LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம்

நமது நாகரிகம்

ஒருத்தர் வீட்டு வசதி வாரியத்தில் வீடுகட்ட ஆசைப்பட்டு ஒரு நிறுவனத்தில் கடன் பெற்று வீடுகட்டினார் . திடீரென ஒருநாள் வீடு சுவர் விரிந்து மேல் கூரையும பிளந்து விரிசல் ஏற்பட்டு விட்டது .

வீடு கட்டியவர் கோபத்துடன் நிறுவன அதிகாரியிடம் வந்து கத்தினார் . “ வீடு பிளந்து இரண்டு வீடா ஆயிட்டது சார் ” என்று அழாக்குறையாகப் புலம்பினார் .

“ கோபப்படாதீங்க . விளக்கமா பேப்பர்லே எழுதிக்கொடுத்துட்டுப்போங்க . ஒரே வாரத்துலே ஆக்ஷன் எடுக்கிறோம் ” என்றார் அதிகாரி . சில நாட்கள் கழித்து இவருக்கு ஒரு கடிதம் வந்தது . பதில் , “ வணக்கம் . எங்களிடம் 2.5 லட்சத்தில் ஒரு வீடு வாங்கி மாதம் 2000 கட்டி வருகிறீர்கள் . அது வெடித்து இரண்டு வீடாக ஆகி விட்டதாக எழுதியுள்ளீர்கள் . மகிழ்ச்சி . இந்த மாதம் முதல் இரண்டு வீட்டுக்கும் சேர்த்து மாதம் நாலாயிரம் கட்ட வேண்டும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம் ” இதைப் படித்த வீட்டுக்காரர் மயங்கி விழுந்தார் . வீடு கட்டுவதில் திட்டமிடாவிட்டால் சிக்கல் வரும் . அதே போல நகரத்தைத் திட்டமிடுவதிலும் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் . சென்னை நகரம் திட்டமில்லாமல் வளர்ந்த நகரமாகும் . முதலில் வந்த போர்ச்சுகீசியர்கள் சாந்தோம் என்ற சிற்றூரை அமைத்தனர் . பின் ஆங்கிலேயர்கள் ஜார்ஜ் கோட்டையை கட்டி அதனுள் தங்கள் குடியிருப்பை அமைத்துக்கொண்டு தங்களின்சேவை புரிவோருக்கான தங்குமிடங்களையும் உருவாக்கினார் .

ஆனால் 1640 இல் செயிண்ட ஜார்ஜ் கோட்டை அமைக்கப்படுவதற்கு முன்பே மயிலாப்பூர் , திருஅல்லிக்கேணி , திருவான்மியூர் , சேத்துப்பட்டு , திருஒற்றியூர்போன்ற அழகிய சிற்றூர்கள் பழமையோடு விளங்கி வந்தன .

சென்னையில் மக்கட் பெருக்கமும் வளர்ந்தது . 1940 ஆம் ஆண்டு சென்னையின் மக்கள் தொகை 7 லட்சம் . காமராசர் ஆட்சி ஏற்ற பிறகு அது மும்மடங்காக உயர்ந்தது . நகர அபிவிருத்திக் கழகம் ஏற்பட்டு (C.I.T.) புதிய குடியிருப்புப் பகுதிகள் தோன்றின .

சென்னை நகரின் புறநகர்ப் பகுதியில் மேலைநாட்டுப் பாணியில் குட்டி நகரங்களை அமைக்க நகர அபிவிருத்திக் கழக அதிகாரிகள் திட்டமிட்டனர் . இதற்காக மேல் நாடு சென்று ஆய்வு செய்ய கூடிப்பேசினர் . துறை சார்ந்த அமைச்சரையும் நேரில் சந்தித்துக்கோப்பில் ஒப்புதல் பெற்றனர் .

இனி முதலமைச்சர் ஒப்புதல் பெறுவது தான் பாக்கி . அதுவும் கிடைத்து விட்டால் அரசுப் பணத்தில் விமானத்தில் வெளிநாட்டுக்குப் பறக்கலாம் .

காமராசர் 1954 ஏப்ரல் 13 ஆம் நாள் பதவியேற்ற போது “ ஹிந்து ” நாளிதழ் காமராசரின் பரந்த கட்சி அனுபவத்தைப் புகழ்ந்து எழுதியதே தவிர , அரசை நடத்தும் விவசாகரத்தில் ராஜாஜியின் ஆற்றலை இவரிடம் எதிர்பார்க்க முடியாது என்பது போல எழுதியிருந்தது .

லண்டனிலே படித்த ஐ . சி . எஸ்உயர் அதிகாரிகள்தான் மேனாட்டுப் பயணத்துக்கான கோப்பைக் காமராசரிடம் பரிந்துரைத்தார்கள் . எல்லாரும் அவர் அதில் கையெழுத்திட்டு விடுவார் என்றே நம்பினார்கள் . கோப்பைப் படித்த தலைவர் சிந்தித்தார் .

திட்டமிட்டு அமைக்கபட்ட ஊர் நம் நாட்டில் இல்லையா ? மேல நாட்டுக்காரனா நமக்கு இதில் வழி காட்டுவது ? அதிகாரிகள்சென்று பார்த்துவரக் கூடிய இடங்கள் நம் பண்பாட்டுக்கு ஒத்து வரக்கூடியதுதானா மக்கள் வரிப்பணத்தில் இந்த மேனாட்டுப் பயணம் தேவையா ? என்ற எண்ணம் அவர் மனதில் தோன்றியது . அப்போது அவர் மனத்தில மதுரை மாநகர் தோன்றியது .

ஊரின் மையத்தில் மீனாட்சி அம்மன்கோவில் சுற்றி ரத வீதிகள் , அடுத்த சுற்றில் அளவெடுத்தது போல மாட வீதிகள் , அதற்கடுத்த ஆவணி வீதிகள் , இடையில் இவற்றை இணைக்கும் சாலைகள் , அந்தக் காலத்திலேயே தொலை நோக்கோடு நகரை அமைத்திருக்கிறார்கள் . இதற்கு மேல் திட்டமிட என்ன இருக்கிறது எனச் சிந்தித்தவர் , “ இதற்காக மேனாட்டுப் பயணம்தேவையில்லை . எக்காலத்திற்கும் ஏற்ற மதுரை நகரைக் கண்டு ஆய்வுசய்து வாருங்கள் .” என்று கோப்பில் குறிப்பெழுதிக் கையெழுத்திட்டார் .

இப்படி எந்த விஷயத்திலும் சிந்தித்துச் செயலாற்றக் கூடிய வல்லமை பெருந்தலைவருக்கு உண்டு .

by Swathi   on 03 Sep 2015  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சென்னை புத்தகத் திருவிழாவில்   சென்னை புத்தகத் திருவிழாவில் "தமிழர் உணவு" நூல் வெளியீடு
சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம் சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம்
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.