LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

நான்காம் திருமுறை-29

4.029.திருச்செம்பொன்பள்ளி 
திருநேரிசை 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் நடுநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - வீரட்டானேசுவரர். 
தேவியார் - திருவதிகைநாயகி. 
284 ஊனினுள் ளுயிரை வாட்டி
உணர்வினார்க்கௌய ராகி
வானினுள் வான வர்க்கும்
அறியலா காதவஞ்சர்
நானெனிற் றானே யென்னும்
ஞானத்தார்பத்தர் நெஞ்சுள்
தேனுமின் னமுது மானார்
திருச்செம்பொன்பள்ளி யாரே.
4.029.1
திருச்செம்பொன்பள்ளிஎம்பெருமான் இவ்வுடம்பினுள் உள்ள உயிரைத் தவம் விரதம் முதலியவற்றால் வாட்டித் தூய்மையுடையதாக்கி மெய்யுணர்வு பெற்ற பெரியவர்களுக்கு எளியராய், உயர்ந்த உலகிலுள்ள தேவர்களும் அறியமுடியாத கள்ளத்தை உடையவராய், சிவபோதத்தினராய் இருக்கும் சிவஞானிகளுக்கு அமுதமும், சிவனடியார்களின் நெஞ்சில் தேனும்போல இனிப்பவராய் உள்ளார்.
285 நொய்யவர் விழுமி யாரு 
நூலினுண் ணெறியைக் காட்டும் 
மெய்யவர் பொய்யு மில்லார்
உடலெனு மிடிஞ்சி றன்னில்
நெய்யமர் திரியு மாகி
நெஞ்சத்துள் விளக்கு மாகிச்
செய்யவர் கரிய கண்டர்
திருச்செம்பொன் பள்ளி யாரே.
4.029.2
நீலகண்டராய திருச்செம்பொன்பள்ளியார் ஞானவடிவினர் ஆதலின் நொய்யராய், சீர்மை உடையவராய், வேதநெறியைக் காட்டும் உண்மை வடிவினராய், பொய்யிலியாய், உடல் என்னும் ஓட்டாஞ் சில்லியிலே நெய்யில் தோய்த்த திரியாகவும் நெஞ்சில் ஒளி தருகின்ற விளக்காகவும் உள்ள செந்நிறத்தவராவர்.
286 வெள்ளியர் கரியர் செய்யர்
விண்ணவ ரவர்கள் நெஞ்சுள்
ஒள்ளிய ரூழி யூழி
யுலகம தேத்த நின்ற
பள்ளியர் நெஞ்சத் துள்ளார்
பஞ்சமம் பாடி யாடும்
தௌளியார் கள்ளந் தீர்ப்பார்
திருச்செம்பொன் பள்ளி யாரே.
4.029.3
திருச்செம்பொன் பள்ளியார் வெண்மை, செம்மை, கருமை என்ற நிறத்தவராய், தேவர்கள் உள்ளத்திலே ஒளி தருபவராய், ஊழிதோறும் உலகங்கள் துதிக்கும் படியான பாற்கடலில் பள்ளி கொண்ட திருமாலுடைய நெஞ்சத்தில் உள்ளவராய், பஞ்சமம் என்ற பண்ணினைப் பாடி ஆடும் ஞானிகளுடைய உள்ளிருளைப் போக்குபவராய் உள்ளார்.
287 தந்தையுந் தாயு மாகித்
தானவன் ஞான மூர்த்தி
முந்திய தேவர் கூடி
முறைமுறை யிருக்குச் சொல்லி 
எந்தைநீ சரண மென்றங்
கிமையவர் பரவி யேத்தச் 
சிந்தையுட் சிவம தானார் 
திருச்செம்பொன் பள்ளி யாரே.
4.029.4
திருச்செம்பபொன் பள்ளியார் தந்தையாராய்த் தாயாராய், எல்லோருக்கும் கொடைவழங்குபவராய், ஞானவடிவினராய், முற்பட்ட தேவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து முறைப்படி வேதங்களை ஓதி 'எங்கள் தந்தையே! நீயே அடியேங்களுக்கு அடைக் கலம் நல்குவை' என்று முன் நின்று வழிபட்டுத்துதிக்க, அவர்கள் உள்ளத்துள்ளே மங்கல மூர்த்தியாக இருப்பவராவர்.
288 ஆறுடைச் சடையார் போலும்
அன்பருக் கன்பர் போலும்
கூறுடை மெய்யர் போலும்
கோளர வரையர் போலும்
நீறுடை யழகர் போலும்
நெய்தலே கமழு நீர்மைச்
சேறுடைக் கமல வேலித்
திருச்செம்பொன் பள்ளி யாரே.
4.029.5
நெய்தல் பூக்கள் மணம் கமழும் நீர்வளம் உடையதாய்ச் சேற்றிலே தாமரை பூக்கும் வயல்களை நாற்புறமும் எல்லையாக உடைய திருச்செம்பொன்பள்ளியார் கங்கை சூடியசடையராய்த் தம் அன்பர்களிடத்துத் தாமும் அன்பு செய்பவராய், பார்வதிபாகராய், கொடிய பாம்பினை இறுகக் கட்டிய இடையினராய்த் திரு நீறணிந்த அழகருமாவார்.
289 ஞாலமு மறிய வேண்டில்
நன்றென வாழ லுற்றீர்
காலமுங் கழிய லான
கள்ளத்தை யொழிய கில்லீர்
கோலமும் வேண்டா வார்வச்
செற்றங்கள் குரோத நீக்கில்
சீலமுந் நோன்பு மாவார்
திருச்செம்பொன் பள்ளி யாரே.
4.029.6
மேம்பட்டது என்று சொல்லி உலகியலில் திளைத்து வாழும் உலகத்தவராகிய நீங்கள் வீணாகக் கழிகின்ற உங்கள் வஞ்சக வாழ்க்கையை விடாது மேற்கொண்டுள்ளீர். நீங்கள் திருச்செம்பொன் பள்ளியாரை அறியவிரும்புவீராயின், உங்கள் போலி அடியவர் வேடத்தையும் காமக் குரோத கோபாதிகளையும் நீங்கள் போக்கிவிட்டால் அவர் உங்களுக்கு ஒழுக்கமும் தவ விரதமுமாக இருந்து உதவுவார்.
290 புரிகாலே நேசஞ் செய்ய
விருந்தபுண் டரீகத் தாரும்
எரிகாலே மூன்று மாகி
யிமையவர் தொழநின் றாரும்
தெரிகாலே மூன்று சந்தி
தியானித்து வணங்க நின்று
திரிகாலங் கண்ட வெந்தை
திருச்செம்பொன் பள்ளி யாரே.
4.029.7
திருச்செம்பொன்பள்ளியார் விருப்பம் முற்பட்ட பொழுதே தம்மிடத்தே அன்பு செய்யும் அடியவர் இதயத் தாமரையில் இடம் கொண்டிருப்பவராய், தீ, காற்று, நிலம், நீர், ஆகாயம் என்ற ஐம்பூதங்களுமாகித் தேவர்கள் தொழுமாறு இருப்பவராய், காலை நண்பகல் அந்தி என்ற மூன்று வேளைகளிலும் ஆராயப்படும் திருவடிகளை நினைந்து அடியவர் யாவரும் வணங்க, முக்காலங்களிலும் நிலையாக இருப்பவர் ஆவர்.
291 காருடைக் கொன்றை மாலை
கதிர்மதியரவி னோடும்
நீருடைய சடையுள் வைத்த
நீதியார்நீதி யுள்ளார்
பாரொடு விண்ணு மண்ணும்
பதினெட்டுக் கணங்க ளேத்தச்
சீரொடு பாட லானார்
திருச்செம் பொன்பள்ளி யாரே.
4.029.8
திருச்செம்பொன்பள்ளியார்கார் காலத்தைத் தனக்குப் பூக்கும் காலமாக உடைய கொன்றைப்பூ மாலையை ஒளிவீசும் பிறை, பாம்பு எனும் இவற்றோடு கங்கை தங்கும் சடையில் வைத்தவராய், நீதியே வடிவானவராய்த் தாமும் அந்நீதியையே நடத்துபவராய், பாதலம், தேவருலகம், மண்ணுலகம் என்ற மூன்று உலகங்களும் பதினேட்டுத் தேவகணங்களும் தம்மைத் துதிக்க, சீரோடு கூடிய பாடல் வடிவாய் உள்ளவர்.
292 ஓவாத மறைவல் லானும் 
ஓதநீர் வண்ணன் காணா
மூவாத பிறப்பி லாரும்
முனிகளா னார்க ளேத்தும் 
பூவான மூன்று முந்நூற்
றறுபது மாகு மெந்தை 
தேவாதி தேவ ரென்றுந்
திருச்செம்பொன் பள்ளி யாரே.
4.029.9
திருச்செம்பொன்பள்ளியார் என்றும் அழிதல் இல்லாத வேதத்தை ஓதிக்கொண்டிருக்கும் பிரமனும், கடல் நிறத்தவனாகிய திருமாலும் காணமுடியாதவராய், மூத்தலோ பிறத்தலோ இல்லாதவராய் 1080 மலர்களைக் கொண்டு முனிவர்கள் வழிபடும் எங்கள் தந்தையாராய், என்றும் தேவர்களுக்கு எல்லாம் தேவருமாய் உள்ளார்.
293 அங்கங்க ளாறும் நான்கும்
அந்தணர்க் கருளிச் செய்து
சங்கங்கள் பாட வாடுஞ்
சங்கரன் மலையெ டுத்தான்
அங்கங்க ளுதிர்ந்து சோர
வலறிட வடர்ந்து நின்றும்
செங்கண்வெள் ளேற தேறுந்
திருச்செம்பொன் பள்ளி யாரே.  
4.029.10
சிவந்த கண்களை உடைய திருமாலாகிய வெண்ணிறக் காளையை இவரும் திருச்செம்பொன்பள்ளியார், கயிலையைப் பெயர்த்த இராவணனுடைய உடல் உறுப்புகள் உதிர்ந்து தளர அவன் வாய்விட்டு அலறுமறு வருத்தி நின்றும் (நின்றவராயினும்) நான்கு வேதங்களையும் ஆறு அங்கங்களையும் முனிவர்க்கு உபதேசித்துப் பூதகணங்கள் பாடக் கூத்தாடும் ஆனந்த வடிவினராவர்.
திருச்சிற்றம்பலம்

4.029.திருச்செம்பொன்பள்ளி 
திருநேரிசை 
திருச்சிற்றம்பலம் 

இத்தலம் நடுநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - வீரட்டானேசுவரர். தேவியார் - திருவதிகைநாயகி. 

284 ஊனினுள் ளுயிரை வாட்டிஉணர்வினார்க்கௌய ராகிவானினுள் வான வர்க்கும்அறியலா காதவஞ்சர்நானெனிற் றானே யென்னும்ஞானத்தார்பத்தர் நெஞ்சுள்தேனுமின் னமுது மானார்திருச்செம்பொன்பள்ளி யாரே.4.029.1
திருச்செம்பொன்பள்ளிஎம்பெருமான் இவ்வுடம்பினுள் உள்ள உயிரைத் தவம் விரதம் முதலியவற்றால் வாட்டித் தூய்மையுடையதாக்கி மெய்யுணர்வு பெற்ற பெரியவர்களுக்கு எளியராய், உயர்ந்த உலகிலுள்ள தேவர்களும் அறியமுடியாத கள்ளத்தை உடையவராய், சிவபோதத்தினராய் இருக்கும் சிவஞானிகளுக்கு அமுதமும், சிவனடியார்களின் நெஞ்சில் தேனும்போல இனிப்பவராய் உள்ளார்.

285 நொய்யவர் விழுமி யாரு நூலினுண் ணெறியைக் காட்டும் மெய்யவர் பொய்யு மில்லார்உடலெனு மிடிஞ்சி றன்னில்நெய்யமர் திரியு மாகிநெஞ்சத்துள் விளக்கு மாகிச்செய்யவர் கரிய கண்டர்திருச்செம்பொன் பள்ளி யாரே.4.029.2
நீலகண்டராய திருச்செம்பொன்பள்ளியார் ஞானவடிவினர் ஆதலின் நொய்யராய், சீர்மை உடையவராய், வேதநெறியைக் காட்டும் உண்மை வடிவினராய், பொய்யிலியாய், உடல் என்னும் ஓட்டாஞ் சில்லியிலே நெய்யில் தோய்த்த திரியாகவும் நெஞ்சில் ஒளி தருகின்ற விளக்காகவும் உள்ள செந்நிறத்தவராவர்.

286 வெள்ளியர் கரியர் செய்யர்விண்ணவ ரவர்கள் நெஞ்சுள்ஒள்ளிய ரூழி யூழியுலகம தேத்த நின்றபள்ளியர் நெஞ்சத் துள்ளார்பஞ்சமம் பாடி யாடும்தௌளியார் கள்ளந் தீர்ப்பார்திருச்செம்பொன் பள்ளி யாரே.4.029.3
திருச்செம்பொன் பள்ளியார் வெண்மை, செம்மை, கருமை என்ற நிறத்தவராய், தேவர்கள் உள்ளத்திலே ஒளி தருபவராய், ஊழிதோறும் உலகங்கள் துதிக்கும் படியான பாற்கடலில் பள்ளி கொண்ட திருமாலுடைய நெஞ்சத்தில் உள்ளவராய், பஞ்சமம் என்ற பண்ணினைப் பாடி ஆடும் ஞானிகளுடைய உள்ளிருளைப் போக்குபவராய் உள்ளார்.

287 தந்தையுந் தாயு மாகித்தானவன் ஞான மூர்த்திமுந்திய தேவர் கூடிமுறைமுறை யிருக்குச் சொல்லி எந்தைநீ சரண மென்றங்கிமையவர் பரவி யேத்தச் சிந்தையுட் சிவம தானார் திருச்செம்பொன் பள்ளி யாரே.4.029.4
திருச்செம்பபொன் பள்ளியார் தந்தையாராய்த் தாயாராய், எல்லோருக்கும் கொடைவழங்குபவராய், ஞானவடிவினராய், முற்பட்ட தேவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து முறைப்படி வேதங்களை ஓதி 'எங்கள் தந்தையே! நீயே அடியேங்களுக்கு அடைக் கலம் நல்குவை' என்று முன் நின்று வழிபட்டுத்துதிக்க, அவர்கள் உள்ளத்துள்ளே மங்கல மூர்த்தியாக இருப்பவராவர்.

288 ஆறுடைச் சடையார் போலும்அன்பருக் கன்பர் போலும்கூறுடை மெய்யர் போலும்கோளர வரையர் போலும்நீறுடை யழகர் போலும்நெய்தலே கமழு நீர்மைச்சேறுடைக் கமல வேலித்திருச்செம்பொன் பள்ளி யாரே.4.029.5
நெய்தல் பூக்கள் மணம் கமழும் நீர்வளம் உடையதாய்ச் சேற்றிலே தாமரை பூக்கும் வயல்களை நாற்புறமும் எல்லையாக உடைய திருச்செம்பொன்பள்ளியார் கங்கை சூடியசடையராய்த் தம் அன்பர்களிடத்துத் தாமும் அன்பு செய்பவராய், பார்வதிபாகராய், கொடிய பாம்பினை இறுகக் கட்டிய இடையினராய்த் திரு நீறணிந்த அழகருமாவார்.

289 ஞாலமு மறிய வேண்டில்நன்றென வாழ லுற்றீர்காலமுங் கழிய லானகள்ளத்தை யொழிய கில்லீர்கோலமும் வேண்டா வார்வச்செற்றங்கள் குரோத நீக்கில்சீலமுந் நோன்பு மாவார்திருச்செம்பொன் பள்ளி யாரே.4.029.6
மேம்பட்டது என்று சொல்லி உலகியலில் திளைத்து வாழும் உலகத்தவராகிய நீங்கள் வீணாகக் கழிகின்ற உங்கள் வஞ்சக வாழ்க்கையை விடாது மேற்கொண்டுள்ளீர். நீங்கள் திருச்செம்பொன் பள்ளியாரை அறியவிரும்புவீராயின், உங்கள் போலி அடியவர் வேடத்தையும் காமக் குரோத கோபாதிகளையும் நீங்கள் போக்கிவிட்டால் அவர் உங்களுக்கு ஒழுக்கமும் தவ விரதமுமாக இருந்து உதவுவார்.

290 புரிகாலே நேசஞ் செய்யவிருந்தபுண் டரீகத் தாரும்எரிகாலே மூன்று மாகியிமையவர் தொழநின் றாரும்தெரிகாலே மூன்று சந்திதியானித்து வணங்க நின்றுதிரிகாலங் கண்ட வெந்தைதிருச்செம்பொன் பள்ளி யாரே.4.029.7
திருச்செம்பொன்பள்ளியார் விருப்பம் முற்பட்ட பொழுதே தம்மிடத்தே அன்பு செய்யும் அடியவர் இதயத் தாமரையில் இடம் கொண்டிருப்பவராய், தீ, காற்று, நிலம், நீர், ஆகாயம் என்ற ஐம்பூதங்களுமாகித் தேவர்கள் தொழுமாறு இருப்பவராய், காலை நண்பகல் அந்தி என்ற மூன்று வேளைகளிலும் ஆராயப்படும் திருவடிகளை நினைந்து அடியவர் யாவரும் வணங்க, முக்காலங்களிலும் நிலையாக இருப்பவர் ஆவர்.

291 காருடைக் கொன்றை மாலைகதிர்மதியரவி னோடும்நீருடைய சடையுள் வைத்தநீதியார்நீதி யுள்ளார்பாரொடு விண்ணு மண்ணும்பதினெட்டுக் கணங்க ளேத்தச்சீரொடு பாட லானார்திருச்செம் பொன்பள்ளி யாரே.4.029.8
திருச்செம்பொன்பள்ளியார்கார் காலத்தைத் தனக்குப் பூக்கும் காலமாக உடைய கொன்றைப்பூ மாலையை ஒளிவீசும் பிறை, பாம்பு எனும் இவற்றோடு கங்கை தங்கும் சடையில் வைத்தவராய், நீதியே வடிவானவராய்த் தாமும் அந்நீதியையே நடத்துபவராய், பாதலம், தேவருலகம், மண்ணுலகம் என்ற மூன்று உலகங்களும் பதினேட்டுத் தேவகணங்களும் தம்மைத் துதிக்க, சீரோடு கூடிய பாடல் வடிவாய் உள்ளவர்.

292 ஓவாத மறைவல் லானும் ஓதநீர் வண்ணன் காணாமூவாத பிறப்பி லாரும்முனிகளா னார்க ளேத்தும் பூவான மூன்று முந்நூற்றறுபது மாகு மெந்தை தேவாதி தேவ ரென்றுந்திருச்செம்பொன் பள்ளி யாரே.4.029.9
திருச்செம்பொன்பள்ளியார் என்றும் அழிதல் இல்லாத வேதத்தை ஓதிக்கொண்டிருக்கும் பிரமனும், கடல் நிறத்தவனாகிய திருமாலும் காணமுடியாதவராய், மூத்தலோ பிறத்தலோ இல்லாதவராய் 1080 மலர்களைக் கொண்டு முனிவர்கள் வழிபடும் எங்கள் தந்தையாராய், என்றும் தேவர்களுக்கு எல்லாம் தேவருமாய் உள்ளார்.

293 அங்கங்க ளாறும் நான்கும்அந்தணர்க் கருளிச் செய்துசங்கங்கள் பாட வாடுஞ்சங்கரன் மலையெ டுத்தான்அங்கங்க ளுதிர்ந்து சோரவலறிட வடர்ந்து நின்றும்செங்கண்வெள் ளேற தேறுந்திருச்செம்பொன் பள்ளி யாரே.  4.029.10
சிவந்த கண்களை உடைய திருமாலாகிய வெண்ணிறக் காளையை இவரும் திருச்செம்பொன்பள்ளியார், கயிலையைப் பெயர்த்த இராவணனுடைய உடல் உறுப்புகள் உதிர்ந்து தளர அவன் வாய்விட்டு அலறுமறு வருத்தி நின்றும் (நின்றவராயினும்) நான்கு வேதங்களையும் ஆறு அங்கங்களையும் முனிவர்க்கு உபதேசித்துப் பூதகணங்கள் பாடக் கூத்தாடும் ஆனந்த வடிவினராவர்.

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 25 May 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.