சாதத்தை போட்டு கிளறவும். நடுநடுவே நெய் சேர்க்கவும். பிறகு வறுத்த முந்திரி, ஏலக்காய் சேர்த்து இறக்கவும்.

மாலை பட்டாணி சுண்டல் நீரில் நன்கு ஊறிய பட்டாணியுடன் உப்பு சேர்த்து வேக வைக்கவும். பட்டாணி வெந்ததும் அரைத்த பொடியை சேர்த்து, எண்ணெயில் கடுகு தாளித்துக் கொட்டவும். தேங்காய்,

மாங்காய் துருவல், கொத்தமல்லி சேர்த்து கலக்கவும்.

ஐந்தாவது நாள் :

காலை பால் சாதம் பசும்பாலை சுண்ட காய்ச்சவும். சாதத்தை குழைய வேக விடவும். இதில் காய்ச்சிய பாலை விட்டு, சர்க்கரை சேர்க்கவும். நெய்யில் முந்திரி, திராட்சை சேர்த்து சாதத்துடன் கலக்கவும்.

மாலை கார்ன் வெஜிடபிள் சுண்டல் சோளத்தில் உப்பு சேர்த்து, வேக வைத்து இறக்கி, தண்ணீரை வடிக்கவும். கேரட், வெள்ளரிக்காய், வெங்காயம் சேர்த்து, நறுக்கிய கொத்தமல்லியைத் தூவி கலக்கவும்.

ஆறாவது நாள் :

காலை கல்கண்டு சாதம் ஒரு டீஸ்பூன் நெய்யில் அரிசி, பயத்தம் பருப்பை வறுத்து வெந்நீரை விட்டு நன்றாக அலசவும். பாலில் சிறிது தண்ணீர் சேர்த்து, களைந்த அரிசியைப் போட்டு வேகவிடவும்.

கடாயில் கல்கண்டைப் போட்டு கால் டம்ளர் தண்ணீர் விட்டு கம்பிப் பாகு பதத்துக்குக் காய்ச்சவும். இதில் சாதம், பருப்பைக் கொட்டி கைவிடாமல் கிளறவும். பிறகு, சிறிது நெய்யில் முந்திரியை வறுத்து,

மீதமுள்ள நெய், ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ சேர்த்து கிளறி இறக்கவும்.

மாலை ராஜ்மா சுண்டல் ராஜ்மாவை முந்தைய நாள் இரவே ஊற வைத்து, உப்பு சேர்த்து, வேக வைத்து தண்ணீரை வடிக்கவும். பிறகு எண்ணெயில் கடுகு தாளித்து, வறுத்து அரைத்த பொடி, கறிவேப்பிலை

சேர்த்து, இதனுடன் வேகவைத்த ராஜ்மாவை கலந்து இறக்கவும்.

ஏழாவது நாள் :

காலை வெண் பொங்கல் அரிசி, பயத்தம் பருப்பை ஒன்றாக சேர்த்து வேக வைக்கவும். பெருங்காயத்தூள், உப்பு சேர்க்கவும். கடாயில் நெய் விட்டு மிளகு, சீரகம், கறிவேப்பிலை, இஞ்சி துருவல் சேர்த்து

நன்றாகக் கிளறி இறக்கவும்.

மாலை கடலைப்பருப்பு புதினா சுண்டல் கடலைப்பருப்பை உப்பு சேர்த்து, வேகவைத்து தண்ணீரை வடிக்கவும். புதினாவை பொடியாக நறுக்கி நெய்யில் வதக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு

தாளித்து, வெந்த கடலைப்பருப்பை போட்டு வதக்கி, புதினா, மசாலாத்தூள், மிளகுத்தூள், இஞ்சி விழுது சேர்த்துக் கிளறி இறக்கவும்.

எட்டாவது நாள் :

காலை தேங்காய் சாதம் எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, வேர்க்கடலை, கறிவேப்பிலை சேர்த்து வறுத்துக் கொள்ளவும். இதில் தேங்காய் துருவலைப் போட்டு, உப்பு சேர்த்து நன்றாக வறுத்து

சாதத்துடன் கலக்கவும். இதன் பிறகு நெய்யில் முந்திரியை வறுத்து சாதத்துடன் சேர்க்க வேண்டும்.

மாலை கொண்டக்கடலை சுண்டல் சென்னாவை முந்தைய நாள் இரவே ஊற வைத்து உப்பு சேர்த்து வேக வைத்து தண்ணீரை வடிக்கவும். கொள்ளு, காய்ந்த மிளகாய், கொப்பரைத் துண்டுகளை வறுத்து

மிக்ஸியில் பொடிக்கவும். எண்ணெயில் கடுகு தாளித்து, கறிவேப்பிலை, வெந்த கொண்டக்கடலை, அரைத்த பொடியைப் போட்டு நன்றாகக் கிளறி மிளகுத்தூள் தூவவும்.

ஒன்பதாவது நாள் :

காலை வெல்ல புட்டு புழுங்கலரிசியை சிவக்க வறுத்து, மிக்ஸியில் ரவையாக பொடிக்கவும். இதனுடன் உப்பு, மஞ்சள் தூள், நீர் சேர்த்து தயிர் சாதம் போல் தளர கலந்து, துவரம்பருப்பையும் சேர்த்து வேக

வைக்கவும். ஆறியதும் நன்றாக கட்டியில்லாமல் தேய்த்துக் கொள்ளவும். நெய்யில் தேங்காய், முந்திரியை வறுத்து வைத்துக் கொள்ளவும். வெல்லத்தை சிறிது தண்ணீர் விட்டு கரைத்து கொதிக்க விட்டு,

வடிகட்டி மறுபடியும் அடுப்பில் வைத்து முத்துப் பாகு காய்ச்சவும். இதில் உதிர்த்த ரவை, தேங்காய், ஏலக்காய்த்தூள், முந்திரி, நெய் கலந்து வைக்கவும். ஆறியதும் எடுத்தால் உதிர் உதிராக இருக்கும்.

மாலை பாசிப்பருப்பு சுண்டல் பாசிப்பருப்பை சிவக்க வறுத்து தண்ணீர் விட்டு அரை மணி நேரம் ஊறவைத்து, இட்லி தட்டில் பரப்பி, வேக வைக்கவும். கடாயில் நெய் விட்டு, உரித்த பட்டாணி, நறுக்கிய

இஞ்சி, மிளகுத்தூள், உப்பு சேர்த்து வதக்கிக் கொள்ளவும். எண்ணெயில் கடுகு தாளித்து, வெந்த பருப்பு, வதக்கிய பட்டாணி, தேங்காய் துருவல், கறிவேப்பிலை சேர்த்துக் கிளறி இறக்கவும்.

மனிதர்களுக்கு மட்டுமல்ல தெய்வங்களும் கடைபிடித்த நவராத்திரி :

இந்த உலகில் மானிடராய் பிறந்தவர்கள் மட்டுமின்றி, மனித ரூபத்தில் பிறந்த தெய்வங்களும் நவராத்திரி விரதத்தை அனுஷ்டித்து இருக்கிறார்கள்.

ஸ்ரீராமன் நவராத்திரியை அனுஷ்டித்து தான் சீதாதேவியை மீட்டு வந்தார்.

சிவபெருமான் நவராத்திரி விரதத்தை கடைபிடித்தே திரிபுர தகனம் செய்தார்.

நவராத்திரி பற்றிய சில அறிவியல் உண்மைகள் :

நவராத்திரியின் போது, கொலு வைப்பதால் சிறுவர் - சிறுமிகள் உள்ளிட்ட இளைய சமுதாயத்தினர் மத்தியில் இயற்கையில் அமைந்துள்ள அழகுணர்ச்சியும் வெளிக்கொணர ஏதுவாகிறது. பெண்களிடம் கொலு பொம்மைகள் அழகுப்படுத்தும் திறன் காரணமாக தன்னம்பிக்கை ஏற்படுவதுடன் வயதானவர்களை மதிக்கும் பண்பும் வளர்க்கப்படுகிறது.

கொலு வைக்கும் வழக்கம் உள்ள வீடுகளில் ஆண்டு தோறும் காலத்திற்கேற்றாற்போல் நவீன புதிய பொம்மைகள் இடம் பெறும். மண்ணாலான பொம்மைகளை செய்து பிழைப்பு நடத்தும் கைவினைக் கலைஞர்களுக்கு வாழ்வளிப்பதாக இது அமைகிறது என்பதால் சிறு தொழிலை ஊக்குவித்த திருப்தியும் கொழுவால் ஏற்படுகிறது என்றால் மிகையில்லை. இந்திய தட்பவெட்ப நிலைப்படி அக்டோபர், நவம்பர் மாதங்கள் மழை, குளிர் காலம் என்பதால், இந்த காலத்தில் குறிப்பாக பெண்களுக்கு புரதச் சத்து தேவைப்படும். அந்த வகையில் நவராத்திரி நாட்களில் விதவிதமான புரதச்சத்து நிறைந்த பயறு வகைகளை உண்ணும் வகையில் முன்னோர் இந்த பண்டிகையை கொண்டாடி வந்துள்ளனர் என்பது மருத்துவ ரீதியிலும் நிறைவைத் தருகிறது.

ஒன்பது நாட்களிலும் 9 வகையான பயறு வகைகள், பழங்களை அம்மனுக்கு பிரசாதாங்களாக படைத்து, அவற்றை மற்றவர்களுக்கும் வழங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர் பெண்கள்.

புரட்டாசி மாதத்தில் உடல் சோர்வைத் தரக்கூடிய நோய்க் காரணிகள் அதிகம் என்பதால் புரதச் சத்து நிறைந்த பயறுகளை உண்பதற்கான ஒரு பண்டிகையாகவும் நவராத்திரி பண்டிகை திகழ்கிறது. கொலு வைத்து கொண்டாடும் இந்த பண்டிகை விஞ்ஞான ரீதியாகவும் நன்மையைத் தருகிறது எனலாம்.

நவராத்திரி தோன்றிய கதை :

ஒரு முறை தேவர்களுக்கு பெரிய அளவில் துன்பங்கள் கொடுத்து வந்த மகிஷாசுரன் என்ற அரக்கனை கொல்ல சக்திவாய்ந்த தெய்வத்தை உருவாக்க சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய முப்பெரும் தேவர்களும் முடிவு செய்தனர். மூன்று கடவுள்களின் வாயில் இருந்தும் வெளிப்பட்டது ஒரு அற்புதமான பெண் உருவம். அதற்கு 10 கைகள், ஆக்ரோஷமான முகம் கொண்டதாக இருந்தது. அந்த பெண் தெய்வம்தான் துர்க்கை. சிவபெருமானின் துணைவி பார்வதிதேவியின் ஒரு வடிவம். அந்த துர்க்கையிடம் அனைத்து கடவுளர்களும் தங்களின் விருப்பமான ஆயுதங்களையும், கவசங்களையும் அளித்தனர்.

துர்க்காதேவி உலகையே அச்சுறுத்தி வந்த மகிஷாசுரனை வீழ்த்தியதுதான் நவராத்திரி மற்றும் விஜயதசமி பண்டிகை. மைசூர் சாமுண்டீஸ்வரி மலையில் மகிஷாசுரனை துர்க்கை அழிப்பதுபோன்ற பண்டையகால சிற்பம் இன்றும் காணப்படுகிறது. துர்காதேவி, லட்சுமி, சரஸ்வதி என வெவ்வேறு வடிவங்களில் போற்றப்பட்டு பக்தர்களால் வணங்கப்படுகிறார். மகாபாரதத்தில் 12 ஆண்டுகள் காட்டில் திரிந்த பாண்டவர்கள் மாறுவேடத்தில் ஒரு ஆண்டை கழிக்க தங்கள் ஆயுதங்களை படையலிட்டு தங்களின் அடையாளத்தை அறிவித்தனர். அந்த நாள்தான் விஜயதசமி.

வழிபடுவது எப்படி?

புரட்டாசி மாத, அமாவாசைக்கு அடுத்த நாள் அதாவது பிரதமை திதியில் இருந்து நவராத்திரி துவங்குகிறது. தொடர்ந்து வரும் ஒன்பது நாட்களும் நவராத்திரி அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த தினத்தில் அம்மனை எவ்வாறு வழிபட வேண்டும் என்ற வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் அம்மனை நவ கன்னிகையாகவும், சில இடங்களில் நவ துர்க்கையாகவும் நினைத்து வழிபடுகின்றனர்.

நவ கன்னிகை வழிபாடு :

பத்து வயது நிரம்பாத கன்னிகையாக நாள் ஒரு பருவத்தில் அம்பிகையை வழிபடுவது நவகன்னிகை வழிபாடு.

முதல் நாளில் - இரண்டு வயது குழந்தை - குமாரி

இரண்டாம் நாள் - மூன்று வயது குழந்தை - திரிபுரா

மூன்றாம் நாள் - நான்கு வயது குழந்தை - கல்யாணி

நான்காம் நாள் - ஐந்து வயது குழந்தை - ரோகினி

ஐந்தாம் நாள் - ஆறு வயது குழந்தை - காளிகா

ஆறாம் நாள் - ஏழு வயது குழந்தை - சண்டிகா

ஏழாம் நாள் - எட்டு வயது குழந்தை - சாம்பவி

எட்டாம் நாள் - ஒன்பது வயது குழந்தை - துர்க்கா

ஒன்பதாம் நாள் - பத்து வயது குழந்தை - சுபத்ரா

என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பெயரில் நவகன்னிகை வழிபாடு செய்ய வேண்டும்.

நவ துர்க்கை வழிபாடு :

பார்வதி தேவியின் பல்வேறு நிலைகளில் அம்பாளை துர்க்கையாக கருதி வழிபாடு செய்வது நவதுர்க்கை வழிபாடு.

முதல் நாள் - ஷைலபுத்ரி

இரண்டாம் நாள் - பிரம்மசாரிணி

மூன்றாம் நாள் - சந்தரகாந்தா

நான்காம் நாள் - கூஷ்மாண்டா

ஐந்தாம் நாள் - ஸ்கந்த மாதா

ஆறாம் நாள் - காத்யாயணி

ஏழாம் நாள் - காலராத்ரி

எட்டாம் நாள் - மகா கவுரி

ஒன்பதாம் நாள் - சித்திதாத்ரி

என்று நவ தினங்களிலும் நவ துர்க்கை வழிபாடு செய்வது சிறப்பு தரும்.

நவராத்திரி வழிபாட்டுக்காக பூஜை மண்டபம் அமைக்க வேண்டும், அந்த இடம் சமமாக இருக்க வேண்டும். பசுஞ்சாணத்தால் மெழுகி கோலமிட வேண்டும். அந்தக் கோலத்தில் லட்சுமி வாசம் செய்வாள் என்பது ஐதீகம். நான்கு மூலைகளிலும் தூண்கள் அமைத்து, தொரனத்தால் அலங்கரிக்க வேண்டும். பூஜை செய்யும் இடத்தில் மேடை அமைத்து, அதில் அம்பிகையின் சிலையை வைத்து, அம்பாளை அலங்கரிக்க வேண்டும். நவராத்திரி விரதம் இருக்க அம்பிகையிடம் ஆசி பெற்று பூஜைகளை துவங்க வேண்டும். நமது விரத முறையில் வீட்டில் கொலு  வைத்து வழிபடுவது மேலும் சிறப்பை சேர்க்கும்.

கொலு :

மகிசாசூரனை அழிப்பதற்கு அம்பிகை அவதரித்தபோது தேவர்கள் தங்கள் சக்திகளை ஸ்ரீதேவியிடம் கொடுத்துவிட்டு பொம்மைப்போல நின்றதை குறிப்பிடும் வகையில் கொலு அமைத்து வழிபாடு செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் ஆதிசக்தியானவள் இந்த அகிலத்தில் எல்லா உயிர்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறாள். அவளின்றி அணுவும் அசையாது என்பதை உணர்த்துவதே கொலு தத்துவம். அதனால்தான் ஓரறிவு உயிர்கள் முதல் அனைத்துக்கும் ஆதாரமான அம்பிகை வரையிலுமான பொம்மைகள் நவராத்திரி கொலுவில் இடம்பெறும். இந்த கொலு பொம்மைகளை எந்தெந்த படி நிலைகளில் எப்படி அடுக்கவேண்டும் என்ற நியதியை முன்னோர் வகுத்துள்ளனர்.

கீழிருந்து முதல்படியில்: மரங்கள், செடிகொடிகள் போன்ற ஓரறிவு உயிர்கள் நிறைந்த பூங்காக்களை இடம்பெறச் செய்யலாம்.

இரண்டாம் படி: நத்தை, அட்டை முதலான மெள்ள ஊர்ந்து செல்லும் ஈரறிவு படைத்த உயிரினங்களை இடம்பெறச் செய்யலாம்.

மூன்றாம் படி: எறும்பு, பூரான் போன்ற மூன்றறிவு உயிரினங்களை இடம்பெறச் செய்யலாம்

நான்காம் படி: பறவைகள் முதலானகளை இடம்பெறச் செய்யலாம்.

ஐந்தாம் படி: பசு, யானை முதலான ஐந்தறிவு கொண்ட விலங்கினங்களை இடம்பெறச் செய்யலாம்.

ஆறாம் படி: மனிதர்கள் இடம்பெறலாம். வணிகர், குறவன்  குறத்தி முதலான பொம்மைகளை இடம்பெறச் செய்யலாம்.

ஏழாம் படி: தெய்வ அவதாரங்கள், நவகிரகங்கள் முதலான தெய்வ பொம்மைகளை இடம்பெறச் செய்யலாம்.

எட்டாம் படி: மும்மூர்த்தியரும் தேவியருடன் விளங்கும் பொம்மைகளை இடம்பெறச் செய்யலாம்.

ஒன்பதாம் படி: இதில் ராஜராஜேஸ்வரியின் வடிவம் பிரதானமாக இடம்பெற வேண்டும். பூரண கலசமும் வைப்பார்கள்.

கோலம் :

நவராத்திரியில் பிரதானமாக பார்க்கப்படுவது கோலம் தான். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக, ஒவ்வொரு பொருட்கள் கொண்டு கோலமிட வேண்டும்.

முதல் நாள்- அரிசி மாவு கொண்டு பொட்டு கோலம் போட வேண்டும்.

இரண்டாவது நாள்- கோதுமை மாவு கொண்டு கட்டம் கோலம் போடவும்.

மூன்றாவது நாள்- முத்து வைத்து மலர் வகை கோலம்.

நான்காவது நாள்- அட்சதை கொண்டு படிக்கட்டு வடிவ கோலம்.

ஐந்தாவது நாள்- கடலை கொண்டு பறவையினம் போல.

ஆறு நாள்- பருப்பு கொண்டு தேவியின் நாமம்.

ஏழாவது நாள்- மலரால் திட்டாணி வகை கோலம்.

எட்டாவது நாள்- காசு கொண்டு பத்மம் கோலம்.

ஒன்பதாவது நாள்- பச்சைக் கற்பூரம் கொண்டு ஆயுதக் கோலம்.

நைவேத்தியம் :

நவராத்திரி ஒன்பது நாட்களும், ஒவ்வொரு விதமான  நைவேத்தியம் படைத்து தேவியை வணங்க வேண்டும்.

முதலாவது நாள்  :

காலை எலுமிச்சை சாதம் கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, இஞ்சி, பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் போட்டு வதக்கவும். சாதத்தை பாத்திரத்தில் போட்டு தாளித்தவற்றை கொட்டி, மஞ்சள் தூள் சேர்த்து கிளறவும். பிறகு எலுமிச்சை ஜூஸ் சேர்த்து கிளறி இறக்கவும்.

மாலை பாசிப்பயறு சுண்டல் பாசிப்பயறை சிவக்க வறுத்து, ஒரு மணி நேரம் ஊறியதும் வேகவைக்க வேண்டும். பிறகு, வெல்லப் பாகு காய்ச்சி, இதில் வேக வைத்த பயறு, ஏலக்காய்த் தூள், சுக்குப் பொடி, தேங்காய் துருவல் சேர்த்து கலக்கினால் சுண்டல் ரெடி.

இரண்டாவது நாள் :

காலை எள்ளு சாதம் எள்ளை எண்ணெயில்லாமல் வறுக்கவும். பிறகு, எண்ணெயில் பெருங்காயத்தைப் பொரித்து, மிளகாய், உளுந்து, தேங்காய்த் துருவல் சேர்த்து சிவக்க வறுத்து, எள் சேர்த்து நைஸாக பொடிக்கவும். சாதத்தில் பொடித்த எள் பொடி, உப்பைத் தூவி, நெய்யில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து கலக்கவும்.

மாலை மொச்சை மசாலா சுண்டல் முதல் நாளே ஊற வைத்த மொச்சையுடன் காய்ந்த மிளகாய், இஞ்சி, தனியா, உப்பு கலந்து அரைத்த விழுதை சேர்த்து, வேகவைத்து இறக்கவும். பிறகு தண்ணீரை வடித்து, எண்ணெயில் கடுகு-கறிவேப்பிலை தாளிக்கவும்.

மூன்றாவது நாள் :

காலை தயிர் சாதம் சாதத்தை குழைவாக வடித்துக் கொள்ளவும். சாதம் சூடாக இருக்கும்போதே உப்பு, வெண்ணெய், பெருங்காயத்தூள், இஞ்சி, பச்சை மிளகாய் விழுது, பால் மற்றும் கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்துக் கலக்கவும்.

பிறகு, எண்ணெயில் கடுகு, காய்ந்த மிளகாய் தாளித்து, முந்திரி, திராட்சை போட்டு வறுத்து தாளித்துக் கொட்டி, தயிரை விட்டு கலக்கவும்.

மாலை காராமணி கார சுண்டல் காராமணியில் உப்பு சேர்த்து வேக வைத்து இறக்கவும். இதையடுத்து தண்ணீரை வடித்த பிறகு, இஞ்சி விழுது, மிளகுத்தூள், பெருங்காயத்தூள் ஆகியவற்றை கலந்து எண்ணெயில் கடுகு தாளித்துக் கலக்கவும். 

நான்காவது நாள் :

காலை சர்க்கரை பொங்கல் சிறிது நெய்யில் அரிசி, பயத்தம் பருப்பை லேசாக வறுத்து, 6 கப் தண்ணீரில் நன்றாகக் குழைய வேகவிடவும். பிறகு அதில் பால்விட்டு, கொதித்ததும் கெட்டியாக வரும்போது தீயைக் குறைத்து, தயாராக வைத்திருக்கும் வெல்லப் பாகை சேர்த்து, சாதத்தை போட்டு கிளறவும். நடுநடுவே நெய் சேர்க்கவும். பிறகு வறுத்த முந்திரி, ஏலக்காய் சேர்த்து இறக்கவும்.

மாலை பட்டாணி சுண்டல் நீரில் நன்கு ஊறிய பட்டாணியுடன் உப்பு சேர்த்து வேக வைக்கவும். பட்டாணி வெந்ததும் அரைத்த பொடியை சேர்த்து, எண்ணெயில் கடுகு தாளித்துக் கொட்டவும். தேங்காய், மாங்காய் துருவல், கொத்தமல்லி சேர்த்து கலக்கவும்.

ஐந்தாவது நாள் :

காலை பால் சாதம் பசும்பாலை சுண்ட காய்ச்சவும். சாதத்தை குழைய வேக விடவும். இதில் காய்ச்சிய பாலை விட்டு, சர்க்கரை சேர்க்கவும். நெய்யில் முந்திரி, திராட்சை சேர்த்து சாதத்துடன் கலக்கவும்.

மாலை கார்ன் வெஜிடபிள் சுண்டல் சோளத்தில் உப்பு சேர்த்து, வேக வைத்து இறக்கி, தண்ணீரை வடிக்கவும். கேரட், வெள்ளரிக்காய், வெங்காயம் சேர்த்து, நறுக்கிய கொத்தமல்லியைத் தூவி கலக்கவும்.

ஆறாவது நாள் :

காலை கல்கண்டு சாதம் ஒரு டீஸ்பூன் நெய்யில் அரிசி, பயத்தம் பருப்பை வறுத்து வெந்நீரை விட்டு நன்றாக அலசவும். பாலில் சிறிது தண்ணீர் சேர்த்து, களைந்த அரிசியைப் போட்டு வேகவிடவும். கடாயில் கல்கண்டைப் போட்டு கால் டம்ளர் தண்ணீர் விட்டு கம்பிப் பாகு பதத்துக்குக் காய்ச்சவும். இதில் சாதம், பருப்பைக் கொட்டி கைவிடாமல் கிளறவும். பிறகு, சிறிது நெய்யில் முந்திரியை வறுத்து, மீதமுள்ள நெய், ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ சேர்த்து கிளறி இறக்கவும்.

மாலை ராஜ்மா சுண்டல் ராஜ்மாவை முந்தைய நாள் இரவே ஊற வைத்து, உப்பு சேர்த்து, வேக வைத்து தண்ணீரை வடிக்கவும். பிறகு எண்ணெயில் கடுகு தாளித்து, வறுத்து அரைத்த பொடி, கறிவேப்பிலை சேர்த்து, இதனுடன் வேகவைத்த ராஜ்மாவை கலந்து இறக்கவும்.

ஏழாவது நாள் :

காலை வெண் பொங்கல் அரிசி, பயத்தம் பருப்பை ஒன்றாக சேர்த்து வேக வைக்கவும். பெருங்காயத்தூள், உப்பு சேர்க்கவும். கடாயில் நெய் விட்டு மிளகு, சீரகம், கறிவேப்பிலை, இஞ்சி துருவல் சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கவும்.

மாலை கடலைப்பருப்பு புதினா சுண்டல் கடலைப்பருப்பை உப்பு சேர்த்து, வேகவைத்து தண்ணீரை வடிக்கவும். புதினாவை பொடியாக நறுக்கி நெய்யில் வதக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, வெந்த கடலைப்பருப்பை போட்டு வதக்கி, புதினா, மசாலாத்தூள், மிளகுத்தூள், இஞ்சி விழுது சேர்த்துக் கிளறி இறக்கவும்.

எட்டாவது நாள் :

காலை தேங்காய் சாதம் எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, வேர்க்கடலை, கறிவேப்பிலை சேர்த்து வறுத்துக் கொள்ளவும். இதில் தேங்காய் துருவலைப் போட்டு, உப்பு சேர்த்து நன்றாக வறுத்து சாதத்துடன் கலக்கவும். இதன் பிறகு நெய்யில் முந்திரியை வறுத்து சாதத்துடன் சேர்க்க வேண்டும்.

மாலை கொண்டக்கடலை சுண்டல் சென்னாவை முந்தைய நாள் இரவே ஊற வைத்து உப்பு சேர்த்து வேக வைத்து தண்ணீரை வடிக்கவும். கொள்ளு, காய்ந்த மிளகாய், கொப்பரைத் துண்டுகளை வறுத்து மிக்ஸியில் பொடிக்கவும். எண்ணெயில் கடுகு தாளித்து, கறிவேப்பிலை, வெந்த கொண்டக்கடலை, அரைத்த பொடியைப் போட்டு நன்றாகக் கிளறி மிளகுத்தூள் தூவவும்.

ஒன்பதாவது நாள் :

காலை வெல்ல புட்டு புழுங்கலரிசியை சிவக்க வறுத்து, மிக்ஸியில் ரவையாக பொடிக்கவும். இதனுடன் உப்பு, மஞ்சள் தூள், நீர் சேர்த்து தயிர் சாதம் போல் தளர கலந்து, துவரம்பருப்பையும் சேர்த்து வேக வைக்கவும். ஆறியதும் நன்றாக கட்டியில்லாமல் தேய்த்துக் கொள்ளவும். நெய்யில் தேங்காய், முந்திரியை வறுத்து வைத்துக் கொள்ளவும். வெல்லத்தை சிறிது தண்ணீர் விட்டு கரைத்து கொதிக்க விட்டு, வடிகட்டி மறுபடியும் அடுப்பில் வைத்து முத்துப் பாகு காய்ச்சவும். இதில் உதிர்த்த ரவை, தேங்காய், ஏலக்காய்த்தூள், முந்திரி, நெய் கலந்து வைக்கவும். ஆறியதும் எடுத்தால் உதிர் உதிராக இருக்கும்.

மாலை பாசிப்பருப்பு சுண்டல் பாசிப்பருப்பை சிவக்க வறுத்து தண்ணீர் விட்டு அரை மணி நேரம் ஊறவைத்து, இட்லி தட்டில் பரப்பி, வேக வைக்கவும். கடாயில் நெய் விட்டு, உரித்த பட்டாணி, நறுக்கிய இஞ்சி, மிளகுத்தூள், உப்பு சேர்த்து வதக்கிக் கொள்ளவும். எண்ணெயில் கடுகு தாளித்து, வெந்த பருப்பு, வதக்கிய பட்டாணி, தேங்காய் துருவல், கறிவேப்பிலை சேர்த்துக் கிளறி இறக்கவும்.

மனிதர்களுக்கு மட்டுமல்ல தெய்வங்களும் கடைபிடித்த நவராத்திரி :

இந்த உலகில் மானிடராய் பிறந்தவர்கள் மட்டுமின்றி, மனித ரூபத்தில் பிறந்த தெய்வங்களும் நவராத்திரி விரதத்தை அனுஷ்டித்து இருக்கிறார்கள்.

ஸ்ரீராமன் நவராத்திரியை அனுஷ்டித்து தான் சீதாதேவியை மீட்டு வந்தார்.

சிவபெருமான் நவராத்திரி விரதத்தை கடைபிடித்தே திரிபுர தகனம் செய்தார்.

நவராத்திரி பற்றிய சில அறிவியல் உண்மைகள் :

நவராத்திரியின் போது, கொலு வைப்பதால் சிறுவர் - சிறுமிகள் உள்ளிட்ட இளைய சமுதாயத்தினர் மத்தியில் இயற்கையில் அமைந்துள்ள அழகுணர்ச்சியும் வெளிக்கொணர ஏதுவாகிறது. பெண்களிடம் கொலு பொம்மைகள் அழகுப்படுத்தும் திறன் காரணமாக தன்னம்பிக்கை ஏற்படுவதுடன் வயதானவர்களை மதிக்கும் பண்பும் வளர்க்கப்படுகிறது.

கொலு வைக்கும் வழக்கம் உள்ள வீடுகளில் ஆண்டு தோறும் காலத்திற்கேற்றாற்போல் நவீன புதிய பொம்மைகள் இடம் பெறும். மண்ணாலான பொம்மைகளை செய்து பிழைப்பு நடத்தும் கைவினைக் கலைஞர்களுக்கு வாழ்வளிப்பதாக இது அமைகிறது என்பதால் சிறு தொழிலை ஊக்குவித்த திருப்தியும் கொழுவால் ஏற்படுகிறது என்றால் மிகையில்லை. இந்திய தட்பவெட்ப நிலைப்படி அக்டோபர், நவம்பர் மாதங்கள் மழை, குளிர் காலம் என்பதால், இந்த காலத்தில் குறிப்பாக பெண்களுக்கு புரதச் சத்து தேவைப்படும். அந்த வகையில் நவராத்திரி நாட்களில் விதவிதமான புரதச்சத்து நிறைந்த பயறு வகைகளை உண்ணும் வகையில் முன்னோர் இந்த பண்டிகையை கொண்டாடி வந்துள்ளனர் என்பது மருத்துவ ரீதியிலும் நிறைவைத் தருகிறது.

ஒன்பது நாட்களிலும் 9 வகையான பயறு வகைகள், பழங்களை அம்மனுக்கு பிரசாதாங்களாக படைத்து, அவற்றை மற்றவர்களுக்கும் வழங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர் பெண்கள்.

புரட்டாசி மாதத்தில் உடல் சோர்வைத் தரக்கூடிய நோய்க் காரணிகள் அதிகம் என்பதால் புரதச் சத்து நிறைந்த பயறுகளை உண்பதற்கான ஒரு பண்டிகையாகவும் நவராத்திரி பண்டிகை திகழ்கிறது. கொலு வைத்து கொண்டாடும் இந்த பண்டிகை விஞ்ஞான ரீதியாகவும் நன்மையைத் தருகிறது எனலாம்.

by Swathi   on 13 Oct 2015  0 Comments
Tags: Navratri Festival   Navratri Festival Tamil   Navratri Vratham   நவராத்திரி விரதம்   நவராத்திரி வழிபாடு   நவராத்திரி கொலு   நவ கன்னிகை வழிபாடு  
 தொடர்புடையவை-Related Articles
நவராத்திரி வழிபாடு ஒரு சிறப்பு பார்வை !! நவராத்திரி வழிபாடு ஒரு சிறப்பு பார்வை !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.