LOGO
  முதல் பக்கம்    தற்சார்பு    தோட்டக்கலை Print Friendly and PDF

பாரம்பரிய நெல் விதைகளை பாதுகாத்து வரும் நமது நெல்லைக் காப்போம் இயக்கம் !!

விளை நிலங்கள் எல்லாம் மனைகளாக மாறிக் கொண்டிருக்கும் காலத்திலும் விதை நெல்லை காக்க 'நமது நெல்லைக் காப்போம்’ என்ற பெயரில் ஓர் இயக்கம். 


நெல் உற்பத்தியின் அவசியம், இயற்கை விவசாயம் செய்ய வேண்டியதன் அவசியம் ஆகியவற்றை முன்வைக்கும் இந்த இயக்கம், அழிந்து போகும் நிலையில் உள்ள நம்முடைய பாரம்பரிய நெல் விதைகளைச் சேகரித்துப் பாதுகாக்கும் முக்கியப் பணியைச் செய்கிறது.


அப்படி அவர்கள் பாதுகாத்து வைத்த விதை நெல்லை, ஊர் ஊராக சென்று விவாசயிகளுக்குத் தந்து அதை பயிர் செய்ய சொல்வதன் மூலம் பாரம்பரிய நெல்வகைகளை பெருகச் செய்திருக்கிறார்கள். முதன் முதலில் இப்படி ஊர் ஊராகச் சென்று விதை நெல்லை வழங்கியவர் கட்டிமேடு ஜெயராமன் தான்(படத்தில் இருப்பவர்)


விதை நெல்லை வாங்கிப் பயிர் செய்யும் விவசாயிகள் நெல்லுக்குப் பணம் கொடுக்க வேண்டியது இல்லை. பதிலாக, அந்த நெல் விளைந்தவுடன் நான்கு கிலோவாக திருப்பித் தர வேண்டும். 


இப்படி 2001-ல் நமது நெல்லைக் காப்போம் என்ற பிரசார இயக்கம் ஆரம்பித்ததன் பலனாக, இன்று 13,000-த்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பாரம்பரிய விதைகளின் பக்கம் தங்கள் கவனத்தைத் திருப்பி இருக்கிறார்கள்.


முன்பு விவசாயிகளைத் தேடிப்போய் நெல்லைக் கொடுத்த நிலை மாறி, இப்போது தமிழ்நாடு முழுவதும் இருந்து ஆதிரெங்கத்தில் இருக்கும் இவர்களுடைய பண்ணையைத் தேடிவந்து வாங்கிச் செல்கிறார்கள் விவசாயிகள். 


அது சரி, இயற்கை விவசாயம் என்றால் என்ன? அப்படி எந்த பாரம்பரிய விதை நெல்லை பாதுகாக்கிறார்கள். அதன் அவசியம் தான் என்ன?


ஆராச்சி செய்து கண்டுப்பிடிக்கப் படுகிற நவீன நெல் வகைகள் மனிதனுக்கு நோய் ஏற்படுத்தக் கூடியவை. ரசாயனத்தால் விளையும் அவை மனிதனின் உடலில் அந்த ரசாயனத்தை இறக்கி வைத்துவிடுகின்றன. அதாவது உரம் மற்றும் பூச்சு மருந்து தெளித்து வளர்க்கபடுபவை.


ஆனால்,நம் பாராம்பரிய நெல் வகைகளில் ஒவ்வொரு வியாதிக்கும் ஓர் அரிசி, மருந்தாகவே பயன்பட்டு இருக்கிறது. மாப்பிள்ளை சம்பாவும், காட்டுயானமும் உடலில் சர்க்கரையைக் கட்டுப்படுத்தி வைக்கும் நல் மருந்துகள். விதைத்து விட்டு வந்தால், அறுவடைக்குத்தான் வயலுக்குப்போக வேண்டும். இடையில் எந்த உரமும் பூச்சி மருந்தும் அடிக்கத் தேவை இல்லை. அதனால், அதில் ரசாயனம் ஏறாது. சாப்பிடுகிறவருக்கும் வியாதியைத் தராது. அதனால்தான் இந்த நெல் ரகங்களைப் பாதுகாக்க வேண்டும். இதுவே இயற்கை விவசாய முறை.


இப்படி இயற்கை விவசாயம் அழியாமல் இருக்கவும், அந்த விதை நெல் மூலம் பல விவசாயிகள் பயன் பெற வேண்டும் என்ற நல்ல எண்ணத்திலும் விழிப்புணர்வை ஏற்படுத்திய திரு. ஜெயராமன் அவர்களை மனதார பாராட்டுவோம்.


விவசாயம் வாழ்ந்தால் என்ன அழிந்தால் என்ன என்று அரசாங்கமே இங்கு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க, சுயநலமின்றி இந்த இயக்கத்தில் இணைந்து சேவை செய்யும் அனைத்து விவசாயிகளையும் நெஞ்சம் நெகிழ்ந்து பாராட்டுவோம்.

by Swathi   on 24 Mar 2014  9 Comments
Tags: Traditional Paddy   Paarambariya Nel   பாரம்பரிய நெல்   நெல் விதைகள்           
 தொடர்புடையவை-Related Articles
குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -  குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர்  திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர் 
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர்  முனைவர்.ஜாகிர் உசேன் திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர் முனைவர்.ஜாகிர் உசேன்
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது.. திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது..
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்... திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்...
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி
கருத்துகள்
09-Jan-2020 06:52:55 அ.வெங்கடேசன் said : Report Abuse
பாரம்பரிய நெல் வகைகள் கிடைக்கும் இடம் மற்றும் முகவரியை தெரிவிக்கவும்
 
08-May-2018 02:17:44 ragubathy said : Report Abuse
Please give காண்டாக்ட் நம்பர்
 
17-Aug-2017 17:17:20 Nandhakumar said : Report Abuse
அண்ணனை தொடர்புகொள்ள ௯௪௪௩௩௨௦௯௫௪ ஊர் திருத்துறைப்பூண்டி அருகே கட்டிமேடு கிராமம்
 
21-Jun-2016 08:37:47 முருகன் said : Report Abuse
வாழ்துக்கள் ஐயா....
 
23-Feb-2016 04:31:04 saranraj said : Report Abuse
Mr. jayaraman contact நம்பர் கிடைக்குமா அவரை தொடர்பு கொள்வது எப்படி? எங்களுக்கு அவருடைய உதவி தேவை படுகிறது !
 
16-Jul-2015 06:29:16 delhiraja said : Report Abuse
அவருடைய ஊர் என்ன? அவருடைய மின் அஞ்சல் கொடுங்கள்
 
09-Jul-2015 04:55:08 ramakrishnan said : Report Abuse
திரு ஜெயராமனை எவ்வாறு தொடர்பு கொள்ளவது?
 
12-Nov-2014 23:47:21 ச.வைதீஸ்வரன் said : Report Abuse
மிகவும் தரமான செய்தி . ஆனால் தமிழக விவசாய நண்பர்கள் இதை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.
 
10-Apr-2014 19:48:40 Raamachandran said : Report Abuse
நல்ல செய்தி! திரு ஜெயராமனை தொடர்பு கொள்ள அவரது தொலைபேசி எண் அல்லது மின் அஞ்சல் எதேனும் தெரிவிக்க முடியுமா?
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.