LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    இந்து மதம் Print Friendly and PDF
- தமிழ் மண்ணில் சாமிகள்

நல்லதங்காள் கதை

சில கதைகளை கேட்டதும் நெஞ்சம் நெகிழும், சில கதைகள் கேட்டுதும் நெஞ்சம் கனக்கும். நல்லதங்காள் கதை கேட்டாள் இரண்டுமே நடக்கும்.

 

நல்லதங்காள் கதை :

 

ராமலிங்க ராஜா, இந்திராணி என்ற தம்பதியினருக்கு மகளாக பிறந்தாள் நல்லதங்கள். இவருக்கு ஒரு அண்ணன் உண்டு. அவர் பெயர் நல்லதம்பி. பெற்றோர்கள் இறந்துவிட நல்லதங்காளை வளர்த்தது நல்லதம்பிதான். காலச்சக்கரம் உருண்டு ஓடின. நல்லதங்காளை மானாமதுரை ராஜா காசிராஜனுக்கு மணம் முடித்து கொடுத்தார்கள். மிக பிரம்மாண்டமான திருமணம். எல்லாம் முடிந்தபின்பு அண்ணனை பிரிய மனமின்றி கணவன் காசிராஜனுடன் மதுரைக்கு புறப்படுபோனாள் நல்லதங்காள்.

 

அங்கு நல்லதங்கள் காசிராஜன் தம்பதிக்கு ஏழு குழந்தைகள் பிறந்தன. செல்வசெழிப்புடன் வளர்ந்துவந்த அவர்களைப் பார்க்க நல்லதம்பி ஒரு முறை கூட மானாமதுரைக்கு வர வில்லை. காரணம் அவனுடைய கொடுமைக்கார மனைவி மூளி அலங்காரி தான். ஆனால் எல்லோரும் சந்தோசமாக இருந்தார்கள். அப்போது திடீரென மானாமதுரையில் வானம் பொய்த்துப்போனது. தொடர்ந்து 12 வருடங்களாக மழை இல்லை.

 

மக்கள் பஞ்சத்தால் எல்லாம் விற்றார்கள். நல்லதங்காளும் தாலியை தவிர எல்லாம் விற்றுவிட்டாள். அப்போதும் வயிறு நிறையவில்லை. சில இடங்களில் பசி கொடுமையால் மக்கள் சாக தொடங்கினார்கள். நல்லதங்காள் தன் குழந்தைகளை கூட்டிக்கொண்டு அண்ணன் அரண்மனைக்கு செல்வதென தீர்மானம் செய்தாள். ஆனால் இதற்கு காசிராஜன் சம்மதம் தெரிவிக்கவில்லை. இருந்தும் குழந்தைகளுக்காக மனம் இறங்கினான்.

 

நல்லதங்காளும் ஏழு குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு தான் பிறந்த ஊரான அர்சுனாபுரத்திற்கு வந்தாள். ஊரின் எல்லையில் பிள்ளைகளுக்கு களைப்பு வந்துவிட ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தவளை வேட்டையாட வந்த நல்லதம்பி பார்த்தான். தான் வளர்த்த தங்கை வருமையின் கோரபிடியில் சிக்கி சின்னா பின்னமாக இருப்பதை பார்த்து “ உடனே அரண்மனைக்கு போ, அங்கு எல்லாம் இருக்கிறது.நான் மானை வேட்டையாடிவிட்டு வந்துவிடுகிறேன்” என சொல்லி ஓடிப்போனான்.

 

மூளிக்கு இவர்கள் வருவது தெரிந்து எல்லா உணவுகளையும் ஒளித்து வைத்தாள். பசியால் வாடிய பிள்ளைகள் மூளியின் அறையில் இருந்த மாங்காயையும், தேங்காயையும் ஆளுக்கு ஒன்றாய் எடுத்தன. அதையெல்லாம் பிடுங்கி வைத்துக்கொண்டு அழுகல் நிறைந்ததை கொடுத்தாள் மூளி. சாதம் சமைக்க வீணான பொருட்களையும் ஓட்டைப்பானையையும் தந்தாள். நல்லதங்காள் அதை வைத்தே கஞ்சி காச்சினாள். ஆனால் அதையும் தட்டிவிட்டாள் மூளி. கீழே வழிந்த கஞ்சியை அள்ளிக்குடித்தார்கள் ஏழு பிள்ளைகளும்.

 

அந்தக் காட்சியை பார்த்ததும் சகித்துக்கொள்ள முடிய வில்லை தாயால். எல்லா குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு பாலுங்கிணற்றிற்கு அருகே போனாள். ஒவ்வொறு குழந்தையாக கிணற்றில் வீசிக்கொன்றாள். பின்பு தானும் விழுந்து இறந்தாள். வேட்டை முடித்து வந்தவனுக்கு அக்கம் பக்கத்தினர் நடந்ததை சொல்ல நல்லதங்காளை தேடி ஓடினான். அவள் ஒடித்துப்போட்ட ஆவாரம் செடி பாதை சொன்னது, பாழும் கிணற்றில் ஏழு குழந்தைகளுடன் அவள் இறந்து போனதை பார்த்தான். காசிராஜன் ஈட்டியால் தன்னை குத்திக்கொண்டு மாண்டு போனான். நல்லதம்பி மூளியை கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்டான்.

 

வறுமைக்கு இரு குடும்பத்தையே பலி கொடுத்ததை இன்னமும் கிராமத்து மக்கள் கதைகளாக சொல்லி வருகிறார்கள். வறுமையின் சின்னமாக நல்லதங்காள் இன்னும் கதைகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.

by Swathi   on 01 Aug 2013  11 Comments
Tags: நல்லதங்காள்   Nallathangal   Nallathangal Story   நல்லதங்காள் கதை   தமிழ் மண்        
 தொடர்புடையவை-Related Articles
குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -  குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர்  திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர் 
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர்  முனைவர்.ஜாகிர் உசேன் திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர் முனைவர்.ஜாகிர் உசேன்
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது.. திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது..
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்... திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்...
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி
கருத்துகள்
05-Oct-2018 16:19:50 steephan said : Report Abuse
அறுமியனா கதை சூப்பர்
 
03-Oct-2018 16:35:21 Ramesh said : Report Abuse
Nalla thankai ennutaya Kula samy nanparhale
 
04-Mar-2018 09:49:02 Manikandan said : Report Abuse
Supper annaa tamil irunthu suttathu kathai . nallathangal end kuladevam2000years palamai aanavargal .avargalin history mudi marakkappattathu avargal appaa muthuramalinga sethupathi ,inthirani maravar kudiyai sernthavar
 
04-Dec-2017 13:33:37 suresh said : Report Abuse
En kula deivam nalla thangal
 
30-Jun-2017 14:24:27 ம.அருள்ஜோதி said : Report Abuse
கதையில் சொல்லப்பட்டது அனைத்தும் தெளிவாக புரிகிறது தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி !.,!!.,!!!
 
28-Mar-2017 05:52:58 madhusoothanan said : Report Abuse
En peyarin arthathinai therinthukolla aarambitha bothu vanthathu Tamil aarvam . a than pin naan pala Tamil purathana kathaigalai ketpen .en 6m vayathil ikkathai enakku therium. Thelungu pada kathai ena kuriya podhu enakku kobam varugirathu...dhayavi seidhu tamilai parri ivvaru sollathinga
 
13-Mar-2017 00:07:12 சுஜிப்ரியா said : Report Abuse
hai
 
10-Jun-2015 21:42:33 mohanraj said : Report Abuse
நல்kidaikkuma கள் ஸ்டோரி book pdf vadivil கிடைகுமார்..
 
07-Jul-2014 14:13:43 தேவா said : Report Abuse
திரு.மடன், தெலுங்கிலும் இந்த கதை சொல்லப்பட்டு இருக்கலாம். எனக்கு நான் சிறுவனாக மதுரையில் இருந்தபோது பாட்டி சொல்லிய கதை இது. அனேகமாக தமிழகத்தின் அனைத்து பாட்டிகளுக்கும் இந்த கதை தெரிந்திருக்கும். தமிழர்களிடம் உள்ள பாரம்பரியம் இலக்கியம் மற்றும் கதையின் மூலம் எதுவுமே தெரியாமல்.. குறை சொல்லவது மடம்.
 
12-Jun-2014 05:57:33 ஜெயகாந்தன் said : Report Abuse
மதன் உங்களுக்கு தமிழர்களின் பாரம்பரியம் தெரியுமா, அவர்களின் கடந்த கால பொழுபோக்கு தெருகூத்து, எல்லா திருவிழாக்களிலும் நல்லதங்காள் கூத்து இல்லமால் இருந்ததில்லை எனக்கு கூட 20 வருததிற்கு முன்பே இந்த கதை தெரியும் அப்படி நமது மரபுகள் இருக்க தெலுங்கு சினிமாவில் இருந்து சுட வேண்டிய அவசியம் என்ன தயவு செய்து விளக்கவும்.. இன்றளவும் நல்லதங்காள் கதை தெரியாத கிராமத்து மனிதர்கள் கிடையாது.
 
20-Dec-2013 19:36:38 மதன் said : Report Abuse
இந்த கதை அப்படியே ஒரு தெலுங்கு படத்தில்(சுமார் 4 ஆண்டுகளுக்கு முன்) வந்துள்ளது. கதையை எங்கிருந்து சுடுவது என்று ஒரு அளவே இல்லையா?.. :)
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.